ஆதரவாளர்கள்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

மரியாதைக்குரிய பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்,

மரியாதைக்குரிய பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்,

        உங்களுடன் எங்கள் பிள்ளைகள் நலனுக்காக சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்

        தினமும் நாளேடுகளைப் புரட்டும் நீங்கள் அறியாததையோ படிக்காத ஒன்றையோ பார்க்காத ஒன்றினையோ உங்களுடன் பேசவில்லை நீங்கள் அன்றாடம் அறிந்த செய்திகள் தான்.

அதாவது ,


        "ஆசிரியரை 8 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் சதக் சதக் என குத்திக் கொலை செய்தான்", "கண்டித்த கல்லூரி பேராசிரியர் கொலை கல்லூரி மாணவர்கள் கைது"."மாணவியைக் கற்பழிப்பு செய்த ஆசிரியர் கைது". "மனைவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது". "மாணவியை கற்பழித்த பள்ளி தாளாளர் கைது". "மாணவருடன் பள்ளி ஆசிரியர் ஓட்டம்".
        "மாணவரை கத்தியால் குத்தி மாணவர் கொலை காப்பாளருடன் பள்ளித்தாளார் கைது". "காதலியுடன் உல்லாசமாக இருக்க வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது". "கூலிப்படையில் பள்ளி மாணவர்கள்". இப்படி தினமும் ஏதாவது ஒருவகையில் செய்தி வருகின்றது. பார்க்கின்றோம் படிக்கின்றோம்  பிறகு அதை மறந்துவிடுகின்றோம். உண்மைதானே!.. 
        இப்படி ஒரு குற்றம் நடந்த இடம் நமது பள்ளியாக குற்றம் செய்தவர்கள் - குற்றத்தால் பாதிக்கப்படுவதும்  நமது மாணவர்களாக, ஆசிரியர்களாக, தலைமை ஆசிரியராக, பள்ளித் தாளாளராக, இருந்துவிட்டால்....  நமது மனம் எப்படி இருக்கும்?.  கொஞ்சம் யோசனையில் தான் இந்த கடிதம் .
                குற்றங்களிலும் குற்றத்தால் பாதிக்கப்படுவதும் நாளை நமது பிள்ளைகளாக இருந்துவிடக் கூடாது என்பதால் மேற்படி குற்றங்களின் காரணிகளை ஆய்வு செய்தோம்.மேற்படி பாலியல் குற்றங்களும் வன்முறைகளும் கொலை கொள்ளைகளும் நடக்க காரணமானது எது என்று தேடினோம், கண்டு கொண்டோம். ஆம்,  "மன மாசு"(MIND POLLUTION) எனும் கொடிய அரக்கன் தான் சிறியவர், பெரியவர், மாணவர், ஆசிரியர், என்று பாகுபாடு இல்லாமல், அனைவரையும் கண நொடிப்பொழுதில், மனதை பாழ் படுத்தி, குற்றசெயலில் ஈடுபட வைக்கின்றான். மன மாசுவால் ஒருவர் செய்யும் குற்றம் சாதாரணமாக இருக்கும். அறியாத மாணவர்கள், பிள்ளைகள், ஆசிரியர்கள், பள்ளித் தாளாளர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் பாதிப்பைக் கொடுத்துவிடும் சூழல் நிரம்பிக் கிடக்கின்றன.
                யார் அந்த மன மாசு எனும் அரக்கன் எப்படி நம்முள் புகுந்து நமக்கு எதிராக செயல்படுகிறான் நம்மையும் சிக்கலில் மாட்டி வைக்கின்றான்?
        காடசி ஊடகங்களின் ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்ச்சிகளால் மனம் மாசடைகின்றது என்பதை அறியாத , காட்சி ஊடகங்களின் ஒளிபரப்புகளின் தாக்கத்தை அறியாத பெற்றோர் அதை பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்கும் பழக்கத்தாலும் நம் பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் தாத்தாக்களுக்கும் கூட "மன மாசு" எனும் அரக்கனின் கரம் அணைக்கிறது.
                ஆபாச நடனங்கள் முக்கல் முனகல் பாலியல் தூண்டல் ஆபாசக் காடசிகளையும் இரத்தம் கொப்பளிக்கும் வன்முறைக் காட்சிகளையும்  வீட்டின் வரவேற்பறையில் 24 மணி நேரமும் கொண்டுவந்து கொட்டி பிஞ்சு மனங்களில் மட்டுமல்ல 60-70 வயதுவரை உள்ள முதியவர்களின் மனங்களில் நஞ்சைக் கொட்டும் திரைப்படங்கள் மற்றும் காடசி ஊடகங்களின் கட்டுப்பாடில்லா ஒளிபரப்பை கேட்க நாதியில்லை.
ஆகவே நமது பிள்ளைகள், நமது பள்ளி ஆசிரியர்கள், நமது பள்ளி தலைமை ஆசிரியர்கள், நமது பள்ளி முதல்வர்கள், நமது பள்ளியின் தாளாளர் போன்றோர் மேற்படி குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கவும், மேற்படி குற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகாமல் காக்கும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

        இப்பொருள் குறித்து மேலும் விளக்கமாக பயிற்சி அழிப்பது நண்மையாக இருக்கும் .தாங்கள் விரும்பினால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் ஒரு மணிநேர பயிற்சியில் அனைத்து சந்தேகங்களுக்கும்  விடையளிக்க இருக்கின்றோம்.
மன மாசுவின்  பிடியில் இருந்து பள்ளிகளைக் காப்போம்.
                                                நன்றி!.
மகிழ்வுடன்
சமுதாய மேம்பாட்டிற்காக 
CAOV Movement 


கருத்துகள் இல்லை: