நோட்டோ - நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் தனி பொத்தான் வாக்கு இயந்தரத்தில் பொறுத்த உத்திரவு.
வாக்காளர்கள்
ரகசியமாக தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்ய
வாக்கு அளிக்க வகை செய்யும் பொத்தான் என்ற அளவில் இந்த உத்தரவை வரவேற்கலாம். இந்த பொத்தானை வைத்து ஒட்டு போடுவதால் என்ன மாற்றம் நிகழும்?
இந்த நோட்டோ ஒட்டு முதல் இடம் அதாவது வெற்றி வேட்பாளர் பெற்ற வாக்குகளை
விட அதிக எண்ணிக்கை பெற்றால் மட்டுமே அந்த தொகுதியின் வாக்குப் பதிவு ரத்து
செய்யப்படுமாம் - இப்படி முதல் இடம் பெற வாய்ப்பே இல்லை
ஓட்டுப் போட விரும்பாதவர்கள் வாக்குச் சாவடிக்கு வருவதில்லை. அவர்களை
இனிமேலும் வாக்குச் சாவடிக்கு வரவழைத்து வாக்கு பதிவை உறுதி செய்ய எந்த
திட்டமும் அறிவிக்கப் படவில்லை.
தீர்வு 1; அனைத்து இந்தியக் குடிமகனும் கட்டாயம் வாக்களிக்க உத்தரவிடவேண்டும் அல்லது நோட்டோ வாக்குகள் பதிவான மொத்த வாக்குகளில் இத்தனை சதவீதம் (10% முதல் 15%) தாண்டினாலே தேர்தல் ரத்து என்று அறிவிப்பு செய்ய உத்தரவிட வேண்டும் .
ஒரு லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் சுமார் 30 ஆயிரம் முதல்
40 ஆயிரம் வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வருவது இல்லை அதாவது தான்
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றும் தனக்கு பிடித்தமானவர்கள்
இல்லையென்றும் தான் வரவில்லை.
மீதமுள்ள 60ஆயிரம்
வாக்குகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில் முதலிடம் பெறுபவர் சுமார் 25
அல்லது 26 ஆயிரம் வாக்குகள் பெற்றாலே போதும் வெற்றிபெருகின்றார் அவரைப்
பிடிக்காமல் வாக்களிக்காமல் இருக்கும் 40ஆயிரம் மக்களை விட இவர் பெற்ற
வாக்குகள் அதிகமா ? இவர் உண்மையிலேயே வெற்றியாலரா?
தீர்வு 2: வெற்றி பெற்ற வேட்பாளர் தான் போட்டியிட்ட தொகுதியில் பதிவுசெய்யப்படாத வாக்குகள் எண்ணிக்கையை விட அதிகம் இருக்க வேண்டும் அப்பொழுது தான் அந்த தேர்தல் செல்லும் என்று அறிவிக்க வேண்டும்
இப்படி பெரு உத்தரவை போட்டால் அரசியல் கட்சிகள் தானாகவே மக்களுக்கு பிடித்த
நம்பகமன் வேட்பாளர்களை களம் இறக்க முன்வருமே அதைவிடுத்து நோட்டோ பொத்தானை வைக்கவும் வேண்டாம் அதற்கான விளம்பர செலவும் வேண்டாமே!
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
நன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com
நன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com
2 கருத்துகள்:
இதனால ஒரு மாற்றாமும் வந்துடாதுன்னும் சொல்றாங்களே!
நோட்டோ ஒரு முன் முயற்சி. தொடக்கம்தானே..
கருத்துரையிடுக