ஆதரவாளர்கள்

சனி, 7 செப்டம்பர், 2013

பின்வாங்கியது அரசு மக்கள் போராட்டத்திற்கு வெற்றி




அரசியல் கட்சிகளுக்கு தகவல் சட்டத்தில் விலக்களிக்கும் தகவல் சட்டதிருத்தம் 2013 மசோதா தாக்கல் குறித்து முடிவெடுக்க பாராளுமன்ற நிலைக்குழுவின்  பரிசீலனைக்கு  அனுப்பியது மத்திய அரசு.இதனால் இந்த கூட்டத்தொடரிலும் இனி வரும் கூட்டத்தொடரிலும் இந்த மசோதா நிறைவேற்றிட வாய்ப்பில்லை தேர்தல் முடிந்து புதிதாக அமையும் அரசு  முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தியன் குரல் அமைப்பு தகவல் சட்டத்தை திருத்தி தப்பிக்கு கட்சிகளுக்கு ஓட்டு இல்லை என்ற கோசத்துடன் தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போராட்டம்  இணைந்து பல்வேறு அமைப்புகள் காட்டிய எதிர்ப்பு போராட்டம் கடுமையான மக்கள் எதிர்ப்பும் அரசின் இந்த முடிவுக்கு காரணமாகிறது

இந்த திருத்தத்தைக் கைவிடக் கோரி இந்தியன் குரல் அமைப்பு பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து ஒருலட்சத்தி இருபத்து ஏழாயிரம் துண்டுபிரசுரங்களை தமிழகம் முழுவது விநியோகம் செய்தது. இந்த பிரசுரம் தயாரித்தளித்த இந்தியன் குரல் நிறுவனர் திரு எம் சிவராஜ் அவர்களின் எழுத்தில் மக்கள் கவர்ந்திளுக்கப்பட்டார்கள் என்றே சொல்லலாம்.

13-07-2013 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்
10-8-2013 அன்று பெரியார் தூண் அருகில் காஞ்சிபுரத்தில் மனித நேய மக்கள் சங்கம் இணைந்து கண்டன பொதுக்கூட்டம்
24-8-13 அன்று ஆலங்காயம் தபால் நிலையம் அருகில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து கண்டன பேரணி
06-09-13 அன்று கரூர் தாலுகா அலுவலகம் அருகில் தகவல் சட்ட திருத்தத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஒரு ஆயிரம் தபால் அட்டை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஊர்வலமும் நடத்தப்பட்டது

ஆன்லைன் பெட்டிசன் மூலம் பிரதமர் சபாநாயகர் ஜனாதிபதி ஆகியோருக்கு பல்லாயிரம் மெயில்கள் அனுப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டது

 பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தியது

ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஒரு லட்சம் துண்டு பிரசுரங்கள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது

அருணாராய் அவர்கள் 15-7-2013 முதல் ஆன்லைன் பெட்டிசன் மூலம் பல்லாயிரம் மனுக்களை அனுப்பிட ஏற்பாடுசெய்து போராட்டம் நடத்தினார்கள்

சென்னையில் கேப்டன் புல்லட் ஆம் ஆத்மி கட்சி லோக் சத்தா கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து பெசன்ட் நகர் கடற்க்கரி சாலையில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தினார்கள்

எஸ்.எம் அரசு அவர்களின் பெரும் முயற்ச்சியால் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

இதுபோன்று தமிழகத்திலும் வட மாநிலங்களிலும் பல்வேறு சமூக அமைப்புகள் அக்கறையுடன் போராடியதன் விளைவாக தகவல் சட்டம் திருத்த மசோதா வாபஸ் பெறப்பட்டு பாராளுமன்ற நிலைக்குளிவின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மசோதா இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது

இந்தியன் குரல் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆங்காங்கே போராட்டம் நடத்தி மக்களாட்சியைக் காக்கப் போராடிய அனைத்து அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்களை இந்தியன் குரல் சார்பில் வாழ்த்துகின்றோம்

இருப்பினும் இது முழுமையான வெற்றியல்ல தற்கால வெற்றிதான் புலி பதுங்குகிறதா அல்லது ஒதுங்குகின்றதா என்பதை கண்காணித்துக் கொண்டே இருப்பது அவசியம் ஆகிறது

இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி மக்களாட்சிக்கு கிடைத்த வெற்றி 

கருத்துகள் இல்லை: