நன்மக்களே!
நேர்மையான இளைஞர்களுக்கு பணம் கொடுக்க மறுக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலை
இல்லை என்று கூறுவதும் லஞ்சம் பெற்று நியமனம் செய்வதும் ஒன்றே
படிக்கும் பிள்ளைகளே படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும்
இளைஞர்களே நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று வேலைக்கான உத்தரவு வரும்
என்று காத்திருக்கும் நேர்மையான இளைஞனே உனக்கு இந்த தேசத்தில் வேலையில்லை என்று
சொல்லவா உங்களைப் பெற்றவர்களும் மற்றவர்களும் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் உங்கள் பிரதிநிதிகளை
தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தீர்கள்.
சட்டமன்றத்தில் தன தொகுதி மக்களின் கோரிக்கையைப் பற்றி பேசி பெற்றுத்தருவதில்லை. பாராளுமன்றத்திலே தொகுதியைப் பற்றி பேசுவதேயில்லை ஆனால் சிபாரிசு கேட்டு செல்பவர்களுக்கு பேசுவதுமட்டுமல்ல லட்டரும் கொடுக்கும் காரணம் அறியாத மூடர்களா மக்கள்.
இதோ பத்திரிகை செய்தி ஆதாரத்துடன் அரசு பள்ளியில் கட்டிடம் சரியில்லை குடிக்க நல்ல தண்ணீர் இல்லை பெண் பிள்ளைகள் பயன்படுத்தக் கூட கழிப்பிடம் இல்லை மின் வசதி இல்லை கூரையில்லாப் பள்ளிகள் ஆசிரியர் இல்லாத் பள்ளிகள் மாணவர்கள் இல்லாத பள்ளிகள் பள்ளிக்கூடத்திலே பாம்பும் தேளும் எலியும் பாய்ந்து விளையாடும்
பள்ளியிலே மதிய உணவு போதவில்லை வேகாத அரிசிச் சோறு வேகாத பருப்புச் சோறு சுகாதாரம் மாணவர்கள் எண்ணிக்கை மதிய உணவுத் திட்ட முறைகேடுகள்
இவைகளைப் பற்றி ஆய்வு செய்யவோ குறைகளைக் கேட்டரியவோ மக்களை சந்திக்கவோ நிவாரணம் செய்யவோ தேர்வுசெய்யப்பட்ட எம் பி எம் எல் ஏ க்களுக்கு நேரமில்லை
ஆனால் துப்பரவு தொழிலாளி பனி முதல் அரசு அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்புவது அரசு பள்ளிக்கூட உதவியாளர் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள அலுவலக காலிப் பணியிடங்களில் தன்னுடைய சிபாரிசில் வேலைக்கு அனுப்பி காசுபார்க்கும் தந்திரமும் அதற்காக சந்திக்கும் ஆற்றலும் இவர்களுக்கு எப்படி வந்தது யார் தந்தது இதற்காகவா ஒட்டுப்போடோம் வெட்கம் வெட்கம் அடைகின்றோம்
இனியும் பொறுப்பதில்லை என்று நீதிமன்றமே கேட்கின்றது விபரம் பார்
இனி பணியிடங்களில் இவ்வாறு தலையீடு செய்தால் தகவல் சட்டம் அம்பலப்படுத்தும் இளைஞனே படித்து நேர்வழியில் முயற்சி செய் குறுக்கு வழியில் முயன்றால் உனது உழைப்பும் பணமும் இனி வீணாகும்
நேர்வழியில் நீதி கிடைக்க உனக்களித்த உரிமைதான் தகவல் சட்டம் பயன்படுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக