ஆதரவாளர்கள்

Saturday, October 5, 2013

கூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின் பணம் ஆனால் மக்களுக்கே அனுமதி இல்லை இது தான் ஜனநாயகம்

நன்மைக்களே
பாராளுமன்ற நிலைக்குழு 4-10-2013 மற்றும் 5-10-13 ஆகிய இரண்டு தினங்கள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது சென்னை ராயல் மிரிடியான் ஹோட்டலில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியதுஅண்மையில் அறிமுகமான புதிய சட்ட மசோதாக்கள்
1) குற்ற தண்டனை பெற்றவர்கள் பதவியிழப்பு சம்பந்தமான மசோதா

2) லஞ்சம் பெறுவோர் மட்டுமல்ல லஞ்சம் கொடுத்தவரையும் குற்றவாளி ஆக்கிடும் அவருக்கும் தண்டனை வழங்க வகை செய்யும் மசோதா

3) தகவல் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் மசோதா
ஆனால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பில்லாமல் சென்ற பொது மக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை

 மீது தான் மக்கள் கருத்து கேட்கப்பட்டது
அழைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது
அழைப்பு கட்சியினருக்கும் கட்சி சார்ந்த வழக்குரைஞர்களுக்கும் மட்டுமே


இப்படி ஒரு கூட்டம் நடப்பது பற்றி நிலைக்குழுவின் வலைதளத்தில் கூட அதிகாரப் பூர்வ அறிவிப்பு இல்லை
இது குறித்து எந்த பத்திரிக்கையிலும் விளம்பரம் செய்து மக்களுக்கு தெரிவிக்கப் பட வில்லை
சுமார் மூன்று மணி துளிகளில் மூன்று பிரச்சனைகள் மீது கருத்து கேட்கப்பட்டுள்ளது 
இக்கூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின் பணம் ஆனால் மக்களுக்கே அனுமதி இல்லை இது தான் ஜனநாயகம்
இது மக்கள் கருத்துக் கேட்பா? அல்லது நிலைக்குழுவின்  கருத்தை மக்களுக்கு திணிப்பா?
இந்த நடைமுறையில் கருத்துக் கேட்பது சரியா இது எப்படி மக்கள் கருத்துக் கேட்பு கூட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும்.


அறிவிப்பு இல்லை அழைப்பும் இல்லை இவர்கள் நினைத்தவர்கள் மட்டுமே கருத்து சொல்ல அழைப்பு
நண்பர்களே
அரசும் அரசியல் வாதிகளும் சட்டங்களை மதிப்பதில்லை நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றா


இங்கு கேட்கப்பட்ட கருத்துக்கள் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரியுமா
உங்களது கருத்துக்களை எங்களுக்கு அனுப்புங்கள்
vitrustu@gmail.com

- இந்தியன் குரல்
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
நன்கொடை பெறுவதில்லை,  அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம்  வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com
www.facebook.com/voiceofindianorg

VOICE OF INDIAN

No comments: