இது குறித்து தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிளஸ் 1 முதல் முதுகலைப் பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, தொழில்பயிற்சி, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நலநிதி செலுத்துபவர்களின் குழந்தைகள் மட்டுமே இந்தக் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத் தொகை பெற முடியும். இதற்காக விண்ணப்பிப்பவர்கள் "செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், அஞ்சல் பெட்டி எண் - 718, சென்னை - 6' என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட அஞ்சல்தலை ஒட்டிய உறையுடன் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வந்து சேரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக