
30 நாட்களில் கல்வி கடன்! தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, 30 நாட்களில், கல்வி கடன் பெறும் வழிமுறைகளை கூறும், தீபக்: நான், 'வாய்ஸ் ஆப் இந்தியா' அமைப்பின் உறுப்பினர். பொது மக்களின் உரிமைகளை, 'தகவல் அறியும் உரிமை சட்டம்' உதவியுடன், எளிதில் பெற்று தருவதே, எங்கள் அமைப்பின் நோக்கம். இச்சேவையை, இலவசமாகவே செய்கிறோம்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், உயர்கல்வி கற்பதற்கான அருமை யான வாய்ப்பை, 'கல்வி கடன்' மூலம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கள் வழங்குகின்றன. குடும்ப வறுமையிலும், அதிகம் படிக்க விரும்பும் ஏழை மாணவர்கள், கல்வி கடன் கிடைக்கும் என்ற ஆசையில், விண்ணப்பிப்பர். ஆனால், 'இந்த வங்கி, உங்கள் எல்லைக் குள் வராது. இந்த படிப்பிற்கெல்லாம், 'லோன்' தர முடியாது' எனக்கூறி, தேவையற்ற சான்றிதழ் களை எடுத்து வர சொல்லி, வங்கிகள் இழுத்தடிக்கும். வசதியான மாணவர்கள், எளிதில் கல்வி கடன் பெறும் நிலையில், ஏழை மாணவர்களுக்கு மறுக்கப்படு வதால், கல்வி கடன் வழங்கப்படுவதன் நோக்கம் மாற்றப்படுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண, தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, கல்வி கடன் கிடைக்காமல் உள்ள மாணவர்களுக்கு, வழிகாட்டி வருகிறோம். கல்வி கடன் வேண்டி, நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ விண்ணப்பித்தாலும், அதற்கான ரசீதை, வங்கி தர வேண்டும். விண்ணப்பித்த வங்கியில், பெற்றோரின் நிலுவைக் கடன் எதுவாக இருந்தாலும், கடன் தர முடியாது என, வங்கிகள் சொல்லக் கூடாது. கல்வி கடனுக்கு விண்ணப்பிப்போர், தங்கள் குடும்ப சூழலை எடுத்து சொல்லவும் தேவையில்லை. நன்றாக படித்து, வேலைக்கு சென்ற பின், கடனை அடைத்து விடும் தன்னம்பிக்கை இருந்தாலே போதும். மேலும், ஒரு குடும்பத்தில், ஒரு மாணவன் கல்வி கடன் பெற்றிருந்தாலும், அவருடைய சகோதரர்களுக்கு, கல்வி கடன் மறுக்க கூடாது. விண்ணப்பத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின், அதை, வங்கி சுட்டி காட்டலாமே தவிர, நிராகரிக்க முடியாது. கல்வி கடனுக்கு, 4 லட்சம் ரூபாய் வரை எந்த, உத்தரவாதமும் தர தேவையில்லை. 4 முதல், 7 லட்சம் ரூபாய் வரை, மூன்றாவது நபர் உத்தரவாதம் தேவை. 7 லட்சம் ரூபாய்க்கு மேல் தான், சொத்து பிணையம் தேவைப்படும். தொடர்புக்கு: 99946 58672
more http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக