நேற்று ஒரு
அன்பரிடம் உரையாடிக்கொண்டு இருந்த பொழுது, ஒரு தகவல் சொன்னார் உண்மையானு தெரியாது
இருந்தாலும் அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
எப்படி என்றேன்.
உண்மையில் உணர்வுப் பூர்வமாக போராடுபவர்கள் சிலர் இருக்கலாம் ஆனால் பலர் பிணத்தின் மீது தவழ்ந்து வரும் பணத்திற்கும் புகழுக்கும் ஆசைபட்டே கூவுகின்றார்கள். இவர்கள் ஆபத்தானவர்கள் அந்த சிங்கிளக் கொடியவனை விட இந்த உலகத்தில் உள்ள எல்லாக் கொடியவர்களையும் விட கொடியவர்கள். ஆனாலும் என்ன செய்ய இவர்களை தெரிந்தாலும் சரி ஏதாவது நல்லது நடக்குமா என்ற நம்பிக்கையிலேயே அவர்களும் பணத்தை கொட்டுகின்றார்கள். இது உண்மையா இல்லையா என்பதை ஈழம் ஈழம் என்று கூவும் நண்பர்களின் கடந்த கால பொருளாதார நிலையையும் இன்றைய நிலையையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் கூர்ந்து கவனித்தால் விளங்கும் என்றார். இவர்கள் எந்த வேலைக்கும் போவதில்லை எந்த தொழிலும் செய்வதில்லை போராட்டம் மட்டுமே பிரச்சாரம் மட்டுமே செய்கின்றார்கள் இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது. என்பதை இவர்கள் வெளிப்படையாக காட்டச் சொன்னால் இவர்களது சாயம் வெளுக்கும் என்றார்.
நான் வாயடைத்துப் போனேன் ஆண்டவா இதில் உண்மை இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டேன் வேறு என்ன சொல்ல. அந்த நண்பர் பொய் சொல்பவரும் அல்ல இப்படி சொல்வதனால் அவருக்கு தான் நஷ்ட்டம். ஏனென்றால் அவரும் தொடர் நன்கொடை வழங்கி வரும் ஒரு கொடையாளிதான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக