ஆதரவாளர்கள்

Monday, June 17, 2013

அம்மாக்களே எச்சரிக்கை ! நீதி கேட்ட தாயின் அறைகூவல்:

அம்மாக்களே!
இந்தியாவில் உங்களுக்கும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் யாருக்கும் பாதுகாப்பில்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடுதான், தினசரி பெண்கள் பாலியல் தொல்லைக்கு பலியாவது.  உங்களின் உங்கள் பிள்ளைகளின் எச்சரிக்கையும் அறிவும் ஆற்றலுமே பாதுகாப்பு , எச்சரிக்கையுடன் இருப்பீர்!.
சட்டங்களும் போலீசும் இருந்தும் 2 வயது முதல் 5 வயது சிறுமிகள், வீட்டில் தனியாக இருந்த பெண், மயக்க ஊசி போட்டு , 13 வயது சிறுமி 7 ஆம் வகுப்பு மாணவி என வரிசையாக தினசரி கர்ப்பளிக்கப் பட்டுள்ளார்கள் . ஆசிட் வீசி பெண்பிள்ளைகளைக் குரூரப் படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் குற்றத்திற்கு பலியாகின்றால் . இந்திய நாடு முழுவதும் 55000 காணமல் போன குழந்தைகளை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு, ஒரு ஆண்டில் நடைபெறும் 11 கோடி கருக்கலைப்பில் 6 கோடி கருக்கலைப்பு சட்டவிரோதமானது . தினமணி நாளேட்டின் செய்தியின் படி 2009-2010-2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் 68000 பலாத்கார வழக்குகள் பதிவானது தண்டிக்கப் பட்டவர்கள் 16000 பேர் மட்டுமே இதே மூன்று ஆண்டுகளில் 22000 பாலியல் அத்துமீறல்கள் பதிவாகியுள்ளன தண்டனை பெற்றவர்கள் 27408 பேர்கள் மட்டுமே. கடுகளவு உதாரணம் தான், மலைபோல் காட்டப்பட்ட டெல்லி மாணவி கற்பழிப்பு.

இந்த இழிநிலைக்கு என்ன காரணம்?

  • யாருக்கும் எதற்கும் அச்சமில்லை.
  • ஏன் அச்சமில்லை? 
  • சட்டங்கள் செயல்படவில்லை 
  • சட்டங்கள் ஏன் செயல்படவில்லை?
  • பணம்,பணம்,இலஞ்சம் ,ஊழல்.
  • இலஞ்சம் ஊழல் ஏன்?
  • ஒழுக்கச் சிதைவு .
  • ஒழுக்கச் சிதைவு ஏன்?
  • பன்போளுக்க நெறிகளையும்-வேத போதனைகளையும் மீறி எப்படியும் சம்பாதிக்கலாம் , எப்படியும் வாழலாம், என்ற எல்லைமீறல்கள் 
திலகர்,விவேகானந்தர்,காந்தி,நேதாஜி, அம்பேத்கர்,காயிதே மில்லத்,பெரியார்,பாரதி,பாரதிதாசன்,போன்ற எண்ணற்ற மாமனிதர்கள் தோன்றியதால் உலக அளவில் ஒழுக்கத்தில் பெயர்பெற்றது இந்தியா மட்டுமே.

அவரவர் மொழி இலக்கியங்களும் வேதங்களும் தலைவர்களும் குறிப்பாக உலகமே வியக்கும் அவ்வையும் வள்ளுவரும் கம்பரும் இளங்கோவடிகளும் ராமலிங்க அடிகளும் வகுத்தளித்த பன்பொழுக்க நெறி தவறி பால்பட்டு நிர்க்கும் இப்படிப்பட்ட சமூக அமைப்பு உருவாகியுள்ளது

