ஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க முழுக்க ஆபாசமாகவும் கவர்ச்சியாகவும் படங்களுடன் ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் இருந்தது.
சரி இந்த மாதிரி பதிவு எழுத உண்மையான தமிழன் எழுத முடியுமா என்று யோசித்தேன் ஏனென்றால் நம் தமிழன் பண்பாட்டில் கலாச்சாரத்தில் ஊறியவர்கள் ஆயிற்றே என்று யோசித்தவாறே தமிழன் பதிவு எழுதியது யார் எங்கிருக்கின்றார் என்ற விபரம் ஆராய்ந்த போது ஒரு வெளி நாட்டு முகவரி இருந்தது.
சரி இந்த மாதிரி பதிவு எழுத உண்மையான தமிழன் எழுத முடியுமா என்று யோசித்தேன் ஏனென்றால் நம் தமிழன் பண்பாட்டில் கலாச்சாரத்தில் ஊறியவர்கள் ஆயிற்றே என்று யோசித்தவாறே தமிழன் பதிவு எழுதியது யார் எங்கிருக்கின்றார் என்ற விபரம் ஆராய்ந்த போது ஒரு வெளி நாட்டு முகவரி இருந்தது.
தமிழ் கற்ற ஒரு வெளிநாட்டுக் காரரால் நம் தமிழன் சீரழியும் வண்ணம் ஆபாசமாய் நிவாணமாக நடனங்கள் காட்சிகள் வெளியிடக் காரணம் என்ன? சிந்திக்கின்றேன் இப்படி வெளியிடுவதன் மூலம் நம் இளைஞர்களை.............நம் பிள்ளைகளை ............. ஒரு மயக்கத்தில் ஆழ்த்தி ......உங்களுக்கு ஏதாவது தெரியுதா சொல்லுங்க.
................................................................................................................................................................
தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு!
விவசாயப் பம்ப்செட்டுகளுக்கு மின் கட்டணம் குடிசைகளுக்கான மின் கட்டணங்கள் உயர்த்தப் படும் என்று தெரிகின்றது.
சென்ற
ஆண்டு 17000 கோடி இழப்பு என்று சொல்கின்றது மின்வாரியம். அதற்கு முந்தைய
ஆண்டு சுமார் 8000 கோடி இழப்பு என்று சொல்லித்தான் மின் கட்டணம்
உயர்த்தப்பட்டது (1000 ரூபாய் கட்டியவர்களுக்கு 1600 வரை கட்டும் அளவுக்கு
மிகக் கடினாமாக உயர்வு செய்யப்பட்டது)
இந்த
ஆண்டு இரண்டு மடங்கு இழப்பு (17000 கோடி இதுக்கு எவ்வளவு மின்கட்டண உயர்வு
வரும்?) ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. எனவே கட்டணத்தை உயர்த்துவது
தவிர்க்க முடியாதது.
ஒழுங்கு முறை ஆணையத்தில் வருகின்ற மூன்று ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு மின் நுகர்வோர்களிடம் கட்டண உயர்வு அவசியம் என்று மின் வாரியம் கேட்டுள்ளது.
ஒழுங்கு முறை ஆணையத்தில் வருகின்ற மூன்று ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு மின் நுகர்வோர்களிடம் கட்டண உயர்வு அவசியம் என்று மின் வாரியம் கேட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை மின் உயர்வை தள்ளிப் போடும் நோக்கிலும்
நினைத்த நேரத்தில் கட்டணம் உயர்த்தவும் திட்டமிட்டே மூன்று ஆண்டுகளுக்கு
கட்டண உயர்வுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் தோன்றுகின்றது.
தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 1-7-2013 தேதி முடிவு அறிவிக்கப்பட்டு அமல் படுத்தப்படும். ஆணையம் மக்கள்
கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்திட வேண்டும். (சென்ற ஆண்டு சென்ற
இடமெல்லாம் சிறப்பு கிடைத்தது. மிலிட்டரி வரவழைத்து தான் கூட்டம் மதுரையில்
நடந்ததாம் அந்த கூட்டங்களில் கலந்துகொண்டு சொன்ன மக்கள் கருத்துக்களுக்கு
மதிப்பில்லை என்பது வேறு விஷயம் ). இந்த ஆண்டு மக்கள் கருத்துக் கேட்புக்
கூட்டம் நடக்குமா? முறையாக முன்னரே அறிவிப்பு இருக்குமா? அல்லது திடீர்
என்று தேதி அறிவிக்கப்பட்டு அவசரம் அவசரமாய் (ரகசியமாய்) நடக்குமா?.
விவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது.
மின் வாரிய மனுவின் முழு விபரம் காண இந்த இணைப்பை சொடுக்குங்கள்
http://tnerc.tn.nic.in/download/Tariff%20Petition/2013/Tariff%20Petition%2013-14.pdf
ஆபாசங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் அபத்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படிக்கும் லைக் போடும் கமண்ட்ஸ் போடும் சேர் பண்ணிவிடும் தமிழா! உன்னுடைய திறமையை தீரத்தை விவேகத்தை நேரத்தை கவனத்தை சிந்தனையை திசைமாற்றத்தான் என்று உணர்வது எப்போது எங்கே யாருக்கு பிரச்சனை என்றாலும் பிரதிபலன்! பாராது போராடும் தமிழா உன்னுனைய பேன்ட் அவிழ்த்து விடப்படுவது தெரியாமல் என்ன செய்துகொண்டு இருக்கின்றாய் நீ உனக்கு வரும் ஆபத்தை உணர்வது எப்போது வருமுன் காக்க விழித்திடு தோழா
4 கருத்துகள்:
என்ன செய்வது...? பல தளங்களும் அப்படித்தான் உள்ளது... அந்த தளங்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துவோர்களையும் என்ன செய்வது...? அவர்கள் முதலில் மாறினால், மற்றவை தானாக மாற ஒரு வாய்ப்பு உள்ளது...
நாம் செல்லாமல் இருந்தால் அதை விட நல்லது...
தங்கள் ஆதங்கமே என் ஆதங்கமும்
சுருக்கமாக ஆயினும் அருமையாகப்
பதிவு செய்துள்ளீர்கள்
மின் கட்டண் உயர்வு குறித்த தகவல்
பயமுறுத்துகிறது
பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆபாசமாய் நிவாணமாக நடனங்கள் காட்சிகள் வெளியிடக் காரணம் என்ன? ஏதாவது தெரியுதா சொல்லுங்க.
பிளாக் எழுதுபவர்கள் எல்லாம் சமூக அக்கறை கொண்டவர்கள் என்று நினைத்து நாம் நம்மை ஏமாற்றிக்கொள்கிரறோம்.
கருத்துரையிடுக