நண்பர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இந்த அறிய தீர்ப்பை தெரியப்படுத்த ஒரு சொடுக்கில் பகிர்ந்து பரப்புரை செய்யுங்கள்
புதுடில்லி : ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களை நிராகரிக்கும் உரிமை, வாக்காளர்களுக்கு உண்டு. இது, அவர்களின் அடிப்படை உரிமை. எனவே, வேட்பாளர்களை நிராகரிப்பதை, வாக்காளர்கள் பதிவு செய்யும் வகையில், ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், அதற்கான பட்டனை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தேர்தல் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட், அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
சுப்ரீம்
கோர்ட்டின் இந்த உத்தரவால், நேர்மையான வேட்பாளர்களை தேடிப் பிடிக்க
வேண்டிய நெருக்கடி, அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தல்களின்போது,
அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் செயல்பாடுகள்,
நடத்தைகள், பிடிக்கிறதோ, இல்லையோ; அவர்களில், யாராவது ஒருவருக்கு
வாக்காளிக்க வேண்டிய கட்டாயம், வாக்காளர்களுக்கு இருந்து வருகிறது. அரசியல்
கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள், குற்றப் பின்னணி
உடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஓட்டளிப்பதை தவிர, வாக்காளர்களுக்கு
வேறு வழியில்லை.சமீபத்திய தேர்தல்களில் தான், இந்த நடைமுறையில் மாற்றம்
செய்யப்பட்டது. போட்டியிடும் வேட்பாளர்கள், யாரையுமே பிடிக்கவில்லை
என்றால், ஓட்டுச் சாவடிகளில் தரப்படும், ‘49 ஓ’ படிவத்தை நிரப்பி,
‘யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை’ என்பதை, வாக்காளர்கள் எழுதித்
தரலாம்.ஆனால், இந்த நடைமுறையில், ரகசியம் காக்கப்படாது. ‘49 ஓ’ போட்டவர்கள்
யார் என்பது, வெளிப்படையாக தெரிந்து விடும். இதனால், அவர்களுக்கு
பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.இந்நிலையில், இது தொடர்பான
நடைமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளக் கோரி, ‘பியூப்பிள் யூனியன் ஆப்
சிவில் லிபர்ட்டி’ என்ற, தன்னார்வ அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில், பொது நல
மனு தாக்கல் செய்தது.இந்த மனு, தலைமை நீதிபதி, பி.சதாசிவம்,
தலைமையிலான,‘பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது;
அப்போது, நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையுமே பிடிக்கவில்லை என்றால், அவர்களை
நிராகரிக்கும் உரிமை, வாக்காளர்களுக்கு உண்டு. இது, அவர்களின் அடிப்படை
உரிமை.நம்,அரசியல் சட்டம், இந்திய குடிமக்களுக்கு, பேச்சு மற்றும் கருத்து
சுதந்திரத்தை வழங்கியுள்ளது. எனவே, வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை,
வாக்காளர்களுக்கு வழங்கவில்லை என்றால், அது, சட்டத்தை மீறும்
செயல்.லோக்சபாவிலோ, சட்டசபையிலோ, குறிப்பிட்ட பிரச்னைக்காக, ஓட்டெடுப்பு
நடக்கும்போது, அதில் பங்கேற்காமல், புறக்கணிக்கும் உரிமை, எம்.பி., –
எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அப்படி இருக்கும்போது, தங்களுக்கு
பிடிக்காத வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை, வாக்காளர்களுக்கு வழங்காமல்
இருப்பது, நியாயமல்ல.
