கோவை : "தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக்
கொள்வதில்லை. தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில்
தள்ளி விடுகிறார். தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு
சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது' என்கின்றனர், மன நல நிபுணர்கள்.
கோவை,
நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய
எட்டு மாவட்டங்கள் அடங்கிய தமிழக மேற்கு மண்டலத்தில், இந்தாண்டு ஜனவரி
முதல் ஆகஸ்ட் வரையான எட்டு மாதத்தில் மட்டும், 1,287 ஆண்கள், 615 பெண்கள்,
58 சிறுவர்கள், 94 சிறுமிகள் என, மொத்தம் 2,054 பேர் தற்கொலை செய்து
கொண்டுள்ளனர்.இவர்களில் 905 பேர், தற்கொலைக்கு தேர்ந்தெடுத்த ஆயுதம், விஷம்
குடிப்பது. 598 ஆண்கள், 260 பெண்கள், 22 சிறுவர்கள், 25 சிறுமிகள்,
விஷத்தில் உயிரை மாய்த்துள்ளனர். நீர்நிலைகளில் குதித்து 146 பேரும்,
தூக்கிட்டு 813 பேரும், தீக்குளித்து 190 பேரும், தற்கொலை செய்து
கொண்டுள்ளனர். இவர்களில் 815 பேர், 30 வயதுக்கு உட்பட்டவர்கள்; 576 பேர் 31
முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்; 384 பேர் 41 முதல் 50 வயதுக்கு
உட்பட்டவர்கள்; 279 பேர் 51 வயதுக்கு மேற்பட்டவர்கள்.பிற மாவட்டங்களுடன்
ஒப்பிடுகையில், திருப்பூர், கோவையில்தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலை
சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.தொழில் நிமித்தம் பல்வேறு தரப்பினரும் வசிக்கும்
திருப்பூர் மாவட்டத்தில், தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது.
இம்மாவட்டத்தில், கடந்த எட்டு மாதத்தில் மட்டும், காதல் தோல்வியால் எட்டு
பேரும், குடும்பத்தகராறில் 196 பேரும், கடன் தொல்லையால் 27 பேரும்,
வேலையின்மையால் ஏழு பேரும், வயிற்று வலியால் 74 பேரும், கள்ளத்தொடர்பால்
நான்கு பேரும், வாழ்க்கையை வெறுத்த நிலையால் 24 பேரும், பிற காரணங்களால்
114 பேரும் என மொத்தம் 454 பேர் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் வழக்கு
பதிந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், காதல் தோல்வியால் 20 பேரும்,
குடும்பத்தகராறு காரணமாக 46 பேரும், வேலையின்மையால் 40 பேரும், வயிற்று
வலியால் 130 பேரும், கள்ளத்தொடர்பால் 16 பேரும், வாழ்க்கையை வெறுத்த
நிலையால் 44 பேரும், பிற காரணங்களால் 30 பேரும், என மொத்தம் 336 பேர் உயிரை
மாய்த்துள்ளதாக, போலீசார் கூறுகின்றனர்.
தற்கொலை மரணங்களை தடுப்பது
குறித்து, மனநல நிபுணர் பொன்னி கூறியதாவது:இருபது வயதுக்குட்பட்டவர்கள்
பெரும்பாலும் காதல் விவகாரங்களால் உயிரை விடுகின்றனர். அடுத்து, 20 முதல்
30 வயதுக்குட்பட்ட பெண்கள், கணவனின் குடிப்பழக்கம், பொருளாதார நெருக்கடி,
மனரீதியான பாதிப்புகள், உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை
முடிவுக்கு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை படிக்கும்
மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகம். இந்த பருவத்தில் இருக்கும்
குழந்தைகளுடன், பெற்றோர் கருத்து பரிமாற்றம் செய்வது அவசியம். பெற்றோர்,
குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல
விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.பள்ளிகளில், மதிப்பெண் என்ற எல்லையை
வகுப்பது தவறு. பெற்றோர், தங்களது குழந்தைகள் இன்ஜினியர், டாக்டராக
வேண்டும் என்றே விரும்புகின்றனர். தங்கள் ஆசைகளை குழந்தைகள் மீது
திணிக்கின்றனர். இது பெரும் தவறு. குழந்தைகளுக்கு மனக்குழப்பத்தை தராமல்
இருந்தாலே தற்கொலை எண்ணத்தை தடுத்து விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
தற்கொலை என்பது முடிவல்ல!
