ஒரு நாள் அடையாள தர்ணா : திருப்பத்தூரில்
போது மக்களால் அளிக்கப்படுகின்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்கள் உரிய காலத்திலில் உரிய நடவடிக்கை இல்லை. பொது மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். மனுதாரகளை மரியாதைக் குறைவாய் நடத்துவது உள்ளிட்ட அரசு அலுவலகத்தின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் தவறு செய்யும் அலுவலர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி 29-04-13 அன்று காலை பத்து மணி முதல் திருப்பத்தூர் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஒரு நாள் தர்ணா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களே தாங்களும் தங்களது நண்பர்களும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள மக்கள் உரிமையை மீட்டெடுக்க வாரீர் வாரீர் .
நிகழ்ச்சி ஏற்பாடு
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்
ஆலங்காயாம் ஒன்றியம்
தொடர்புக்கு 9789792251,
நாள் 29-04-13
இடம் ;கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில்
திருபத்தூர்
வேலூர் மாவட்டம்
நாள் 29-04-13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக