ஆதரவாளர்கள்

Tuesday, October 30, 2012

பணம், பதவி, புகழ், நன்றி, வாழ்த்து, பாராட்டு எதிர் பாராத மக்கள் சேவை அமைப்பு

கட்டணம் பெறுவதில்லை நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் சந்தா இல்லை பரிசுப் பொருட்கள் ஏற்பதில்லை சால்வை மாலை மரியாதை ஏற்பது இல்லை 


எவ்வித நன்கொடையும் பெறாமல் உறுப்பினர் கட்டணம் என்ற பெயரில் பணம் சந்தா வசூல் செய்யாமல் பிரதி பலன்(பணம், பதவி, புகழ், வாழ்த்து, நன்றி, பாராட்டு) ஏதும் எதிர் பாராமல் நிறுவனர்களின் சொந்த உழைப்பின் பணத்தை மட்டுமே கொண்டு மக்கள் நலனுக்காக வருங்கால சந்ததிகள் நலனுக்காக ஊழலுக்கு எதிராக மனிதாபமுள்ள சமூக அக்கறையுடைய இளைஞர்களை உருவாக்குதல் இளைஞர்களை நல்வழிப் பாதையில் நடத்திட இந்தியாவில் இயங்கும் ஒரு மக்கள் சேவை  அமைப்பு ஆகும்.

இவ்வமைப்பின் மூலம் தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் பயன்பாடு மற்றும் பயன்படுத்த பயிற்சி பயன்படுத்தும்போது ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்க இலவச உதமையம் அலைபேசி வழி உதவி மாவட்டம் தோறும் உள்ள தகவல் உரிமைச் சட்ட உபயோகிப்பாளர்கள் பாதுகாப்புடன் இச்சட்டத்தினைப் பயன்படுத்துவது குறித்த ஆலோசனை. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இலவச உதவி மையங்கள் நடத்தி வருகிறோம்

அரசுத் துறை பற்றியும்  துறைகளின் செயல்பாடுகள் துறை அலுவலர்களின் கடமை மக்களுக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் அரசுப் பயன்களை பெரும் வழிமுறைகள் கல்விக்கடன் பெற வழிமுறைகள் அறியவும் என்ன புகாருக்கு யாரிடம் புகார் தரவேண்டும் எந்த அலுவலர் அதற்கு பொறுப்பாளர் போன்ற அனைத்து விபரங்களையும் இந்தியன் குரல் கற்றுத் தருகின்றது.

நாங்க (மக்கள்) கண்காணிக்கின்றோம் 

இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களை சார்ந்த அதன் அரசு பணியாளர்கள் தங்கள் கடமையை சரியாக செய்கிறார்களா என்று கண்காணிக்கும் ஒரே சமூக அமைப்பு இந்தியன் குரல்.
 

இந்தியன் குரல் அமைப்பு ஒவ்வொரு மாதமும் அரசு துறைகளின் நடவடிக்கை கண்காணிக்கின்றது. இச் சட்டத்தில் மனுக்கள் எழுத பயிற்சி பெற்ற தன்னார்வக் குழு தொண்டர்கள் மூலம் தகவல் உரிமைச் சட்டம் மூலம் குறிப்பிட்ட துறை சார்ந்த  அலுவலகங்களுக்கு தகவல் கேட்டு விண்ணப்பித்து பதில் பெற்று அதன் உண்மை நிலை அறிந்து செயல் படாத அல்லது தவறு செய்துள்ள  ஊழியர் மீது உரிய அலுவலரிடத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்ள செய்கின்றது.

அந்த வரிசையில் தற்பொழுது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் அன்றாட பணியினை மேற்கொண்ட விதம் குறித்தும் மத்திய மாநில அரசின் திட்டங்கள் மக்கள் பெற்றிட மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பெற்று உரிய மன்றத்தில் உண்மை நிலையை எடுத்து வைப்பதற்கான முயற்சி செய்து வருகிறது. மாவட்ட போக்குவரத்து அலுவலர் பணிகள் குறித்தும் அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் குறித்த அறிக்கை பெறுதல் அதன் மூலம் அவர்கள் என்ன பனி செய்துள்ளார்கள் என்கிற விபரம் மக்கள் பார்வைக்கு எடுத்து செல்வது. கல்வித்துறை அலுவலர்களின் அன்றாட பணிகளை ஆய்வு செய்த அறிக்கை உள்ளிட்ட தகவல் பெற்று மக்கள் மன்றத்தில் வைப்பது. மருத்துவ மனைகள் மருத்துவ துறை அலுவலர்களின் ஆய்வு மற்றும் சுகாதார துறை நடவடிக்கைகள் குறித்த தகவல் பெற்று மக்கள் மன்றத்தில்  கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


தகவல் பெரும் உரிமைச் சட்டம் இச் சட்டத்திற்கு எதிரானவர்கள் இச் சட்டத்தால் பாதிப்பிற்கு உள்ளாகும் ஊழல் வாதிகளால்  தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் இச்சட்டத்தை முடக்கும் முயற்சிகளை முறியடித்து இச்சட்டத்தைக் காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது


இவ்வமைப்பின் பயிற்சி வகுப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுததிகளில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது  மாதந்திர செயல்பாடுகள் மற்றும் பயிற்சி நடைபெறும் இடங்களை அறிய வலைப்பூவில் தொடருங்கள் உங்களது நண்பருக்கும் தெரியப் படுத்துங்கள் 

மக்களுக்கு எங்களால் முடிந்த உதவி செய்வதும் அதன் மூலம் ஊழல் அற்ற இந்தியா உருவாகவும் அதற்கான எங்களது இந்த வேள்வி தொடரும் ஆம் இதுவும் ஒரு வேள்விதான் இந்த வேள்வியில் நீங்களும் பங்குகொள்ள விரும்பினால் இந்த தகவலை உங்கள் உங்களால் முடிந்த மட்டும் மற்றவர் அறியச் செய்யுங்கள்.
இதே போன்று நீங்கள் செயல் பட விரும்பினால் ஆலோசனை அளிக்க தயாராக இருக்கின்றோம். உங்கள் அமைப்பின் பெயரிலேயே உங்கள் அடையாளம் இழக்காமல் எங்களுடன் தொடர்பில் இருங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
அன்புடன்
எ பாலசுப்ரமணியன்
இந்தியன் குரல்
9444305581 Indian Kural (Voice of Indian) conducts; 
How to apply for Education loan? ,  Right To Information act (2005) Assistance cum Training programs   as follows:
1-12-12 chennai
15-12-12- chennai
29-12-12 Kalpaakkam

1-11-2012 chennai 29 kumbat complex Rattan bazar chennai 3
4-11-2012 Viluppuram Chenjee 
15-11-2012 Chennai 
18-11-2012 Trichy
25-11-2012 Kanchipuram 
1-10-2011 chennai
14-10-2012 Royapet Chennai
15-10-2012 chennai Rattan bazar
21-10-2012 Madurai
22-10-2012 Madurai 

No comments: