தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு!
26.2.2013 அன்று தமிழ் நாடு மிசரவாரியம் மின் கட்டண உயர்வு குறித்த மனுவினை தமிழ்நாடு மிசார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அளித்துள்ளது
விவசாயப் பம்ப்செட்டுகளுக்கு மின் கட்டணம் குடிசைகளுக்கான மின் கட்டணங்கள் உயர்த்தப் படும் என்று தெரிகின்றது.
சென்ற
ஆண்டு 17000 கோடி இழப்பு என்று சொல்கின்றது மின்வாரியம். அதற்கு முந்தைய
ஆண்டு சுமார் 8000 கோடி இழப்பு என்று சொல்லித்தான் மின் கட்டணம்
உயர்த்தப்பட்டது (1000 ரூபாய் கட்டியவர்களுக்கு 1600 வரை கட்டும் அளவுக்கு
மிகக் கடினாமாக உயர்வு செய்யப்பட்டது)
இந்த
ஆண்டு இரண்டு மடங்கு இழப்பு (17000 கோடி இதுக்கு எவ்வளவு மின்கட்டண உயர்வு
வரும்?) ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. எனவே கட்டணத்தை உயர்த்துவது
தவிர்க்க முடியாதது.
ஒழுங்கு முறை ஆணையத்தில் வருகின்ற மூன்று ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு மின் நுகர்வோர்களிடம் கட்டண உயர்வு அவசியம் என்று மின் வாரியம் கேட்டுள்ளது.
ஒழுங்கு முறை ஆணையத்தில் வருகின்ற மூன்று ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு மின் நுகர்வோர்களிடம் கட்டண உயர்வு அவசியம் என்று மின் வாரியம் கேட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை மின் உயர்வை தள்ளிப் போடும் நோக்கிலும்
நினைத்த நேரத்தில் கட்டணம் உயர்த்தவும் திட்டமிட்டே மூன்று ஆண்டுகளுக்கு
கட்டண உயர்வுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் தோன்றுகின்றது.
தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 1-7-2013 தேதி முடிவு அறிவிக்கப்பட்டு அமல் படுத்தப்படும். ஆணையம் மக்கள்
கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்திட வேண்டும். (சென்ற ஆண்டு சென்ற
இடமெல்லாம் சிறப்பு கிடைத்தது. மிலிட்டரி வரவழைத்து தான் கூட்டம் மதுரையில்
நடந்ததாம் அந்த கூட்டங்களில் கலந்துகொண்டு சொன்ன மக்கள் கருத்துக்களுக்கு
மதிப்பில்லை என்பது வேறு விஷயம் ). இந்த ஆண்டு மக்கள் கருத்துக் கேட்புக்
கூட்டம் நடக்குமா? முறையாக முன்னரே அறிவிப்பு இருக்குமா? அல்லது திடீர்
என்று தேதி அறிவிக்கப்பட்டு அவசரம் அவசரமாய் (ரகசியமாய்) நடக்குமா?.
விவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது.
மின் வாரிய மனுவின் முழு விபரம் காண இந்த இணைப்பை சொடுக்குங்கள்
http://tnerc.tn.nic.in/download/Tariff%20Petition/2013/Tariff%20Petition%2013-14.pdf
1 கருத்து:
I am wondering how there is no apparent restriction or control over power theft when the whole state is starving for power. I happened to see a wedding celebration at Image wedding hall where the light decoration was extended up to the very edge of the main road on both sides. It is just one among the many incidents we all witness during political meetings and religious functions. Who is to foot the bill for this robbery?
கருத்துரையிடுக