விலகிய பன்பொழுக்க  நெறிகளைப் புகுத்தாமல் விடியல் இல்லை உணர்வீர்!
அதுவரை பாதுகாப்பாக வாழ்வதற்கு சிந்திக்க வேண்டாமா?
இதீமைகளுக்கேல்லாம் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கத்தியின்றி ரத்தம் இன்றி ஓசையின்றி மனித மனங்களைக் குப்பைகலாக்கும் பாலியல் வன்முறை வெறிகளைத் தூண்டும் நம் ஊடகத் தீமைகள் தான் முன்னணியில் நிற்கின்றன .
 எல்லாவற்றிற்கும் காரணத்தை ஆராயும் கமிசங்களும் அரசுகளும் அறிவு ஜீவிகளும் பெண்ணிய அமைப்புகளும் பொறுப்புள்ள சமூக ஆர்வலர்களும் இந்த ஊடகத் தீமையின் தாக்கத்தை இதுவரை அராயவில்லையே ஏன் ?கைப்புன்னைப் பார்ப்பதற்கு கண்ணாடி எதற்கு கமிசன்கள் எதற்கு ? மத்திய மாநில அரசுகளுக்கு துணிவிருந்தால் இந்தியக் குடும்பப் பெண்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள்.........
அறிவூட்டலுக்கும் நினைவூட்டலுக்கும் தொலைதொடர்பிர்க்குமான , திரைப்படங்கள்.தொலைக் காட்சிகள், இணைய தளங்கள், கைபேசிகள் ஆகிய அற்ப்புத அறிவியல் சாதனங்கள் வழியே பெண்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் இந்தியக் கோடீசுவரர்கள் பாலியல் உணர்ச்சித் தூண்டகளை 24 மணி நேரமும் ஓயாது நாளுக்கு நாள் அளவிலும் தன்மையிலும் அதிகமாக்கிக் கொண்டிருக்கும் கொடுமையை இந்தியத் தாய்மார்களே பட்டியலிட்டுத் தருவார்கள்.
பாலியல் உணர்ச்சித் தூண்டல் மட்டுமல்ல ஒருதலைக் காதல் காதளிக்கவிட்டால் அப்பெண்ணை அழிப்பது, அவமானப்படுத்துவது, பழிக்குப் பலி, கொலைக்குக் கொலை, நூதன முறையில் கொலை கொள்ளை, மோசடி, தனிநபர் பயங்கரவாதம், தீவிரவாதம் மூலம் வீட்டை,நகரத்தை, நாசமாக்குதல் போன்ற அனைத்து வகைக் குற்றங்களும் கள்ளக்காதல்  கணவனுக்குத் தெரியாமல் மனைவி பெற்றோருக்குத் தெரியாமல் பிள்ளைகள் போன்ற ஒழுக்கச் சிதைவுகள் எப்படி எப்படி செய்வது? தப்பிப்பது எப்படி? என்பதை இந்த அறிவியல் சாதனங்கள் மூலம் தானே. இந்த அவலமான மனிதர்கள் பாடம் நடத்துகின்றார்கள்
ஒருபக்கம் இந்த ஆபத்து, மறுபக்கம் எட்டுவயது சிறுவனுக்கும் எட்டும் வகையில் ஊரெங்கும் அரசு மதுக்கடைகள் இந்த இரண்டு கொடிய ஆபத்துக்களையும் வர்மாவும் மத்திய மாலில அரசுகளும் தொடவே இல்லை ஏன்?

பாலியல் வெறி உணர்ச்சித் தூண்டல்கள் திரைப்படங்கள் தொலைக்காத்வ்சிகள் வழியாக மட்டும் நிறுத்தாமல் இணைய தளங்கள் கைபேசிகள் வழியாகவும் செயல்முறை விளக்கத்தோடு இவர்கள் என்னென்ன பாடங்களைப் படித்துக் கொடுக்கின்றார்கள்?

பெண்களின் அங்கங்களை ஆபாசமாகக் காட்டுவது , பெண்ணைப் போகப் பொருளாக படுக்கை அறையில் ஆண்களை மகிழச் செய்யும் பலவீனமான அடிமைகளாகக் காட்டுவது.
வீட்டிற்க்குள் தனியாக இருக்கும் சிறுமியை, பெண்ணை, மாணவியர் உயர் கல்வி பயின்று அல்லது படிக்காமல் வயிற்ருப் பிளைப்பிற்க்காக வேலைக்கு போகும், காடு காலனியில் வேலை செய்யும் சிறுமிகள் பெண்கள், திபண்டம் பணம் நகை வேலை பதவி உயர்வு ஆகியவற்றை விரும்பும் சிறுமிகள் பெண்கள், தன்னிடம் பயிலும், தன கட்டுப்பாட்டில் உள்ள சிறுமிகள் திருமணமான அல்லது திருமணமாகாத பெண்கள் என ஒவ்வொருவரிடமும் எப்படி எந்த எந்த வீர்த்தைகளைப் பேசுவது, எத்தனை முறை பேசுவது,, எப்படித் தனி இடங்களுக்கு வரவழைப்பது, போதை வார்த்தைகள் பேசி போதை மருந்து மற்றும் மயக்க மருந்துகளைக் கொடுத்துக் கற்பழிப்பது, விழித்துக் கொண்டவள் சகித்துக் கொண்டால் விட்டுவிடுவது இல்லையேல் புகைப்படம்  எடுத்து மிரட்டுவது
எதுவுமே பலிக்கவில்லை எனில் கொலை செய்துவிடுவது அதை மூடி மறைப்பது தப்பித் தவறி கைதானாலும் சிரித்துக் கொண்டே காவல் துறை வண்டியில் ஏறுவது சட்டங்களின் ஓட்டைகள் மூலம் தப்பிப்பது வெளியே வந்து மீண்டும் அதே குற்றத்தை இன்னும் பலமாக செய்வது ஆகிய எல்லாம் எப்படி யார்மூலம்? என்றெல்லாம் படித்துக் கொடுக்கின்றார்களே இவை நம் வளர் இளம் பருவத்தினர் மனதில் மட்டுமன்றி பெரியவர்கள் மனதிலும் வக்கிர உணர்வை உட்புகுத்துகின்றதே!
திருமணமாகாத பெண்கள், ஆண்கள், திருமணமான அனைத்தும் அறிந்த பெரியவர்கள் வரை வாய்ப்புகளுக்கு ஏற்ப பிற பளினத்தவரை எப்படி ஈர்ப்பது தன்வயப் படுத்துவது     என்பதனைக் காட்சி வடிவத்தில் வசனத்துடன் எதோ உண்மையான சம்பவங்களை நடந்ததுபோலக் காட்டி அனைவர் மனங்களிலும் பதிய வைக்கின்றனரெ?
இவற்றைக் கண்டித்தால் அந்தக் காவல் அதிகாரி வீட்டுப் பெண்கள் நீதிபதிவீட்டும் பெண்களை எப்படி மானபங்கப் படுத்தி பணிய வைப்பது என்று பாடம் நடத்துகின்றர்களே!
இளம் வயதினரைக் கவரும் வகையில் சின்னஞ் சிறு சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாணவிகள் முதல் ஆசிரியர்கள் வரை ஆன் பெண் செய்யும் காதல் களியாட்டங்கள் அருவேருப்புகள் சேட்டைகள் தழுவல்கள் வீட்டிற்குத் தெரியாமல் சந்திப்புகள் வீட்டை விட்டு ஓடும் காட்சிகள் ஆகியவற்றை ஒவ்வொரு படத்திலிருந்தும் தொகுத்து காட்டும் சிறப்பு நிகழ்ச்சி ஏதாவது ஒரு சேனலில் எப்போதுமே ஓடிக்கொண்டே இருக்கின்றதே!
அரசியல் வாதிகள் தாதாக்கள் குடிகாரர்கள் காவல்துறையினர் என ஒவ்வொரு வகியினரும் பெண்களை படுக்கைக்கு அழைப்பதையும் பணத்திற்கு பதிலாக பெண்கள்கைப் படுக்கைக்கு அனுப்பியும் காரியம் சாதிக்கும் காட்சிகள் இவற்றையெல்லாம் படித்துக் கொடுப்பதுதான் அதன் பெயர்தான் கலை என்றால் "மனிதக் கழிவை நடுவீட்டில் வைப்பதைப் போற்றும் கிறுக்கர்கள்". என்று இவர்களை அழைப்பதில் தவறில்லை
ஆனால் நிச்சயம் அவர்கள் கிறுக்கர்கள் இல்லை. யார் குடியும் எப்படிக் கேட்டால் என்ன நாம் கொடிகளைக் குவிக்கலாம் என்ற எண்ணமுள்ள புலையர்கள் நம் வீடு தேடி வரும், அந்தப் பாலியல் நெருடல்கள் விபரமரியாப் பாத்திமா வயதினர் உள்ளங்களில் மட்டுமல்ல பெரியவர்களின் மனங்களிலும் உந்துதல்கலாகின்றன. இவை பதிவாதல் கற்பனை செய்தல் பரீட்ச்சித்துப் பார்த்தல் பயன்படுத்துதல் என்ற உளவியல்படி பார்த்தால் உணர்ச்சித் தூண்டல்களின் ஊற்றுக் கண் புரியும்.
இப்படிப்பட்ட விஷயங்கள் அனைவர் மனங்களிலும் அப்படியே பதிவாகின்றன என்பதை தெருவோர மைனர்கள் திரைப்படத் தனமான அதே கொச்சை வார்த்தைகள் ஆபாசமான கேவலமான வார்த்தைகளால் வீதியில் போகும் பெண்களை குறிப்பாக பள்ளிக் கல்லூரி செல்லும் இளம் பெண்களை அழைப்பதிலிருந்து தெரியவில்லையா?
இப்படிப்பட்ட  சமயங்களில் இளம் பெண்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்கின்றார்கள். வீட்டில் வந்து சொன்னால் நீ ஏன் அவர்கள் சொல்வதை எல்லாம் காதில் வாங்குகின்றாய் நீ என்ன சொன்னாய் என்று குடைந்தெடுக்கின்றார்கள் என்பத்கர்க்காக குழந்தைகள் வீட்டில் வந்து சொல்வதும் இல்லை உள்ளுக்குள்ளேயே புளுங்கிச்சாகின்றார்கள் 
பலவீனமான பெண்களே அதே திரைப்பட வசனங்களைப் பயன்படுத்தி பதில் சொல்லி பலியாகின்றார்கள்
இளைஜர்களும்  இளைஞகளும் தனித் தனியே இருக்கும்போது கேலி கிண்டல் கொச்சையான வசனங்கள் பாடல்கள் அந்த அந்தச் சூழல்களுக்கு ஏற்றவாறு வருகின்றதே நமிடம் நம்பில்லைகள் பேசும் சில வார்த்தைகள் சினிமாத்தனம் தெரியவில்லைய?
பெருநகரக் கல்லூரிகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் பழக்கவழக்கங்கள் கிராமங்களுக்கும் இப்படித்தானே பரவின!

இத்தகைய வசனங்கள் காட்சிகள் பாடல்கள் 10-11 வயதுப் பிள்ளைகளின் மனங்களில் வார்த்தைகள் எழுத்துப் பிசகாமல் ஓசைகளோடு பதிவாகிறது என்றால் இப்போது சொல்லுங்கள் காம இச்சைகளைத் தூண்டும் காட்சிகளை படுக்கை அரைக் காட்சிகளைப் பார்ப்பதும் முக்கல் முனகல் வசனங்களைக் கேட்பதும் இவ்வகை ஆபாசப் பாடல்களை நடனங்களைக் கேட்பதும் பார்ப்பதும் உங்கள் பிள்ளைகளைப் பாதிக்குமா பாதிக்காதா?

இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிகம் அதிகம் என்று தேடும்போது மலிவானக் கட்டணத்தில் இணைய தளங்களில் படுக்கை அரைக் காட்சிகளாகவே தேவைக்கும் அதிகமாகவே தருகிறார்கள். எனவே அவர்களை வீதிக்கும் விடுதிக்கும் காமத்தோடு தள்ளுகிறது. அங்கே எல்லாம் எல்லாம் கிடைக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அரசுகளுக்கும் கமிசன்களுக்கும் மட்டும் தெரியாதே?

குடிப்பதற்கு வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டும் காசு செலவழிக்க வேண்டும் ஆனால் மலிவு விலையில் எல்லோருக்கும் வீட்டின் வரவேற்ப்பு அறையிலும் கைபேசியிலும் மலிவான கட்டணத்தில் நிரப்பிக்கொடுக்கும் தொழில்கள் இப்படி அறிவியலை ஆலகால விசமாக வளர் இளம் பருவத்தினரின் புத்திக் கூர்மையைப் பழுதாக்கி கவனச் சிதைவை ஏற்ப்படுத்தி திசைமாற்றிட இந்தியாவில் அவர்களுக்கு வானளாவிய சுதந்திரம்.

மக்கள் விரும்புவதை கொடுக்கின்றோம் என்று இந்தப் பாவிகள் பசப்புகின்றார்கள் கட்டுப்பாடுகளற்ற ஆபாச வன்முறைக் கட்சிகளை வைத்துப் படம் எடுங்கள் என்று இந்தியா முழுதும் உள்ள பஞ்சாயத்துக்களில் தீர்மானம் போட்டுக் கேட்டார்களா?

இப்படி பட்ட வக்கிரங்கள் பதிவுகளை தூண்டல்களை இளம் பருவத்தினர் பார்ப்பதை பெற்றோர்களால் கண்டிக்க முடிவதில்லை அவர்களும் அதே தேடல்களுக்கு பலியாகி, தம் குழந்தைகளுக்கு எதிரிலேயே இறங்கிவிடுகின்றார்கள். அல்லது இப்படியெல்லாம் பார்த்து கண்காணிக்க கண்டிக்க அவர்களுக்கு நேரமில்லை கண்டித்தால் நம் குழந்தைகள் ஏதாவது செஇதுகொல்வார்கலொ என்ற பயம்.

இந்த நிலையில் நம் வீட்டுப் பிள்ளைகளின் கைகள் தப்பித் தவறி வேற்று மொழி காட்சி பட்டங்களில் பட்டுவிட்டால் என்ன கதி?

இம்மாதிரியான காட்சிகள் அவர்களை மெல்லக் கொள்ளுகின்ற விஷம். இப்போது சுகமாகத் தெரியும் எதிர்கால ஆபத்து என்பதை உணரும் அம்மாக்கள் பிழைத்துக் கொள்கிறார்கள்.

பிள்ளையைப் பெற்று ஊட்டி வளர்த்து பொத்திப் பாதுகாத்து வளர்ப்போம். அவர்களின் மனங்களில் நம் பிள்ளைகளின் மனங்களில் ஆபாசத்தைக் கொட்டி சீரழிப்பார்கள் நாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காவல் இருக்க வேண்டும் பாதிக்கப் பட்ட சிறுமிகளும் அபலைகளும் தெருத் தெருவாக அலையவேண்டும் இந்தக் கொடுமை நமக்கு மிக  மிக அவசியமோ?
நமது இந்திய குடும்பங்களின் அமைதிக்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் உலை வைக்கும் இந்த ஊடக ஆபாச வன்முறைத் தீவிரவாதம் நீடித்தால் நம் வீட்டின் நாட்டின் கதி என்னவாகும்? குற்றங்கள் பல்கிப் பெருகும் சமூக அவலம் பெருக இந்தி சதி இனியும் தொடர நீடிக்க வேண்டுமா? அனுமதிக்கலாம? காட்சி ஊடகங்களின் ஆபாசம் வன்முறை இல்லாத இந்தியா முன்னேராதா ?
இந்த ஆபாசங்கள் இல்லாமல் திரைப்படங்கள் எடுக்க முடியாது என்றால் அவர்கள் உண்மையான கலை இலக்கியம்  அறியாதவர்கள் பெண்களை வைத்து பிழைப்பை நடத்துபவர்கள் கொடிகளை குவிக்க துடிக்கும் சமூக விரோதிகள் பொது அமைதிக்கும் விஷம் வைக்கும் தேச விரோதிகள் என்றே கூற வேண்டும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும்  மேலாக இவ்வகை சினிமாத்தனங்களை கட்டுப்பாடுகள் இல்லாமல் விட்டதால் சாதி மதம் இனம் சார்ந்து ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் வன்முறை வெறியாட்டம் திரில் அதீதக் கற்பனையோடு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் காட்ட ஆரம்பித்து விட்டார்களே 

இதுதான் இந்தியத் தெவையா?

இந்தியத் தாய்மார்களே சொல்லுங்கள் இவ்வளவு ஆபத்துக்களையும் இறக்குமதி செய்யும் திரைப்படங்கள் தொலைகாட்சி தயாரிப்புக்கள் இணையதளங்கள் கைபேசிகள் ஆகிய கருவிகளை தேவைக்கு மட்டும் பயன்படுத்தி முழுமையாக உபயோகிக்காமல் தள்ளி வைக்கலாமா?

இவை மூலம் புகுத்தப்படும் காமத்தீயை தள்ளி வைக்கலாமா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடைகள் சட்டமாக்கும் வரை நமக்கு நம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை நாம் தான் பாதுகாப்பு. 
நம்மில் சிலர் வசதிபடைத்தவர்களாக இருக்கலாம் பணம் பதவி எல்லாம் பெரிய அளவில் இருக்கலாம் நம் வீட்டுப் பெண்கள் அதாவது இந்தியப் பெண்கள் ஆண்கள் சிக்கி சீரழிந்தால் அந்தப் பணம் சொத்து வசதி பதவி வந்து காக்குமா அவர்கள் இழந்ததைப் பெற்றளித்துவிடுமா?

அம்மக்களே 
எரிவதைப் பிடுங்காமல்  கொதிப்பது நிற்காது என்ற அறிவார்ந்த முது மொழிக்கேற்ப  ஆபாச வன்முறைக் காட்சி ஊடகத் தடைச் சட்டம் தேவை என எழுங்கள்
நாம் திரைப்படங்களை தொலைக் காட்சிகளை வேண்டாம் என்று சொல்லவில்லை அதில் ஆபாசம் வன்முறை காமக் களியாட்டங்கள் மட்டும்தான் வேண்டாம் என்கிறோம்.
கீதை திருக்குர்ஆன் பைபிள் இவற்றில் நீங்கள் எதைக் கடைபிடிப்பவராக இருந்தாலும் அவற்றில் மேற்சொன்ன ஆபாசத்திற்கும் வன்முறைக்கும் இடமிருக்காது. ஆகவே அதன்படி செயல்பட வலியுறுத்தி நம் உணர்வுகளை வெளிப்படுத்திட ...............
1) ஆபாச வன்முறைக் காட்சி ஊடகத் தடைச் சட்டம் போட்டு எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் காப்பாற்றிட மத்திய மாநில மாநில அரசுகளுக்கு நல்ல புத்தியைக் கொடு என்று வீட்டில் கடவுளைக் கும்பிடும்போது வேண்டுங்கள் . நிச்சையம் ஒருநாள் இதற்க்கு விளைவும் விடையும் உண்டு.

2) வாரம் ஒருமுறை உங்கள் தெருவின் முச்சந்தியிலே ஒரு அனைத்து மதப் பிரார்த்தனைக் கூட்டம் 10 நிமிடம் போட்டு பின்வரும் தீர்மானம் போடலாம் 

ஆபாச ஊடகத் தடைச் சட்டம் போடுங்கள் நாங்கள் எங்கள் பிள்ளைகளுடன் ஆபாச வந்முரியில்லாத நிகழ்ச்சிகளை மட்டும் கான் வலி செய்யுங்கள் 

3) உங்கள் அமைப்பில் இந்தத் தீர்மானம் போடலாம்.
4) உங்கள் பிக்ல்லைகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் இதே தீர்மானம் நிறைவேற்றலாம் .

5) வசதிப்படும் இடங்களில் உங்கள் பிள்ளைகளுடன் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்லலாம் 

6) இப்படியெல்லாம் உங்களுடன் நீங்கள் பூரடாமல் உங்களை வெல்ல முடியாது. உங்களை வெல்லாமல் இந்தக் கொடுமைகளை வெல்லவோ இவற்றிலிருந்து தப்பவோ முடியாது. 

நாம் வலியுறுத்தும் ஆபாச வன்முறை ஊடகத் தடை சட்டம் போடப்படும் வரை போராடுவோம் அதுவரை தொலைக் காட்சி பெட்டிகளை மூடிவைப்போம் ஒன்னும் குடி மூழ்கிவிடாது
 குடும்ப உறவுகள் குடும்ப அமைதி நிலைக்கும்

பிறரைத் துன்புறுத்தும் அரை குறை அடிகளை உங்கள் பிள்ளைகளுக்கு அணியாதீர்கள் அனுமதிக்காதீர்கள். ஆடையில் கட்டுப்பாடா என்று சிலர் கூச்சலிடலாம் அவர்கள் இக்லம் பருவத்தினரைத் தூண்டிவிடுவர்களே ஒழிய நேரில் வந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டார்கள் 

அம்மாக்களே எச்சரிக்கை!எங்கள்  கண்ணகித் தாயே டெல்லி முதல் குமரி வரை தினசரி நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தூண்டும் முக்கால் நிர்வாண ஆபாசம் இரத்தக் கலரி வன்முறை ஊடகக் காட்சிகளை சுட்டெரிக்க தீயே மீண்டும் வா


இது ஒரு  இந்தியன் குரல் இலவச வெளியீடு  உங்களுக்கு பிடித்திருந்தால் அதை பலருக்கு அறியச் செய்ய விரும்பினால் இந்த புத்தகம் 38 பக்கமும் பிரிண்ட் செய்து உங்கள் அமைப்பின் பெயரில் அல்லது உங்கள் நிறுவன் விளம்பரத்துடன் வெளியிட இந்தியன் குரல் அனுமதி அளிக்கின்றது இதே கருத்தை அப்படியே அல்லது திருத்தி வெளியிடலாம் இதன் பிரிண்ட் காப்பி வேண்டுவோர் தொடர்புகொள்ளவும்  உங்கள் பகுதியில் விநியோகம் செய்ய தொடர்புகொள்ள 9443489976 . 9444305581 2 comments:

viyasan said...

மன்னிக்கவும். இந்தப் பதிவின் தலைப்பில் எழுத்துப்பிழையிருப்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள் போல் தெரிகிறது. “அரைக்கூவல்” என்பதற்குப் பதிலாக அறைகூவல் என்றல்லவா இருக்க வேண்டும். அல்லது தமிழ் நாட்டுத் தமிழில் ‘அரைக்கூவல்’ தானா?

Bala subramanian said...

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு viyasan அவர்களே!

எழுத்துப்பிழை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி திருத்திவிட்டேன். கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்தை வெளியிட்டால் மகிழ்வேன்.