ஆதரவாளர்கள்

செவ்வாய், 11 ஜூன், 2013

மும்பை சிவப்பு விளக்கு பகுதி பெண் ஸ்வேதா!!! கைகொடுக்கும் அமேரிக்கா உதவாத இந்தியா

  அமேரிக்கா முன்னேரியதர்க்கும் இந்தியா வளர்ச்சி அடையாமல் பின்தங்கி இருப்பதற்கும் காரணம்.
 நல்லது செய்யும் நேர்மையாய் இருக்கும் உண்மையை பேசும் உதவும் மனிதர்களை இந்திய மக்கள் மதிப்பதில்லை!. அமேரிக்க அதிபராக இருந்தாலும் பொய் பேசினால், தவறு செய்தால், உதவிசெய்ய மறுத்தால் அமெரிக்கர்கள் மதிப்பதில்லை!.
அவமானப் படவேண்டிய இந்தியர்கள் ஆனந்தத்தில்.

மக்களின் மனநிலை என்னவோ அப்படித் தான் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்யமுடியும் என்பது எவ்வளவு உண்மை. உதவும் குணம் இருந்தால் உதவி செய்யவேண்டும் என்ற குணம் இருந்தால் யாராலும் உதவிட முடியும் . உதவக் கூடாது என்ற நிலை எடுத்தால் அதற்காக காரணங்கள் பல உண்டு ஒவ்வொருவருக்கும். உதவி செய்யாமல் இருப்பதற்கு காரணம் பல தேடும் இந்திய மக்கள் இருப்பதாலேயே இந்திய அரசும் உதவ முன்வராத நிலையில் அமெரிக்க உதவியால்  உயர்கல்விக்கு வாய்ப்பு பெற்ற இந்திய மாணவி.  இப்படிப்பட்ட மக்களுடன் இந்த தேசத்தில் வாழ்கின்றோமே! 

உண்மையான ஆராய்ச்சி செய்து சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களை, இளம் சாதனையாளர்களை, இளம் விஞ்ஞானிகளை, புதிய கண்டுபிடிப்பாளர்களை, இளம் விவசாய துறை ஆராய்ச்சியாளர்களை இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சியாளர்களை கண்டறிந்து ஊக்கம் செய்ய பாராட்ட வாய்ப்பளிக்க உதவி செய்ய இந்தியர்களும் நினைக்கவில்லை இந்திய அரசும் உதவுவதில்லை.  இதோ அந்த வரிசையில் ஒரு சாதனைப் பெண் இவளுக்கும் உதவிட யாருக்கும் வக்கில்லை இந்திய நாட்டில். என்று மறுமொ இந்த இழிநிலை. உதவிட வாய்ப்பிருந்தும் உரிய முறையில் அரசின் கவனத்திற்கு எடுத்தி செல்லாமல் காசுக்காக மட்டும் நடத்தப்படும் உதவிடாத பத்திரிகைகள். இப்படி செய்திகளை போட பத்திரிக்கைகளும் வெட்கப்பட்டதே இல்லை.

அமெரிக்காவில் உயர்கல்விக்காக தேர்வாகியுள்ள மும்பை சிவப்பு விளக்கு பகுதி பெண் ஸ்வேதா

மும்பையை சேர்ந்த செக்ஸ் தொழிலாளியின் மகள், அமெரிக்காவில் உயர் கல்விக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான, காமாட்டிபுராவைச் சேர்ந்தவர், ஸ்வேதா, 18. இவரின் தாத்தா, பெண்களை வைத்து செக்ஸ் தொழில் நடத்தி வந்தார். இதில் விரும்பமின்றி, ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று, தலைமறைவாக வாழ்ந்து வந்தார். எனினும், சூழ்நிலையின் காரணமாக, அவரும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார்.

ஸ்வேதாவின் தாய், குழந்தையை பெற்றெடுத்து, நல்ல முறையில் வளர்த்து வந்தார். அதன் பின், பாலியல் தொழிலையும் கைவிட்டார். இருப்பினும், பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் காமாட்டிபுராவிலேயே வசித்ததால், விவரம் தெரியாத வயதில், ஸ்வேதாவும் பல ஆண்களால், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதனிடையே, அப்பகுதி அரசுப் பள்ளியில் படித்த ஸ்வேதா, கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று, ஓராண்டு காலம் படிப்பை தொடராமல், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கும், நேபாள நாட்டின் மலை வாழ் மக்களிடமும் சென்று, அங்குள்ள சிறுமிகளிடம், பாலியல் துன்புறுத்தல் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இவரது சிறந்த பணிகளை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள, போர்டு கல்லூரி, கல்வி உதவித் தொகையுடன், இலவசமாக மேற்படிப்பை தொடரவும், ஸ்வேதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் படி, ஆண்டுக்கு, 28 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைப்பதுடன், 10 லட்சம் ரூபாய் வரையிலான, மருத்துவக் காப்பீட்டையும் இலவசமாக வழங்கியுள்ளது.

இது தவிர, அமெரிக்காவிலிருந்து வெளியாகும், "நியூஸ் வீக்' பத்திரிகையில், "25 உமன்ஸ் அன்டர் 25 டு வாட்ச்' என்ற தலைப்பில், உலகில் கவனிக்கப்பட வேண்டிய, 25 வயதிற்கு உள்பட்ட, 25 பெண்கள் என்ற பட்டியலிலும், ஸ்வேதா இடம் பெற்றுள்ளார். இதில், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, பள்ளி சிறுமி, மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.சிவப்பு விளக்கு பகுதியான, மும்பையின் காமாட்டிபுராவிலிருந்து, மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் முதல் பெண், என்ற பெருமையையும் ஸ்வேதா பெற்றுள்ளார்.

தற்போது அமெரிக்கா செல்லும் ஸ்வேதாவுக்கு, ஓராண்டுக்கு முன்பே, சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுதல், குறித்த உலகளாவிய கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. பாஸ்போர்ட் இல்லாததால், அப்போது அமெரிக்க செல்ல முடியாத ஸ்வேதா, சைகாலஜியில் பட்டம் பெற்று, பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடப் போவதாக கூறியுள்ளார்.

நன்றி:தின மலர்..

நன்றி:தின மலர்.

6 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஸ்வேதா பாராட்டப்பட வேண்டியவர். ஸ்வேதாவின் பணி சிறக்க, எதிர்காலம் ஒளிமயமானதாய் அமைய வாழ்த்துவோம்

VOICE OF INDIAN சொன்னது…

பாராட்டுவோம் ஐயா கரந்தை ஜெயக்குமாய் அவர்களே அதேசமயம் எதிவரும் நாளில் நம்பகுதியில் உள்ள இதுபோன்ற சாதனை மாணவர்களுக்கு நாமும் உதவிட சிந்திப்போம்

ராஜி சொன்னது…

ஸ்வேதா எல்லா வளமும் பெற்று வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கிறேன்.., இறாவனிடமும் வேண்டிக்கொள்கிறேன்

VOICE OF INDIAN சொன்னது…

தங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகின்றோம் தங்களது தொடர் வருகைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி ராஜி அவர்களே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இவ்வார குங்குமம் இதழில் கல்விக் கடன் பெறுவது தொடர்பாக, தங்களின் செய்திகளைப் படித்தேன், மிகவும் பயனுள்ள செய்தி அய்யா. நன்றி வாழ்த்துக்கள்

VOICE OF INDIAN சொன்னது…

தகவலுக்கு நன்றி ஐயா உங்களுக்கு தாழ்மையான எனது ஒரு கோரிக்கை குங்குமம் பத்திரிக்கையில் கல்விக் கடன் பகுதியை மட்டும் ஸ்கேன் செய்து உங்களது பிலாகிலோ அல்லது எனக்கோ அனுப்பினால் நலம் அதை இன்னும் பலர் படித்து பயன்பெற உதவலாமே அந்தப் பத்திரிகை எனக்கு கிடைக்கவில்லை நான் கேட்கும் முன் விற்று விட்டதால் நான் பார்க்க இயலவில்லை