ஆதரவாளர்கள்

Friday, September 13, 2013

போலி கேம்பஸ் இண்டர்வியூ - கல்லூரிகள்+ கம்பெனி ஹச் ஆர் ஓ + தரகர்கள்

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியு நடைபெறும் நேரமிது. கேம்பஸ் இன்டர்வியு இன்றைய பொருளாதார மந்த நிலையில் பெரும்பான்மை நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் வரும் கல்லூரிகளில் மட்டுமே  கேம்பஸ் நடத்திட வாய்ப்பு.


560க்கும் மேற்ப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது  அப்படியெனில் நூறு சதம் வேலை கேம்பஸ் இன்டர்வியு என்று விளம்பரம் செய்த கல்லூரிகள் என்ன செய்யும் . ஒரு சில நேர்மையான கல்லூரிகள் இந்த ரிஸ்க்கை எடுப்பதில்லை.

சென்ற ஆண்டு ஒரு சில கல்லூரிகள் செய்ததையே பல கல்லூரிகள் செய்ய வாய்ப்பு. அது என்ன? ம்ம் மறந்துபோச்சா?  நல்லது, உங்களைப் போன்றவர்களால் தான் தவறு செய்பவர்கள் துணிவு பெறுகின்றார்கள் 

அதுதாங்க கல்லூரியில் போலியாக இன்டர்வியு நடத்தி பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் போராட்டம் செய்தார்களே! கல்லூரி நிர்வாகம் கூட  எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை, கம்பெனி ஏமாற்றினால் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கைவிரித்து டாட்டா காட்டியதே. அதை டி வி யில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பு செய்து பெற்றோர்ர்கள் மற்றும் மாணவர்கள் வயிற்றில் பால்? வார்த்தார்களே ம்ம் ம்ம் இப்ப ஞாபகம் வந்துவிட்டது இல்லையா அதே போன்று இந்த ஆண்டும் கல்லூரிகள் செய்யத் தயார்  நீங்கள் ஏமாறத் தயாரா?


எப்படி?


1 கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியு நடத்திட கம்பெனிகளின் ஹச் ஆர் களை  அழைத்து வர புரோக்கர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பது 
2 புரோக்கர்கள் போலி நிறுவனங்கள் பெயரில் இன்டர்வியு நடத்துவது 
3 கல்லூரிகள் புரோக்கர்கள் இணைந்து போலி நிறுவனங்கள் மூலம் கேம்பஸ் இன்டர்வியு நடத்துவது

 இதற்காக பல லட்சம் செலவு செய்ய கல்லூரிகளும் தயார் அப்பொழுது தானே அடுத்த வருஷம் கல்லா கட்ட முடியும் 

இதுனால எனக்கென்னங்க மாணவர்களுக்கு தானே பதிப்பு ஆம் மாணவர்களே
இவ்வகை இன்டர்வியுவில் பணி ஆணை மட்டும் வழங்குவார்கள் அழைப்பாணை வரவே வராதுஏற்க்கனவே இப்படி இன்டர்வியு அட்டன் பண்ணி இன்றுவரை நம்பிக்கையோடு காத்திருக்கும் மாணவர்கள் அனுபவம் உங்களுக்கு வந்துவிடக் கூடாதே 
ஒரு முறை இன்டர்வியு அட்டன் செய்த மாணவர்கள் பிற இன்டர்வியு அட்டன் செய்வதிலும் சிக்கல் 

எப்படி அறிவது தப்பிக்க என்ன செய்வது ?

நிறுவனங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்
கட்டணம் எந்த மாதிரி சொல்லி கேட்டாலும் உஷார் 
டெபொசிட் கேட்டால் வங்கி உத்திரவாதம் இருக்கா என்று கேளுங்கள் இல்லையேல் எஸ்கேப் 

மாணவர்கள் எதிர்காலத்தில் விளையாடும் கயவர்கள் தண்டிக்கப் படவேண்டியவர்கள்
இந்தியன் குரல் உதவுகின்றது
 இது தொடர்பான தகவல்கள் பெறவும் புகார்கள் அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் இந்தியன் குரல் உதவி இந்தியன் குரல் உதவி மையம் பிரதி மாதம் 1 மற்றும் 15 தேதிகள் மட்டும் நேரில் வரவும்
இந்தியன் குரல் இலவச உதவி மையம்
கும்பத் காம்ப்ளெக்ஸ்
29 ரத்தன் பஜார்
சென்னை 600003 
தொடர்புக்கு 9444305581 


படித்தவர்களே நிச்சயம் இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து விடுவீர்கள்  இலஞ்சம் இல்லாமல் அரசுப் பயன்கள் உங்கள் தேவைகளைப் பெற இலவச பயிற்சியில் கலந்து விழிப்படையுங்கள்  பயிற்சி 29-09-13 அன்று காலை 10 மணிக்கு துவங்கும். மாலை 5 மணி வரை நடைபெறும் மதிய உணவு உள்ளிட்ட உங்களது தேவைக்கு எடுத்து வரவும்

அடுத்த பதிவு விரைவில் 

அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டில் கல்லூரி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகை அளிக்க வகை செய்யும் சட்டம்