ஆதரவாளர்கள்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு உதவித் தொகை

நன்மைக்களேஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஊருக்கு நல்லது செய்வேன் எனக்கு தெரிந்ததை சொல்வேன்

 அறியாமை! அதை நீக்குவதும் பரப்புரை செய்வதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை. முடிந்த மட்டும் அனைவரும் அறிய  பகிர்வோம் நாளை நாடு நம்மை வணங்கும். வளரும் மனித வளம் மேம்பட நாள்தோறும் ஒரு கிளிக்கில் கடமையாற்ற வாரீர் நட்புடன் பாலசுப்ரமணியன் 

  •  "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 

     ஆல  யம்பதி னாயிரம் நாட்டல் 

    பின்னருள்ள தருமங்கள் யாவும்

     பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்

    அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

     ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்"  

                                                                                                             - பாரதி 


சென்னை அண்ணா நகரில், தமிழக அரசால் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.  இப்பயிற்சி மையத்தின் மூலம் தமிழகத்தைச் சார்ந்த  மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று, தேர்வில் வெற்றிப் பெற்று, அரசு உயர் அதிகாரிகளாக, தலைநகர் புது டில்லியிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகின்றனர். 

இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணத்தை 2000 ரூபாயாக உயர்த்தியும், இனி வருங்காலங்களில், உணவுக் கட்டணத்தை ஆண்டுதோறும் ஐந்து விழுக்காடு உயர்த்துவற்கும், தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அரசின் அகில இந்தியக் குடிமைப் பணிகள்  தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெற்று,  புது டில்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதை, ஊக்குவிக்கும் வகையில், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு 3000 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு 200 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கவும் தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, புது டில்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கு கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு, பயணச் செலவினமாக தலா 2000 ரூபாய் வழங்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த தொலைநோக்கு நடவடிக்கைகளினால்,  தமிழக மாணவ மாணவியர் அதிக அளவில் அகில இந்திய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும்  
உதவிக்கு முன் பதிவுடன் நேரில் அணுகவும்


இந்தியன் குரல் இலவச உதவிமையம் தமிழகம் முழுதும் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றது
சென்னை ;
 பிரதி மாதம் 1 மற்றும் 15ஆம் தேதிகள் மட்டும்
முதல் மாடி , கும்பத் காம்ப்ளெக்ஸ் 
29 ரத்தன் பஜார் சென்னை 600 003
தொடர்புக்கு 9444305581

வேலூர்    பிரதி வாரம்  வியாழக்கிழமை தோறும் 
கோவை, சேலம், மதுரை  பிரதி மாதம் முதல் சனிக்கிழமை 
திருச்சி பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை 
பாண்டிச்சேரி, விழுப்புரம்  பிரதிவாரம் ஞாயிறு தோறும் 
காஞ்சிபுரம் அனைத்து வேலை நாட்களும்


உண்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள்  சரித்திரத்தில்

தனி மனித ஒழுக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. நம் அப்பா வளர்ந்த காலம் மாதிரி நாம் வளரும் போது இல்லை நம்முடைய இளைய பருவம் போல் இப்பொழுது நம் பிள்ளைகளுக்கு இல்லை சூழ்நிலை மாறியிருக்கின்றது.
நம் அப்பா இளைய பருவத்தில் பணம் பொருளை விட ஒழுக்கமே முக்கியம் பொய் சொல்லக் கூடாது திருடுதல் பாவம் பிறருக்கு துன்பம் விளைவிக்க கூடாது பிறர் பொருளை அபகரிப்பது அநாகரீகம் பெரியவர்கள் முன் பணிவு அடக்கம் தேவை அதிகம் பேசக் கூட கட்டுபாடுகள் இருந்தது. பெரியோரை மதித்தல் வணங்குதல் என்பது பண்பாடு என போற்றி வளர்க்கப்பட்டார்கள் அவர்களும் அவ்வாறே வளர்ந்து பெற்றோர்களுக்கு பெருமை தேடி தந்தார்கள். நம் கலாச்சாரம் பண்பாடு காக்கப் பட்டது. 
அவர்களும் அவ்வாறு கட்டுபாடுடன் வளர தடையாக மனதை அலையவிடும்  தொலைக் காட்சியோ வலைதலமோ சாட்டிங் பண்ணும் வசதியோ முகம் பார்க்காமல் மணிக்கணக்காக பேசும் வசதியோ நம்முடைய நேரத்தை வீணடிக்கும் தொலைபேசி  அலைபேசி என்று எதுவும் இல்லை.ஒருமுறை சொன்னால் அவர்கள் வாழ் நாள் முழுதும் கடைபிடித்தார்கள்.
  இன்றைய  கலாச்சார சீரழிவு பணம் மட்டுமே வாழ்க்கை  என்று வளர்க்கப்பட்டோம் . நல்லவன் போல் நடிக்க கற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்க எந்த வழியாயினும் அது நல்வழியே என்று முடிவுடன் வாழ்கின்றோம்.

நம் பிள்ளைகளுக்கு திருபத் திரும்ப சொல்லி புரியா வைத்து அவர்களை நல வழியில் நடத்திட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் ஆனால் அதற்ககான நேரம் நமக்கு போதுமானதாக இருக்கின்றதா பணம் பண்ணும் இயந்திரமான வாழ்க்கையில் எதை சொல்ல வேண்டும் எப்படி பட்ட புரிதல் நம் பிள்ளைகளுக்கு வேண்டும் என்று கற்றுத்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்பதை நாம் அறிவோமா?

நம் பிள்ளைகள் எது கேட்டாலும் வங்கித் தரவேண்டும் அதற்க்கு பணம் வேண்டும் என்று பணம் பண்ணும் வேலையை மட்டும் செய்கிறோம்.
அதற்காக நாம் நல வழியை பின்பற்றுகிறோமா இல்லை நேர் வழியில் பொருள் கிடைக்கின்றதா  என்பது முக்கிய கேள்வியாகிறது.
நாம் நம்மை நல்லராக  நடிக்க  பணம் மட்டுமே பிரதானம் வசதி வந்துவிட்டால் எல்லாம் வரும் என்று வாழ்க்கை முழுதும் பொய்யாய் வாழ்கின்றோம். நம் வந்த பாதையும் செல்லும் பாதையும் சரியானதுதான் என்று மனத்தால் கூற முடியுமா? சரி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்துள்ளோம்
நாம் உண்மையான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் தகுதியைப் பெறுகின்றோம்  

  உண்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில் இடம் பிடித்து இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் 
  இவ்வாறு நாம் சேர்க்கும் பணம் என்ன நிலையானது தானா  நிலையற்ற செல்வத்தைப் பெற்றவர்கள் புத்திசாலிகள் அறிவாளிகள் என்று மார்தட்டிக்கொள்ளும் வீணர்களே அனைவரும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள் நம் தாத்தா பாட்டி சேர்த்து வைத்த பொருளில் தான் நம் அப்பா அம்மா வாழ்ந்தார்களா? நாம் நம்முடைய  அப்பா அம்மா சேர்த்து வைத்துள்ள பொருளை நாம் செலவு செய்கிறோமா? அவையெல்லாம் யாரும் அனுபவிக்க முடியாமல் இருக்கும். நமது தேவைக்கு நாமே பொருள் சம்பாதிக்கும் போது அவையெல்லாம் என்ன செய்கின்றது. இதைத் தான் முன்னோர்கள்  "நாய் க்கு முழுத் தேங்காய் கொடுத்த மாதிரி" என்று கூறுவார். நாய்க்கு தேங்காய் பிடிக்கும் என்பதற்காக முழுத் தேங்காயை கொடுத்தால் அது தானும் சாப்பிடாமல் அடுத்தவர் யாரையும் அருகில் விடாமலும் காவல் காத்துக் கொண்டு இருகின்றதே. நாம் சேர்த்து வைக்கவேண்டியது அறிவை அனுபவத்தை அறத்தை மட்டுமே  . அவர்களின் வாழ்க்கை நலம் பெற நல்ல கல்வி. பெரும் அளவுக்கும் அவர்கள் தொழில் தொடங்க  நாம் உதவ முடிந்தால் போதுமே. 
உண்மைச் சம்பவம் எனக்கு எழுதவே கூசுகின்றது பொள்ளாச்சியில்  எனக்கு தெரிந்த நபர் இருக்கின்றார். அவரது பெண்ணிற்கு சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. நல்ல சம்பளம் அதை நம்பிக் கடன் வாங்கி அவர் வீட்டை அழகாகக் கட்டிக்கொண்டார். அந்தப் பெண் சென்னையில் உடன் பணி  செய்யும் நண்பர்களுடன் சனிக்கிழமை தோறும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிரபல ஓட்டல்களில் ஆடலுடன் பாடலைக் கேட்டு அதில் ஏற்ப்பட்ட பழக்கம் ஆண்  நண்பர்களுடன் தனி அறையில் உல்லாசமாக இருக்கவும் செய்து அதனால் கருக் களைப்பும் பல முறை நடந்துள்ளது. இது எல்லாம் அந்த அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிந்தும் அந்தப் பெண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி சரியான வழி காட்ட இயலவில்லை. கரணம் ஏதாவது சொல்லி அந்தப் பெண் கோபித்துக்கொண்டால் வருமானம் போயிடுமே ஆகவே தெரிந்தும் தெரியாத்ததுபோல் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் (அந்தப் பெண்ணையும் அக் குடும்பத்தையும் சரியாக எடுத்துச் சொல்லி நல் வழிக்கு மாற்றிவிட்டோம் இது போல் தெரியாமல் எத்தனைபேரோ அவர்களுக்கு உதவுவது யார் காமத்தால் மிருகங்கள் வாழ்க்கை மனித வாழ்க்கை வித்தியாசம் காணோம் ). நான் கேட்கிறேன் இது தான் வாழ்க்கையா? பணம் கிடைக்குமென்றால் எதுவும் செய்யலாம் எதையும் விட்டுத் தரலாம் என்றால் நாம் மனிதர்களா?

நம் பிள்ளைகளின் எதிகாலம் நன்றாக இருக்க வேண்டும் என்று உழைத்த நாமே அவர்களை படுகுழியில் தள்ளிவிடுகிறோம். நாம் உண்மையாக இருக்கத் தவறும் போது நாம் நம் பிள்ளைகளைக் கேட்கும் தகுதியை இழக்கின்றோம் அவர்கள் தவறுகளைக் கண்டிக்கும் திராணி நமக்கு இருப்பதில்லை ஆகவே அவர்கள் செய்யும் தவறுகளை திருத்தவும் கண்டிக்கவும் நமக்கு உரிமை இருப்பதில்லை குற்ற உணர்வால் சாகும் வரை நடித்துக்கொண்டு இருக்கின்றோம்.
"கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்"

 முதியோர் இல்லங்களும் ஆதரவற்றோர் இல்லங்களும் பெருகும் நம் அன்பவத்தைக் கூட நம் பிள்ளைகளுக்கு சொல்ல முடியாமலேய இறந்தும் விடுவோம் சரியாக வழிகாட்டுதல் இல்லாமல் இது தான் வாழ்க்கை என்று அறியாத நம் பிள்ளைகள் தானும் கேட்டு நாம்  வாழும் சமூகத்தையும் கெடுத்து பொய்யான  வாழ்க்கை வாழ்கின்றார்கள்.


அனைத்து பிரிவினருக்கும் கல்வி உதவி பற்றிய விபரம் அடுத்த அடுத்த பதிவில் தொடருங்கள்  படித்து பயன்பெறுங்கள் முடிந்த மட்டும் நண்பர்களுக்கு பகிருங்கள். உங்களது பகிர்வால்ஒருவராவது பயனடைவர். அவர்களது எதிர்காலம் சிறக்க உதவி செய்த  மன நிறைவு உங்களுக்கு. நட்புடன்  பாலசுப்ரமணியன் இந்தியன் குரல் சென்னை 

1 கருத்து:

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

நல்லதொரு சீரியப்பணி

தொடரட்டும் என்றென்றும்...