தற்கொலை முடிவை கடைசி நேரத்தில் கைவிட்ட லதா நடராஜன் "அட்வைஸ்':பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, என் சகோதரி, அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனர். அந்த காலகட்டத்தில் நானும், என் கணவரும் தற்கொலை முடிவெடுத்தோம்.கடைசி நேரத்தில் முடிவை கைவிட்டோம். தற்போது நாங்கள் ஒரு கிராம் தங்கம் தயாரித்து கொடுக்கும் சுயதொழில் செய்து வருகிறோம். இப்போது தான், தற்கொலை முடிவு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை உணர முடிகிறது.இதேபோன்று எனது சகோதரியும் யோசித்திருந்தால், அவளது குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்திருப்பாள். தற்கொலை என்பது ஒரு முடிவல்ல; அந்த தவறை யாரும், ஒருபோதும் மேற்கொள்ள கூடாது.இவ்வாறு லதா நடராஜன் கூறினார்.
40 வினாடிக்கு ஒருவர்!
மனநல நிபுணர் மோனி கூறுகையில், ""உலகில், ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நோய், கொலை ஆகியவற்றால் உயிரிழப்பதைவிட, தற்கொலையால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம்.தற்கொலை என்பது சமூக நாணமாக கருதப்படுகிறது. அதை தடுத்து சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கம். திருமணம் ஆகாத ஆண்களே அதிகம் தற்கொலை செய்கின்றனர். திருமணம் ஆனவர்களுக்கு பொறுப்பு அதிகம் உள்ளதால் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் குறைவு,'' என்றார்.
வாழ நினைத்தால் வாழலாம்:-இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்- :
வாழ்வில்
ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள, தைரியமில்லாமல் கோழைத்தனமாக எடுக்கும்
முடிவு தான் தற்கொலை. பிரச்னைகள் இல்லாதவர்களே உலகில் இல்லை. பிரச்னை
உள்ளவர்கள் அனைவரும் தற்கொலை தான் செய்ய வேண்டுமெனில், உலகில் யாரும்
இருக்க மாட்டார்கள். இது முட்டாள்களின் செயல் என வல்லுனர்கள்
விமர்சிக்கின்றனர். பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, தற்கொலை என இன்னும் பலர்
நினைக்கின்றனர். ஆனால் இதனால் அவரை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு
கஷ்டப்படுவார்கள் என அறியாமல் செய்து விடுகின்றனர். தற்கொலை அறவே கூடாது
என்பதை வலியுறுத்தும் விதமாக, செப்., 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம்
கடைபிடிக்கப்படுகிறது.
25 சதவீதம்:
உலக அளவில் சராசரியாக, ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேர்; ஆண்டுக்கு 10 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 15-44 வயதுக்கு உட்பட்டோர் தான் அதிகம் தற்கொலை செய்கின்றனர். நோய்களால் ஏற்படும் இறப்பில், 25 சதவீதம் தற்கொலை மூலம் நடக்கிறது.
பல காரணங்கள் :
கல்வியில் சாதிக்க முடியாத காரணத்தால், மாணவர்கள், வரதட்சனை, பாலியல் உள்ளிட்ட கொடுமைகளால் பெண்களும், வறுமை, கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆண்களும்; வேலையில் தொந்தரவு, காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக இளைஞர்களும் தற்கொலைக்கு முயல்கின்றனர்.பிரச்னைகளை சந்திக்கும் பக்குவத்தை பெற்று விட்டால், தற்கொலை எண்ணம் தலை தூக்காது.
நன்றி - தினமலர்
இந்நிலைக்கு காரணம் ஊழல் தவிர வேறில்லை ஊழலை வேரறுக்க வேண்டியதன் அவசியத்தை கடந்த பல ஆண்டுகளாக கூறிவருகின்றோம்
இனியும் மக்கள் விழிப்படையாவிட்டால் இன்னும் முப்பது ஆண்டுகழித்து நாமும் நம் செல்லக் குழந்தைகளும் இப்படி ஒரு முடிவை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்ப்படும் அல்லது உயிர்வாழ கத்தி எடுப்பது இல்லையெனில் பிச்சை எடுப்பது பழகிவிடும்.
பிரச்சனைகளை மட்டும் பேசாமல் அதற்க்கு தீர்வும் அதற்க்கான வழிமுறைகளும் தான் இந்தியன் குரல் அமைப்பு கற்றுத் தருகின்றது மக்கள் சட்டப்படியான போராட்டம் நடத்திட வேண்டும் அப்பொழுது தான் மக்களாட்சியைக் காக்க முடியும் மக்களாட்சி நிலைபெற்றால் தான் மக்கள் சுபிட்சமாக வாழ முடியும்
மக்களுக்கும் ஆசையைக் கட்டி குற்றவாளியாக்கி தன்பக்கமே வைத்துக்கொள்ளும் தந்திரம் மிக்க கட்சிகளின் கட்சியாட்சி தொடர்ந்தால் மக்களாட்சி கேலிக்குள்ளாகி மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் வறுமை மக்களை எந்த முடிவுக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு முதல் பத்தியில் இருந்து மீண்டும் படியுங்கள்
தகவல் உரிமைச் சட்டம் மூலம் பிரச்சனைகளுக்கு கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் மீது தீர்வு காண்பது எப்படி? அனைத்திற்கும் தீர்வு காண சொல்லித்தர உதவி மையம் நடத்திட சாண்டிதளுடன் இலவச தொடர் பயிற்சி 29-09-13 அன்று காலை 10 மணிக்கு சென்னையில் தொடங்குகின்றது முன்பதிவிற்கு 9444305581 முகவரி இந்தியன் குரல் உதவி மையம் 29 கும்பத் காம்ளெக்ஸ் ரட்டன் பஜார் சென்னை 600003 பூக்கடைக் காவல் நிலையம் எதிரில் மாதம் ஒரு நாள் வீதம் தொடர்ந்து 4 பயிற்சிக்கு வரும் வாய்ப்பு இருக்கும் முதல் பதினைந்து பேருக்கு மட்டும் அனுமதி
பயிற்சியில் என்ன கற்றுக்கொள்ளலாம் ?
1 தகவல் சட்டம்
2 ம்தகவல் சட்டம் மனுக்களை தயாரிப்பது எப்படி
3 நாம் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களின் மீது அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க தகவல் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?
4 அலுவலக நடைமுறைகள் , விதிமுறைகள் அறிதல்.
5 அலுவலர்கள் கடமைகள் அரசு துறைகளில் மக்களின் உரிமைகள்
6 அலட்சியம் காட்டும் அல்லது கடமை தவறும் அலுவலர்கள் மீது புகார் செய்து நடவடிக்கை எடுப்பது எப்படி
7 கல்விக்கடன் உள்ளிட்ட வங்கிக் கடன்கள் தகவல் சட்டத்தின்மூலம் பெறுவது எப்படி
.8 அரசு துறைகளின் பயன்கள் மக்கள் சாசனம்
9 தகவல் சட்டம் மூலம் ஊழலை ஒழிப்பது எப்படி?
பயிற்சியில் கலந்துகொள்ள விதிமுறைகள்
1 பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் தொடர்ந்து மாதம் ஒருநாள் வீதம் 5 மாதங்கள் தொடர்ந்து வரவேண்டும் இடையில் நின்று அடுத்த மாதம் கலந்துகொள்ள இயலாது மீண்டும் முதல் மாதத்தில் இருந்துதான் வரவேண்டும்
2 மதிய உணவு உள்ளிட்ட தங்களின் தேவைகளை தாங்களே பார்த்து எடுத்து வரவேண்டும்
3 புகைப்படம் இரண்டு, 60 பக்கம் நோட்டு பேனா கட்டாயம் எடுத்துவர வேண்டும்
4 வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வந்து போகும் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்
5 பயிற்சி முடித்ததும் குறைந்தபட்சம் மாதம் இரண்டு நாள் அல்லது வாரம் ஒரு நாட்கள் உதவி மையம் கட்டாயம் நடத்திடல் வேண்டும்
6 தங்களது சொந்த செலவில் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பயிற்சி அளிக்க கூட்டங்களில் கலந்துகொள்ள மாதம் குறைந்தபட்சம் இரண்டு முறை சென்றுவரும் அளவு வசதி இருக்க வேண்டும்.
7 நிரந்தர வருவாய் வசதி உள்ளவர்களாக (மாதாந்திரப் பனி அல்லது சுய தொழில் ) இருப்பது கட்டாயம்
8 ஆர்வமுள்ள எந்த அமைப்பினரும் மதத்தினரும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்
உதவி மையம் நீங்கள் சார்ந்துள்ள அமைப்பின் பெயரில் அல்லது எந்த பெயரில் வேண்டுமானாலும் நடத்திடலாம்.
இந்தியன் குரல் அமைப்பின் பெயரில் நடத்திட கட்டாயமில்லை நீங்கள் விரும்பினால் அதற்கு தனியாக பயிற்ச்சியும் எழுத்து பூர்வ அனுமதியும் இந்தியன் குரல் அமைப்பிடம் பெறுவது அவசியம்.
அலுவலர் பணிகடமை அலுவலக நடைமுறை , அலுவலகத்தில் யாரிடம் புகார் அல்லது கோரிக்கை மனுக்கள் கொடுக்கவேண்டும் என்றும் தான் கொடுக்கும் கோரிக்கை மற்றும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் அலுவலர்மீது புகார் செய்வது எப்படி என்று அறிந்தவர்கள் லஞ்சம் கொடுப்பதில்லை குறித்த காலத்தில் அவர்களது தேவை நிறைவேற்றிட தன்னம்பிக்கையுடன் தைரியமாக கேட்டு வெற்றிபெருகின்றார்கள்
முதுகெலும்பில்லாத தன்னம்பிக்கை அற்றவர்கள் முடியாது நடவாது என்று சொல்லிக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ தானும் கேட்டு சமுதாயத்தையும் கெடுக்கும் வாய்ச்சொல் வீரராக வலம் வருகின்றார்கள்.
வரும் காலம் வளமானதாக வளரும் இளைய சமுதாயம் நலமானதாக நீங்களும் உங்களது பிள்ளைகளும் போராட்டமின்றி நல்ல சந்தோஷமான வாழ்க்கை வாழ பயிற்சியில் கலந்து பயன் பெறுங்கள்.
பிரச்சனைகளை பேசுவது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது
எந்த பிரச்சனைக்கும் தீர்வைத் தருபவன் தான் மனிதன் - பாலசுபரமனியன்
2 கருத்துகள்:
காலத்துக்கு ஏற்ற தேவையான இடுகை.
விவரங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தை மனதில் ஏற்படுத்துகின்றன.
இன்று என் வலையிலும் “தற்கொலை செய்துகொ(ல்)ள்வோம்“ என்ற இடுகையே வெளியிட்டுள்ளேன்.
இந்தியாவில் 4 நிமிடத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலகில் ஆண்டு தோறும் 5 லட்சம் தற்கொலை நடக்கிறது. இவற்றில் 20 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு 1,35,445 பேரும், தமிழகத்தில் 6,927 பேரும்,சென்னையில் மட்டும் 282 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொள்பவர்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது
கருத்துரையிடுக