சமூக ஆர்வலர்களே , சமூக அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளே உங்கள் ஆதரவுடன் 13-7-2013 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தர மறுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளைக் காப்பாற்றும் நோக்குடன் இந்த சட்டத்தையே திருத்தம் கொண்டுவந்து முடக்க முயலும் மத்திய அரசினைக் கண்டித்து அனைத்து பொதுமக்களின் சார்பில் சென்னை மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது அவசியம்
கலந்து போராட்டம் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அமைப்புகள் வெவ்வேறு ஆயினும் இலக்கு ஒன்றே ஊழலை ஒழிப்போம் RTI சட்டம் காப்போம் .
SMS , E-Mail, மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் உங்கள் நண்பர்களுக்கும் சார்ந்தவர்களுக்கும் உங்கள் பகுதி மக்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களும் கலந்துகொள்ள உதவிடுங்கள்
வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் துண்டு பிரசுரத்தினை உங்கள் அமைப்பின் பெயரிலோ அல்லது உங்களது நிறுவன விளம்பரத்தை சேர்த்தோ முடிந்த மட்டும் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் பகுதி மக்கள் அறிய விநியோகம் செய்யுங்கள்
இது மக்கள் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம். உண்மையான சுதந்திரம் மக்களுக்கு 2005ஆம் ஆண்டுதான் கிடைத்தது. கிடைத்த சுதந்திரத்தைக் காக்கும் போராட்டம் உங்களது பங்களிப்பு அவசியம் இருக்கட்டும் என்று வேண்டுகின்றோம்
இந்தியன் குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக