ஆதரவாளர்கள்

Thursday, June 6, 2013

பிள்ளைகளைக் கடத்தும் தனியார் பள்ளிகள் : நடுங்கவைக்கும் நாமக்கல்சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி பற்றி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டனவோ இல்லையோ ஆனால் இந்தியன் குரல் வலைப் பதிவில் சாதனை படைத்த அரசுப் பள்ளிகள் எனும் தலைப்பில் அப்பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும்  பாராட்டி செய்தி வெளியிட்டோம் என்பதை அறிவீர்கள்!

காரணம் இவ்விரு பள்ளிகளும் மாநில அளவில் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்ததே ஆகும். மாணவர்களும் அதன் ஆசிரியர்களும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருந்தால் இது சாத்தியம் என்று சிந்திக்கும் போது நமக்கு புரியும்

http://www.vikatan.com/jv/2013/06/ndmxzj/images/ind_33233.jpg
சாதனை மாணவிகள் ஆசிரியருடன் நன்றி jv

தனியார் பள்ளிகள் போன்ற பிரமாண்டம் இல்லை ஆளுயர கேட் போட்டு தேர்வு நேரத்தில் வரும் பறக்கும் படைக்கு பயமுறுத்தல் இல்லை. தேர்வுக்கு காப்பி அடிக்க உதவி செய்வதில்லை. ஒரு வகுப்பு பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிக்க வைப்பதும் இல்லை பளபளக்கும் தரை இல்லை இவைதான் அரசுப் பள்ளிகள் அடையாளம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு படிப்பை ( பாடப் புத்தகம் ) தவிர அவர்கள் விரும்பும் விளையாட்டுகளும் விளையாடலாம் ஆசிரியர் கையில் பிரம்பு இல்லை ஆகவே பிரம்பு பயம் இல்லை மாணவர்களும் ஆசிரியர்களும் தோழர்களைப் போன்று பேச முடியும் எங்கும் யாரிடமும் தைரியமாக பேச கேள்விகேட்க முடியும் இதுவே அரசுப் பள்ளி மாணவர்களின் அடையாளம்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது உழைப்பால் மாணவர்களுக்கு கல்வி தருகின்றார்கள் என்பது தான் உண்மை அங்கு பெரும் மாணவர்கள் ஏழைகளாகவும் கூலிகளின் பிள்ளைகளாகவும் இருப்பார் அவர்களுக்கு நல்ல உணவு உடை என்று இருக்காது இருப்பினும் ஆசிரியர்களின் முயற்ச்சியால் அம்மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிவருவது போற்றுதலுக்கு உரியது.

ஒவ்வொரு தனியார் பள்ளி வெற்றிக்கு பின்னாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் 

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்ச்சியால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனியார் பள்ளிகள் 11 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள செய்யும் தந்திரங்கள்

1 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற உங்கள் பிள்ளைகள் 12 ஆம் வகுப்பிலும் அதிக மதிப்பெண் பெற எங்கள் பள்ளிதான் ஏற்றது.
2 கட்டணம் இலவசம்
3 அனைத்து வசதிகளும் இலவசம்
4 உங்களது பிள்ளையைப் பார்க்க நாங்களே கார் வசதி செய்து தருகின்றோம் அப்பா பட்ட கடனை அடைக்க பணம் தருவது
4 அம்மாணவர்கள் கேட்கும் தொகை கொடுத்து வாங்கிக் கொள்வது
5 மாணவர்களைக் கடத்துவது
6 490 மதிப்பென்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம்

பத்து வருடமாக மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து கல்வி கொடுத்து பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற உதவிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 12 ஆம் வகுப்பில் அம்மாணவன் அதிக மதிப்பெண் பெற உதவிசெய்ய முடியாதா முடியும்.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கொடுத்தார்கள் அப்பொழுது எந்த தனியார் பள்ளியும் அவர்களை கவனிக்க வில்லை  பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதும் எங்கள் பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேருங்கள் என்று தனியார் பள்ளிகள் வரிசையில் நிர்ப்பது அந்தப் பிள்ளைகள் கல்விபெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலை அடியவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமா? இல்லை நம் பள்ளி இந்தப் பிள்ளை மூலம் பெயர் வாங்க வேண்டும் என்பதக்காகத் தான் என்பது எத்துனை பெற்றோருக்கு தெரியும்.

 சேலம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பால் மாணவர்கள் 497, 493, 492, என்று மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை புரிந்தார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 15 மாணவர்கள் கணிதத்தில் 15 மாணவர்கள் அறிவியியலில் 15 மாணவர்கள் சமூகவியலில் 6 மாணவர்கள் நூறு சதம் மதிப்பெண் பெற்றுள்ளார்கள் இது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சாதனை அல்லவா.

அரசுப் பள்ளியாகினும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு போதனையால் அவர்களது மாணவர்களில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் 87 மாணவர்களும் 400 மதிப்பென்களுக்கு மேல் 202 மாணவர்களும் பெற்று சாதனை புரிந்தது அந்த ஆசிரியர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி அல்லவா அவர்களை போற்ற வேண்டாமா.

தமிழகம் முழுதும் உள்ள பெரும்பான்மை அரசுப் பள்ளிகள் 100 சதத் தேர்ச்சி எனும்போது தனியார் பள்ளிகளில் படித்தால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்பது பொய்த்துப் போனதே.

அரசு ஆசிரியர்களின் உழைப்பால் அதிக மதிப்பெண் பெற்றதும் மாணவர்களை தங்களது பள்ளியில் சேர்க்க தனியார் பள்ளிகள் போட்டி போட்டு இலவச அறிவிப்புகளைக் கொட்டி மாணவர்களைக் கவரும், இழுக்கும் (விபச்சாரிகளைப் போன்று)  முயற்ச்சியில் இறங்கி விடுகின்றதே.

 12 ஆம் வகுப்பில் அம்மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு நல்ல பெயர் கிடைக்கும் ஆதலால் அடுத்த மாணவர் சேர்க்கையில் பெரிய அளவில் பணம் பெற முடியும் என்ற வியாபாரம் தான் காரணமன்றி வேறு அல்லவே. வியாபாரம் செய்ய இவர்களுக்கு வேறு ஒன்றுமே இல்லையா கல்வியை வைத்துதான்  வியாபாரம் செய்யவேண்டுமா?

வியாபர நோக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் 11 ஆம் வகுப்பில் ஒரு மாணவனை சேர்க்க லட்சக் கணக்கில் நன்கொடை பெறுகின்றார்கள் அதைக் கேட்க யாரும் முன் வருவதில்லை 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் மட்டும் அதிக மாணவர்களை சேர்த்து காசு பார்க்கும் கல்வி நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் வருமா? அரசு தவறும் பட்சத்தில்
பொதுமக்கள் விழிப்புடன் செயல் படவேண்டும்

அவ்வளவு ஏங்க தேர்வு நடக்கும் சமயத்தில் கேட்டைப் பூட்டி வைக்கக் கூடாது பறக்கும் படையினர் வந்து செல்ல எந்த சிரமமும் இருக்கக் கூடாத வகையில் பள்ளியின் செயல்பாடு இருக்க வேண்டும் எத்தனை தனியார்  பள்ளிகள் இதை செய்கின்றது. இதைத் தடுக்க வேண்டாமா?

மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுக்க கல்வி அளித்த அரசு ஆசிரியரால் 12 ஆம் வகுப்பிலும் அம்மாணவன் அதிக மதிப்பெண் பெற உழைக்க முடியும் என்று பெற்றோர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

 இது வரை சொல்லித் தந்த ஆசிரியரை நம்பாமல் மாணவரை தனியார் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அந்த ஆசிரியரின் உழைப்பை சந்தேகிக்கின்றீர்கள் என்பதை அந்த ஆசிரியர் ஏற்றுக் கொள்வாரா.
 அந்த ஆசிரியரின் மனம் என்ன பாடுபடும் என்று அறிவீரா சிந்தியுங்கள் பெற்றோரே.

 பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் +2 வில் அடுத்த பள்ளிக்கு சென்று சேரும்போது கற்றுத் தந்த ஆசிரியருக்கு அந்த மாணவரும் பெற்றோரும் தந்த வெகுமதி என்ன என்ற கேள்விதான் இந்தப் பதிவை எழுத தூண்டியது. அந்த ஆசிரியர்களின் கனவு மாணவர் அடுத்த வகுப்பில் அவர்களுடன் இல்லை எனும்போது.................

 அவர்கள் மனம் என்ன சொல்லும் அந்த மாணவனை எவ்வளவு வாழ்த்தி அந்த ஆசிரியர் அனுப்பிவைத்தாலும் அவருடைய ஆழ மனது யாருக்கும் தெரியாமலே போவது நியாயமா? 

நானும் எனது நண்பர்களும் இனி எங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது என்றும் தனியார் பள்ளியில் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத் தொகையை அவ்வரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு செலவிடுவது என்றும் முடிவு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நண்பர்களே உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வலைபூவிலும் வெளியிடுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் என்று நட்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பெற்றோர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டியது...


நன்றி...

Bala subramanian said...

தொடர்ந்த வருகைக்கும் தொடரும் கருத்துக்கும் நன்றி திரு தனபாலன் அவர்களே

நானும் எனது நண்பர்களும் இனி எங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது என்றும் தனியார் பள்ளியில் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத் தொகையை அவ்வரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு செலவிடுவது என்றும் முடிவு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நண்பர்களே உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வலைபூவிலும் வெளியிடுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் என்று நட்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

ராஜி said...

எங்க உறவுக்கார குழந்தை அரசு மகளிர் பள்ளியில் படித்து பத்தாவதுல 482 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதலாவது வந்தாள். அவளை, தர்மபுரி அருகே மொறப்பூர் என்ற ஊரிலிருந்து ஒரு பள்ளி, அவள் பெயரில் 2 லட்சத்தை டெபாசிட் பண்ணி 11, 12 படிக்க வச்சாங்க. இதை அவங்கம்மா பெருமையா சொல்லுவாங்க. ஆனா, துரதிர்ஷ்டவசமா அந்த பொண்ணு காதல்ல சிக்கி 1000 மதிப்பெண்களை கூட தொடாத நிலையில் அந்த 2 லட்சத்துக்கு பதிலா 4 குடுக்கனும்ம்னு கழுத்தை நெறிச்சு வீட்டை விட்டு கட்டி அவதி படுறங்க டெபாசிட் பண்ணும்ப்போது இப்படி ஒரு விஷயம் இருக்குறது தெரியாமயே அந்த பெற்றோர் கையெழுத்து போட்டு மாட்டிக்கிட்டாங்க. அதாவது, அந்த பொண்ணு 1150க்கு மேல எடுத்தால் அந்த பொண்ணுக்கு அந்த 2 லட்சம். ஒருவேளாஇ எடுக்காவிட்டால் இரு மடங்கா தரனும்ன்னு ஒப்பந்தம் போட்டிருக்காங்க போல!!

Bala subramanian said...

உங்கள் வருகைக்கும் முதன் முதலாய் கருத்திற்கும் நன்றி ராஜி

உங்களது கருத்து உண்மையாக இருக்கலாம் வியாபாரிகள் வியாபாரம் செய்யும்போது பாதிக்கப் படுவது சகஜம் தான். பெரும்பான்மை மக்கள் நலன் கருதி அது சம்பந்தமான ஆதாரங்களை திரட்டித் தர முடியும் எனில் அனுப்பி வைக்கவும். நலன் கருதி பாதிப்பு வரும் என்று பயம் இருந்தால் தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்க 9444305581 அலைபேசியில் தினமும் காலை 10 - 12 தொடர்பு கொள்ளவும் அல்லது Email ; vitrustu@yahoo.in , vitrustu@gmail.com

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு ஆசிரியர் என்ற முறையில் தங்களின் கருத்தை முழுமையாக ஏற்கின்றேன் அய்யா. எனது முகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்

Avargal Unmaigal said...

இப்போது உள்ள பெற்றோர்கள் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. அவர்களின் கண்ணை இது போல உள்ள பதிவுகள்தான் திறக்க வேண்டும். ஆனால் கண்முடிக் கிடக்கும் பெற்றோர்களை திறக்க வைப்பது என்பது அவ்வளவு ஏளிதல்ல இருந்தாலும் நாம் சோர்ந்துவிடாமல் முயற்சிக் வேண்டும்

Bala subramanian said...

தங்களது தொடர்ந்த வருகைக்கும் பகிர்ந்தமைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா உங்களது பகிர்வு சிலரது உள்ளத்தையாவது எட்டும் உண்மையை உணரட்டும் பெற்றோர்கள். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் +2 வில் அடுத்த பள்ளிக்கு சென்று சேரும்போது கற்றுத் தந்த ஆசிரியருக்கு அந்த மாணவரும் பெற்றோரும் தந்த வெகுமதி என்ன என்ற கேள்விதான் இந்தப் பதிவை எழுத தூண்டியது. அந்த ஆசிரியர்களின் கனவு மாணவர் அடுத்த வகுப்பில் அவர்களுடன் இல்லை எனும்போது ..............

Balasubramanian V said...

ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய தகவல்.மிக்க நன்றி.