சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 2012-2013 கல்வியாண்டிலிருந்து ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகைக்கு வின்ணப்பிக்கும் முறை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களிடமிருந்து தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் புதுப்பிப்பதற்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அனுப்பலாம்.
பட்டப் படிப்பு, முதுநிலைப்படிப்பு, தொழில் நுட்ப படிப்புகள் படிக்கும் மாணவ, மாணவிகள் www.momascholarship.gov.in என்ற இணையதள முகவரியில் புதிய மற்றும் புதுப்பித்தலுக்காக இம்மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த கல்வி உதவித்தொகை அந்தந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிமாற்றம் முறையில் நேரடியாக செலுத்தப்படும்.சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த கல்வி உதவித்தொகை கோரி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பாக மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், உதவித்தொகை தொடர்பாக மாணவ, மாணவிகள் அவரவர் படிக்கும் கல்வி நிறுவன முதல்வர்களை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களைப் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .
நண்பர்களே இந்த பதிவை மற்றவர் பார்த்து பயன்பெற உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
நட்புடன்
பாலசுப்ரமணியன்
1 கருத்து:
பகிர்கிறேன்... நன்றி...
கருத்துரையிடுக