ஆதரவாளர்கள்

Friday, November 15, 2013

குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் ?

குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் ?

குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் ?

பயமே வைத்தியம் ..பயமுறுத்துவதே வைத்தியம் ...குடிகார்களை எப்படி பயமுறுத்தலாம் ...

  1. கடுகை அரைத்து சாப்பாட்டில் கலந்து கொடுக்க (குடித்து வந்த பின் )-வாந்தி வர வரும் ..அதிலே பயம் வரும் ..
  2. வசம்பை அரைத்து ஏதாவது பல ஜூஸில் கலந்து கொடுக்க வாந்தி வரும் (ஆனால் வசம்பின் வாசனை ஆளை தூக்கும் )
  3. குடிகாரரின் வேட்டியில் /பேண்டில் /ஜட்டியில் -ஆசன வாய் இருக்கும் பக்கம் -இரத்தம் .இரத்த கரை படியுமாறு செயற்கையாக (கசாப்பு கடையில் வாங்கலாம்) -கொட்டிவிட்டு -அதை அவர் குடி இல்லாதபோது தெளிவாக இருக்கும் போது "என்னங்க இப்படி இரத்தம் வந்திருக்கே ,குடிச்சு குடிச்சு வயிறு ,குடலும் புண்ணாகி இரத்தம் வருதே"என்று அவரை பயமுறுத்தலாம் ..
  4. கசாப்பு கடையில் இரத்தம் வாங்கி -அவர் லெட்டின் -டூ டாய்லட் போன பின் -காலையில் ஊற்றி வைத்து -"ஏங்க இன்னாதுங்க இப்படி இருக்கே" என்று ஒண்ணும் தெரியாதது போல அவரை பயமுறுத்தலாம்
  5. தெரிந்த நண்பர் எல்லாம் ஒரு நாளில் பேசி வைத்து (குடிக்காத நண்பர்கள் ),அவரை பார்த்து ..முகம் ஏன் இப்படி கருத்து போய் இருக்கு ,ஏன் இப்படி டல்லா இருக்கீங்க ,பெரிய வியாதி வந்தவர் போல இருக்கீங்க ,என்னும் பல பல வசனங்களை ஒரே நாளில் வெவ்வேறு சூழ்நிலையில் குடிகாரரை பார்த்து கேட்க வைப்பதன் மூலமும் -குடிப்பது தான் இப்படி இருக்கே போலே என்று அவர்க்கு தோண வைக்கலாம்
  6. சும்மா இரத்தம் டெஸ்ட் பண்ணுகிற மாதிரி நமக்கு தெரிந்த லேபில் குடிகாரரின் இரத்த பரிசோதனை நிலையத்தில் இரத்தம் டெஸ்ட் செய்து -மஞ்சள் காமாலை இருக்கு ,கொழுப்பு கூடி போச்சு ,இரத்தமே இல்லை (உண்மையிலே கூட இருக்கலாம் ) என்று இரத்த பரிசோதனை லேப் பரிசோதகரை வைத்து பயமுறுத்தலாம் .(ரிப்போர்ட் கொடுக்காமல் இருந்தால் நல்லது -வேறு லேபில் இரத்தம் டெஸ்ட் பண்ணாலும் இப்படி அவர்களிடமும் பேசி பயமுறுத்தலாம் ..
  7. நமக்கு தெரிஞ்ச டாக்டர் கிடைத்தால் ..சும்மா டெஸ்ட் என்ற பெயரில் அவர்க்கு இ சி ஜி எடுக்க வைத்து .."இப்பவே ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு ..வேறு ஏதாவது கெட்ட பழக்கம் இருந்தால் விட்டு விடு "என்று டாக்டரே  அவரை பயமுறுத்தலாம் ..
  8. சாப்பாட்டில் சில சுவைகளை கூட்டி வைத்து -அதிகமாக குடித்து வந்த நாட்களில் உதாரணதிற்கு உப்பை கூட்டிசாப்பாட்டை வைத்து -அவர் கேட்டால் உங்களுக்கு மட்டும் தான் இப்படி இருக்கு உப்பு கூடி போச்சுன்னு ஏதாவது பயமுறுத்தலாம் ..இப்படி கசப்பு சுவை ,கார சுவை களையும் பயன்படுத்தலாம் ..
  9. ஞாபக மறதி இருப்பது போல் -அவர் அன்றாடம் செய்யும் செய்கைகளில் ,சாவியை மறைத்து வேறிடத்தில் வைப்பது ,பூட்டு பூட்டாதது போல் திறந்தே வைப்பது ,கடன் கொடுக்கதவர்களையும் கடன் கொடுத்தேன் என்று அவரை மிரட்ட வைக்கலாம் ..குடித்துவிட்டு தூங்கும் இடத்தையே முடிந்தால் மாற்றிவிட்டு பயமுறுத்தலாம் ..
  10. குடிப்பவரின் மனதை மாற்றி விட -பயமுறுத்தும் விஷயங்களை -செத்து போய் விடுவாய் என்ற அளவுக்கு செய்யலாம் ..

இதெல்லாம் எடு படாது என்றால் காத்திருங்கள் ஆயுர்வேத மருந்துகள்,மூலிகைகள் பற்றி அடுத்த பதிவில்
 

Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com/2011/10/blog-post_05.html#ixzz2kj0PFNxg

No comments: