ஆதரவாளர்கள்

Thursday, January 19, 2017

விவசாயம் காக்க தமிழகத்தின் முதல் மாணவர் போராட்டம்.

நாட்டு மாடுகளைக் காப்போம்!!!  பாரம்பரிய விவசாயத்தைக் காப்போம்!!!

விவசாயம் காக்க தமிழகத்தின் முதல் மாணவர் போராட்டம்.

இந்தியாவின் விஷமற்ற விவசாயத்தை ஆராய்ந்த ராபர்ட் கிளைவ்  மாடுகள் தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து விவசாயத்தை அழிக்க முதன்முதலில் பசுவதைகூடங்களை உருவாக்கினான்.


உலக அளவில் பீட்டா அமைப்பு 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களின் உரம் பூச்சிமருந்துகளை நம்மிடம் விற்பனை செய்திட, கச்சா என்னை விற்பனை செய்திட இயந்திரங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து கிணற்று நீர் இறைக்கும் மாடுகளுக்கு பதிலாக ஆயில் இன்ஜின்களும் மாட்டு வண்டிகளுக்கு பதிலாக கனரக வாகனங்களையும் விளம்பரம் செய்து காளை மாடுகளை  பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற நயவஞ்சகமாக மக்களை ஏமாற்றியது.

ஆறு, ஏரி, குளம், நீர் நிலைகள் பாதுகாப்பு மக்களிடம் இருந்து அரசின் கட்டுப்பாட்டில் சென்றது அதனால் ஏரி குளம் பாதுகாப்பு கவலைக்கிடமானது தூர் வராமல் மணல் மேடாகியதுநீர்மேலாண்மை செய்ய தவறியதால் மழைநீர் சேமிக்க இயலாமல் வீணாக கடலில் கலந்து, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளம் சென்றது இன்று மோட்டார் பாம்புகள் தவிர்க்க இயலாதது. ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது.

இந்திய ஆட்சியாளர்களால் போக்குவரத்துக்கு இடையூறு என்று சொல்லி மாட்டுவண்டிகளுக்கு தடை கொண்டுவந்தது அதன் தொடர்ச்சியாக உழவுக்கு டிராக்டர்கள் வரவால் எருதுகள் பயன்பாட்டில் இருந்து வெகுவாக குறைந்தது.
மாடுகள் குறைந்ததால் மாட்டுச்சாணம் என்ற சத்தான எரு இல்லாமல் விவசாயப்பயிர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயனம் எனும் விஷம் அவசியமானது. அவ்விஷத்தால் உற்பத்தியாகும் விளைபொருட்களை உண்டு பல கொள்ளை நோய்களை பெற்று அந்நோயிலிருந்து விடுபட அதே ரசாயன நிறுவனங்கள் ரசாயனத்தை மருந்தாகவும் வியாபாரம் செய்கின்றன.

விவசாயம் பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயனத்தால் விஷமானது, தடுக்க வழியில்லையே என்று கவலைப்பட்ட ஆர்வலர்கள் பாரம்பரிய விவசாயம் அவசியம் என்று உணர்ந்தார்கள். அதை நோக்கி செயல்படவும் துணிந்தார்கள். இவர்களை விடலாமா? வெகுண்டது பீட்டா அமைப்பு

நமது பாரம்பரிய விவசாயத்திற்கு அடிப்படை காரணியான மாட்டுச்சாணம் கோமியம் பயிர்களை நோயிலிருந்து காக்கும் பஞ்சகாவ்யம் தரும் நாட்டு மாட்டு இனங்களை அழிக்க பீட்டா இந்தியா அமைப்பை இந்தியாவில் துவக்கியது
2000 ஆவது ஆண்டில் இந்தியாவில் தனது நேரடி கிளை துவக்கியது. ஆண்டுக்கு 30 கோடி செலவிட திட்டம் வகுத்து களத்தில் இறங்கியது  இந்தியாவில் உள்ள முன்னணி நடிகர் நடிகைகள், தொழில் அதிபர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மந்திரிகள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக சேவகர்கள் என பிரபலமானவர்களில் பலரை தனது பீட்டா அமைப்பின் ஆதரவாளர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும், உறுப்பினர்களாகவும், அமைப்பின் விளம்பரதாரராகவும் மரியாதையுடன் விருதுவழங்கி பாராட்டி பணமும் கொடுத்து அவர்களுக்கு தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது. அதனால் தான் இந்தியாவின் விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினராக ஒரு வெளிநாட்டுப்(அமேரிக்கா) பெண் அதுவும் பீட்டா இந்தியா அமைப்பின் இயக்குனர் பூர்வா ஜோசிபுரா உறுப்பினராக இருக்கின்றார். ஒரு வெளிநாட்டு நபர் இந்தியாவின் விலங்குகள் நல ஆணையத்தின் உறுப்பினராக எப்படி ஆனார் என்ற கேள்விக்கு விடை சொல்ல யாருமில்லை.

நமது மக்களை ஆட்சி செய்ய திணறிய பிரிட்டிஷ் ராணியால் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு எப்படி நமது பாரம்பரிய கல்வி முறையை அழிக்காமல் இந்தியர்களை ஆள முடியாது என்பதை மெக்காலே தலைமையில் அந்தக் கமிட்டி இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து இந்தியர்களின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்திற்கும் காரணத்தைக் கண்டறிந்ததோ, அதன் முதுகெலும்பான கல்வி முறையை மாற்றாமல் இந்தியர்களை அடிமைப் படுத்த இயலாது என்று கண்டறிந்து சொன்னது. அதுபோன்றே, இந்த பீட்டா அமைப்பு இந்தியாவில் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து நாட்டு மாடுகள் தென் மாநிலங்களில் மட்டும் அழிக்க இயலாமல் இருப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்தது. ரேக்ளா, மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டுதான் அதன் அழியாமைக்கு காரணம் என்று கண்டறிந்தது.
பாரம்பரியய விழாக்களில் மாடுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தது. நாட்டுமாடுகளை வைத்து வழிபாடு நடப்பதால் தமிழகத்திலும் ஆந்திராவிலும் காயடிக்கப்படாத காளைகள் வளர்க்கப்படுகின்றன. இந்தக் காளைகளை அழிக்காமல் தமிழகத்தில் நாட்டு மாடுகளை முழுமையாக அழித்திட இயலாது என்று பீட்டா இந்தியா அமைப்பினர் கண்டறிந்தார்கள்.

இந்தியாவின் அனைத்து தொழில்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய விவசாயத்தை கைப்பற்ற பால் வியாபாரத்தில் தடம் பதித்திட தடையாக இருந்து தமிழர்களின் பாரம்பரிய விவசாயம் மட்டும் கால்நடை வளர்ப்பில் முக்கிய சக்தியாக இருந்து காத்துவரும் நாட்டு மாடு இனங்களை அழிக்காமல் இந்திய விவசாயத்தை பால் வியாபாரத்தை முழுமையாக கைப்பற்ற முடியாது என்பதை பீட்டாவின் ஆய்வின் படி உணர்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக பன்னாட்டு ரசாயன நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு காளைகளையம், நாட்டுக்கு கோழிகள், நாட்டு நாய்கள் உள்ளிட்ட நமது விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உற்ற நண்பனாக உதவியாக இருந்துவரும் நமது பாரம்பரிய உயிரினங்களை அழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பெருமளவு நிதியை பீட்டாவுக்கு வழங்கி உதவி வருகின்றன.

2006 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தனது முதல் பொது நல வழக்கு தாக்கல் செய்து வெற்றியும் கண்டது.

ஒரு வெளிநாட்டு தொண்டு நிறுவனமான பீட்டா அமைப்பானது நம் நாட்டின் பண்பாட்டின் கலாச்சாரத்தின் மீது பொதுநல வழக்கு என்ற பெயரில்வழக்கு தொடுத்து பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்  எதிராக தனது முதல் பொது நல வழக்கு தாக்கல் செய்து வெற்றியும் கண்டது. 

(பொதுநல வழக்கு உரிமையானது இந்தியாவில் இந்தியக் குடிமக்கள் நலனுக்காக இருக்கும் வாய்ப்பு இதில் ஒரு பன்னாட்டு அமைப்பு தலையிட்டு பொது நல வழக்கு போட்டால் அதை பதிவு செய்யவும் விசாரணை செய்யவும் உள்ள அதிகாரங்கள் நீதிமன்றமும் வழக்கறிஞர்களும் ஆய்வு செய்யவேண்டியது)

ஆகவே, ரசாயன நிறுவனங்கள் இந்திய பாரம்பரிய விவசாயத்தை அழித்து பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய விவசாயத்தை கைப்பற்றி விவசாய உற்பத்தி நிறுவனங்களை தாராளமாக தடையில்லாமல் இந்தியாவில் விவசாயத் தொழில் செய்திடவும், நமது பால் உற்பத்தியை முற்றிலும் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றிடும் நோக்கில் நாட்டுமாடுகளை அழிக்கவும் 1993 ஆம் ஆண்டின் விவசாய ஒப்பந்தத்தில் அமேரிக்கா திருத்தம் கொண்டுவந்தது.

உலக வர்த்தக அமைப்பில் 1995 ஆம் ஆண்டு அமேரிக்கா கொண்டுவந்த விவசாய ஒப்பந்த திருத்தத்தை ஏற்கமறுத்து வந்த இந்தியா வேறு வழியில்லை என்ற நிலையில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி இந்தோனேசியா பாளி தீவில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் அடிபணிந்து இந்தியா ஏற்று கையொப்பம் இட்டது. 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் இந்திய அரசு உடனடி அமுலுக்கு செயலாக்கிட ஒப்பந்தத்தில் மீண்டும் கையொப்பம் இட்டு செயல்படுத்த துவங்கியது.

1993 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்திய தொழில் அதிபர்களுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன. மக்கள் எந்த ஒரு திருத்தமும் கேட்காமலேயே சட்டங்களை திருத்தம் செய்யவேண்டிய அவசியம் ஏன் மத்திய மாநில அரசுகளுக்கு வந்தது என்று எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை கொள்ளையில் பங்கு மட்டும் கேட்டது

அரசியல்வாதிகளையும் அதிகாரவர்க்கத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் நன்கொடை அவர்களை பேச விடாமல் தடுத்தது. அதன் விளைவாக இன்று நாம் போராட்ட காலத்தில் நிற்கின்றோம். இந்தப் போராட்டம் வெற்றிபெறுமா நிரந்தர தீர்வு பெற்றுத்தருமா? சட்டம் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லையென்றால் மாற்று ஏற்பாடாக என்ன செய்யலாம்?
............ தொடரும் 
இந்தியன் குரல்
9444305581
www.voiceofindian.org
உங்கள் பகுதியில் இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துங்கள்

இந்த துண்டு பிரசுரங்களை உங்கள் பகுதி மக்களுக்கும் பயன்பெற அச்சிட்டு விநியோகம் செய்யுங்கள்
#Jallikkattu 

No comments: