மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை சிபிஎஸ்சி வழங்குகிறது. தகுதியுள்ள மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அந்த குடும்பத்தில் வேறு குழந்தைகள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். பள்ளிப் படிப்பை தொடர்வதற்கான உதவித்தொகையினை மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வழங்குகிறது.
சிபிஎஸ்இ., பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதினோராம் வகுப்பில் சேர இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்த மாணவிகளுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படும். மேலும் விரிவான தகவல்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
பெரும்பான்மை மாணவர்கள் பயன்பெற நீங்களும் பகிரிந்தால் நலமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக