ஆதரவாளர்கள்

திங்கள், 1 ஏப்ரல், 2013

தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு ?


தொடர்ந்து மின்வாரியத்தில் ஏற்ப்படும் இழப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்

 26.2.2013 அன்று தமிழ் நாடு மிசரவாரியம்  தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்தி கேட்டு மனு செய்துள்ளது.

விவசாயப் பம்ப்செட்டுகளுக்கு மின் கட்டணம்  குடிசைகளுக்கான மின் கட்டணங்கள்  உயர்த்தப் படும் என்று தெரிகின்றது.

சென்ற ஆண்டு 17000 கோடி இழப்பு என்று சொல்கின்றது மின்வாரியம். அதற்கு முந்தைய ஆண்டு சுமார் 8000 கோடி இழப்பு என்று சொல்லித்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது (1000 ரூபாய் கட்டியவர்களுக்கு 1600 வரை கட்டும் அளவுக்கு  மிகக் கடினாமாக உயர்வு செய்யப்பட்டது) 

இந்த ஆண்டு இரண்டு மடங்கு இழப்பு (17000 கோடி இதுக்கு எவ்வளவு மின்கட்டண உயர்வு வரும்?) ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. எனவே கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது.

 ஒழுங்கு முறை ஆணையத்தில் வருகின்ற மூன்று ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு மின் நுகர்வோர்களிடம் கட்டண உயர்வு அவசியம் என்று மின் வாரியம்  கேட்டுள்ளது. 

  வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை மின் உயர்வை தள்ளிப் போடும் நோக்கிலும் நினைத்த நேரத்தில் கட்டணம் உயர்த்தவும் திட்டமிட்டே மூன்று ஆண்டுகளுக்கு கட்டண உயர்வுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் தோன்றுகின்றது.  



 தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 1-7-2013 தேதி முடிவு அறிவிக்கப்பட்டு அமல் படுத்தப்படும்.  ஆணையம்  மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்திட வேண்டும். (சென்ற ஆண்டு சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைத்தது. மிலிட்டரி வரவழைத்து தான் கூட்டம் மதுரையில் நடந்ததாம் அந்த கூட்டங்களில் கலந்துகொண்டு சொன்ன மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பில்லை என்பது வேறு விஷயம் ). இந்த ஆண்டு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்குமா? முறையாக முன்னரே அறிவிப்பு இருக்குமா?  அல்லது திடீர் என்று தேதி அறிவிக்கப்பட்டு அவசரம் அவசரமாய் (ரகசியமாய்) நடக்குமா?.

விவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது.

மின் வாரிய மனுவின் முழு விபரம் காண இந்த இணைப்பை சொடுக்குங்கள் 
http://tnerc.tn.nic.in/download/Tariff%20Petition/2013/Tariff%20Petition%2013-14.pdf

மக்கள் மன்றத்திற்கும் வலைப் பதிவர்களுக்கும் 

 மின் வாரியம் மின் உற்பத்தி செய்ய தேவையான வழிமுறைகளுடன் ,  மின் இழப்புகளை இழப்புகளை சரிசெய்யவும், மின் கட்டண உயர்வு இல்லாமல் இருக்க ஆலோசனைகள் மின் வாரிய முன்னாள் பொறியாளர்கள்  உள்ளடக்கிய குழு தயார் செய்த விரிவான அறிக்கை நமது அமைப்பின் மூலம் அளிக்கப்பட்டது. மேலும் அமைப்பின் உறுப்பினர்கள் தனித்த்தனி நபர்கள் வாயிலாக கூட்டம் நடைபெற்ற (சென்னை கோவை திருச்சி மதுரை ) அனைத்து இடங்களிலும்  மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை படித்தார்களா தெரியவில்லை. படித்திருந்தால் 50 ஆயிரம் கோடி மின் கட்டண உயர்வு தேவையில்லை பொது மக்களை கசக்கிப் பிழியும் மின் கட்டண உயர்வு தவிர்க்கப் படலாம்.

உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். விவாதிக்க கூடுதல் தகவல் தொடர்புக்கு அனைத்து வேலைநாட்களில் காலை 10-மணி முதல் 11 மணி வரை  9444305581 பாலசுப்ரமணியன் அல்லது E-mail ID vitrustu@yahoo.in

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

...க்கும்... மின் வெட்டு 14 மணி நேரம்... தேர்வுகள் இருப்பதால் தப்பித்து கொண்டு இருக்கிறோம்...

இணைப்பிற்கு நன்றிகள் பல...