ஆதரவாளர்கள்

சனி, 6 ஜூலை, 2013

காலால் இட்ட வேலையை தலையால் செய்வோம் - தேர்தல் வாக்குறுதி, அரசியல் கட்சிகளே!

ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் முடிந்த பிறகும் ஒவ்வொரு கட்சியும் அவர்கள் வெளிநாட்டின் கைக் கூலிகள் அவர்களுக்கு வெளிநாட்டு உள்நாட்டு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, தீவிரவாதிகளை வைத்து மிரட்டுகின்றார்கள், தீவிரவாதிகளை ஏவி கொலை செய்துவிட்டார்கள் என்றும் தீவிரவாதிகளுக்கு நெருக்கமானவர்கள் அந்தக் கட்சிக்கு பணம் தருகின்றார்கள் என்று அரசியல் கட்சிகளே நீங்களே மற்றவரைக் குற்றம் சொல்லுகின்றீர்களே!

 நீங்கள் சொல்லும் தகவல்களை கேட்டு பொது மக்களாகிய நாங்கள் கவலை கொள்கின்றோம். ஓட்டுப் போட மக்களுக்கு பணம் செலவு செய்கின்றோம் அதனால் நாங்கள் சம்பாதிக்கின்றோம் என்று நீங்கள் கூறுவதும் மக்களாகிய எங்களுக்கு பயமாக உள்ளது ஆகவே உங்கள் கட்சிக்கு பணம் எப்படி வருகின்றது என்று தெரிந்து கொள்வது அவசியம் ஆகின்றது . தவறினால் அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது போன்று  உங்கள் சுய லாபத்திற்காக எங்கள் தேசத்தையும், எங்களையும், எங்கள் உடமைகளையும் தனியார் மாயம் என்று சொல்லி  ஏலம் போட்டு விற்று விடுவீர்களே!

மக்களுக்காக சேவை செய்யவே கட்சி நடத்துகின்றோம். மக்கள் சார்பாக ஆட்சி நடத்தி வருகின்றோம். ஜனநாயக ஆட்சி நடத்தி மக்களுக்கு சேவைசெய்யும் கட்சி என்று சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியை அப்படித்தான் நடத்துகின்றீர்களா உங்களது கட்சி வேட்பாளர் தேர்வு நியாயமாக நேர்மையாக நடத்தப் படுகின்றதா அதற்கு மேலாக உங்கள் கட்சி அல்லாத யாரேனும் பணம் கொடுத்து வேட்பாளர் தேர்வில் வெற்றி பெருகின்றாரா என்ற விபரம் தானே கேட்கின்றோம் தரவே இல்லையே
 
நீங்கள் அறிவித்த போராட்டங்களில் கலந்து சொத்துக்களை இழந்த, உடல் உறுப்புக்களை இழந்த , கட்சிக்காக உயிர்நீத்த உங்கள் கட்சி உறுப்பினர்கள் அவர்கள்தம் குடும்பம் அவர்களது பிள்ளைகள் ஆகிய உங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு உங்கள் கட்சி என்ன செய்துள்ளது?. அவர்களின் இன்றைய குடும்ப நிலை என்ன? அவர்களால் கோடிகளை சம்பாதிக்கும் அவர்களது தியாகத்தைக் காட்டி தேர்தலில் வென்ற கட்சி கட்சிக்காக உயிரிழந்தவர்களது கணக்காவது ப்வைத்திருக்கின்றதா?
 
உங்களது கிளைகட்சிக்கும், மாவட்ட தலைநகரம், மாநில தலைநகரம் என எல்லா இடங்களிலும் கட்சி அலுவலகம் இலவச இடம் கட்டிடம் வரிவிலக்கு மின் கட்டண சலுகை, தேர்தல் நேரங்களில் தொலைகாட்சி மற்றும் பாது காப்பு இலவச தொலைபேசி இணையதள வசதி உள்ளிட்ட அரசின் பல சலுகைகள்நீங்கள் பெறுகின்றீர்கள். கட்சி சொத்துக்கள் யாவும் பொது சொத்து அல்லவா ஆகவேதான் நீங்களும் பொது அதிகார அமைப்பாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் கேட்டால் தரவேண்டிய கடமையும் பொறுப்பும் அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் மத்திய தகவல் ஆணையம் 03.06.13 அன்று உத்தரவிட்டது. 
தேர்தலில் என்ன வாக்குறுதி அளித்துள்ளீர்கள் அதை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தரவில்லை ஆனால் ஒப்படைக்கப்பட்டது.

2 ஜி அலைக் கற்றை , காமல் வெல்த் , கார்கில் அடுக்குமாடி, நிலக்கரி சுரங்கம் ஊழல் போன்று அனைத்து ஊழலும் செய்வோம் அளவுக்கு அதிகமான வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்து வைப்போம் அடுத்து வரும் தேர்தலில் மக்களுக்கு இலவசம் கொடுக்க வேண்ண்டும் என்பதற்காக மக்களே உங்களுக்காக கொள்ளையடிப்போம் ஊழல் செய்வோம் என்று வாக்குறுதி தரவில்லை.

விலைவாசிகளை உயர்த்துவோம் மின் கட்டணங்களை உயர்த்துவோம் பேருந்து மற்றும் ரயில் கட்டணங்களை உயர்த்துவோம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளிக்கவில்லை.
 ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக நடந்த காரணத்தால் என்ன வாக்குறுதி அளித்தீர்கள் அதில் எத்தனை நிறைவேற்றினீர்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்ன அதற்காக என்ன தீர்மானங்கள் உங்கள் கட்சியில் நிறைவேற்றியுள்ளீர்கள் அத தீர்மானங்களின் நகளினைக் கொடுங்கள் என்றுதான் கேட்டார்கள்.
 உங்களது கட்சி மினிட்ஸ் புத்தகத்தில் அந்த தீர்மானங்கள் உள்ள பக்கங்களின் நகல் கொடுங்கள் என்றுதான் கேட்டார்கள். கொடுக்கவில்லையே  மூன்று ஆண்டுகள் போராடியும் தர மறுத்ததால் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட 13 முன்னாள் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி உத்தரவு வழங்கியுள்ளது. அப்படியும் தரவில்லையே


மக்கள் ஓட்டுப் போட ஓட்டுக்கு பணம் கேட்கின்றார்கள் என்று மக்கள் மேல் பலி போடுகின்றீர்களே. உங்கள் தவறுக்கு மக்களையும் கூட்டாளியாக்க முயன்று அதில் வெற்றி போன்ற மாயத்தை செய்யும் தந்திரத்தால் எமாற்றுகின்றீர்களே. அவர்கள் கேட்டார்களா ஓட்டுக்கு பணம் கொடுங்கள் என்று அவர்கள் கேட்டார்களா இலவசம் கொடுங்கள் என்று நீங்கள் கொடுத்தால் வாங்கத்தானே செய்வார்கள் அவர்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு அந்தப் பணம் எப்படி வந்தது என்று தெரியுமா அல்லது ஏன் கொடுக்கின்றீர்கள் என்று சிந்திக்க நேரம் இருக்கின்றதா? விவரமான பொது மக்கள் நீங்கள் கொடுக்கும் பணம் இலவசம் எல்லாம் எப்படி வந்தது யார் கொடுத்தது கொடுத்தவர் யார் என்ற விபரம் கேட்டல் தர மறுக்கின்றீர்களே

நீங்கள் செலவு செய்யும் பணம் நல்லவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதா அல்லது ஏமாற்றுக்காரர்களால் கொள்ளைக் காரர்களால் தீவிரவாதிகளால் நன்கொடையாகப் பெறப்பட்டதா என்று அறியும் உரிமை ஒட்டுப்ப்போட்ட மக்களுக்கு இல்லையா கேட்டால் தர முடியாது என்று சொல்கின்றீர்களே.

உச்ச நீதிமன்ற ஆணையை, மத்திய தகவல் ஆணைய உத்தரவை, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கொண்டு வரும் சட்டங்கள் என் எதுவும் கட்சிகளை கேள்வி கேட்டு கட்டுப்படுத்தக் கூடாது என்றால் நீங்கள் மக்கள் காவலரா மாபியா கும்பலா ? மக்களுக்காக கட்சியா கொள்ளைக்காக கட்சியா மக்களுக்காக ஆட்சியா கட்சிக்காக ஆட்சியா?

ஓட்டுப் போடா மக்கள் வேண்டும் ஆனால் அந்த மக்கள் கேட்கும் தகவல் இல்லை

ஒட்டு மட்டும் போடுங்கள் மற்றதைக் கேட்கக் கூடாது என்றால்


எதிர்க் கட்சிகள் பழிவாங்கப் பயன்படுத்தும் என்ற வாதம் செய்யும் கட்சிகளே தகவல் கேட்டால் கொடுத்துவிட்டால் எப்படி பலி வாங்க முடியும் தகவல் தானே கேட்கின்றார்கள் கேட்டால் கொடுக்க வேண்டியது தானே!. யோக்கியமானவர்களாக உண்மையானவர்களாக நேர்மையானவர்களாக உள்ள உங்களை எப்படி பழிவாங்க முடியும் உங்கள் உள்கட்சி விவகாரம் வெளி வந்துவிடும்  என்றல் நீங்கள் நாட்டுக்காக உழைப்பவர்களா அல்லது உங்கள் கட்சிக்காக உளைப்பபவரா

கட்சியி ரகசியம் வெளிவந்துவிடும் என்று கூக்குரல் இடும் கட்சிகளே கட்சியில் ரகசியம் அவசியமா அப்படி என்ன ரகசியம் இருக்கும் வந்த நன்கொடைகள் அல்லது தவறுகள் தானே இருக்க முடியும்.

உங்கள் கட்சிக்கு எந்த பதிப்பும் வராது என்று நாங்கள் சொல்கின்றோம் அப்படி பாதிப்பு வரும் என்று சொல்லும் நீங்கள் அந்த பாதிப்புகளைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இனி வரும் தேர்தலில் ஒட்டு அளிக்கும் மக்கள் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்ட தகவல் தரும் கட்சிக்கு மட்டுமே என்பதில் தீர்மானமாக இருக்கின்றார்கள் என்பதையும் மனதில் கொண்டு வாதம் செய்யுங்கள்

தகவல் சட்டத்தில் தகவல் கேட்டால் தகவல் தரும் கட்சிக்கு மட்டுமே எங்கள் ஒட்டு

தகவல் சட்டத்திற்குள் வரமாட்டேன் எங்கே ஒடுகின்றீர்கள் ஏன் ஒடுகின்றீர்கள் எதற்க்காக ஒடுகின்றீர்கள் அரசியல் கட்சிகளே எல்லாம் மக்களுக்கு தெரியும்

இலவசமாக இனி நீங்கள் எது கொடுத்தாலும் எதற்கு இலவசம் தருகின்றீர்கள் என்பது முதல் அதற்கு பணம் எப்படி கிடைத்தது என்பதுவரை  மக்கள் RTI மூலம் கேட்பார்கள். 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அரசியல் வாதிகள் கொம்பு முளைத்தவருமில்லை, தேசத்தின் மாமன்னர்களுமில்லை. மக்களுக்கான மக்களரசில் மக்களின் கேள்விகளுக்கு பதில் தராத எவரையும் தூக்கி எறியத் தயங்கக் கூடாது, மக்கள் சக்தியின் பலமறியாது, மவுனித்து கிடக்காமல் ஒவ்வொரு கொடுமைகளையும், அநியாயங்களையும் களைய களமிறங்க வேண்டும். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விக்கு பதில்லில்லை என்போரை சந்தியில் இறக்கி கேள்வித் துளைகளால் துளைத்தெடுக்க வேண்டும்.

VOICE OF INDIAN சொன்னது…

உங்கள் ஆதரவுடன் 13-7-2013 அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை CHENNAI மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது அவசியம் கலந்து போராட்டம் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்