ஆதரவாளர்கள்

Tuesday, June 18, 2013

கல்விக்கடன் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு இந்தியன் குரல் இலவச உதவி மையத்தில் தீர்வு

கல்விக்கடன் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு இந்தியன் குரல் இலவச உதவி மையத்தில் தீர்வு 

வங்கிகள் விண்ணப்பம் தர மறுத்தால்? 
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வாங்க மறுத்தால்? 
இந்த மதிப்பெண்ணுக்கு கடன் வழங்க இயலாது என்றால்? 
நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து படிப்பவர்களுக்கு கடன் இல்லை என்றால்? 

உங்களுக்கு இந்த வங்கி இல்லை,உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வங்கியில் கேளுங்கள் என்றால்?  
வட்டியைக் கட்டினால் தான் கடன் வழங்குவோம்! 
பெற்றோர்கடன் நிலுவையில் உள்ளது ஆகவே கடன் இல்லை! 

இப்படி எந்தக் காரணத்திற்க்காக, கல்விக் கடன் மறுக்கபட்டாலும், உதவிக்கு  இந்தியன் குரல் உதவி மையத்தில் பிரதி மாதம் ஒன்றாம் தேதியும் 15 ஆம் தேதியும் ஆக மாதத்தில் இரண்டு நாட்கள் நேரில் வரலாம் கட்டணம் இல்லை. அரசு அல்லது பண்டிகை  விடுமுறை நாளாக இருந்தாலும் மையம் செயல்படும் .

இந்தியன் குரல் உதவி மையம் 
கும்பத் காம்ப்ளெக்ஸ் முதல் தளம் 
29 ரத்தன் பஜார் 
சென்னை 600003
தொடர்புக்கு 9444305581

விண்ணப்பம் தராமலேயே டெபாசிட் செய்தால் கடன் தருகின்றோம். புதிதாக கணக்கு தொடங்குங்கள் இன்சூரன்ஸ்  போடுங்கள் என்று ஆசை காட்டி அவர்களது டார்கெட் பெற உங்களை ஏமாற்றுவார்கள் உசார் மாணவர்களே 

முதலில் விண்ணப்பம் தரவேண்டும் அதன் பிறகு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை குறிப்பிட்ட வங்கி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தை (அத்தாட்சியைப் ) விண்ணப்ப நகலில் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை தேதியுடன் பெற்றுக்கொண்டு தான் வழங்க வேண்டும் அத்தாட்சி தர மறுத்தால் விண்ணப்பங்களை நேரில் வங்கியில் வழங்கக் கூடாது 
பதிவு அஞ்சலில் ஒப்புகை அட்டையுடன் அனுப்பிட வேண்டும்.  


மாணவர்களே கீழ் உள்ள இணைப்பில் குறைந்த வட்டியில் இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கடன் வழங்குவது பற்றிய விபரங்களை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள் 

உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.nhfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வழங்குகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய பிற்பட்ட வகுப்பினர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம்  வரை மற்றும் நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55 ஆயிரம் வரை உள்ள பிற்பத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு முழு நேர தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில கடன்களை அளிக்கிறது.
பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐ.டி., சட்டம், நர்சிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளை படிக்கும்  மாணவர்கள் இந்த கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.nbcfdc.org.in இணையதளத்தைப் பார்க்கவும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தொழிற்கல்வி / தொழில்நுட்ப கல்வியை  பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு அளவில் படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
மருத்துவம், பொறியியல், நிர்வாகம், சட்டம், தொழில்நுட்பக் கல்வி, பிசியோதெரபி, நர்சிங் முதலியனவற்றில் பட்டப்படிப்போ அல்லது பட்ட மேற்படிப்போ, டிப்ளமோ படிக்கும் பிள்ளைகளுக்கு நேஷனல் சபாயி கர்மசாரிஸ் பினான்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் கடன் உதவி அளிக்கிறது.
தகுதி வாய்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும். கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.nskfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும். 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------எஸ்.சி. பிரிவு மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வழங்குகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம் வரை மற்றும் நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55 ஆயிரம் வரை உள்ள எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கு முழு நேர தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில கடன்களை அளிக்கிறது.
பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐ.டி., பயோ டெக்னாலஜி, ஆர்கிடெக்சர், கல்வி, சட்டம், நர்சிங், இதழியல், பிஎச்.டி., சி.ஏ. அல்லது ஐசிடபிள்யுஏ போன்ற படிப்புகளை படிக்கும் எஸ்.சி., மாணவர்கள் இந்த கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும். கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.nsfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்குமே வங்கிகள் கடன் வழங்குவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி சிலருக்கு கல்விக் கடன் மறுக்கப்படுகிறது.
அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றைக் கண்டறிந்து உடனடியாக சரி செய்து, வேறு வங்கியிலும் மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு வங்கியும், கல்விக் கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒவ்வொரு விதமான நடைமுறைகளைப் பின்பற்றும். வங்கிகள் கோரும் சான்றுகளும் கூடு வேறுபடும். எனவே, ஒரு வங்கியில் கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் முன், அதன் நடைமுறையை சரியாக படித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
கல்விக் கடன் நடைமுறைகள் முடிய 2 வாரங்கள் முதல் ஒரு மாதமும் அதற்கு மேலும் கூட ஆகலாம். அதேப்போல, வங்கி வசூலிக்கும் வட்டி விகிதத்தை முதலில் கேட்டு, எங்கு குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறதோ அங்கு விண்ணப்பிப்பது நல்லது.
பொதுவாக வங்கிகள் தொழிற்கல்வி எனப்படும் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், சட்டம், பல் மருத்துவம், மேலாண்மை படிப்பு, சார்ட்டட் அக்கவுண்ட் போன்ற படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்க ஆர்வம் செலுத்துகின்றன. ஏனெனில், இப்படிப்புகளை முடித்ததும், மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து, கடன் திருப்பி செலுத்தப்படும் என்பதுதான்.
இதே ஒரு கலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு பணி உறுதி குறைவு என்பதால் அவர்களுக்கு கல்விக் கடன் வழங்க நிறைய நடைமுறைகளைப் பின்பற்றுகிறது வங்கிகள்.
இந்தியாவில் தற்போது 20க்கும் மேற்பட்ட வங்கிகள், மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குகிறது. ஆனால், மாணவர்கள் திருப்பி செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையை, மாணவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தில் வங்கிகள் எதிர்பார்க்கின்றன என்பதும் ஒரு ரகசியமாகும்.
அதாவது, எதற்காக கடன் கேட்கிறோம் என்று மாணவர்கள் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். ஒரு மாணவர், எங்கள் தந்தை செய்து வந்த தொழில் தற்போது நலிந்துவிட்டது. கையில் காசில்லாததால் படிக்க கடன் கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு வங்கிக் கடன் மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நம்பிக்கை இங்கு குறைகிறது. வீட்டில் மாத வருமானமே நிரந்தரமில்லாத நிலையை இந்த வாக்குமூலம் உணர்த்துகிறது.
இதுவே, உயர் கல்வி பயில கடன் அளித்தால், அதைக் கொண்டு படித்து முடித்து அந்த கடனை அடைப்பேன் என்று ஒரு மாணவர் குறிப்பிட்டிருந்தால் அவருக்கு கடன் அளிக்க வங்கி முன்வருகிறது.
இது மட்டுமல்ல, ஜாமீன் போடுபவரின் கணக்கு விவரம் சரியில்லாமல் இருத்தல், மாணவரது மதிப்பெண், தேவையான சான்றுகளை சமர்ப்பிக்காத விண்ணப்பங்கள், அங்கீகரிக்கப்படாத கல்வி நிலையம் அல்லது பாடப்பிரிவில் சேர்நதிருப்பது, குடும்ப மாத வருமானம் மிகக் குறைவாக இருப்பது போன்றவையும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட காரணங்களாகும்.
சரியான கல்வித் தரம் இல்லாத கல்வி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் நிராகரிக்கப்படுகிறது. அந்த கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள், உயர்ந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனுடன் இருக்க மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பது தாமதமாகும் என்பதே காரணமாகும்.
ஆனால், எந்த விதமான காரணமும் இன்றி, ஒரு மாணவருக்கு கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அவர் வங்கியின் மேலதிகாரியிடம் இது குறித்து புகார் அளித்துவிட்டு, வேறொரு வங்கியில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்து கடன் பெறலாம் என்பதே கல்வி ஆலோசகர்களின் கருத்தாகும்.
ஒரு கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டதும் துவண்டு விடாமல், விண்ணப்பிக்கும் போது செய்த தவறுகளை திருத்திக் கொண்டு உடனடியாக வேறு வங்கியில் கடன் உதவி பெற முயற்சிப்பதே மாணவர்களின் புத்திசாலித்தனமாகும்.
மேலும், அரசு வங்கியாக இருப்பின், கல்விக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணத்தை கேட்டு அறிந்து கொள்ளலாம். ஆனால், தனியார் வங்கியாக இருந்தால் காரணத்தை அறிந்து கொள்ள இயலாது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவும், யு.கே.வின் வார்விக் பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கான கல்விக் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகம், இந்தியாவில் இருந்து தனது பல்கலைக்கழகத்தில் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பிலானக் கல்விக் கடன் வழங்க சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் எஸ். ஸ்ரீதர் வார்விக் பல்கலைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, வார்விக் பல்கலையில் பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உடனடியாக கல்விக் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்படும்.
வார்விக் தலைவரும், பேராசிரியருமான லார்ட் குமார் பட்டாச்சார்யாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். வார்விக் பல்கலையில் பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கடனை துரிதமாக வழங்குவது மட்டுமல்லாமல், பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செய்யவும் இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
வார்விக் பல்கலையில், இந்திய மாணவர்களை அதிகளவில் வரவேற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால், இந்த வங்கியில் வார்விக் பல்கலையில் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு துரித கதியில் கல்விக் கடன் வழங்கப்படும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வங்கி கடன் பெற்று படிக்கும் மாணவர்கள்மற்ற மாணவர்களை விட,நன்றாக படிக்க வேண்டும்மற்ற மாணவர்கள் நான்கு லட்சம் ரூபாய் படிப்புக்காக செலவிடுகிறார்கள் என்றால்வங்கி கடன் பெற்று பயிலும் மாணவர்கள்வட்டியுடன் சேர்ந்து 5.40 லட்சம் ரூபாய் செலவிடுகின்றனர்,என ஸ்டேட் பாங்க் உயரதிகாரி விருதாச்சலம் பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது : சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறதுஎந்தவொரு மாணவமாணவியரும் வறுமை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக வங்கிக்கடன் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.வங்கிகளில் கல்வி கடன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்வழங்கப்பட்டும் வருகிறது.

வங்கி கடன் பெறஇந்திய குடிமகனாக இருக்க வேண்டும்கல்லூரியில் சேர்ந்ததற்கானகல்லூரிகளில் பெறப்பட்ட உத்தரவு கடிதம் இருக்க வேண்டும்உங்கள் வீடு எந்த இடத்தில் இருக்கிறதோஅதற்கு உட்பட்ட பொதுத்துறை வங்கி கிளைகளில் வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடங்களுக்கும் வங்கிக்கடன் வழங்கப்படும்நல்ல கல்லூரியில் சேர்ந்தால் மட்டும் போதாதுஅங்கீகாரம் பெற்ற படிப்பா என்பதையும் பார்த்து சேர வேண்டும்உள்நாட்டில் படிக்க 10 லட்சம் வரைவெளிநாட்டில் படிக்க 20 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
இதில்நான்கு லட்சம் ரூபாய் வரை விண்ணப்பித்தால்முழு பணமும் வங்கியில் இருந்து வழங்கப்படும்.நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் விண்ணப்பித்தால்ஐந்து சதவீத பணத்தை நீங்கள் செலவிட வேண்டும்.விடுதிவாகன கட்டணம் என படிப்பு சார்ந்த அனைத்து செலவுக்கும் வங்கியில் இருந்து பணம் வழங்கப்படும்.ஆனால்அதற்கான ரசீதை கல்லூரியில் இருந்து பெற்று வர வேண்டும்.
உங்கள் படிப்புக்கு கம்ப்யூட்டர் அவசியம் என்றால்அவை வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.முதலாண்டு வங்கி கடன் கிடைப்பதற்கு முன்கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தி விட்டால்,அந்தாண்டுக்கான பணம் மட்டும் கையில் வழங்கப்படும்மற்ற ஆண்டுக்கான பணம்வங்கியில் இருந்து நேரடியாக கல்லூரிகளிடம் கல்வி கட்டணம் வழங்கப்படும்பெற்றோர் குடும்ப வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால்வட்டியில் சலுகை உண்டுவங்கிக்கடன் பெற்று படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் கண்காணிக்கப்பட்டு வரும்மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வங்கிகளில் இருக்கும்.
பட்டம் பெற்ற மாணவர்கள்வேலைக்கு சென்று ஆறு மாதத்துக்கு பின்கடனை செலுத்த துவங்க வேண்டும்படித்து முடித்து ஓராண்டு வரை வங்கிகள் மாணவர்களுக்கு பணம் செலுத்த அவகாசம் தரும்.அதன் பின்மாணவர்கள் செலுத்தாமல் இருந்தால்பெற்றோர் செலுத்த வேண்டும்வங்கி கடன் பெற்று படிக்கும் மாணவர்கள்மற்ற மாணவர்களை விட நன்றாக படிக்க வேண்டும்மற்ற மாணவர்கள் நான்கு லட்சம் ரூபாய் படிப்புக்காக செலவு செய்கிறார்கள் என்றால்வங்கி கடன் பெற்று பயிலும் மாணவர்கள்,வட்டியுடன் சேர்ந்து 5.40 லட்சம் ரூபாய் செலவிடுகின்றனர்வங்கி கடன் பெற்று படிக்கும் மாணவர்கள்,கடனை முறையாக திருப்பிச் செலுத்த கற்றுக்கொள்ள வேண்டும்அப்போதுதான்அடுத்து வரும் தலைமுறை மாணவர்களுக்கும் இத்திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தும்என்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.
உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர் கல்வியை பயிலவும் கல்விக் கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும்.
சில கல்வி நிறுவனங்கள், ஒரு சில வங்கிகளுடன் இணைந்து செயல்படும். அதுபோன்ற கல்வி நிலையங்களில் நீங்கள் உயர்கல்வி பயிலும் போது, அதனுடன் இணைந்து செயல்படும் வங்கியிலேயே உங்களுக்கு கல்விக் கடன் எளிதாக வழங்கப்படும். உள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் கல்வி பயில 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடன் வழங்கப்படும்.
கல்விக் கடன் பெறும் மாணவர், வங்கி கேட்கும் சில ஆவணங்களை முறையாக சேகரித்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, மாணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வங்கி அதிகாரி நேரடியாக கலந்துரையாடுவார். மாணவரின் தந்தை அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம், குடும்பச் சொத்து, மாணவர் சேர்ந்துள்ள பாடப்பிரிவின் தன்மை போன்றவை குறித்த தகவல்களை கேட்டறிவார்கள்.
வட்டி விகிதம்
மாணவர்கள் பெறும் கல்விக் கடன் தொகை ரூ.4 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் குறைந்த பட்ச வட்டி விகிதத்திலேயே வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக் கடன் தொகை இருந்தால், குறைந்தபட்ச வட்டித் தொகையுடன், 1 விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால், இந்த வட்டி விகிதக் கணக்கீடு வங்கிக்கு வங்கி மாறுபடும். ஒரு சில வங்கிகள், மாணவிகளுக்கும், ஒரு சில வங்கிகள் குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் வட்டி சலுகைகளை வழங்குகின்றன.
கடன் ஜாமீன்
கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீன் கையெழுத்து அல்லது ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பதும், மாணவர் கோரும் கடன் தொகையைப் பொறுத்து அமையும். சொத்து என்றால், வங்கிக் கணக்கில் பண வைப்பு அல்லது வீட்டு பத்திரம் போன்றவையாகும். இவற்றிற்கான ஆதாரங்களை கடன் பெறும் போது அளிக்க வேண்டும். ரூ.4 லட்சம் வரையான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பதில்லை. அதற்கு மேல் கடன் தொகை இருக்குமனால், சில நேரங்களில் மூன்றாம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும்.
கடனை திருப்பி அளித்தல்
கடன் தொகையை, படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை. சில வங்கிகள், படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டியை மட்டும் வசூலிக்கின்றன.  படித்து முடித்து வேலை கிடைத்ததும் அல்லது படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்க வேண்டும். ஒராண்டிற்கு மேலும் கடனை திரும்ப செலுத்த தாமதிக்கக் கூடாது. அதுவும் 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கினார்.
தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலையுடன் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, வழிகாட்டி எனும் உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
"அது சரி...! படிக்க நிறைய செலவு ஆகுமே என்ற கவலையா?" எனும் தலைப்பில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் பேசியதாவது: மாணவர்களுக்கு பணம் இல்லை என்பதால், கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில், முழு முனைப்புடன் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் கல்விக் கடன் திட்டம். நாட்டில் 25 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இவற்றில், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., மெடிக்கல், இன்ஜி., உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளுக்கும் வங்கிகள் கல்வி கடன்களை வழங்குகின்றன. பொதுத் துறை வங்கிகளிடம், சிறப்பு படிப்புகளுக்கு மட்டும் கல்விக் கடனை பெற முடியாது.
வங்கிகளிடம் கல்விக் கடனை பெறும் முன், இருக்கும் தேவையான ஆவணங்களை முதலிலேயே தயார் செய்து வைத்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கு வேண்டும். உள்நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு 10 லட்சமும், வெளிநாட்டில் உள்ள படிப்புகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை கால அவகாசத்தை வங்கிகள் வழங்குகின்றன.
கல்விக் கடனை பெற விரும்பும் மாணவர்கள், வங்கி பணிகள் அதிகம் இருக்கும் நாட்களைத் தவிர்த்து அணுகினால், கல்விக் கடன் பெறுவதில் இருக்கும் நடைமுறைகள் மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்கள் என, அனைத்து விவரங்களையும் எளிதில் அறிந்து, கடனை பெற உதவியாக இருக்கும். கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இல்லாமல் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதை மாணவர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு விருத்தாசலம் பேசினார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------இந்திய மாணவர்கள் இந்தியா அல்லது வெளிநாட்டில் உயர் கல்விப் பெற வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. பணம் இல்லாத காரணத்தால் உயர் கல்வியை யாரும் இழக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
அதற்கான வழிமுறைகள்
கல்விக் கடன் பெறும் மாணவர்கள் வயது வரம்பு - 16 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எந்தெந்த செலவுகளுக்கு கல்விக் கடன் -  சேர்க்கை மற்றும் தேர்வுக் கட்டணம், முன்பிணையத் தொகை, புத்தகம் வாங்குதல், பயணச் செலவு.
இந்தியாவில் படிக்க வழங்கப்படும் கடன் தொகை - 10 லட்சம் ரூபாய் வரை.
வெளிநாட்டில் படிக்க வழங்கப்படும் கடன் தொகை - 20 லட்ச ரூபாய் வரை.
கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் - 5 முதல் 7 ஆண்டுகள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கவுன்சிலிங் கடிதம்அட்மிஷன் கடிதம்பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கல்லூரியில் அட்மிஷன் கடிதம்படிப்புக்கான செலவினங்கள் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்இந்த ஆவணங்கள் இருந்தால்வங்கியில் கடன் தர முடியாது என மறுக்க முடியாது.

கல்விக்கடன் பெறுவது குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வணங்காமுடி பேசியதாவது:கல்விக்கடன் பெறசம்பந்தப்பட்ட வங்கியில்மாணவரும் அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரும் இணைந்து வங்கிக் கணக்குத் துவக்க வேண்டும்.

கவுன்சிலிங் கடிதம்அட்மிஷன் கடிதம்பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆவணங்கள் கண்டிப்பாக தேவைப்படும்கல்லூரியில் அட்மிஷன் பெற்றிருந்தால்அக்கல்லூரியில் இருந்து ஒரு கடிதம் பெற்றிருக்க வேண்டும்அப்படிப்புக்கான செலவினங்கள் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்இந்த ஆவணங்கள் இருந்தால்வங்கியில் கடன் தரமுடியாது என மறுக்க முடியாது.
தந்தை ஏற்கனவே கடன் பெற்று இருந்துஅதை சரிவர செலுத்தாமல் இருந்தால் கடன் வழங்க மறுக்கலாம்.ஏற்கனவே சகோதரர் அல்லது சகோதரி கல்விக்கடன் பெற்றுவேலைக்குச் சென்றும் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் கடன் மறுக்கப்படலாம்குடும்ப உறுப்பினர்களில் கடன் திருப்பிச் செலுத்தாமல் இருப்பின்இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம்.
வேறு வங்கியில் சிலர் கணக்கு வைத்திருக்கக்கூடும்அந்த வங்கியில் கல்விக்கடன் கேளுங்கள்கொடுக்க மறுத்தால்அந்த வங்கியில் இருந்து கடன் கொடுக்க இயலவில்லை என்ற ஒப்புதல் கடிதத்தை பெற்றுஎந்த வங்கியில் கல்விக்கடன் பெற வேண்டுமோ அந்த வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்இடைத்தரகர்களை எதற்காகவும் நம்பக்கூடாதுநேரடியாக மாவட்ட நிர்வாகத்தையோவங்கியையோதான் அணுக வேண்டும்.
வட்டி விகிதத்தில் மட்டுமே சில வேறுபாடுகள் இருக்கும்மற்றபடி விதிமுறைகள் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவானதுஉள்நாட்டில் அதிகபட்சம் 10 லட்சமும்வெளிநாடாக இருப்பின் அதிகபட்சம்20 லட்சம் ரூபாயும் கடன் வழங்கப்படும்நான்கு லட்சம் ரூபாய் வரை கையில் இருந்து எதுவும் செலுத்த வேண்டியதில்லைஅதற்கு மேல் எனில் உள்நாட்டில் 10 சதவீதமும்வெளிநாட்டில் படிப்பதாக இருப்பின் 15சதவீத தொகையையும் நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.
கல்விக்கடன் பெறும் மாணவருடன் இணைந்து வங்கிக் கடன் செலுத்துபவரே கடனுக்கு பொறுப்புஅல்லது பிணையம் நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் எனில், 7.5 லட்சம் வரை மூன்றாவது மனிதர் ஜாமீன் பொறுப்பேற்க வேண்டும்அவருக்கு கடன் பெறும் அளவுக்கு சொத்து மதிப்பு இருக்க வேண்டும்எட்டு லட்சத்துக்கு மேல் இருப்பின்மூன்றாவது மனிதருக்கு அசையா சொத்துகடன் தொகை அளவுக்கு இருக்க வேண்டும்.
ஏப் முதல் தேதி 2009ல் இருந்து 31 மார்ச் 2010 வரை கொடுக்கப்பட்ட கடனுக்கு வட்டி இல்லை.நடப்பாண்டுக்கு வட்டி குறித்து இதுவரை அறிவிப்பு வரவில்லைபடிப்பு முடிந்த பின் ஒரு ஆண்டு அல்லது வேலை கிடைப்பது இதில் எது முதலில் நடக்கிறதோ அப்போது இருந்து கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்ஒரு வேளை வட்டி வசூலிப்பதாக இருப்பின் நான்கு லட்சம் ரூபாய் வரை 12 சதவீதம். 7.5 லட்சம் வரை ஒரு வட்டி விகிதமும், 20 லட்சம் ரூபாய் வரை ஒரு வட்டி விகிதமும் உண்டுபெண்களுக்கு ஒரு சதவீத வட்டி குறைவு என்ற சிறப்புத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
டிப்ளமோவுக்கு கடன் பெற்றிருந்தாலும்அவர் தொடர்ந்து பொறியியல் படிக்க விரும்பினால்அப்போதும் கல்விக்கடன் பெற முடியும்பி.., முடித்த பின்., எம்.., படிப்பதற்கும் கடன் கிடைக்கும்சொந்த இருப்பிடத்துக்கு அருகிலேயே கடன் வாங்கலாம்.
கல்விக்கடன் பெறுவதில் பிரச்னையாக இருப்பின்ஆர்.எஸ்., புரத்தில் உள்ள கனரா வங்கிக்கிளையில் முன்னோடி வங்கி மேலாளரை அணுகலாம்அல்லது 9443364184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறுவணங்காமுடி பேசினார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லா படிப்புகளுக்கும் கடன் கிடைக்கிறது. ஆனால் தேர்ந்தெடுத்த படிப்பு, அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்றவையா என முதலில் பார்க்க வேண்டும். கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லையென்றாலும், பாடத்திற்கு அங்கீகாரம் இல்லையென்றாலும் கடன் கிடைக்காது.
உள்நாட்டில் படிக்கும் படிப்புக்கு நான்கு லட்ச ரூபாய் கடன் வரை, எவ்வித பிணையமும் தேவையில்லை. மொத்த செலவையும் கடனாக பெறலாம். அதற்கு மேல் தேவையெனில் ஐந்து சதவீதத் தொகையை பெற்றோர் செலுத்த வேண்டும். வெளிநாட்டு கல்விக்கு 15 சதவீத கட்டணத்தை பெற்றோர் செலுத்த வேண்டும். முதலாண்டில் அவசரமாக கட்டணம் செலுத்திய பின், கடனுக்கு விண்ணப்பித்தால், அந்தத்தொகை வங்கியிலிருந்து கடனாக பெற்றோருக்கு வழங்கப்படும். படித்து முடித்த ஓராண்டு அல்லது வேலை கிடைத்த ஆறு மாதத்தில் இருந்து கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்
விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரது புகைப்படம்
மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல்கள்
மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமானச் சான்றிதழ்
கல்விக் கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்புச் சான்றிதழ்(ஏதேனும் இருந்தால்)
கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவரது அல்லது அவரது பெற்றோரது அல்லது ஜாமீன் கையெழுத்து போடும் நபரது கடந்த 6 மாதத்திற்கான வங்கிக் கணக்கு அறிக்கை
வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமானக் கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை அல்லாமல், வங்கிகள் தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாக கேட்க வாய்ப்பிருக்கிறது. அவற்றையும் மாணவர்கள் அளிக்க வேண்டியது அவசியம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு வங்கியும் கல்விக்கடன் பற்றிய விபரங்களை பெற இணைப்புகளை சுட்டுங்கள் 


நன்றி தினமலர் கல்விமலர் 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் சேவைகளுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துகள்... நன்றிகள் பல...

விரிவான விளக்கங்களுக்கு நன்றி...

deepa g said...

ரூ.549 மட்டும் செலுத்தி, உங்களுக்கு பிடித்த சொந்த டொமைனில் உங்கள் பிளாக் இயங்க வேண்டுமா..?

உதா. ( www.mydomain.blogspot.in ----> www.mydomain.in )

Fill up the survey and get free domain activation charge