ஜனநாயகத்தில், எதிர்மறை ஓட்டு அளிப்ப தற்கு,
மக்களுககு உரிமை உண்டு. எனவே, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில்,
வேட்பாளர்களி்ன் பெயர்களுக்கு மேல், ‘யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை’
என, குறிப்பிடப்படும், பட்டனை பொருத்துவதற்கான நடவடிக்கைளை, தேர்தல் கமிஷன்
எடுக்க வேண்டும்.இதன்மூலம், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்கள், இந்த
பட்டன்களை அழுத்தி, தங்கள் அதிருப்தியை தெரிவிக்க முடியும். இந்த
நடைமுறையில், ரகசியம் காக்கப்பட வேண்டும்.இதுபோன்ற நடவடிக்கையை
மேற்கொள்ளும்போது, தேர்தல் நடமுறைகளில், சாதகமான மாற்றம் ஏற்படும். அரசியல்
கட்சியினர், ‘அதிகமான வாக்காளர்கள், எதிர்மறை ஓட்டளித்து விடுவார்களோ’
என்ற பயத்தில், நேர்மையான வேட்பாளர்களை தேர்வு செய்வர். இந்த நடைமுறை, 13
நாடுகளில் அமலில் உள்ளது.இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.சுப்ரீம்
கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பால், நேர்மையான வேட்பாளர்களை தேடிப் பிடிக்க
வேண்டிய நெருக்கடி, அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
பார்லிமென்டில்,
குறிப்பிட்ட பிரச்னைகளுக்காக ஓட்டெடுப்பு நடக்கும்போது, அதில்
பங்கேற்காமல், புறக்கணிக்கும் உரிமை, எம்.பி.,க்களுக்குவழங்கப்பட்டுள்ளது.
அப்படியிருக்கும்போது,வாக்காளர்களுக்கும், தங்களின் வேட்பாளர்களை
நிராகரிக்கும் உரிமையை வழங்குவதில்,என்ன தவறு இருக்கிறது? சுப்ரீம் கோர்ட்
இந்த
தீர்ப்பை, நாங்கள் வரவேற்கிறோம். சட்ட மேதை அம்பேத்கரும், வேட்பாளர்களை
நிராகரிக்கும் உரிமை, வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தான்,
வலியுறுத்தி வந்தார்
மாயாவதிபகுஜன் சமாஜ் தலைவர்
அனைத்து
விஷயங்களையும் தீவிரமாக ஆலோசித்த பின் தான், இந்த தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. அதிகப்படியான வாக்காளர்கள்,
எதிர்மறை ஓட்டளித்தால், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதற்கான விளக்கம்
இல்லை.
அஜய் மேக்கன்காங்., செய்தி தொடர்பாளர்
நாங்கள்,
எப்போதுமே, தேர்தல் சீர்திருத்த நடைமுறைகளை ஆதரிப்பவர்கள். முன்பு,
ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. இப்போது, சில மாநிலங்களில், ஐந்து
மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. இந்த தீர்ப்பை, விரிவாக படித்து
பார்த்தபின்பே, கருத்து தெரிவிக்க முடியும்.
முக்தார் அப்பாஸ் நக்விபா.ஜ., துணை தலைவர்
இது,
வழக்கத்துக்கு மாறான சூழலை ஏற்படுத்தி விடும். தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய
வேண்டும். தேர்தலில், அரசியல் கட்சிகள் தான் பங்கேற்கின்றன. எனவே, இது
தொடர்பாக, அரசியல் கட்சிகளிடம் ஆலோசிக்காமல், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது, நல்ல போக்கு அல்ல.
சீதாராம் யெச்சூரி,மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்
வேட்பாளர்களுக்கு "வேட்டு':
"தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை எனில், அவர்களை நிராகரிக்கும் உரிமையை, வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் ஆலோசனை கூறியுள்ளது. இனி, வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை போல, நிராகரிக்கும் உரிமையும் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எந்த நாடுகள்:இந்தியாவுக்கு தான் இந்த முறை, புதுமையாக தெரிகிறது. ஏற்கனவே, பல நாடுகளில் இம்முறை அமலில் உள்ளது. கிரீஸ், அமெரிக்கா (நெவேடா மாகாணம் மட்டும்), உக்ரைன், ஸ்பெயின், கொலம்பியா, வங்கதேசம் உள்ளிட்ட 13 நாடுகளில், இந்த வழக்கம் உள்ளது. ரஷ்யா மற்றும் பாகிஸ்தானில், இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு, பின் திரும்ப பெறப்பட்டது. இந்தியாவில், ஏற்கனவே பார்லிமென்ட்டில் "ஓட்டெடுப்பு' நடத்தும்போது, இந்த "நிராகரிக்கும்' உரிமை உள்ளது.
- நன்றி தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக