ஆதரவாளர்கள்

Tuesday, June 11, 2013

‘திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி’

எழுத மறந்த காதல் கடிதம்


நேர்மை நிறைந்த நடுவர்களே அருமைப்  பெரியோர்களே! அருமைத் தாய்மார்களே! அன்புக் குழந்தைகளே! அனைவருக்கும் என் பணிவான வணக்கம்   காதல் கடிதம் எழுதும் போட்டியில் நானும் பங்குபெறுவது பரிசுக்காக அல்ல அதன் ரகசியம் அப்புறமா  சொல்வேன் 


நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு என் வீட்டுல எப்வ்வளவு பிரச்சனை இருக்கு என்று எல்லோரிடமும் சொல்ல முடியாது இருந்தாலும் எனக்கோ நேரம் பெரும் பிரச்சனை  ஒரு சில வலை நண்பர்கள் எழுத்துக்களும் அதன் சுவை மாறாத நதியில் நீந்தும் மலர்போல் நடையில் அழகாக படிக்க படிக்க சுவைகூடும். சிலர் பதிவு இட்டவுடன் கருத்துக்கள் வந்து விழும் எதோ நாம் பதிவு எழுதப் போவது முகூட்டியே தெரிந்த மாதிரி! படித்திருப்பாரா என்ற சந்தேகம் கூட வரும் ஆச்சரியங்கள் மேலிட புதுப் புது அனுபவங்கள் தினமும்.

 ஒருநாள் ஒரு பதிவில் எழுத மறந்த காதல் கடிதம் போட்டி அறிவிப்பு பதிவு பார்க்க அட நம்ம சீனுவா இப்படி யோசிக்கிறார் எப்படிஎல்லாம் யோசிக்கிறாங்க பாரேன் எல்லாம் கிட்ஸ்க்காக மட்டும் இல்லைங்க சப்ஜெக்டும் இருக்குனு நிரூபிக்கின்ற வலைப்பதிவர்களில் இவரும் ஒருவர்.

 ஆக நானும் போட்டியில் பங்கு கொள்வது என்று முடிவு செய்து களத்தில் குதித்துவிட்டேன் என்ன எழுதுவது எப்படி எழுதுவது தினமும் நினைக்கின்றேன் அது வேண்டாம் இதை எழுதலாம் ம்ஹூம் இதை விட அதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று பல  மலரும் நினைவுகள் வந்து எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் குழம்பிப் போகின்றேன். ஒரு மனிதனை இப்படியெல்லாம் சோதிப்பதா என்ன கொடுமை!

 எழுத மறந்த காதல் கடிதம் எழுத நினைத்த காதல் கடிதம் எழுதிய காதல் கடிதம் இது எதுவுமே என்கிட்டே இருக்கிற மாதிரியே தெரியலையே இருந்தாலும் விடமாட்டேன் இறுதி நாளுக்குல்லாற எப்படியும் அருமையான காதல் கடிதம் எழுதிடுவேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் வலை நண்பர்களே.

இன்று வரை ஒரு வரி கூட எழுத முடியவில்லை ஆனாலும் எழுதி விடுவேன் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கின்றது இன்னும் நாள் இருக்குல்ல 20 ஆம் தேதி வரை பார்ப்போம் ஒரு கை பார்த்துவிடுகின்றேன் 


என்கூட போட்டிபோட விரும்பும் நண்பர்கள் அறிந்துகொள்ள 
எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி உண்டு யாராவது அந்தத் தேதி முடியும் முன்பாக ஞாபகப் படுத்திடுங்கள் இல்லைனா அருமையான காதல் கடிதம் படிக்கும் வாய்ப்பை இழந்து விடுவீர்கள்-

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஞாபக மறதி தானே...? காதலுக்கு மட்டுமல்ல... சில நேரங்களில் வாழ்க்கைக்கும் நல்லது... ஆமாம் என்னைக்கு ஞாபகப்படுத்த வேண்டும்...? சொல்லிடுங்க... ஏன்னா மறந்திடுவேன்... ஹிஹி...

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்...

சீனு said...

இந்தப் பரிசு போட்டி குறித்த தகவல்களை மிக உற்சாகமான எழுத்தில் பகிர்ந்து இருப்பது என்னை மென்மேலும் உற்சாகப்படுத்துகிறது சார். மிக்க நன்றி..

இதுபோல் மிக இயல்பாக அற்புதமான ஒரு காதல் கடிதம் உங்களிடம் இருந்து வாசிப்பதற்காக காத்துக் கொண்டுள்ளோம். மிக்க நன்றி சார், பகிர்தலுக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கும்

Bala subramanian said...

நன்றி திரு தனபாலன் அவர்களே! எண்ணைக்கு ஞாபகப் படுத்தனுமுன்னு சொல்ல மறந்துட்டேனே பார்த்தீர்களா எனக்கு இருக்கும் ஞாபக மறதியை நண்பர் சீனுகிட்ட கேட்டு கண்டிப்பாக சொல்றேன் சொல்றேன் சார்

Bala subramanian said...

தங்களது முதல் வருகைக்கு நன்றி திரு சீனு அவர்களே!

நம்பகிட்ட கர்ப்பனைஎல்லாம் கிடையாதுங்க உண்மையா வரும் உள்ளதைத் தான் எழுத இருக்கின்றேன் உண்மையான காதல் கடிதம் படிக்க நம்பிக்கையுடன் தயாராக இருங்கள்.