ஆதரவாளர்கள்

Monday, April 29, 2013

திருப்பத்தூர் சார் ஆட்சியர் பணியாற்றிய விபரம்

உங்க ஊர் அலுவலருக்கு  என்ன பணி? தன் பணியை செய்தாரா கண்டுபிடிக்க எளிய வழி  

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் ஏற்பாடு செய்த தர்ணாவுக்கு அனுமதி மறுப்பு


எஸ்பி அனுமதி தரலாம் என்றபிறகு டிஎஸ்பி அனுமதி தர மறுத்துள்ளார்
காரணம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் கொடுக்க வேண்டாம் என்று வாய் வலி உத்தரவு.

இதை சட்டப்படி எடுத்துச் செல்லவும் இவர்களது கடமை தவறிய கண்காணிக்கத் தவறிய விவரங்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டுள்ளோம்.

தர்ணாவுக்கு தடை போட்டதால் திருமண மண்டபத்தில் பொதுகுழு கூடி தீர்மானம் நிறைவேற்றி உரிய மன்றங்களுக்கு அனுப்ப முடிவு செய்து அதன் படி ஆலங்காயம் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

தனக்கு அளித்த கடமையை அரசு அலுவலர்கள் எந்த அளவு நிறைவேற்றுகிறார்கள் என்பதற்கு உதாரணம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அவர்கள்

அரசு அறிவித்த திட்டங்களை இவர்கள் தான் மக்களுக்கு கொண்டு செல்வார்கள்
முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற கைம்பென் உதவி, படித்த பெண்களுக்கு திருமண வுதவி, விவசாயிகளுக்கு இழப்பீடு என்று அரசின் திட்டங்கள் இவர்கள் இல்லாமல் நகராது. இவர்களை நம்பித்தான் மக்களும் அரசும் செயலாற்ற முடியும்.
தன்கீழ் உள்ள அலுவலகங்களில் அலுவலர்கள் செயல் படுகின்றார்களா என்று சோதனை செய்ய வேண்டும்.
தனக்கு கீழ் உள்ள அலுவலகங்கள் என்ன வேலை செய்துள்ளார்கள் என்று ஆராய்ந்து பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றார்களா அலுவலகத்தில் புரோக்கர்கள் இருக்கின்றார்களா லஞ்சம் வாங்குகின்றார்களா பனிப் பதிவேடு உள்ளிட்ட அனைத்தையும் அறிக்கை தயாரித்து தவறு செய்தால் தண்டனை அளிக்க அல்லது பரிந்துரை செய்ய வேண்டும் 

அவர்கள் மீது ஊழல் புகார்கல் வந்தால் அதைப் பரிசீலித்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவிற்கு அனுப்பிடல் வேண்டும் .

300 நாட்களில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் பணியாற்றிய விபரம்

40 தினங்கள் ஞாயிறு விடுமுறை (சார் ஆட்சியர்களுக்கு விடுமுறை நாள் அரசால் அளிக்கப்பட வில்லை) ஞாயிற்றுக் கிழமை  மணல் திருட்டு உள்ளிட்ட கனிமங்கள் கொள்ளை சார் ஆட்சியர் பணியில் இல்லை ரெய்டு இல்லை அன்று கொலை கொள்ளை நடவாதா இவர் எப்படி விசாரணை செய்திருப்பார்?

26.5 நாட்கள் வேலூரில் ஆட்சியர் அலுவலக மீட்டிங் பங்கேற்பு

16 நாட்கள் பயிற்சியில் கலந்து கண்டதாக குறிப்பு ( என்ன பயிற்சி அளிக்கப்பட்டது இவர்களுக்கு எதைக் கற்றுகொண்டார்)

147 நாட்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்ததாக குறிப்பு ( முதிர் ஓய்வூதிய விண்ணப்பங்கள் பல மாதங்களாக கிடப்பில் இவர் ஆற்றிய பணி ?)

வேலூர் மாவட்டம் வாணியம் பாடி திருப்பத்தூர் ஆம்பூர் VAO அலுவலகம் மற்றும் ஆய்வாளர் தாசில்தார் அலுவலகங்களில் சென்று மக்கள் குறைகளைக் கேட்கவில்லை ( ஒரு இரவு தங்கி குறைகளைக் கேட்கவேண்டும் என்று விதி உள்ளது)

 ஏலகிரி மலையில் 16 முறை ஆய்வு ( குளுகுளுன்னு இருக்கும் அழகான பங்களாக்களில் ஓய்வு எடுக்க வசதியான மலை தமிழ் நாட்டு முதல்வர் கோடநாட்டுல இருந்து ஆள்வது போல் இந்த சார் ஆட்சியர் அம்மா ஏலகிரி மலையில் இருந்து ஆட்சி செய்கின்றார் )

300 தினங்களில் 12 ரெய்டு ( மாதம் ஒன்று கணக்கு காட்டனுமில்ல)

அவரது பனிக் கடமையில் 24 இனங்கள் பற்றிய குறிப்பே இல்லை ( பயிற்சி பெற்றார் ஆனால் இதெல்லாம் தெரியாது அட தமிழே தெரியாது அந்த அம்மாவுக்கு அவர் கர்நாடக மானிலத்தை சார்ந்தவர்  )

அவருக்கு மாளிகை போன்ற வீடும் அலுவலகமும் பணியாளர்கள் மற்றும் குளுகுளு கார் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு அரசின் திட்டங்கள்  பெப்பே பெப்பே
இந்தலட்சனத்தில் சார் பதிவாளர் இருந்தால் அவரின் கீழ் இயங்கும் அலுவலகங்களின் செயல் பாடு எப்படி இருக்கும்

இலஞ்சம் ஊழல் பெருகக் காரணமாக தன்பணி  செய்யாத கடமையை செய்யாத ஊழல் அதிகாரிகளுக்கு துணை போகும் திருப்பத்தூர் சார் ஆட்சியர் என்ன செய்தார் என்று இவை அனைத்தும் அவர் தன கையெழுத்து இட்ட தகவல் உரிமைச் சட்ட விண்ணப்ப பதில்  கடிதத்தில் பெற்று அந்த அடிப்படியிலேயே  இவரது பணிகுறித்த ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களுடன் உரிய மன்றத்தில் புகார் அளிக்கப்படும். நாம் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பது விதி ஆம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டால் உரிய தண்டனை அளித்துத் தானே ஆகவேண்டும்
அரசு அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள் அதற்க்கான சட்டப்ப்ர்வ நடவடிக்கைகள் தொடரும். அடுத்த அலுவலகம் பற்றிய தகவல் வரும் பதிவில் 

No comments: