ஆதரவாளர்கள்

வியாழன், 3 மார்ச், 2016

பெற்றோர்களே! ஆசிரியர்களே! ஜெயிலுக்கு போலாம் வாங்க.......



மாசாகிவிட்ட மனம் (mind pollution)

"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே!! அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் காட்சி ஊடகங்களாலே"!!!

மத்திய அரசு சிறார்களுக்கான வயதை 16 ஆக குறைத்திருக்கிறது.16 வயதை கடந்தவர்கள் "சிறார்கள் அல்ல இனி பெரியவர்கள்" என்று சட்டம் திருத்தம் சொல்லுது.

"சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பள்ளி மாணவன்".
"ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்"
"பள்ளி மாணவர்கள் பாலியல் வன்புணர்வு குற்றம் செய்த காரணத்தால் அந்த பள்ளியின் தாளாளர் ஆசிரியர்கள் கைது."
"நண்பனை கொலை செய்த சக மாணவரின் தந்தையும் கைது"
"பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு, மாணவியை வன்புணர்வு செய்த தலைமை ஆசிரியர்."
"தேர்வுக்கு வந்த மாணவி கழிப்பறையில் குழந்தையைப் பிரசவித்தாள்"
"தனது பேத்தியை கற்பழித்த தாத்தா கைது"
பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த மாணவர்களின் "ஆசிரியர்களும் புரவலர்களும் பள்ளியின் தாளாளரும் கைது "
தினசரி இப்படி ஒரு செய்தி இல்லாமல் நாளிதழே இல்லை.

செய்தியாக பார்க்கும்போது, எதோ, ஒருவருக்கு நடந்த செய்தி என்று ஒதுங்கி வேடிக்கை பார்க்கும் நபராகி விடுன்கின்றோம். அதை சுவாரசியக் கதையாக பின்னி, நண்பர்களிடத்தில் விவாதம் செய்கின்றோம்.

ஆசிரியர்களே! மனம் மாசடைந்த மாணவர்களினால் பாலியல் பிரச்சனைக்காக நாளை நாமும் இதேபோன்ற ஊடகங்களில் தலைப்பு செய்தியாகலாம். கைதுசெய்யப்படலாம் விழித்திடுங்கள்.

24 மணிநேரமும் முக்கல் முனகல் ஆபாசம், வன்முறைக் காட்சிகள், திரைக்காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் பொழுது போக்கும் நிகழ்ச்சி எனும் போர்வையில், காட்சி ஊடகங்களின் மனசாட்சியில்லாத ஒளிபரப்பினால் வீட்டுக்குள்ளேயே கான்பிக்கபட்டு, ஒவ்வொரு இளைஞரின், பிள்ளைகளின், குடும்ப உறுப்பினர்களின், மனங்களில் மாசுகளாக கொட்டப்படுகின்றன.

திரைப்படங்களும் காட்சி ஊடகங்களும் அனைவரது மனதையும் மாசுபடுத்தி, காம எண்ணத்தையும் வன்முறை எண்ணத்தையும் தூண்டுகின்றன. தவறுகளை செய்யவும், செய்த தவறை மறைக்கவும் சிறப்பு வகுப்பெடுத்து வாழ்வியல் ஆசிரியராகி பாடம் நடத்துகின்றன.

உண்ணும் அனைத்து உணவுகளிலும் வளர்ச்சியை வேகப்படுத்தும் காரணிகளை தூண்டும் ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட ரசாயனங்களின் கலப்படம். இந்த ரசாயனங்கள் உடல் உறுப்புக்களை வேகமான வளர்ச்சிக்கு உதவுகின்றது. அதன் காரணமாகவே 10 வயதுக்கு முன்பே பெண்கள் பூப்படைவதும் 9 வயதுக்குள்ளேயே ஆண் குழந்தையின் விந்து உற்பத்தியாவதும் துவங்கி விடுகின்றது. உடல் பருமன் மற்றும் வயதுக்கு மீறிய அங்கங்கள் வளர்ச்சி ஏற்படுகின்றன. இதற்க்கு தீர்வு ரெடிமேட் உணவுப் பழக்கத்தை மாற்றுவது கைபிரீட் காய்கறிகள் தவிர்ப்பது அவசியம்.

இளம் வயதிலேயே பருவமடையும் இளைஞர்கள் ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சிகளை திரும்பத் திரும்ப பார்க்க நேரிடுவதால் மனம் பாதிப்படைகிறது. வாய்ப்புகள் கிடைக்கும் வரை நல்லவராக இருக்கும் ஒரு இளைஞன் வாய்ப்பு அமைவதால் உணர்ச்சித் தூண்டலால் ஒரு நொடியில் தீயவராகி குற்றவாளியாகிறார்.

எந்த ஒரு மனிதரும் பிறவிக் குற்றவாளியல்ல ஒரு நொடியில் தன்னை அறியாமலேயே முதல் குற்றம் செய்து குற்றவாளியாக உருவாகிறான். பிறகு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு தொடர்ச்சியான குற்றங்களை செய்கிறான்.

இப்படி உடல் வளர்ச்சி ஒருபுறம், மற்றொரு புறம் 24 மணி நேரமும் வீட்டிற்குள்ளேயே காட்சி ஊடகங்கள் மூலம் முக்கல் முனகல் காட்சிகள் சிறந்த படம்,சிறந்தகதை, டாப் டென், சிறப்பு காட்சிகள் என்று திரும்பத்திரும்ப காட்டப்படுகின்றன.

ஒரு திரைப் படத்தை தியேட்டரில் பார்க்கும்பொழுது தெரியாத காமம் சொட்டும் விரச கட்சிகள், அரைகுறை உடையுடன் அங்கங்களின் அசைவுகளின் மார்புகளின் விளிம்பு வரை எல்லாம் காட்சி ஊடகங்களி கிளிப்பிங்கில், விளக்கமாக ஊடக தர்மத்தை மீறி பொழுது போக்கு என்று காட்டப்படுகின்றன.

இப்படிபட்ட முக்கல் முனகல் ஆபாசக் காட்சிகள் நமது பிள்ளைகளை எந்த அளவு மனதளவில் தாக்கத்தை உருவாக்கும், மனதில் பாதிப்பை ஏற்படுத்தும், என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் பிள்ளைகளோடு பெற்றோர்களும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பதும், ரசிப்பதும், பிள்ளைகள் பார்க்க ரசிக்க அனுமதிப்பதும், ஒவ்வொரு இல்லத்திலும் அன்றாட தொடர்கதையாகி விட்டதே!.

உணர்சியைக் கொட்ட மன மாசை வெளிப்படுத்த மனைவி இருக்கின்றாள் என் குழந்தை மன உணர்ச்சியை கட்டுப்படுத்த என்ன செய்யும்? எப்படி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்?.  எந்தப் பெற்றோராவது சிந்திக்கின்றார்களா?, தவறு தவறு என்று சொல்லிக்கொண்டே அதை ரகசியமாய் பார்த்து ரசிக்கின்றோமே!. பிள்ளைகள் என்ன செய்யும்?. 

கண்ணகி வாழ்ந்த காலத்தில் இத்தனை ஊடகங்கள் இல்லை. ஆகவே அன்று கற்புக்கரசியாக இருந்தது பெரிதல்ல. இன்று இத்தனை சாக்கடைகளுக்கும் நடுவில் பருவ வயதை அடைந்த ஒரு பெண் குறைந்தது 10 ஆண்டுகள் கட்டுபாட்டுடன் இருக்கின்றாள். இவள்தான் உண்மையில் பத்தினி.

TV நாடகம் என்ற பெயரில் ....
பெற்றோருக்கு தெரியாமல் பிள்ளைகள் தவறு செய்வது எப்படி? தவறு செய்து மாட்டிகொண்டால் எப்படி பழிபோட்டு தப்பிப்பது ? என்பது போன்ற தவறுகளுக்கு சிறப்பு வகுப்பே நடக்கின்றதே!

இதையெல்லாம் கொடுத்து பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைத்துவிட்டு , "அய்யகோ இந்த பிள்ளை இப்படி செய்துவிட்டாளே" இந்தப் பையன் நல்ல பையனாதான இருந்தான் இப்படி கொடூரமாக வன்புணர்வு செய்துவிட்டானே" இந்த "ஆசிரியரே இப்படி செய்துவிட்டாரே''
இப்படியெல்லாம் கூப்பாடு போடும் நாம்..........

இப்படி குற்றம் புரியும் மாணவனின், பெற்றோர்களின், பிள்ளைகளின், ஆசிரியர்களின், மாசாகிப்போன மனசே குற்றச்செயல் புரிய காரணமானது என்று என்றாவது நாம் உணர்ந்தோமா? அதற்கு என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தோமா?

சட்டம் போட்டால் பாலியல் குற்றம் குறைந்து விடுமா? ஒழுக்க சிதைவை விலை கொடுத்து வாங்கி வைத்துக் கொண்டு ஒழுக்கமின்மை என்று சட்டத்தால் தண்டிப்பது நியாயமாகுமா? நமது பிள்ளைகளும் ஒரு நிமிட சபலத்தால் தவறு செய்யாதா? அப்படி செய்த தவறுக்கு தண்டனையை மனமுவர்ந்து நாம் ஏற்போமா?

தீர்வு?

விழிப்புணர்வு; 

ஒவ்வொரு பள்ளியும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கலந்தாய்வு செய்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவேண்டும். மனசின் மாசு குறித்து சரியான புரிதல் இல்லா மாணவர்கள் செய்யும் தவறுக்காக அப்பள்ளியின் ஆசிரியர்களும் , தாளாளர் உள்பட பலரும் குற்றவாளிக் கூண்டில் நிற்பார்கள். தண்டனையும் பாராமல் இருக்க தேவை விழிப்புணர்வு

பள்ளி ஆசிரியர்களே;
உடனடியாக உங்கள் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பிள்ளைகளின் மனசை மாசாக்கும் காரணிகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்டத்தின் விலங்கிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் மாணவர்களாலும் நமது பிள்ளைகளாலும் நடக்கலாம். அதனால் பாதிக்கபோவது நாமாகவும் இருக்கலாம்.

கர்நாடகாவில் நடந்ததைப் போன்று ஆசிரியர்களாகிய உங்களையும் பெற்றோர்களையும் கைது செய்து தண்டிக்கப்படலாம் அல்லது விசாரணை என்று அலைக்கழிக்கப் படலாம், நம் பள்ளியும் நிரந்தரமாக மூடப்படலாம்.

ஒவ்வொரு பள்ளியும் கல்லூரியும் செய்ய வேண்டும்:- 
மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனதின் மாசு குறித்த விழிப்புணர்வு செய்திட மாதம் ஒருமணி நேரம் செலவிடுங்கள் 
உதவிக்கு தொடர்புகொள்ள
- பாலசுப்ரமணியன்
 9042905783

Inline images 1

இந்தியன் குரல் செய்தது ; 01-01-2015 வரை 


16,000 கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன், நடவடிக்கை இல்லாமல் கிடந்த இரண்டு லட்சத்து எண்பதனாயிரம் (2,80,000) மேற்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் மனுக்கள் தீர்வு காண உதவி .

சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற , எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்.

நன்கொடை இல்லை உறுப்பினர் சந்தா இல்லை, பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - கொள்கை 




சட்ட மேதை அம்பேத்கர் லா அகடமி
இலவச சட்டக் கல்வி மையம்

29 ரட்டன் பஜார் 
சென்னை

பாலசுப்ரமனியன் 
9444305581

கருத்துகள் இல்லை: