ஆதரவாளர்கள்

Sunday, June 9, 2013

அ தி மு க தலைமை அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமகன்கள்சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் முன் உண்ணாவிரதம் மேற்கொண்ட பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமகன்கள் 

தமிழகத்தில் பல ஆண்டுகளாக நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடி செய்வது தொடர்கின்றது. புகார்கள் வரப்பெற்ற நிதி நிறுவனங்களில் ஏமாற்றப் பட்ட பல்லாயிரம் முதலீட்டாளர்கள் இன்று வரை தீர்வு கிடைக்காமல் போராடி வருகின்றனர். அனுபவ் , பாலு ஜுவல்லர்ஸ், ராயப்பேட்டை பெனிபிட் பண்ட்ஸ், JBJ ரியல் எஸ்டேட் நிறுவன மோசடி, சிட்பண்ட்ஸ் மோசடி, கோல்ட் குஸ்ட் நிதி நிறுவன மோசடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள முதலீடு பல்லாயிரம் கோடி ஆகும். இவ்வளவு தொகை பெற்று ஏமாற்றியவர்கள் உண்மையான குற்றம் செய்தவர்கள் இன்றுவரை உரிய தண்டனை பெறாமல் இருப்பதும் முதலீடு செய்து பணம் இழந்தவர்களுக்கு உரிய நியாயமான தீர்வு இன்றுவரை கிடைக்காமல் இருப்பதும் கண்டு வேதனை அடைகின்றோம் அவமானமாக கருதுகின்றோம். இதை பல நிலைகளில் அரசுக்கு எடுத்துச் சொல்லியும் விசாரணை முறையாக நடைபெற வில்லை. 

தமிழகத்தில் லோகாயிக்தா சட்டம் அமுலானால்  இதுபோன்ற கால நீட்டிப்பு அல்லது பாதிக்கப் பட்டவர்களுக்கு இழுத்தடிப்பு செய்து கால விரையம் செய்யமுடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெறுவது உறுதி. குறித்த காலத்தில் மக்களது மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் அலுவலருக்கு தண்டனை உண்டு என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது மக்களின் மனுக்கள்( புகார் மற்றும் கோரிக்கைகள் ) மீது தீர்வு காணும் நிலை ஏற்ப்படும் 

ஆகவே லோகாயுக்தா சட்டம் தமிழகத்தில் அமல் படுத்தப் பட வேண்டும் 

சேவை உரிமைச் சட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப் பட்டுள்ளது இச் சட்டம் ஒவ்வொரு அரசு அலுவலரும் தாம் செய்ய வேண்டிய பணிகளின் கால வரம்பை நிர்ணயம் செய்து காலக்கெடு வித்தித்து உள்ளது. அதன்படி அவ்வளுவலர் தன கடமையை சரியாக செய்யவேண்டிய நிலை ஏற்ப்படுவதொடு பொதுமக்களின் மனுக்கள் உரிய காலத்தில் தீர்வு காண வழிவகை செய்யப்படும். இத்தகைய சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டால் தமிழக மக்களும் பயன் பெறுவார்களே 

ஆகவே லோகாயுக்தா சட்டம் மற்றும் சேவை உரிமைச் சட்டம் ஆகிய இவ்விரு சட்டங்களையும் தமிழகத்தில் அமல்படுத்தக் கோரியும் பாதிக்கப் பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ADMK  அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்திட நிதிநிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களும் சிவராவும் அவரது நண்பர்களும் 9-6-13 காலை 11 மணி அளவில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ தி மு க தலைமை அலுவலகம் முன் உண்ணாவிரதம் தொடங்கினர். 

உண்ணாவிரதம் இருக்க இந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டதன் காரணம் பற்றி  நிகழ்ச்சி அமைப்பாளர் சிவாரவ் 

எங்களுக்கு சென்னையில் வேறு எங்கும் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை. எங்களுக்கு சொந்த இடமும் இல்லை. இந்த இடம் எம் ஜி ஆர் அவர்களால் மக்களுக்காக கட்டப்பட்ட அலுவலகம் உள்ள இடம். பொது மக்கள் யார் வேண்டுமானாலும் இந்த இடத்தைப் பயன்படுத்தலாம். இந்த இடம் அ தி மு க தொண்டர்களுக்கு மட்டுமான இடம் இல்லை என்று எம் ஜி ஆர் அவர்களே சொல்லியிருக்கின்றார். ஆகவே நாங்கள் இந்த இடத்தில் உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்தோம். ஜனநாயக வழியில் அமைதியான் வழியில் உண்ணாவிரதம் இருக்கின்றோம் என்றார்


1 comment:

ராஜி said...

இந்த இடம் அ தி மு க தொண்டர்களுக்கு மட்டுமான இடம் இல்லை என்று எம் ஜி ஆர் அவர்களே சொல்லியிருக்கின்றார்.
>>
ஓ அப்படியா! புது தகவல்.., இனி போராட்டம் நடத்த இடம் கிடைக்காதவங்க அங்க போயிடலாம். சட்டுன்னு மீடியாக்கள் பார்வைலயும் பட்டுடலாம்.