ஆதரவாளர்கள்

Tuesday, July 30, 2013

" மனதுக்கு மகிழ்ச்சியான அன்புடன் ஓர் அழைப்பு" ஒரு அலைபேசியின் "அலறல்" உண்மை சம்பவம்

ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் மனுக்கள் பெறப்பட்டு தீர்வுக்கான அந்த அந்த துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அன்று ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனை தீர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவார்கள். அங்கே நாங்களும் இந்தியன் குரல் நண்பர்களுடன் தவறாமல் சென்றுவிடுவோம்.
குறை கேட்பு நாளில் பெறப்படும் மனுக்கள் தீர்வு காணப்படாமல் கிடப்பில் போனாலோ அல்லது நியாயமான கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை என்றாலோ இந்தியன் குரல் உதவி மையத்தில் இலவசமாக உதவிபெற்று உங்களது கோரிக்கையை நிறைவேற்ற தகவல் சட்ட விண்ணப்பங்கள் மூலம் தீர்வு காணலாம் என்று துண்டுபிரசுரம்  விநியோகம் செய்துவருகின்றோம்.

சென்ற திங்கள் அன்று ஆட்சியர் அலுவலகத்தில் பிரசுரம் விநியோகம் முடித்துவிட்டு நண்பர்களை அனுப்பிவிட்டு பீச் ரயில் நிலையத்தில் ரயில் ஏற அவசரமாக சென்றேன் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் நோக்கி வேகமாக சென்றபோது பின்னால் இருந்து ஒரு குரால் பாலு சார் ஹலோ பாலுசார் உங்களைத்தாங்க சார் உங்களைத்தான் கொஞ்சம் நில்லுங்க என்ன இவ்வளவு வேகமா போறீங்க எப்படி இருக்கீங்க என்றவரை பார்த்தேன் அவருக்கு சுமார் 50 வயது இருக்கலாம் பார்த்த பார்வையின் அர்த்தம் புரிந்தவராக அவரே தொடர்ந்தத்ர் என்ன சார் என்னை அடையாளம் தெரியலையா சார் நான் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிகின்றேன்  இந்தியன் குரல் மீடின் எல்லாம் வந்து இருக்கின்றேன் சென்னை உதவி மையம் வந்து இருக்கின்றேன் என்றார் இப்பொழுது எனக்கும் ஞாபகம் வந்துவிட்டது.

 இவர் லஞ்சம் குடுக்க மறுத்ததால் பதவி உயர்வு இல்லாமல் இருக்கின்றார் அதனால் உதவிகேட்டு வந்தார். நாங்களும் சில மனுக்கள் எழுத உதவி செய்திருந்தோம். சாரி சார் பார்த்து நாளாகிவிட்டது அல்லவா அதான் என்றேன் 

எப்படி இருக்கின்றீர்கள் விண்ணப்பங்கள் அனுப்பினோமே உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததா என்றேன்.


சந்தோசமாக இருக்கின்றேன் சார் அது விசயமாகத் தான் உங்களிடம் பேசலாம் என்று அழைத்தேன் உங்களுக்கு மனமார்ந்த நன்றி சார் எனக்கு பதவி உயர்வு கிடைத்து விட்டது அதுமட்டும் இல்லை தவறாக லஞ்சம் கொடுத்து பதவி உயர்வு மற்றும் பல சலுகைகள் பெற்ற 13 பேர்களை பழைய பணிக்கே மாற்றிவிட்டார்கள் உண்மையில் இந்த சட்டம் நல்ல சட்டம் சார் உங்களது உதவி  எனக்கு மிகவும் உதவியது சார் என்றார்

 அப்படியா பாராட்டுக்கள் (இப்படி யாராவது அடிக்கடி வந்து ஆச்சரியம் கொடுப்பது வாடிக்கை தான் நாங்கள் எங்கு சென்றாலும் இந்தியன் குரல் உதவியால் பலனடைந்த யாராவது ஒருவர் நிச்சயம் வந்து இதுமாதிரி நன்றி கூறுவது அல்லது மீண்டும் சந்தேகம் கேட்பது என்பது நடக்கும்) என்றேன் அந்த 13 பெரும் பாவம் அல்லவா ஆசையால் அவர்கள் பணத்தையும் இழந்து மரியாதையையும் இழந்து குற்றவாளிகள் போன்று உணர்வார்கள். ஆனால் அவர்களுக்கும் நியாயம் கிடைக்க வழி இருக்கின்றது இழந்த பணத்தை மீண்டும் பெற வழி  இருக்கிறது என்று அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். அவர்களிடம் லஞ்சம் பெற்றவர்களை பிடித்துக் கொடுக்க அவர்கள் தயார் என்றால் நாம் உதவிசெய்யலாம் என்றேன். தொடர்பு கொள்ளச் சொல்லிவிட்டு நான் இறங்கும் இடம் வந்துவிட்டது வாய்ப்பிருந்தால் ஒன்றாம் தேதி உதவி மையம் வாருங்கள் என்று சொல்லி விடைபெற்றேன்

ரயிலில் இருந்து இறங்கி எனது வீடு நோக்கி நடந்து கொண்டு இருக்கும்போதே எண்ணங்கள் என்னைமுட்டி தள்ளியது இவ்வளவு நல்ல சட்டம் அனைவருக்கும் பயன் அளிக்கும் சட்டம் இன்று இதற்கு எதிராக எத்தனை சதிகள் சூழ்சிகள் போதாக்குறைக்கு இபொழுது இந்த தகவல் சட்டத்தை முடக்கும் வேளையில் அரசியல் கட்சிகள் .  

 உலக நாடுகள் பலவற்றில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு வந்து விட்ட சட்டம் காரணமாக அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையும் ஊழலற்ற நிர்வாகம் என்பதில் ஓரளவு வெற்றிபெற்று விட்டார்கள். அத்தகைய சட்டத்தை உலக நாடுகள் அனைத்தும் கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கிகள் நிபந்தனை வித்தித்து காலக்கெடு நிர்ணயம் செய்தது. 

வேறு வழியே இல்லை என்ற நிலையில் இந்திய அரசும் அச் சட்டத்தை இந்தியாவில் அமல் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. அப்படி உருவாக்கப்பட்ட சட்டம் தான் தகவல் உரிமைச் சட்டம் 2005 ஆகும். 

அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் , அரசிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிதி பெரும் அமைப்புகள், அரசின் கட்டுப்பாட்டில் அல்லது அரசு அனுமதியுடன் செயல்படும் தனியார் அமைப்புகள் நிறுவனங்கள் என அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அமைப்புகள் அனைத்தும் இச்சட்டத்தின் கீழ் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி தகவல் கேட்டால் தரவேண்டும். பாதுகாப்பு மற்றும் ரகசிய காப்பு ஆவணங்கள் தவிர அனைத்து தகவல்களையும் எந்த ஒரு இந்தியக் குடிமகன் கேட்டாலும் தரவேண்டும் என்று இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த சட்டம் தகவல் உரிமைச் சட்டம் . 

 எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் தகவல் கேட்கலாம். ஒரு இந்தியக் குடிமகன் அரசு அலுவலகத்தில் அளித்த தன்னுடைய கோரிக்கை மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஏற்கப்பட்டதா?, நிராகரிக்கப்பட்டதா?, நிராகரிப்புக்கான காரணம்?, அம்மனுமீது நடவடிக்கை எத்தனை நாளில் எந்த அலுவலரால் எடுக்கப்படும்?, குறித்த நாளில் தீர்வு செய்யாத அலுவலருக்கு என்ன தண்டனை? என்பது உள்பட அனைத்தும் தகவல் உரிமைச் சட்டம் மூலம் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி கேட்டால் 30 தினங்களில் தகவல் தரவேண்டும் இல்லையேல் அந்த அலுவலருக்கு ஒரு நாளைக்கு 250 வீதம் அதிகபட்சம் 25000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இதே சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளும் தகவல் தரவேண்டும் காரணம சலுகைக் கட்டணத்தில் இடம், கட்டிடம்,வரிவிலக்கு தேர்தலில் அரசு ஊடகங்களில் இலவச விளம்பரம்,, அரசு கட்டணத்தில் தொலைபேசி இணையதளம், என்று எல்லாப் பயன்களையும் அனுபவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு சட்டமன்றம் பாராளுமன்றத்தில் அலுவலகம் இப்படி அரசின் மக்களின் பணம் கட்சிகள் அனுபவிப்பதால் அவர்களும் தகவல் சட்டத்தில் தகவல் கேட்டால் தரவேண்டும். 

கட்சியின் பொறுப்பாளர்கள் பதவி நியமனம் , தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு, நன்கொடை வரவுகள், கட்சியின் செலவு, ஆண்டு வரவு செலவு, ஒரு கட்சி என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று பதிவு செய்துள்ளது என்ற தகவல், அக்கட்சியின் நோக்கத்தில் நிறைவேற்றியது என்ன கட்சியின் தீர்மானங்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் கேட்கலாம். 

அப்படி கேட்டதால் தான் தலைநகர் தில்லியில் அரசு நிலங்கள் மற்றும் கட்டிடங்களை 12 கட்சிகள் பெற்றுள்ளது என்று தெரிய வருகின்றது. அவர்கள் பெற்றுள்ள நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் மதிப்பு சுமார் 2500 கோடியாகும் 

வரிவிலக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 500 கோடி ஆகும் இவை எல்லாம் தில்லியில் உள்ள சொத்துக்கள் மட்டும் என்றால் இந்தியா முழுவதும் மாநில மாவட்ட அளவில் கட்சிகள் அனுபவிக்கும் அரசு(மக்கள்) சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்  இந்தியாவில் பற்றாக்குரையில்லாமல் பட்ஜெட் போட இந்த சொத்துக்கள் போதும் இந்தியாவின் கடன் முழுவது அடைத்துவிடலாம் 

இப்படி தகவல் மக்கள் தெரிந்து நம்மைக் கேள்வி கேட்பார்கள் என்று எதிபார்க்காத கட்சிகள் இப்பொழுது இந்த சட்டத்தைத் திருத்தி அரசியல் கட்சிகளுக்கு தகவல் சட்டத்தில் இருந்தே விலக்கு அளிப்பார்களாம்

அலைபேசியின் அலறல் என்னை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது
ஹலோ//,
//சார் நான் தியாகு பேசறேன் சார் தகவல் சட்டம் திருத்தம் பற்றி நம் பிரதமர் பேட்டி பத்திரிகையில் வந்திருக்கு சார் //

//அப்படியா சார் சொல்லுங்க //

//வரும் பாராளுமன்றக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தனியார் கல்லூரிகள் பள்ளிகள் என் ஜி ஒ க்கள் போன்ற அமைப்புகளுக்கு தகவல் சட்டத்தில் இருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்   திருத்திட்டாங்கனா இந்த சட்டம் எதுக்கு சார்? இந்த சட்டத்தை முடக்காம விட மாட்டார்கள் போலிருக்கே அப்படி நடந்துவிட்டால் ஜனநாயகம் இனி கேள்விக்குறி ஆகிவிடும் இவர்கள் என்ன தவறு செய்தாலும் கேட்க முடியாதே சார்//


//அப்படி எதுவும் நடக்காது தியாகு சார் ஏன்னாஇந்த சட்டத்திலேயே விலக்களிக்கும் அமைப்புகள் பற்றி தெளிவா குறிப்பிடப்பட்டு இருக்கு ரகசியம் தேவைப்படும் அரசு அமைப்புகள் மட்டுமே விலக்களிக்க ஏற்ற அமைப்புகள் அரசியல் கட்சிகள் பதிவு செய்ததே மக்களுக்கு சேவை செய்யும் நோக்கம் சேவை அமைப்புகளில் ரகசியம் அவசியமா என்ன ஆகவே செல்லாது
 திருத்தினால் சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு திருத்தம் செல்லாது என்று ஆக்கிட முடியும். ஆகவே புதிதாக ஒரு சட்டம் கொண்டுவந்து முடக்கப் பார்ப்பார்களாம். இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த ஒரு சட்டத்தை இயற்றினாலும் செல்லாது என்ற உச்ச நீதிமன்ற ஆணை இருக்கின்றது.

இப்போதைய அரசியல் கட்சிகளின் நிலை எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் பேட்டியின் வாயிலாக அறிகின்றோம். வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் என்ன செய்யலாம் என்று ஆலோசனையில் இருக்கும் கட்சிகளுக்கு மக்கள் எச்சரிக்கை விடுக்கும் நேரம் இது//

//ஆமா சார் நாம் ஏதாவது பண்ணனுமே!//

//உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு அனைவருக்கும் வேண்டும் அரசியல் கட்சிகள் அப்படி திருத்தம் கொடுவரக் கூடாது அனைத்து அரசியல் கட்சிகளும் வெளிப்படைத் தன்மையுடன் கட்சி செயல்பாடுகள் இருக்கவேண்டும் அதற்க்கு உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுத் தகவல் அலுவலர் மற்று மேல் முரியீட்டு அலுவலர்களை உடனே நியமிக்க வேண்டும். தகவல் தர மறுக்கும் கட்சிகளுக்கு சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அல்லது திருத்தம் கொண்டுவர முயலும் கட்சிக்கும் எங்கள் ஒட்டு இல்லை என்று அனைத்து மக்களும் விழித்தெழ இப்பொழுதே மின் அஞ்சல்கள் பறக்கட்டும் //

//அப்படியே செய்கிறேன் சார் //

//இணைய தள வசதியற்ற மக்களுக்காக ஒரு கோடி துண்டுபிரசுரங்கள் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று இந்தியன் குரல் விடுத்த கோரிக்கையை ஏற்று பல்வேறு அமைப்புகள் மூலம் இணைந்து முதல் கட்டமாக ஒருலட்சம் துண்டுபிரசுரங்களின் விநியோகம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கிட உள்ளது அதற்கான ஆலோசனைக் கூட்டம் அன்று காலை இந்தியன் குரல் உதவி மையத்தில் நடைபெறுகின்றது. வாய்ப்பிருந்தால் நீங்களும் வாருங்கள்

வருகின்றேன் சார் நானும் நாமக்கல் முழுவதும் உள்ள மக்களுக்கு துண்டுபிரசுரம் அச்சிட்டு கொடுக்கின்றோம் சார் //

மிக்க மகிழ்ச்சி சார் துண்டு பிரசுரத்தின் அச்சு நகல் என்னிடம் இருக்கின்றது உங்களது மெயிலில் அனுப்பிடுகின்றேன் டி டி பி செய்ய தேவையில்லை அப்படியே உங்கள் அமைப்பின் பெயரை சேர்த்து பிரிண்ட் என்டுக்கலாம்

அப்படியே செய்கின்றேன் சார் மிக்க நன்றி சார் இவர்கள் சட்டத்தை திருத்த அனுமதிக்கக் கூடாது சார்

முயற்சி செய்வோம் திருந்துவார்கள் இல்லையென்றால் நாம் திருத்துவோம் நன்றி சார்

போனை அனைத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இந்த ஒருவருக்கு இருக்கும் அக்கறை மற்றவர்களிடம் இல்லையே என்று யோசித்தேன். எங்கோ தவறு செய்வதுபோல் உணர்ந்தேன் இருக்காது அனைவருக்கும் இந்த ஆர்வமும் சமூகத்தின் பால் அக்கறையும் இருக்கும் அவர்களது பொருளாதார நிலை ஒரு நாளைக்கு 14 மணிநேரம் உழைக்கும் மனிதன் ஓய்வு எடுக்க நேரமில்லாத மனிதனுக்கு எண்ணம் இருந்தாலும் செயல்படுத்த முடியாதே

நேரமும் இருந்து செலவுக்கு பணமும் இருக்கும் இதுபோன்ற மனிதர்கள் சிலரே ஆயினும் இவர்கள் செய்வது ஒட்டுமொத்த சாமானிய மக்களின் பிரதிநிதிகளாக கேட்கும் தகுதிபெற்றவர்கள் என்று நினைக்கின்றேன்.

No comments: