ஆதரவாளர்கள்

புதன், 17 ஏப்ரல், 2013

எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி?;12-5-2013 அன்று சென்னையில் பயிற்சி

எஸ்சி, எஸ்டி, பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் முதல் வகுப்பில் (60%  க்கு மேல் )  தேர்ச்சி பெற்றிருப்பின், பல்வேறு உதவித்தொகைகளை திராவிட நலத்துறை வழங்கப்பட உள்ளது
.

BRIGHT STUDENTS AWARD
பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலியே முதல் மாணவராக வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் வழங்குவார்.
PRIZE MONEY AWARD
முதல் அமர்வில் எல்லா பாடங்களிலும் 60 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
STATE SCHOLARSHIP
மாநில அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
POST MATRIC SCHOLARSHIP
மேல்நிலை முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களும் உதவித்தொகையை பெறலாம்.
கட்டண விலக்கு:
அரசு/அரசு மானியம் பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, அக்கல்வி நிலையத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையுடன் இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது.
SPECIAL LOAN
விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு இந்த உயர் கல்வி சிறப்பு உதவித்தொகையை அளிக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 7000 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
வருமான வரம்பு:
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ மாணவியரின் பெற்றோர்/பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.50,000க்கும் அதிகமாக இருக்க கூடாது.
உதவித்தொகை:
பட்டப் படிப்பு - ரூ.6,500 - ரூ.7,000
தொழிற் படிப்பு - ரூ.7,000
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 75 சதவீத மானியமாகவும் 75 சதவீத கடனாகவும் வழங்கப்படுகிறது.
எங்கே விண்ணப்பிப்பது?
மாணவர்கள் பயிலும் கல்வி நிலையத்திலியே விண்ணப்பங்கள் கிடைக்கும். முதல்வர் / இயக்குநர் மூலம் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மற்ற பிரிவினருக்கு அடுத்த பதிவில் உதவிக்கு இந்தியன் குரல் உதவிமையங்களை அணுகலாம்


அனைத்து சமுதாய மக்களும் பெரும்பான்மை மக்களின் பொது நலன் கருதி பாடுபட வேண்டும்.தான் சார்ந்த சமுதாய மக்கள் முன்னேற பாடுபடுவது இட ஒதுக்கீட்டுப் பயன் பெற்ற அனைவரின் கடமை. ஒரு முறை இட ஒதுக்கீடு பெற்று அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினர் யாரும் இட ஒதுக்கீடு மூலம் எந்த அரசு உதவியையும்  கேட்கக் கூடாது.
அவ்வாறு செய்தால் தான் அவர்கள் சார்ந்த மற்ற பிள்ளைகள் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் . ஒருமுறை இட ஒதுக்கீடு மூலம் பலன் பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல பணம் கட்டி தனியார் பள்ளிகள் மூலம் கல்வியைக் கொடுத்து மீண்டும் இடஒதுக்கீட்டு வரிசையில் முன்னாளல்   நிற்பது நியாயமா?.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அதே சமுதாய பிள்ளைகள் அவர்களுடன் போட்டி போட்டு இட ஒதுக்கீடு பெற முடியுமா? வசதியான் நிலையில் இருந்தால் தானே அவர்களுடன் போட்டிபோட்டு வெற்றிபெற முடியும் .

 போட்டியில் தோற்றவர்களை அவர்களது சமுதாய வசதிபடைத்த மக்களால் அடிமையாக நடத்தப் படுகிறார்களே. தன சுய மரியாதையை இழந்து தன சமுதாய பெரிய மனிதர்களுக்கு அவர்கள் மேலும் வளம் பெற இவர்களது வாழ்க்கையை வேலைக்காரனாக, கூலியாக, கையாளாக,அடியாளாக அடமானம் வைக்கின்றார்களே. அனைத்து சமுதாய சமூக ஆர்வலர்களே சிந்தியுங்கள்.

தீர்வு:
 இட ஒதுக்கீடு பெரும் அனைத்து சமுதாய மக்களும், அனைத்து சமுதாய பெரிய மனிதர்களும்  உண்மையாக விழிப்புணர்வு செய்து தான் சார்ந்த சமுதாய மக்கள் மேம்பட செயலாற்ற வேண்டும். அல்லது அரசே இதற்கான சட்டம் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும். செய்வார்களா?


 உங்கள் நண்பர்களுக்கும் பதிவைப் பகிருங்கள் தோழர்களே!



1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைவரும் அறிய இந்தப் பகிர்வையும் பகிர்கிறேன்... நன்றி...