ஆதரவாளர்கள்

புதன், 18 செப்டம்பர், 2013

சொத்து பிணையில்லை லட்சக்கணக்கில் மானியத்துடன் வங்கிக் கடன் மகளிர் குழுக்கள் புண்ணியத்தால் மெகா மோசடி - தமிழகம்


நீங்கள் வாங்கும் கடனுக்கு பிணையம் தேவையில்லை உத்திரவாதம் தேவையில்லை நாங்கள் சொன்னால் போதும் மத்திய அரசு திட்டம் மாநில அரசின் திட்டம் ரிசர்வ் வங்கியின் திட்டம் வாருங்கள் வாருங்கள் 


50 சதம் மானியத்துடன் வங்கிக்கடன், எந்த உத்தரவாதம் இல்லாமல் வங்கிக் கடன் நாங்கள் வங்கித் தருகின்றோம், எங்கள் அல்லது வீட்டிலியே இருங்க உங்களைத் தேடி வங்கிக் கடன் கடன் இப்படி விதம் விதமாய் கடன் வாங்கித் தருகின்றோம் என்று தமிழகத்தில் அதுவும் மகளிர் குழுக்களை மையமாக வைத்து ஒரு மெகா மோசடி தமிழகத்தில் ஓசையின்றி நடக்கிறது இதில் தாதாக்களின் கைகள் மூலம் காவல்துறை ஆசியும் கிடைப்பதால் துணிச்சலுடன் தோழில் ஜோராக நடந்து வருகின்றது.

என்னாதான் சொல்லுங்க பேராசை பிடித்த மனிதர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு மேலும் உதாரணம்

தாட்கோ லோன் 50 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் இது குறிப்பாக நகர சுத்தி தொழிலாளிகளின் வாரிசுகளுக்கு தொழில் தொடங்க வழங்கப்படும் கடன் இதில் ஏமாற்றுக்  காரர்கள் என்ன செய்கின்றார்கள் தெரியுமா

 நாங்கள் அரசின் தள்ளுபடியுடன் கூடிய கடன் வாங்கித் தருகின்றோம் நீங்க தள்ளுபடி போக மீதி பாதி ரூபாய் கட்டினால் போதும் ஆனால் எங்களுக்கு 25 சதவீதம் கமிசன் தந்துவிட வேண்டும் என்று பேரம் பேசி அதை முன்னராகவே வாங்கிவிடுவார்.

உண்மையான தகுதி இருப்பவர்களுக்கு சுமார் 50000 ரூபாய் கிடைக்கும் துவும் ஒரு குடும்பத்தில் ஒரு முறை மட்டுமே அந்த விண்ணப்பத்தில் எங்கள் குடும்பத்தில் வேறு யாரயும் இந்தக் கடன் வாங்கவே இல்லை என்று உத்திரவாதம் தரவேண்டும்

ஆனா பாருங்க ஐயர், ஐயங்கார், முதலியார், நாயக்கர், கவுண்டர் என அனைத்து சமூகத்தவரும் அதுவும் பெண்கள் தாங்க இவர்களைப் போன்ற ஏமாற்றுபவர்களிடம் கொடுத்து ஏமாந்துகொண்டு இருக்கின்றார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் வங்கி அலுவலர் அந்த வங்கியின் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் எனது நெடுநாள் நண்பரின் மனைவியும் 20000 ரூபாய் பணத்தைக் கொடுத்து ஏமாந்து இருக்கின்றார்கள் என்றால் சாமானிய மக்கள் இவர்களிடம் ஏமாறுவது என்ன கஷ்டமா? 

இவர்கள் தகுதியே இல்லாதவர்கள் கடன் கிடைக்காது என்று தெரிந்தே கமிசன் வாங்கிய ஏமாற்றுப் பேர்வழிகள் அவர்களைத் திருப்திப் படுத்தும் விதமாக அரசாங்கம் இல்லையா அதான் கொஞ்சம் லேட்டாகுது என்று சொல்லி  அலையவிடுவார்கள் கேட்டவர் தானாகவே இனி கிடைக்காது என்று முடிவு செய்து சென்றுவிடும் வரை தினமும் ஒரு கதையை சொல்லி நல்லவராக நடந்துகொள்ளுவார்கள்.

இதில் அவமானம் கருதி வெளியில் சொல்லாமல் இருப்பவர்கள் இத்தொழில் செய்பவர்களுக்கு பெரும் பலம் . மீறி கொஞ்சம் விவகாரம் பேசினாலும் அவர்கள் கைவசம் அடியாட்கள் படை எப்போதும் தயாராகவே இருக்கும் அதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா என்ன

இதுல என்ன கொடுமைனா 50000 ரூபாய்க்கு மேல கடன் கிடையாதுங்க இவங்க ஐந்து லட்சம் பத்து லட்சம் கேட்டவர்களுக்கெல்லாம் ம்ம் கொடுங்க கமிசனை உங்களுக்கு கிடைக்கும் வாங்கித்தருகின்றேன் என்று ஏமாற்றி பணம் பறிக்கும்  செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது ஹைலைட்டு 

ஏமாந்த பெண்கள்  வந்து திட்டி கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்கும் போதே இன்னொருவன் பணத்தைக் கட்டுவது வேடிக்கையாக இருக்கின்றது இவர்களுக்கு உண்மையில் அறிவிருக்கா என்றால் இருக்குங்க ஆனா பாருங்க ஆசை அறிவை மங்கச் செய்து இருக்கின்றதே என்ன செய்வது

இந்த நூதன மோசடி தமிழகம் முழுவதும் ஜோராக நடந்து வருகின்றது. மகளிர் குழு மூலம் வேகமாக எல்லோரும் இவர்களிடம் சிக்குகிறார்கள். இவர்கள் மோசடி செய்கின்றார்கள் என்று பத்திரிகைகளில் செய்தி வருகின்றது ஆனாலும் ஏமாறுபவர்கள் தினம் தினம் பணத்தைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றாகள். ஆனா பாருங்க காவல் துறையில் புகார் கொடுத்தால் புகாரை வாங்குவதே இல்லை. ஒரு உதாரணம் நீலாங்கரையில் இருந்த ஒரு மகளிர் குழுவினர் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு மோசடி பெர்வளியிடம் ஏமாந்து இருக்கின்றார்கள். நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் அது எழும்பூர் காவல் நிலையத்தில் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கைவிரிக்க எழும்பூர் காவலர்கள் நீங்கள் நீலாங்கரையில் தான் புகார் செய்யவேண்டும் என்றும் சொல்கின்றார்கள் இவர்கள் எங்கு புகார் கொடுப்பது என்று குழம்பி ஒருவழியாக புகாரும் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றார்கள் நீதி கிடைக்குமென்று கிடைக்குமா?

நாம் ஆசைப் படும்போது தான் ஒருவர் நம்மை எமாற்ற முடியும் நாம் ஆசைப்படவில்லை என்றால் எந்தக் கொம்பனாலும் நம்மை ஏமாற்றவே முடியாது இவர்கலாளைப் பார்த்து நான் அடிக்கும் கமண்ட் வேறென்ன செய்ய

ஆசையே துன்பத்துக்கு காரணம் புத்தர்  என்ன அழகா சொல்லியிருக்காரு ஒருவேளை இப்படி சொல்லியிருந்தால் மக்களுக்கு புரிந்து இருக்குமோ ?

நாம் ஆசைப் படும்போது தான் ஒருவர் நம்மை எமாற்ற முடியும் ஆசைப் படாதே ஏமாற்றப் படாதே - பாலசுப்ரமணியன்

கருத்துகள் இல்லை: