ஆதரவாளர்கள்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

மாணவர்களின் வன்முறை சொல்லும் செய்தி என்ன

மூன்று கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கல்லூரி முதல்வரைக் கொலை செய்தனர்
8ஆம் வகுப்பு மாணவன் ஆசிரியரைக் கத்தியால் குத்தி கொலை செய்தான்
8ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியரின் கள்ளத் தொடர்பு அம்பலம்
கழிப்பறையில் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு வந்து தேர்வு எழுதிய பள்ளி மாணவி
இதுவெல்லாம் சொல்லும் சேதி என்ன ?
நமது பண்பாடும் கலாச்சாரமும் ஆணிவேராக இருந்த காரணத்தால் தான் 1857ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து ராணியின் நேரடி ஆளுகையின் கீழ் இந்திய மக்களை ஆட்சி செய்ய முடியவில்லை என்ற ஜான் மெக்காலேவின் அறிக்கை மூலம் அறிந்த பின்னர்தான் கல்விமுறையில் மாற்றம் கொண்டுவந்தும் நம் கலாசார பண்பாடுகளை சீரழித்தும் நம்மை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தினர். அதன் பிறகே 1857 ஆண்டு ராணியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியா ஆட்சி செய்யப்பட்டது.
அப்படி ஆட்சி செய்தபொழுது மக்களிடம் வாங்கும் வரியும் இங்கிருந்த செல்வமும் நிர்வாகச் செலவு போக மீதமான அனைத்தும் அவர்கள் எடுத்து செல்லவதை மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே அலுவலக நடைமுறைகள் ரகசியக் காப்பு பிரமாணங்கள் ஆக ரகசியம் காக்க உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது சட்டங்களும் அவர்களுக்கு ஏற்றதாகவே அதாவது ஆட்சியர்கள் என்ன செய்தாலும் சரியாகவும் குடிமக்கள் இந்தியர்கள் அதே செயலை செய்வது குற்றம் என்றது போன்ற சட்டங்கள் அவர்களின்  பெருமளவில் உதவி செய்தது.
சுரண்டி முடித்து இனி லாபம் இல்லை என்ற நிலையில் சுதந்திரம் என்றபெயரில் இந்தியக் கொள்ளையர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெள்ளையர்கள் வெளியேறினார்கள்.
இன்றும் அதே கல்வி மற்றும் பொருளாதாரக் கோட்பாடுகள் அதே சட்டங்கள்.
மக்களை அதே மது மாது போதையுடன் கேளிக்கைகளில் பொழுது போக்கு கலைகளில் மக்களை ஆழ்த்திவிட்டு சுதந்திரக் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கின்றார்கள்.
மாணவர்களின் மனங்களில் கூட கொலை கொள்ளை கற்பழிப்பு என்ற குரூர எண்ணமும் கீரோத்தனமாக்கிவிட்ட நம் காட்சி ஊடகங்களின் துணையுடன் நம்மை ஆள்பவர்கள் சுகமாகவே ஆட்சி புரிகின்றார்கள்
இதையெல்லாம் மக்கள் உணர்ந்து இந்த மது போதையில் இருந்தும் வசியம் செய்யும் பெண்களின்மீதான போதையில் இருந்தும் விடுபடும்போது தான் குறுக்குவழியில் பணம் சேர்க்கும் அவசியம் இல்லாமல் போகும் அன்று முதல் நீதி நேர்மையாக மக்கள் மாறுவார்கள் மக்கள் நீதியுடனும் நேர்மையுடனும் இல்லாமல் இருக்கும் வரை முதலில் படித்த குற்ற செய்திகள் பத்திரிகைகளில் முதலிடம் பிடிப்பதும் பிறகு மறப்பதும் தொடரும்

3 கருத்துகள்:

Anand சொன்னது…

மண்டையில மசாலா இல்லை என்று அர்த்தம்! மூளையை அடகு வைத்துவிட்டார்கள்! பின் விளைவுகளை யோசிக்காத செய்துவிட்டார்கள்! நல்ல வாழ்க்கைக்கு உகந்தவர்கள் அல்ல!

ராஜி சொன்னது…

மார்க் பெறும் எந்திரங்களாய் மாற்றி ஏட்டறிவு மட்டுமே அவர்களுக்கு திணிக்க பட்டதன் விளைவு இது

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மிகவும் வருந்தத் தக்க செயல் ஐயா.