ஆதரவாளர்கள்

புதன், 26 ஜூன், 2013

சாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்

உண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக்க முடியாது என்று நான் சவால் விடுகின்றேன். உறுதியாய் சொல்கின்றேன் முடியாது.

உங்கள் நெஞ்சில் கைவைத்து உண்மையை சொல்லுங்கள்.
 உங்கள் பிள்ளைகள் படிப்பதை சந்தோசமாக ஏற்று மகிழ்ச்சியுடன் தான் படிக்கின்றார்களா? வீட்டுப் படம் சந்தோசமாக செய்கின்றார்களா? 
 பல மாணவர்கள் மன அழுத்தத்துடன் மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டிய நிலை இருக்கின்றதா இல்லையா?
இதற்கு கரணம் என்ன? என்றாவது நம் சிந்தனை செய்தோமா ?


இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் ஏதாவது ஒரு பதில் இருக்கின்றது என்றால் தொடர்ந்து முழுமையாக படிக்கவும். இல்லை என்றால் இத்துடன் படிப்பதை நிறுத்தி விடவும். ஏன் என்றால் முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும் அல்லது தெரியாமல் இருக்க வேண்டும் அரை குறையாய் படித்து விட்டு உங்களால் சும்மா இருக்க முடியாது அதை மற்றவர்களுக்கு சொல்கின்றேன் என்று தப்பு தப்பாக சொல்லிக்கொடுத்து அவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்க காரணமாக வேண்டாம். தெரியாதநிலை அல்லது தெரிந்த நிலை இவ்விரண்டுதான் மனிதனுக்கு உதவும். ஆகவே முடியும் என்பவர்கள் மட்டும் படியுங்கள். மற்றவர்கள் இத்துடன் விட்டு விடுங்கள். 

மாணவர்களே உங்களுக்கு பிடித்த துறை எது எப்படி அறிவது?


 மாணவர்களே உங்களில் பலர் பிடித்த துறை என்பதற்கும் வாய்ப்புள்ள துறைக்கும் உள்ள வேறுபாடுகளை சரியாக புரிந்து தேர்வு செய்யாமல் கஷ்டப்படுவது வடிக்கை ஆகிவிட்டது. அந்நிலை மாறிட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து ஆனால் எப்படி தெரியவில்லை. குழப்பம் எது எனக்கு பிடித்த பாடம் என்றே தேர்வு செய்வதில் தொடங்கி வருவாய் வாய்ப்புள்ள துறை எது என்று அறிவது வரை அனைத்திலும் மாணவர்களும் பெற்றோர்களும் திக்குத் தெரியாத கட்டில் இருப்பது போன்ற மன நிலையில்  இருப்பது கண்கூடு. அப்படிப் பட்டவர்களுக்கு இந்த கட்டுரை உதவும்  ஆகவே மாணவர்களே பெற்றோர்களே கவனமாக் படியுங்கள் மாணவர்களின் குறிக்கோள் அமைய இந்தக் கட்டுரை உதவும் 

முதலில் பிடித்த துறை தேர்வு செய்வது எப்படி என்று பார்ப்போம். 

1)  மாணவமணிகளே நீங்கள் எந்த ஒரு பாடத்தை ஆசிரியர் சொல்லித்தருமோதே அல்லது ஒரே ஒரு முறை படித்ததும் மனதில் பதிகின்றதோ அவ்வாறு மனதில் பதிந்த பாடத்தில் உள்ள எந்தத் தகவலையும் எந்த நேரத்திலும் கேள்வி கேட்க அல்லது பதில் அளிக்க முடிகின்றது என்றால் அதுவே உங்களுக்கு பிடித்த பாடம் 

2)  ஒரு பாடத்தை படித்ததும் மனதில் இருக்கின்றது ஆனால் கொஞ்ச நாளில் மறந்து விடுகின்றது மீண்டும் நினைவுபடுத்தினால் ஒருமுறை அதன் முக்கிய தலைப்புகளைப் பார்த்தால் ஞாபகம் வருகின்றது என்றல் இதுவும் உங்களுக்கு பிடித்த பாடமே.

3) ஒரு பாடத்தை பல முறை படித்தால் மனதில் பதிகின்றது, அந்தப் பாடம் பற்றி எப்போது கேட்டாலும் நினைவில் இருக்கின்றது என்றால் இதுவும் உங்களுக்கு பிடித்த பாடம் தான் 

4) ஒரு பாடம் பலமுறை படித்தால் மனதில் பதிகின்றது . மீண்டும் நினைவு படுத்தி தயாரானால் தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும் என்றால் இது ஓரளவு உங்களுக்கு பிடித்த பாடமாகும் 

5 ) பலமுறை படித்தால் மட்டும் மனதில் நிற்கின்றது ஆனால் புரிவதில்லை மீண்டும் மீண்டும் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கின்றது மனப்பாடம் செய்ததை திரும்பத் திரும்ப படித்தால் தான் தேர்வில் எழுத முடிகின்றது என்றால் அவசியப் பட்டால் ஒழிய இந்தத் துறை உங்களுக்கு பிடிக்காத பாடமே 

6) ஒரு பாடம் படிக்கும்பொழுது புரிதல் ஏற்ப்படுவதில்லை கண் எரிச்சல் தலைவலி ஏற்ப்படுவதுபோல் இருப்பது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு உடலில் அரிப்பு ஏற்ப்படுவது போன்ற உணர்வு தலையில் அரிப்பது போன்ற உணர்வு நெற்றியில் அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதும் சற்று ஓய்வு கொடுத்து பிறகு படித்தால் மனதில் பதிவது என்ற பாடம் உங்களுக்கு பள்ளிவரை மட்டுமே மேல்படிப்பில் தவிர்க்கப்பட வேண்டிய பாடம் ஆகும்.

7) ஒரு பாடம் படிக்கத் துவங்கியதும் இன்னும் தேர்வுக்கு நாள் இருக்கின்றதே நாளை படிக்கலாம் என்று ஒத்திப்போடும் பாடம் உங்களுக்கு பிடிக்காத பாடம் ஆகும்.


மேலே உள்ள 7 பகுதிகளை திரும்பத் திரும்பப் படித்துப் பாருங்கள் அதில் உங்களின் நிலை என்ன என்பது தெரியவரும் நீங்கள் உயர்கல்வியில் துறைகளைத் தேர்வு செய்யும் போது எதிர்கால பொருளாதார நிலை சார்ந்த படிப்புகள் கணக்கில் கொள்வது அவசியம் ஆகின்றது

நன்கு பிடித்த துறையில் பனி வாய்ப்புகள் குறைவு என்று கருதினால் ஓரளவு முயன்றால் வெற்றி பெற முடியும் என்ற அடுத்த பகுதி மேலே உள்ள பத்திகளில் எண் 3 மற்றும் 4 ஐ பாருங்கள் இந்தப் பகுதியில் உள்ள துறைகள் நீங்கள் முயன்றால் வெற்றிபெறும் துறை ஆகும் 

மாணவர்களே எந்த துறை ஆகினும் 80 சதவீதம் குறையாத அளவில் படிக்க வேண்டியது அவசியம் அவ்வாறு பயில பிடித்த பாடங்களை தேர்வு செய்தால் வெல்வது எளிதாக இருக்கும் . இனி வரும் காலங்களில் எந்தத் துறை ஆனானும் பனி வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது ஆனால் அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றால் மட்டுமே வாய்ப்பு உங்களை நாடி வரும். 

பெற்றோர்களே இந்த படிப்பு படித்தால் மட்டுமே நல்ல எதிர்காலம் என முடிவு செய்யாதீர்கள் பிள்ளைகளுக்கு சொல்லாதீர்கள் எண்ணற்ற துறைகள் மாணவர்கள் திறமையாக வெற்றிபெற இருக்கின்றது என்பதை மனதில் வையுங்கள். பிள்ளைகளால் எது முடியுமோ அதைப் படிக்க ஊக்குவியுங்கள் அதை என்ன என்ன்ன மேல்படிப்பு உள்ளது அதன் உச்ச நிலை என்ன என்பது பற்றி எடுத்துச் சொல்லுங்கள் 
மாணவர்களே பெற்றோர்களே ல்கீலே பட்டியலில் சில துறைகள் பற்றியும் அதன் பனி வாய்ப்புகள் குறித்தும் தொகுத்து வழங்கியுள்ளேன். இதை மட்டுமல்லாது இன்னும் பல துறைகள் இருக்கின்றன.  இளநிலையில் சுமார் 256 துறைகளும் உயர் நிலையில் ஆராய்ச்சி துறையில் சுமார் 80 துறைகளும் பனி வாய்ப்புள்ள துறைகளாக இருக்கின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளை மிசின்களாக இல்லாமல் மனிதர்களாக வாழ வேண்டும் என்றால் ஆரோக்கியத்துடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் பிடித்த துறையில் படிப்பதும் அந்தத் துறையில் வேலைபார்ப்பதும் அல்லது வணிகம் செய்வது அல்லது உற்பத்தி செய்வதுமே சிறந்தது.


==================================================================

சுரங்கம், எரிபொருள் பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பு


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சிக்கான மத்திய கல்வி நிறுவனத்தில் பொறியியல் ஆராய்ச்சிப் படிப்பு. Mining/ Mechanical/ Electrical/ Production/ Civil/ Instrumentation/ Electronics/ Chemical/ Environmental Engineering பிரிவில் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்தவர்களும், கேட் தேர்வில் வெற்றி பெற்று அதன் மூலம் மேற்கூறிய படிப்புகளுக்கு இணையான முதுநிலை படிப்புகளை முடித்தவர்களும், இந்த ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ ஓ.பி.சி/உடல் ஊனமுற்றவர்களுக்கு, வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ள இந்தப் படிப்புக்கு, ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க http://acsir.res.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். இதுதொடர்பான விவரங்கள் www.csio.res.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
====================================================================

கால்நடைஅறிவியல் துறை


பால் பொருட்கள், மீன் மற்றும் இறைச்சி தயாரிப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், கால்நடை விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படும், விலங்குகளைப் பற்றிய உயிரியல் ஆய்வே கால்நடை அறிவியல். இது விவசாயத் துறையின் ஒரு சிறப்பு பிரிவு. இத்துறையில், திசுக்கள் பற்றிய பயோடெக்னாலஜி, பிசியாலஜி மற்றும் பயோகெமிஸ்ட்ரி மற்றும் முக்கிய உறுப்புகளின் அமைப்பு, கட்டமைப்பு மற்றும் பயோமாலிக்யூல்கள், செல்களின் இயக்கம் போன்ற பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.
மேலும் கால்நடைகளின் வளர்ச்சி, இனப்பெருக்கம், பால் சுரப்பு ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. மொத்தத்தில், கால்நடை சுகாதாரம், நலன் மற்றும் இனவிருத்தி போன்றவையே இதன் முக்கிய நோக்கம்.

கால்நடை விஞ்ஞானியின் பணி: மேற்குறிப்பிட்ட விஷயங்களையும் கூடுதலாக செயல்படுத்த, ஆய்வு செய்தல், கால்நடை உணவுப்பொருட்களை தரமிடுதல், கால்நடைகளை வாங்குதல், தொழில்நுட்ப விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பணிகள் சில கால்நடை விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு கால்நடை விஞ்ஞானி, கால்நடை அபிவிருத்தி மற்றும் அவற்றால் தயாரிக்கப்படும் பொருட்கள் சம்பந்தமாக கால்நடை தொழிற்சாலையில் ஆலோசகராக செயல்படுகிறார். கால்நடைசார் பொருட்களின் மேம்பாடு, செயல்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவையும் இவற்றில் அடங்கும். மனித வாழ்வின் இயற்கை வளம் சார்ந்த அம்சங்களின் மேம்பாட்டிற்கு பணியாற்றுவதால், ஒரு கால்நடை விஞ்ஞானி சமூகத்தில் முக்கிய இடம் பெறுகிறார்.

பணிபுரியும் இடங்கள்: கால்நடை மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றலாம். வேளாண் துறையில், விவசாய நீட்டிப்பு அதிகாரியாகவும் பணியாற்றலாம். கால்நடை தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருக்கலாம். மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில், சிறப்பு ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றலாம். இவைத்தவிர, தனியார் ஆலோசகராகவும் பணிபுரியும் வாய்ப்புகள் உள்ளன.

வேலை வாய்ப்புகள்: பண்ணை மேலாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல், பண்ணைப் பயன்பாடு, போக்குவரத்து, சேகரிப்பு மற்றும் பண்டகசாலை, எஸ்டேட்டுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள், நில உயர்வு, தரமிடுதல், லேபிளிடுதல் மற்றும் பேக்கேஜிங் போன்ற பலவித பணிவாய்ப்புகள் உள்ளன. இவைத்தவிர, வங்கிகள், விவசாய அமைப்புகள், தொழிற் கழகங்கள், வேளாண்மை சார்ந்த அரசு நிறுவனங்கள் போன்றவைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.

சம்பளம்: அரசு நிறுவனங்களில் ஒரு விவசாயப் பொறியாளருக்கு ஆரம்ப நிலையில், சீனியாரிட்டியைப் பொறுத்து, மாதம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்களில் மாதம் ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை கிடைக்கும். மேலும் என்.ஜி.ஓ. அமைப்புகளிலும் நல்ல சம்பளம் உண்டு. 
=====================================================================


 புவி அமைப்பியல் ஆராய்ச்சி துறையில் பிஎச்.டி., படிப்பு


 
தேசிய புவிஅமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Geophysical Research Institute NGRI), CSIR-ன் ஒரு சட்டப்பூர்வ  ஆய்வகமாகும்.
புவி அறிவியலின் பலவித அம்சங்களை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில், கடந்த 1961ம் ஆண்டு இந்த நிறுவனம் ஐதராபாத்தில் ஏற்படுத்தப்பட்டது.
ஹைட்ரோ கார்பன்கள், மினரல்கள், நிலத்தடி நீர் ஆகிய துறைகளில் இந்த நிறுவனம் முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்கிறது. இதைத்தவிர, ஜியோபிசிக்ஸ் பொறியியல், நிலநடுக்கவியல் (Seismology), ஜியோ-டைனமிக்ஸ் மற்றும் ஜியோ-என்வைரன்மென்ட் (எஞுணிஉணதிடிணூணிணட்ஞுணt) ஆகிய படிப்புகளிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
இந்நிறுவனத்தில், மொத்தம் 550 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 150 பேர் உயர்தரமிக்க விஞ்ஞானிகள். இந்த விஞ்ஞானிகளுக்கு உதவிபுரிய, தகுதிபெற்ற மற்றும் போதுமான உதவியாளர்கள் உள்ளனர்.
இந்நிறுவனத்தின் சாதனைகள்: * வான்வழியாக பயணம் செய்து, 2,50,000 வரிசை கிலோ மீட்டர்கள் புவிஅமைப்பியல் ஆய்வை முடித்துள்ளது.
* 1500க்கும் மேற்பட்ட கிராமங்களில், தொழில்நுட்பத்தின் மூலம், நிலத்தடி நீர் இருப்பதற்கான இடத்தை பரிந்துரைத்துள்ளது.
* எண்ணெய் வளத்தைக் கண்டறியும் பொருட்டு, குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் படுகைகளில் ஒருங்கிணைந்த புவி அமைப்பியல் ஆய்வை நடத்தியுள்ளது.
* படுக்கைப் பாறை (Bed Rock) மற்றும் தொல்பொருள் ஆய்வுகளை நடத்தியுள்ளது.
* புவிஅமைப்பியல் உபகரணங்களை, வணிகரீதியான உற்பத்திக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்துகொள்வதற்கான உதவிகள்.
* வாயு ஹைட்ரேட்டுகள் பற்றிய ஆரம்பநிலை ஆய்வுகள்
* ராஜஸ்தான் மாநிலத்தில் துத்தநாகம் கண்டுபிடிப்பதற்கான, புவிஅமைப்பியல் மற்றும் புவிரசாயனம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொண்டது.
இந்த நிறுவனத்தின் அறிவியல் பங்களிப்புகள், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பத்மஸ்ரீ போன்ற தேசிய அளவிலான விருதுகள் உட்பட, பலவித அறிவியல் சார்ந்த விருதுகளையும், உதவித்தொகைகளையும் பெற்றுள்ளார்கள். மேலும், வேறு ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்தும் NGRI விஞ்ஞானிகள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இவைத்தவிர, வெளிநாடுகள் வழங்கும் விருதுகளையும் பெற்றுள்ளனர்.

இந்நிறுவனத்திலுள்ள வசதிகள்* பலகூறு ஐசோடோப் ஆய்விற்கான வசதி, * எலக்ட்ரோ மீட்டர் (Electro meter), சென்சார், சர்வதேச சோதனை இயந்திரம் (Universal Testing Machine) போன்ற பலவித வசதிகளைக் கொண்ட உயர் அழுத்த ஆய்வகம் * ஹைட்ராலிக்  சாதனத்துடன் கூடிய அளவீட்டு வசதிகள் * பலவித வசதிகளுடன் கூடிய பாறை காந்த ஆய்வகம் (Rock Magnetism Laboratory) * இந்திய தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பவளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் உயர் தீர்வு பாலியோகிளைமேடிக் ஆய்வுகள் * புவியீர்ப்பு தொடர்பான ஆய்வகம்.
இவைத்தவிர, மேலும் பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்ளத்தக்க ஆய்வகங்கள் இங்கே உள்ளன. இவைத்தவிர, புவி அமைப்பியல் தொடர்பான பலவிதமான ஆய்வுகளை நடத்தக்கூடிய வசதிகளும் இங்கு உள்ளன.
பிஎச்.டி., படிப்புகள்: இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன; மொத்தம் 15 இடங்கள் உள்ளன. புவி அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி பட்டம் (முதல் வகுப்பில்) பெற்று, UGC நடத்தும் NET தேர்விலும் தேர்ச்சிப் பெற்றவர்கள், இந்நிறுவனத்தின் பிஎச்.டி. ஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
DST INSPIRE உள்ளிட்ட ஏஜன்சிகளில் உதவித்தொகை பெற்று வருபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். CSIR ஆய்வகங்களில் பணிபுரியும் ப்ராஜெக்ட் உதவியாளர்கள், குறைந்தபட்சம் 1 வருடம் ஆராய்ச்சி அனுபவம் இருந்தால், இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை, csirphd.csio.res.in என்ற இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், நேர்காணல் மூலமாக இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வுக்கு சென்று வருவதற்கான பயணப்படி மற்றும் தினப்படி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள், ஜியோபிசிக்ஸ், ஜியாலஜி, ஜியோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியோக்ரோனாலஜி (Geochronology) உள்ளிட்ட பல துறைகளை சார்ந்ததாக இருக்கலாம்.
இந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிஎச்.டி. ஆய்வைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள www.ngri.org.in என்ற இணையதளம் செல்லவும்.
====================================================================

 சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்


சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றிய தகவல்கள் இதோ:
கல்வித் தகுதி:* அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தபட்ச தகுதி இளநிலைப் பட்டம்).
* இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.
* ஆனால், மெயின் தேர்வு எழுத செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.
* அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை (professional) மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத் தேர்வை எழுதலாம்.
தேசிய அடையாள தகுதி:
* இந்திய குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.
* மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக, நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோபியா, கென்யா, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS ஆகலாம்.
வயது தகுதி
* சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
* OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயது வரை முயற்சி செய்யும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.
* மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.
தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள்: * பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
* இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்சி செய்யலாம்.
* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயது வரை, எத்தனைமுறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.
விண்ணப்ப நடைமுறைகள்: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர், அதற்கான விண்ணப்பத்தை, தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை எலக்ட்ரானிக் முறையில் ஸ்கேன் செய்ய முடியும் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் பெற முடியும்.
பூர்த்திசெய்த விண்ணப்பத்தை, அதற்கான Acknowledgement அட்டையுடன் Secretary, Union Public Service Commission, Dholpur House, New Delhi - 110011 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
====================================================================

 நடிப்பில் ஆர்வமா?


 
ஒரு கதையின் கதாப்பாத்திரத்தை, ஒரு மேடையிலோ, தொலைக்காட்சி அல்லது திரைப்படத்திலோ பேசுதல் அல்லது பாடுதல் மூலம் வெளிப்படுத்துபவர் நடிகர்.
கவர்ச்சி, விளம்பரம், புகழ், ஏராளமான பணம் மற்றும் எங்கு கண்டாலும் ஓடிவரும் ரசிகர் கூட்டம் என்ற உச்ச நிலையில் ஒரு நடிகரோ, நடிகையோ இருந்தாலும், நடிப்புத் தொழிலில், கடின உழைப்பின் மூலமும், புத்திசாலித்தனமாக திட்டமிடுதலின் மூலமும்தான் வெற்றிபெற முடியும்.
இத்துறைக்கு தேவைப்படும் தகுதிகள்: முதலில் நடிப்பின் மீது அதீத ஈடுபாடும், காதலும் இருக்க வேண்டும். நல்ல தோற்றம், படைப்புத் திறன், கற்பனைத் திறன், நல்ல தகவல்-தொடர்புத் திறன், அறிவுக்கூர்மை, உடல் வலிமை போன்ற பலவித அம்சங்கள் அவசியம்.
பலவித ரசனைகளும், பழக்கவழக்கங்களும் கொண்ட குழுக்களுடன் இணைந்துப் பணியாற்றும் தன்மை வேண்டும். கற்றலில் பொறுமை, ஒத்திகைப் பார்த்தல் மற்றும் புதிய விஷயங்களை சோதித்துப் பார்க்கும் தைரியமும், திறமையும் இருக்க வேண்டும்.
தன்னம்பிக்கையும், வரிகளை விரைவாக மனனம் செய்யும் திறமையும், சந்த நயம், பிரமாதமான நடிப்புத் திறன் போன்ற பல திறமைகள் முக்கியம்.
தேவைப்படும் திறன்கள்: சிலருக்கு இயல்பாகவே நடிப்புத் திறன் நன்கு அமையப் பெற்றிருக்கும். உணர்வுகளை தெரிவிக்கும் விதமாக சிறந்த உடலசைவுகளை உண்டாக்கும் திறன், பல்வேறு விதமான உணர்ச்சிகளை வடிக்கும் திறன், கதை மற்றும் காட்சியுடன் ஒன்றிவிடும் திறன், பலவிதமான மொழிநடைகள் பற்றிய அறிவும், அதனுடனான அனுபவம், உடல்மொழியை வெளிப்படுத்தும் திறன், கவர்ந்திழுக்கும் குரல், தெளிவான பேச்சு, நல்ல கற்பனைத் திறன், ஒன்றை கிரகித்து அதன்படியே செயல்படும் திறன் போன்ற பலவித திறன்கள் நடிப்புத் துறைக்கு அவசியம்.
சம்பளம்: இந்த துறையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் என்று எதுவுமில்லை. உங்களின் நடிப்புத்திறன் மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து, சம்பளமும் மாறுபடும். நீங்கள் எந்தளவிற்கு சிறப்பாக செயல்படுகிறீர்களோ, அந்தளவிற்கு சிறப்பான சம்பளம் உண்டு. மேலும் இடத்திற்கு இடம் வருமானம் மாறுபடும். நீங்கள் புகழின் உச்சியில் இருக்கும்போது, உங்களின் சம்பளமும் உச்சத்தில் இருக்கும்.

சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Film and Television Institute of India, Pune (www.ftiindia.com)
National school of drama, Delhi (www.nsd.gov.in)
Asian academy of Film and TV, Noida (www.aaft.com)
ZIMA Mumbai (www.zimainstitute.com)
Delhi film institute, New Delhi (www.delhifilminstitute.com)
========================================================================

 பரந்து விரிந்த வேதியல்துறை

 


அறிவியலின் ஒரு துறையான வேதியியல், உயிர்பொருள் சார்பில்லாதது (Inorganic), உயிர்பொருள் சார்ந்தது (organic) மற்றும் பவுதீகம் தொடர்பானது (Physical) என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. சமீபகாலங்களில் இத்துறையில் நவீன வளர்ச்சி ஏற்பட்டு, பயோகெமிஸ்ட்ரி (உயிர் பொருட்களிலுள்ள அடிப்படை கூறுகளை ஆராய்தல்), நியூரோகெமிஸ்ட்ரி(நரம்பியல் அமைப்பின் ரசாயனம் செயல்பாடு பற்றி ஆராய்தல்) போன்ற துறைகள் உருவாகியுள்ளன.
ரசாயன தொழில்நுட்பம்: தொழில்நுட்பம் என்பது பொறியியலின் பயன்பாடு. பல்வேறு துறைகள் மற்றும் தொழிற்சாலைகளில், செயல்பாடுகள், நடைமுறைகள், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. ரசாயன ஆய்வாளர்கள் பொதுவில் ரசாயன தொழில்நுட்ப நிபுணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதேசமயம், ஆல்கஹால் தொழில்நுட்ப நிபுணர், செராமிக் தொழில்நுட்ப நிபுணர், பைபர் தொழில்நுட்ப நிபுணர், சணல் தொழில்நுட்ப நிபுணர், உணவு தொழில்நுட்ப நிபுணர், எரிபொருள் தொழில்நுட்ப நிபுணர், கண்ணாடி தொழில்நுட்ப நிபுணர், லெதர் தொழில்நுட்ப நிபுணர், மர தொழில்நுட்ப நிபுணர் என்று துறைவாரியாகவும் அழைக்கப்படுகிறார்கள்.

ரசாயன பொறியியல் என்பதிலிருந்து, ரசாயன தொழில்நுட்பம் என்பது அதிகம் மாறுபட்ட ஒன்றாகும். தொழில்நுட்பம் என்பது, மேம்பாடு மற்றும் உற்பத்தி நோக்கத்திற்கான செயல்பாட்டு இயக்கம் தொடர்பானதாகும். பொறியியல் என்பது வடிவமைப்பு, கட்டுமானம், நிறுவுதல் மற்றும் பிளான்டுகளின் இயக்கம் மற்றும் ரசாயன பொருட்களை தயாரிப்பதற்கான உபகரணங்கள் தொடர்பானது.

பணியின் தன்மை: பெரியளவிலான ரசாயனம் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளுக்கான செயல்முறைகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துவது ரசாயன தொழில்நுட்ப நிபுணரின் பணி. கச்சாப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பரிந்துரைக்கப்பட்ட வகையில் வாங்கப்பட்டுள்ளதா மற்றும் தயாரிப்பு பணிகள் முறையாக கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது இவரின் முக்கியப் பணி. குறைந்த விலையில் பொருட்கள் வாங்குவதை மேற்பார்வையிடுவதும் இவரின் பணி. இதைத்தவிர, புதிய கச்சாப் பொருட்களை கண்டுபிடித்தல், இறக்குமதி செய்யப்படும் கச்சாப் பொருட்களுக்கு மாற்றாக உள்ளூரிலேயே புதிய கச்சாப் பொருளை கண்டுபிடித்தல், கச்சாப் பொருட்கள் மற்றும் முடிவுப் பொருட்களின் தரத்தை மதிப்பீடு செய்தல் போன்றவையும் முக்கிய பணிகள்.

ஒரு தொழில்நுட்ப நிபுணரின் பணியானது, ஆராய்ச்சி-உற்பத்தி-நிர்வாகம் என்று பரந்த அளவில் வியாபித்துள்ளது. தயாரிப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு, விற்பனை, தொழிலாளர் நலம் ஆகிய பல துறைகளையும் கவனிப்பதால், முழு நிறுவன செயல்பாட்டிற்கும் அவர் பொறுப்பாகிறார்.
மேலும், இவரது பணியில், ஜூனியர் தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சி பணியாளர்கள், இயக்குபவர்கள், மெக்கானிக்குகள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் ஆகியோர் துணையாக இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்திற்குள்ளேயே பலவிதங்களில் வேதியியல் தொழில்நுட்ப வல்லுனர் பணியாற்றுகிறார். வெளியே செல்லும் பணி இவருக்கு இல்லை. தூசு படிந்த, அழுக்கான, சூடான, பொருட்கள் அடைத்து வைக்கப்பட்ட, நாற்றமடிக்கும், ஈரமான என்பது போன்ற பலவித அசவுகரிய சூழல்களிலும் அவர் பணிபுரிய வேண்டியதிருக்கும். மேலும், ஆசிட், பலவித ரசாயனங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் அவர் கையாள வேண்டியிருக்கும்.

இப்பணிக்கான தகுதிகள்: ஒருவர் ரசாயன தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிய, பி.டெக்/பி.டெக்ஸ்ட்/பி.எஸ்சி(டெக்) ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் தொழில்நுட்பம் படித்திருக்க வேண்டும். இத்தகைய படிப்புகளில் சேர, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை படித்திருக்க வேண்டும். மேலும் இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது, மெரிட் அடிப்படையிலும், போட்டித் தேர்வுகளின் அடிப்படையிலும் நடைபெறுகிறது.
சில கல்வி நிறுவனங்கள்,(சில பாலிடெக்னிக்குகள் உட்பட), டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், செராமிக் தொழில்நுட்பம், இனாமல்(உலோகத்திற்கு அழகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பளபளப்பான பொருள்) தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்ட் தொழில்நுட்பம், லெதர் தொழில்நுட்பம், லெட்டர் ப்ரெஸ் பிரின்டிங், பிரின்டிங் தொழில்நுட்பம் ஆகிய பலவித துறைகளில் 2 வருடங்கள் முதல் 4 வருடங்கள் வரையிலான படிப்புகளை வழங்குகின்றன. கான்பூரிலுள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட், 1 வருட சுகர் டெக்னாலஜி படிப்பை நடத்துகிறது. மேலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ நிலைகளில் உயர்தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வேலை வாய்ப்புகள்: ரசாயன தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான வேலைவாய்ப்பை பல தொழில் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆசிட், ஆல்கலீஸ், உப்பு, கொழுப்பு, சோப்பு, எண்ணெய், காய்கறி எண்ணெய், களிமண், கண்ணாடி, மருந்துகள், பூச்சிக்கொல்லி, வெடிபொருட்கள், மெழுகு, பசை, எரிசாராயம், வர்ணங்கள், பூச்சுகள், சாயம், பெட்ரோலிய பொருட்கள், ரப்பர், ரேயான், பேப்பர் உள்ளிட்ட பல பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு உண்டு. அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள பலவித ஆராய்ச்சி ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு உண்டு.

இத்துறையில், தயாரிப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பாகவே பலருக்கு பணிகள் கிடைத்தாலும், சிலருக்கு சந்தை ஆராய்ச்சி, பிளான்ட் வடிவமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சோதனை, கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியப் பணி, விற்பனை மற்றும் சேவைப் பணி, டெக்னிக்கல் ரைட்டிங் மற்றும் ஜர்னலிசம் போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ரசாயன பொறியாளர்: ரசாயனங்கள், பெட்ரோலிய எரிபொருட்கள் மற்றும் அதுசார்ந்த பொருட்கள், பாலிமர்கள், சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு, தாதுக்கள் மற்றும் உலோகங்கள், பேப்பர்கள் மற்றும் பலகைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றின் உற்பத்தி செயல்பாட்டை வடிவமைத்தல் மற்றும் இயக்கம் ஆகியவற்றுக்கு ரசாயன பொறியாளர் பொறுப்புடையவர். மேலும் இவர்கள், தண்ணீர் அல்லது கழிவுகளை கையாளுதல், சூழல் விதிமுறை போன்ற பிரிவுகளில் பணியாற்றலாம் அல்லது உலோகவியல் அறிஞராக பணியாற்றலாம்.

புதிய மற்றும் திறன்வாய்ந்த செயல்பாடு, உபகரணங்களை பாதுகாப்பாகவும், சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு நேராதவாறும் பயன்படுத்தல், தற்போது நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டை ஆய்வுசெய்து, அதை இன்னும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் எப்படி மாற்றலாம் என்பன உள்ளிட்ட பலதரப்பட்ட விஷயங்களிலும் ரசாயன பொறியாளர் பணியாற்றுவார்.

தேவைப்படும் பண்புகள்: அடையாளப்படுத்தும், பகுப்பாய்வு செய்யும், பிரச்னைகளை தீர்க்கும் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் வேண்டும். மேலும் நல்ல படைப்பு திறனும், நடைமுறை தேவைகளை புரிந்து செயல்படும் திறனும், மேற்பார்வையாளர் இல்லாமல் பணியாற்றும் தன்மையும் இருக்க வேண்டும்.

அனலிடிகல் கெமிஸ்ட்: பாலில் உள்ள நச்சுத்தன்மை, ஸ்டீலில் உள்ள மாங்கனீஸ் அளவு, சாக்லேட் தயாரிக்க உதவும் கச்சாப் பொருட்களை சோதனையிடுதல், பெயின்ட் தயாரிக்க உதவும் கரிமத்தின் தூய்மையை சோதனை செய்வது போன்ற பல பணிகள் இவருக்கு உள்ளது.
இதற்கு தேவையான பண்புகள்: நல்ல தொழில்நுட்ப திறன், வேதியியல் பாடத்தில் தீவிர ஆர்வம், ஒருங்கிணைக்கும் திறன் போன்றவை சில முக்கிய தகுதிகளாகும்.
===================================================================

 பால்பண்ணைத் துறையில் பணி வாய்ப்புகள்

 
பால் பண்ணைத் தொழில், ஆதிகாலம் தொட்டே, இந்தியாவின் முக்கிய தொழில்களில் ஒன்றாக இருக்கிறது. அதிக பால் தரும் கால்நடைகளை வளர்ப்பது, கால்நடை பராமரிப்பு, பால் சேகரித்தல் மற்றும் பால் பொருட்கள் தயாரித்தல் போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கியது இந்த துறை.இத்துறையில் பணிபுரிய, தகுதிவாய்ந்த பொறியாளர்கள், பால் உற்பத்தி நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் குழுவினர் போன்றோர் தேவைப்படுகின்றனர். தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (-NDDB), தேசிய அளவில், இத்துறையின் உயர்ந்த அமைப்பாகும். பால்வளத் துறையின் மேம்பாட்டிற்கு இந்த அமைப்பு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
பாடப்பிரிவுகள்: பால் பொருள் தயாரிப்பு, கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து, கால்நடை வளர்ச்சி, இனப்பெருக்கம், கால்நடை இயங்கியல், போதுமான அளவிலும், பொரு ளாதார நிலையிலும், பால் தாயாரிப்பை நிர்வகித்தல் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வுசெய்தல். வேதியியல், மைக்ரோபயாலஜி, தரக்கட்டுப்பாடு, பால் மற்றும் பால் பொருட்களின் தொழில்நுட்பம், பால் பண்ணை சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல விஷயங்களை பால் பதப்படுத்துதல் செயல்முறை உள்ளடக்கியுள்ளது.
தகுதிகள்: மேல்நிலைப் படிப்பில் வேதியியல், இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களைப் படித்து, ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களை பெற்றவர்கள், 2 வருட பால்பண்ணை டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றவர்கள். மேலும் பால்பண்ணைத் தொழில்நுட்பத்தில் 4 வருட பி.டெக் படிப்பும் உள்ளது. நுழைவுத்தேர்வின் மூலம் இப்படிப்பிற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்புகள்: அரசு மற்றும் தனியார் துறைகளில், பால்பண்ணைத் தொழில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. பால் பண்ணைகள் கூட்டுறவு துறைகள், கிராம வங்கிகள், பால் பொருள் பதப்படுத்தும் நிலையங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகள், தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் போன்ற பல இடங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
பால்பண்ணை தொழில்நுட்ப வல்லுனர்கள், தரக்கட்டுப்பாட்டு துறைகளிலும் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் இந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், சொந்தமாகவே சிறிய அளவிலான பால் நிலையங்கள், பால் பொருள் தயாரிப்பு மையங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்கள் நிறுவி சம்பாதிக்கலாம். இதைத்தவிர அவர் தனியார் துறைகளில் ஆலோசகராகவும் பணியாற்றலாம்.
சம்பளம்: பொதுவாக, பால்பண்ணை தொழில்நுட்ப பட்டதாரிகள், பால் நிலையங்களில், பயிற்சிபெறுபவர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் மாதம் ரூ.8000 உதவித்தொகையாகப் பெறுகிறார்கள். அதிகாரி நிலையில் உள்ளவர்கள், மாதம் ரூ.30 ஆயிரம் பெறுகிறார்கள். 
===================================================================

 எங்கும் பரவியிருக்கும் ப்ரீலேன்சிங்



இன்றைய கார்பரேட் உலகில், ப்ரீலேன்சிங்  என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குகிறது. எங்கேயிருந்து பணியாற்றுகிறோம், எந்த நேரத்தில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல இங்கே. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டப் பணியை நிறைவு செய்கிறோமா என்பதே முக்கியம்.

 

நெரிசலான நகர்ப்புற வாழ்க்கையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவசர அவசரமாக புறப்பட்டு, அலுவலகம் வந்து, ஒரேமாதிரியான சூழ்நிலையில், ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றி, பின்னர், மாலையில் மீண்டும் புறப்பட்டு நெரிசலில் சிக்கி வீட்டிற்கு செல்வதை வெறுக்கும் நபர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்தான் ப்ரீலேன்ஸ் பணி.
ப்ரீலேன்ஸ் பணியின் மூலம் ஒருவர் தன்னை நன்கு ரிலாக்ஸ் செய்து கொள்ள முடிகிறது. தனது பிற சொந்த வேலைகளையும் பார்த்துக்கொண்டு, அலுவலகப் பணியையும் மேற்கொள்ள முடிகிறது. இதனால், தேவையற்ற மனஉளைச்சல் தவிர்க்கப்படுகிறது.
ப்ரீலேன்ஸ் பணி முறையானது: இந்தியாவில் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையவில்லை என்றாலும், அடுத்த சில வருடங்களில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு சந்தையில், பல்வேறு விதமான ப்ரீலேன்ஸ் வாய்ப்புகள் உள்ளன. வெவ்வேறு வகையான நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட திறனுள்ள ப்ரீலேன்ஸ் பணியாளர்களை எதிர்பார்க்கின்றன.
ப்ரீலேன்ஸ் பணிசெய்ய விரும்புபவர்கள், www.freelanceindia.com போன்ற ஆன்லைன் forum மூலமாக தங்களின் விபரங்களைப் பதிவுசெய்து கொள்கிறார்கள். இதன்மூலம், அவர்களுக்கு, பணி வழங்குனர்களின் தொடர்பு கிடைக்கிறது. கொடுத்தப் பணியை திருப்தியாக செய்வதன் மூலமாக, பணிவழங்குநர்கள், எதிர்காலத்தில், தாங்களே நேரடியாக ப்ரீலேன்ஸ் பணியாளர்களைத் தொடர்பு கொள்கிறார்கள்.
சுயசார்பு: ப்ரீலேன்சிங் பணியை, ஒருவர், படிப்பை முடித்தப் பிறகுதான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. படிக்கும்போதே சம்பாதித்து, சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பைப் பெறலாம். இதன் மூலம் ஒரு மாணவரின் தன்னம்பிக்கை வளர்கிறது.
படைப்புத்திறன், தொழில்நுட்பத் திறன் மற்றும் இலக்கியத்திறன் உள்ளவர்களுக்கு ப்ரீலேன்ஸ் துறையில் பல பணிவாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன. ப்ரீலேன்ஸ் பணியின் மூலம் ஒருவருக்கு நிறைய அனுபவமும் கிடைக்கிறது. இப்பணியைப் பொறுத்தவரை, இன்னொரு நன்மை என்னவெனில், சீனியர் - ஜூனியர் என்ற வேறுபாடுகள் இருப்பதில்லை. ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கு ப்ரீலேன்சிங் பணிவாய்ப்புகள் உதவிபுரிகின்றன.
வேலைவழங்குனர்கள் யார்?: முன்பே குறிப்பிட்டதுபோல, குறிப்பிட்ட ஆன்லைன் forum-களில் பதிவுசெய்து, வேலை வழங்குநர்களைக் கண்டறியலாம். அதேசமயம், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் மூலமாகவும் ப்ரீலேன்ஸ் பணிவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. பணிவழங்குநர்களைத் திருப்திபடுத்தும் ப்ரீலேன்சர்களின் காட்டில் எப்போதும் மழைதான்.
வெகுமதிகள்: ப்ரீலேன்ஸ் துறையில் வழங்கப்படும் சம்பளமானது, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. ஒரு நாள், ஒரு மணிநேரம், எண்ணிக்கை கணக்கு (ணீடிஞுஞிஞு ணூச்tஞு), ப்ராஜெக்ட் அடிப்படை என்கிற அளவில் வெகுமதிகள் வேறுபடுகின்றன. சில ப்ரீலேன்சர்கள், பணியை தொடங்குவதற்கு முன்பாகவே, 100% ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். சில இடங்களில் பகுதி பகுதியாகவும் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஒரு அலுவலகத்தில் முழுநேர பணியில் சம்பாதிப்பதைவிட, ப்ரீலேன்ஸ் முறையில், பலர், அதிகமாக சம்பாதிக்கிறார்கள். மாதம் குறைந்தது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிப்பவர்கள் பலர் உள்ளனர்.
சாதக - பாதகங்கள்: பொருளாதார அந்தஸ்தில் ஸ்திரமாக இல்லாத நபர்களுக்கு, இந்த ப்ரீலேன்ஸ் முறை சரியாக வராது என்ற கருத்து வலுவாக உள்ளது. ஏனெனில், பல நிறுவனங்கள், செய்த வேலைக்கு பணம் தருவதில் கறாராக நடந்து கொள்வதுடன், இழுத்தடிக்கவும் செய்கின்றன. மேலும், செய்யும் பணியில் ஏதேனும் குறைகூறி பணம் தர மறுக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது.
ஆனால், இப்பணியை விரும்புவர்களோ, எங்களுக்கு பணம்தான் அனைத்துமே என்றில்லை, சுதந்திரமாக இருப்பதும், பணத்திற்கும், விருப்பத்திற்கும் இடையில் ஒரு சமரசத்தை செய்துகொள்ள விரும்புகிறோம் என்கிறார்கள். நமக்கு விருப்பமான நேரங்களில் பணிபுரியலாம் என்ற சுதந்திரம் இருக்கும் அதேவேளையில், பணி வழங்குநர்களின் வசதிக்கு ஒத்துப்போவதும் முக்கியம்.
வெற்றிகரமான ப்ரீலேன்சர்: இத்துறையில் வெற்றிகரமான நபராக உருவெடுப்பதென்பது உடனடியாக நடந்துவிடாது. அதற்கு அர்ப்பணிப்பும், சிறிது காலஅவகாசமும் தேவை.
* நீங்கள் செய்யவிருக்கும் பணியைப் பற்றி போதுமான அறிவை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.தொழில்முறை அனுபவத்தைக் கொண்டிருப்பது நன்மைப் பயக்கும்.
* ஒரே மாதிரியான பணிகளையே சிறிதுகாலம் செய்து, அதில் திறமையை நிரூபித்து நற்பெயரை ஈட்டுங்கள்.
* ப்ரீலேன்ஸ் பணிமுறையில் வெற்றிகரமாக இயங்குவதற்கான ஒரு முக்கிய அம்சம் என்னவெனில், பலருடனான தகவல்தொடர்பு மற்றும் நீடித்த பழக்கம். இதன்மூலம், வெளியில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
* உங்களுக்கென ஒரு தனி இணையதளத்தை வைத்து பராமரித்து, உலகளாவிய அம்சங்களை கற்றுக்கொள்ளவும்.
* ஒரு பணியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துக்கொடுக்க ஒப்புக்கொண்டால், அதை கட்டாயமாகப் பின்பற்றவும். உங்களின் மீதான நம்பிக்கை மற்றும் மதிப்பின் அடிப்படையே இதுதான். ஒருவேளை எதிர்பாராத காரணங்களால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியை முடிக்க முடியாது என்பது தெரிந்தால், முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட வேண்டும். கடைசி நேரத்தில் கைவிரிக்கக்கூடாது.
* உங்கள் பணி வழங்குநருடன் நல்லவிதமான உறவுமுறையைப் பேணுவது முக்கியமானது. உங்களின் கடமையை நீங்கள் சரியாக செய்துவிட்டால், அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.
========================================================================

வசீகரிக்கும்அழகுக்கலை துறை

 
பிழைப்பதற்கா வழியில்லை? என்ற ஒரு பிரபலமான பொன்மொழி உண்டு.
பரந்த உலகில் அனைவருக்குமே வாய்ப்புகள் உள்ளன. நமக்கான வாய்ப்புகளை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான்  நமது வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. நியாயமாகவும், நேர்மையாகவும்
செய்தால், எந்தத் தொழிலும் இழிவானதல்ல என்பது நாம் நன்கு அறிந்த ஒன்று.
சமீப வருடங்களாகவே, அழகுக்கலைத் தொழில் நல்ல வளர்ச்சியைப் பெற்றுவருகிறது. ஆண்களும், பெண்களும் இத்தொழிலில் பரவலான ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்துறை தொடர்பாக, சிறியதும், பெரியதுமாக பல கல்வி நிறுவனங்கள் பல இடங்களில் முளைத்து வருகின்றன. அழகுக் கலை மையங்கள் பல இடங்களில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

முறைப்படுத்தப்படாமை: இத்தொழில் தொடர்பான இன்னும் முறையான விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை என்பதுதான் பெரிய பிரச்னையே. அழகுக்கலை, தொழில் திறன் சார்ந்தது என்ற வகைக்குள் இருந்தாலும், அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தெளிவாக இல்லை. இதனால், எந்தவொரு தொழில் முனைவோரும், எந்தவித அரசு அமைப்பின் அங்கீகாரமுமின்றி அழகுக்கலை நிலையத்தையோ, அதுதொடர்பான கல்வி நிறுவனத்தையோ தொடங்க முடியும்.
தொழில்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அல்லது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான தலைமை இயக்குனரகம் என்ற அமைப்பு, ஒரு தொழில் பயிற்சி வழங்குனர், தேவைப்பட்டால் அதற்கான அங்கீகாரத்தைப் பெறலாம் என்ற விதிமுறையை வைத்துள்ளதால், அழகுக்கலை தொடர்பான தொழிலில் ஈடுபட, எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை மற்றும் ஆரம்பகட்ட சோதனையும் இல்லை.
பயிற்சி நிலையங்கள் விதிக்கும் கட்டணங்கள் சமயங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். ஏனெனில், இதுதொடர்பாக அவர்களுக்கு வரைமுறைகள் கிடையாது. எனவே, தாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய் பணத்திற்கும், அதற்கேற்ற நன்மை உண்டா? என்று ஆராய்ந்து பார்த்தே செலவு செய்ய வேண்டும். பயிற்சி நிறுவனங்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களுக்கு மயங்கிவிடக்கூடாது மற்றும் அதை ஆராயாமல் நம்பிவிடவும் கூடாது. விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, ஆய்வுசெய்த பிறகே, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இணைப்பு அங்கீகாரம்: ஒரு பயிற்சி நிறுவனத்தின் இணைப்பு அங்கீகாரம் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு குறித்து நன்கு விசாரித்தப் பிறகே, விரும்பும் பயிற்சியில் சேர வேண்டும். ஒரு பயிற்சி நிறுவனம் வைத்துள்ளதாக கூறப்படும் கூட்டு ஒத்துழைப்பு உண்மையானதா? அல்லது விளம்பரத்திற்காக மேற்கொள்ளப்படும் உத்தியா? என்பது குறித்து நன்கு ஆராய வேண்டும். வெளிநாட்டு அளவில் ஒத்துழைப்பு வைத்திருக்கும் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு, கடல்கடந்த வேலை வாய்ப்புகளுக்கான சாத்தியம் ஏற்படுகிறது.
பயிற்சி அங்கீகாரம்: தற்போதுவரை, அழகுக்கலை படிப்பில் எந்தப் பயிற்சி நிறுவனமும், பட்டங்களை வழங்குவதில்லை. டிப்ளமோ மற்றும் சான்றிதழ்கள்தான் வழங்கப்படுகின்றன. முடி திருத்தம் என்பது இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிலாக இருக்கையில், இந்திய கல்வி அமைப்பானது, அதை ஒரு தொழில் கல்வியாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனவே, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள், தாங்களாகவே ஒரு பயிற்சி அமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
அழகுக் கலை துறையில் சரியான கட்டுப்பாடுகள் இல்லாததால், பயிற்சி நிறுவனம் தொடர்பாக ஏமாறும் மாணவர்கள் அதிகபட்சம் நீதிமன்றம் வரை செல்ல முடிகிறது. எனவே, புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் வரை, மாணவர்களின் புத்திசாலித்தனமே அவர்களை காப்பாற்றுகிறது.
முக்கிய அம்சங்கள்: அழகுக்கலை துறை என்பது, முடி, தோல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சம்பந்தப்பட்டது. எனவே, பெரிய முடிதிருத்தும் நிலையங்கள், ஹெல்த் கிளப்புகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவைகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம் அல்லது ஆலோசகராகவோ, ஆசிரியராகவோ மற்றும் தொழில்முனைபவராகவும் இருக்கலாம். மேலும், சினிமா உள்ளிட்ட கலைத் துறையிலும் வேலை வாய்ப்புகள் உண்டு. மாடலிங் துறையிலும் வேலைவாய்ப்பை பெறலாம்.
அழகுக்கலை பயிற்சிக்கான கட்டணம் சுமார் ரூ.10,000 முதல் 1 லட்சம் வரை அல்லது அதற்கு மேலும், பயிற்சியின் காலகட்டம் மற்றும் தன்மையைப் பொறுத்து வேறுபடுகிறது.
டிப்ளமோ முடித்தவர்கள், புதிதாக துறையில் நுழையும்போது ரூ.6,000 முதல் 8,000 வரை பெறுவார்கள். மேலும், ஊக்கத்தொகை மற்றும் டிப்ஸ் போன்றவையும் கிடைக்கும். அதேசமயம், புகழ்பெற்ற பயிற்சி மையங்களில் படித்து வருபவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்கள் பெறும் ஊதியம் அதிகம். அவரவர் வேலை செய்யும் துறை மற்றும் இடத்தைப் பொறுத்து சம்பள விகிதங்கள் மாறுபடுகிறது.
====================================================================

 கிளீனிக்கல் ரிசர்ச் 

நோயாளிகளிடம், ஒரு மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வது கிளீனிக்கல் ரிசர்ச்(மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சி). இதுபோன்ற ஆய்வுகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மருந்துகள் பெரியளவில் பயன்பாட்டிற்கு வருகையில், பக்கவிளைவுகள் மற்றும் பாதுகாப்பை ஆய்வுசெய்வதற்கே இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன.
புதிய மருந்துகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இவற்றின்மூலம், மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகளைப் பற்றி நல்ல புரிந்துணர்வு ஏற்படுகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள ஏராளமான மருந்து கம்பெனிகள், மருந்துகள் தொடர்பான தங்களின் ஆய்வுகளை மேற்கொள்ள, இந்தியாவையே பெரிதும் விரும்புகின்றன.
குறைந்த செலவு, பலவிதமான நோயாளிகள், ஆராய்ச்சி செய்வதற்கான உலகத்தரம் வாய்ந்த வசதிகள், முறைப்படுத்தப்பட்ட ஆதரவு மற்றும் அரசினால் வழங்கப்படும் உதவித்தொகை போன்ற காரணங்களால், இந்தியா, மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிக்கு உலகளாவிய அளவில் விரும்பப்படுகிறது. எனவே இத்துறையில் அதிகளவிலான நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.
மருந்துகள் தொடர்பான ஆய்வாளரின் பணிகள்: மருந்தாய்வு நிபுணருடன், மருத்துவரும் கூட, மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சியாளராக கருதப்படுகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்கான விதிமுறைகளை வகுக்கிறார்கள். அவர்களின் முக்கிய நோக்கமே, தற்போது நடைமுறையில் இருக்கும் ஒரு நோய்க்கு, புதுவிதமான சிகிச்சை முறையைக் கண்டுபிடிப்பதேயாகும். இதுதொடர்பான சோதனைகளை அவர்கள் வடிவமைத்து, நடைமுறைப் படுத்தி கண்காணிக்கிறார்கள்.
இத்தொழிலுக்குத் தேவையான பண்புகள்:சிறந்த பகுப்பாய்வு திறன், தலைமைத்துவப் பண்பு, சோதனைகளை கண்காணிப்பதற்கான மேலாண்மைத் திறன் மற்றும் சிறந்த வியாபாரத்திறன்.
மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சியாளராவதற்கான தகுதிகள்: பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும். எம்.பி.பி.எஸ்., படிப்பிலோ அல்லது பாராமெடிக்கல் அல்லது லைப் சயின்ஸ் பிரிவுகளில் பி.எஸ்சி., படிப்பிலோ சேர்ந்து இந்த துறையில் நுழையலாம். படிப்பை முடித்து, இதுதொடர்பான பயிற்சிகள் எடுத்து, சிறந்த ஆய்வாளர் ஆகலாம்.
இத்துறையில் கிடைக்கும் சம்பளம்: ஆரம்ப நிலையில் ஒருவர் வருடத்திற்கு ரூ.3 லட்சம் பெறுகிறார், இடைநிலையில் வருடம் ரூ.7 லட்சம் பெறுகிறார் மற்றும் அனுபவ நிலையில் வருடத்திற்கு ரூ.15 லட்சம் வரை பெறுகிறார்.
இந்தப் படிப்பை எங்கே படிக்கலாம்: இத்துறை சார்ந்த படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலேயே புகழ்பெற்ற நிறுவனமாக, ஐ.சி.ஆர்.ஐ., (Institute of Clinical Research of India)திகழ்கிறது. இதன் பிற வளாகங்கள், பெங்களூர், டெஹ்ராடூன், அகமதாபாத், ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற இடங்களில் உள்ளன.
இந்த நிறுவனத்தில் கீழ்கண்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன:
* மேம்படுத்தப்பட்ட கிளீனிக்கல் ரிசர்ச் -ல் முழுநேர முதுநிலை டிப்ளமோ.
* கிளீனிக்கல் ரிசர்ச் -ல் முழுநேர எம்.எஸ்சி.
* கிளீனிக்கல் ரிசர்ச் மேலாண்மையில் முழுநேர எம்.எஸ்சி.
* கிளீனிக்கல் டேட்டா மேலாண்மையில் பகுதிநேர முதுநிலை டிப்ளமோ
* கிளீனிக்கல் ரிசர்ச் -ல் பகுதிநேர முதுநிலை டிப்ளமோ.
* கிளீனிக்கல் சோதனை மேலாண்மையில் பகுதிநேர முதுநிலை டிப்ளமோ.
* பார்மகோவிஜிலன்ஸ் -ல் பகுதிநேர முதுநிலை டிப்ளமோ.
* செவிலியர்களுக்கான கிளீனிக்கல் ரிசர்ச் -ல் பகுதிநேர முதுநிலை சான்றிதழ்.
* செவிலியர்களுக்கான கிளீனிக்கல் ரிசர்ச் -ல் பகுதிநேர சான்றிதழ்.
இவைத்தவிர இன்னும் சில படிப்புகளும் வழங்கப்படுகின்றன. அதைப்பற்றிய விவரங்கள் மற்றும் அவற்றில் சேர்வதற்கான தகுதிகளை அறிந்துகொள்ள ஐ.சி.ஆர்.ஐ. அதிகாரப்பூர்வ இணையதளம் (www.icriindia.com) செல்லவும்.
கிளீனிக்கல் ரிசர்ச் -ல் படிப்புகளை வழங்கும் இதர கல்வி நிறுவனங்கள்:
* அகாடமி ஆப் கிளினிக்கல் எக்ஸ்லன்ஸ் (ஏ.சி.இ.,) - மும்பை.
* பார்மசூடிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவனம் - ஐதராபாத்.
* மும்பை பார்மசி கல்லூரி - மும்பை.
=======================================================================

அனிமேஷன்


 அதிக வருமானமும், வேலை வாய்ப்புகளும் தரும் துறையாக வளர்ந்துள்ள அனிமேஷன் துறையின் மீதான ஆர்வமும் மாணவர்களுக்கு அதிகரித்து வருகிறது. இத்துறை தொடர்பான படிப்புகளில் சேரும் முறைகளை தெளிவாக அறிதல் முக்கியம்.
படிப்புகள்: அனிமேஷன் தொடர்பான ஏராளமான இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. அவற்றில்,
* BSc/MSc in Animation
* BA/MA in Multimedia and Visual Effects
* Certificate courses in Animation and Graphics
* Diplomas in Animation, Video Game Programming, Game Art, Computer generated Imagery(CGI), Design, Stop & motion
Animation, Claymation and 3D filmmaking போன்றவை முக்கியமானவை.
வடிவமைப்புக்கான தேசிய கல்வி நிறுவனம் (NID), BITS, IIT மற்றும் FTII, புனே போன்ற கல்வி நிறுவனங்கள், அனிமேஷன், மல்டிமீடியா, வடிவமைப்பு மற்றும் கணிப்பொறி கிராபிக்ஸ் போன்ற பிரிவுகளில் பலவிதமான படிப்புகளை வழங்குகின்றன.
அனிமேஷன் துறை என்பது அதிகள வில் தொழில்நுட்பம் தொடர்பானது என்பதால், அத்துறையில் ஈடுபடுபவர், சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் குறித்து தெளிவான அறிவை தினந்தோறும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். உயர்கல்வியில் சேர வேண்டுமெனில், அனிமேஷன் அல்லது மல்டிமீடியா அல்லது கவின் கலையில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அதேசமயத்தில், இத்துறையில் சிறப்பு படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள், சில கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்கின்றன. இந்நிறுவனங்கள், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், கவின் கலை அல்லது பொறியியல் பின்னணி கொண்ட மாணவர்களை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன.
சேர்க்கை:இத்துறையில் நுழைய நீங்கள் பாடப்புத்தகங்களை காதலிக்க வேண்டிய அவசியமில்லை. தேவை யான நேரத்தில், உங்களின் படைப்பாக்க மற்றும் கலைத் திறன்களை வெளிப்படுத்தினால் போதும்.எனவே, உங்களின் வரைதல் திறன், களிமண் செய்உருத் திறன் (clay modelling), பெயிண்டிங், காட்சிப்படுத்தும் திறன் ஆகியவற்றை தேர்வின்போது வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும். இதைத்தவிர, ++ C ++ and Java போன்ற நிலைகளிலான கணிப்பொறி அறிவும் உங்களுக்கு கூடுதல் தகுதியை அளிக்கும்.
படிப்பின் காலம்:இத்துறை சார்ந்த படிப்புகளின் காலம், 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை நீள்கின்றன. மேலும், பல பகுதிநேர மற்றும் ஆன்லைன் படிப்புகளும் உள்ளன. இத்தகையப் படிப்புகள் உங்களின் நேர வசதிக்கு ஏற்றவை. எனினும், முழுநேர இளநிலை பட்டப்படிப்பாக படித்தல் இத்துறையில் நிபுணத்துவம் பெற ஏதுவாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

======================================================================

ஊக்கத்தொகையுடன் இரட்டை பட்டப் படிப்பு

 
அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் உயர்தரத்தை மேம்படுத்தும் வகையில் போபால், கொல்கத்தா, மொகாலி, புனே மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 5 பகுதிகளில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,) துவக்கப்பட்டது.
இக்கல்வி நிறுவனங்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எஸ்-எம்.எஸ்., டியூல் டிகிரி படிப்பிற்கு சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் படிவத்தை ஆன்லைனில் பெற்று அத்துடன் ரூ.500ம் (எஸ்.சி/எஸ்.டி.,மாணவர்கள் ரூ.250ம்) டிடி, மற்றும் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, ஜூன் 15 முதல் ஜூலை 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கவுன்சிலிங் மற்றும் ஆப்டிடியூட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தவல்களுக்கு http://www.iiseradmissions.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும். 
=======================================================================

"பயோஇன்பர்மேடிக்ஸ்'

 
இன்றைய மாணவர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய துறைகளில் "பயோஇன்பர்மேடிக்ஸ்' துறையும் ஒன்று. பயாலஜி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகள் இணைந்ததே பயோஇன்பர்மேடிக்ஸ். பயோஇன்பர்மேடிக்ஸ் துறை பயாலஜிகல் டேட்டா தொடர்பான பலவித பணிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. டேட்டா அனலிசிஸ் டூல்ஸ் மேம்பாடு, பயாலஜிகல் மேக்ரோ மாலிகியூல்ஸ் மாடலிங், மெடபாலிக் பாத்வேய்ஸ், டிசைனிங் ஆப் நியூ மாலிகியூல்ஸ், பெப்டைட் வேசின்ஸ், ப்ரோடீன்ஸ் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
தேவைப்படும் திறன்கள்: பயாலஜியில் அதீத ஆர்வம், கணினி மென்பொருள் துறையில் நல்ல அறிவு, நல்ல விழிப்புணர்வு, நிர்வாக திறன்கள், தர்க்கரீதியான மற்றும் பகுப்பாய்வு திறன்கள்.
வேலை வாய்ப்புகள்: இத்துறை நிபுணர்கள், பார்மசூடிகல் மற்றும் பயோடெக் கம்பெனிகள், முன்னணி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பல இடங்களில் பணி வாய்ப்புகளை பெறலாம்.
சம்பள விவரம்: அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிந்தால், உங்களின் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மாத சம்பளமாக பெறலாம். அதேசமயம், தனியார் பார்மசூடிகல் கம்பெனிகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர், ஒரு வருடத்திற்கு ரூ.4,50,000 முதல் ரூ.6,00,000 வரை பெறலாம்.
கல்வி: பி.எஸ்சி., பி.டெக்., 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளாக பயோஇன்பர்மேடிக்ஸ் சில கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன.
பிளஸ் 2வில் பயாலஜி படித்தவர்கள் பெரும்பாலும் இப்படிப்புகளுக்கு சிறப்பு தகுதி பெற்றவர்கள் என்றாலும் பயாலஜி அல்லாத பிற அறிவியல் பாடப்பிரிவு படித்தவர்களும் இப்படிப்புகளில் சேரமுடியும். பயாலஜி பிரிவில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள், எம்.எஸ்சி. பயோஇன்பர்மேடிக்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஏற்கனவே பயாலஜி பாடத்தில் எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், பயோஇன்பர்மேடிக்ஸ் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
இப்படிப்பிற்கான கல்வி நிறுவனங்கள்:* அமிட்டி பல்கலைக்கழகம், நொய்டா
* அண்ணாமலை பல்கலைக்கழகம்
* பயோஇன்பர்மேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, நொய்டா.
* சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை.
* எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை.
* வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர்.
* ஜெய்புரியா இன்ஸ்டிடியூட், காசியாபாத்.
* டாக்டர் டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகம், புனே.
========================================================================


மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (சி.பி.ஆர்.ஐ.,)

 அறிமுகம்: கட்டிடக்கலை அறிவியலில், மேம்பாடு, நுட்பம், தொழில்திறன் ஆகியவற்றை புகுத்தி, அந்த துறையில் நாட்டிற்கு சேவை செய்யும் நோக்கத்தில் கடந்த 1947-ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் ஏற்படுத்தப்பட்டது தான் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்.
இந்த நிறுவனம் சி.ஐ.பி., (நெதர்லாந்து), பி.ஆர்.இ., (பிரிட்டன்), ஏ.எஸ்.டி.எம்., (அமெரிக்கா), சி.எஸ்.ஐ.ஆர்.ஓ., (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட பல பன்னாட்டு அமைப்புகளுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. மேலும் உள்நாட்டு அளவில், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், கிராமப் பகுதிகள் அமைச்சகம், வீட்டு வசதி வாரியங்கள் மற்றும் டி.எஸ்.டி. உள்ளிட்ட பல உயர்ந்த நிலைகளில் உறவு வைத்துள்ளது.
நோக்கம்:

* ஷெல்டர் திட்டமிடுதல்
* கட்டிடப் பொருட்கள்
* கட்டமைப்புகள் மற்றும் அடித்தளங்கள்
* கட்டிடப் பொருட்கள்
மற்றும் அமைப்புகளின் முன்னேற்றத்திற்கு புதிய தொழில் நுட்பங்களை மேம்படுத்தல் உள்ளிட்ட கட்டிட அறிவியலின் அனைத்து அம்சங்களிலும் அடிப்படை ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
ஆராய்ச்சி - மேம்பாட்டு பிரிவுகள்: * கட்டுமான செயல்பாடு
* களிமண் தயாரிப்புகள்
* கட்டுமானம் - நீட்டிப்பு
* தீ பொறியியல்
* வீடுகட்டுதல் - திட்டமிடுதல்
* கிராமப்புற கட்டிடம் - சூழல்
* கட்டுமான பொறியியல்
உள்ளிட்ட பல ஆராய்ச்சி - மேம்பாட்டு பிரிவுகள் உள்ளன.
கல்வி - பயிற்சி வாய்ப்புகள்: இந்த ஆராய்ச்சி நிறுவனம்(சி.பி.ஆர்.ஐ), கட்டிட ஆராய்ச்சி துறை சம்பந்தமாக, இரண்டு வருட முதுநிலை படிப்பை வழங்குகிறது. "உள்கட்டமைப்பு (கட்டடங்கள்/சாலைகள்) மற்றும் பேரிடர் குறைப்பு" என்ற தலைப்பில் இந்த படிப்பு நடத்தப்படுகிறது.
பயிற்சிகள்: பொறியாளர்கள், கட்டிடக்கலை நிபுணர், கைவினைஞர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோருக்கு, கட்டிட அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வெவ்வேறு துறைகளில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
இப்பயிற்சி பெற இலங்கை, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் பூடான் போன்ற பல நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். இவற்றைப் பற்றி மேலும் தகவல்கள் அறிய www.cbri.res.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள்: ரூர்கியிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்துடன்(ஐ.ஐ.டி), சி.பி.ஆர்.ஐ. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன்மூலம் இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கிடையேயான தொழில்நுட்பத் திறன்களை பகிர்ந்துகொள்ளும்.
இதைத்தவிர, ஆய்வுத்திட்டங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், ஆராய்ச்சி - மேம்பாட்டு முயற்சிகளை பயன்மிக்க முறைகளில் மாற்றியமைக்கவும், தென்ஆப்ரிக்காவிலுள்ள எம்/எஸ் மெட்டா டைனமிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. 
=====================================================================

 இன்டீரியர் டிசைன்

உட்புற அலங்காரம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. கட்டிடக்கலையின் அம்சங்கள், பொருளின் வடிவமைப்பு மற்றும் சுற்றுசூழல் உளவியல் போன்ற பல அம்சங்கள், உட்புற பரப்பை, நேர்த்தியாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் மாற்றும் பணியில் கலந்திருக்கின்றன. ஒரு உட்புற அலங்கரிப்பாளர் என்பவர், தனது திறமையை வெளிப்படுத்தும்போது, வாடிக்கையாளரின் தேவையையும் மனதில் கொண்டு, அவரை திருப்திப்படுத்த வேண்டும். தான் ஏற்கனவே திட்டமிட்ட வடிவமைப்பு முறையை மாற்றம் செய்யவேண்டிய நிலை வந்தால், வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து, அதை மாற்றிக்கொள்ள அலங்கரிப்பாளர் தயங்கக்கூடாது.
உள்கட்டமைப்பின் பிரம்மாண்ட வளர்ச்சியால், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலும் இன்டீரியர் டிசைன் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள்: நல்ல படைப்புத் திறன்தான் இத்துறைக்கு அடிப்படையான மூலதனம். இத்தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். அலங்காரம் தொடர்புடைய பலவித பொருட்களைப் பற்றிய விரிவான அறிவும், அறிமுகமும் இருக்க வேண்டும். மேலும், எந்தெந்த வகை அலங்காரங்களுக்கு, எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றியும் தெளிவான அறிவை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்களின் நிதிநிலைக்கேற்ப, ஒரு தெளிவான திட்டத்தை உடனடியாக தயாரித்து வழங்க முடியும்.
படிப்புகள்: ஜெய்ப்பூரில் உள்ள அயோஜன் ஸ்கூல் ஆப் ஆர்க், இன்டீரியர் டிசைன் பிரிவில் 5 ஆண்டு படிப்பாக வழங்குகிறது. சென்னை பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்சி., மற்றும் பி.எப்.ஏ., படிப்பாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூன்று ஆண்டு பி.எஸ்சி., ஓர் ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளாக வழங்குகின்றன. கோவை அவினாசிலிங்கம் பல்கலை பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் உடன் இன்டீரியர் டிசைன் பாடப்பிரிவை வழங்குகிறது.
கல்வி தகுதி: மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருப்பதே, உட்புற அலங்கார படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி. பலவித கல்வி நிறுவனங்களில், உங்களின் வரைதல் மற்றும் வடிவமைப்பு திறனை சோதிக்கும் வகையில், நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இத்தேர்வுகளில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வேண்டும்.
இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Madras University
AvinashilingamUniversity, Coimbatore
Mangalore University
University of Mumbai
Arch Academy of Design, Jaipur
Amity School of Design, Delhi
Guru Nanak Dev University, Amristar


 ====================================================================

நிதி ஆலோசகர்களுக்கான வாய்ப்புகள்

பொதுமக்கள் தங்களின் பணத்தை லாபகரமாக எவ்வாறு முதலீடு செய்வது என்று வழிகாட்டுவது நிதி முதலீட்டு ஆலோசகர்களின் முக்கிய பணி.
முதலீட்டு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன், பிணையத் தொகையின் மதிப்பு, கம்பெனிகள், கம்பெனிகளின் குழுமம் அல்லது தொழில்துறை நிறுவனங்களின் நிதிநிலை குறித்த பகுப்பாய்வதன் மூலம் சிறந்த நிதி ஆலோசனைகளை வழங்க உதவும்.
நிறுவனத்தின் எதிர்கால வாய்ப்பு பற்றிய தெளிவான பார்வையை பெறவும், அதன் நிர்வாக செயல்பாட்டை வரையறை செய்யவும், நிறுவன அதிகாரிகளை, நிதி ஆலோசகர் அடிக்கடி சந்தித்து, அறிக்கை தயாரிக்கின்றனர். இதுபோன்ற விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், நிதி ஆலோசகர்கள், பங்குகளை வாங்குதல், விற்றல் அல்லது வைத்திருத்தல் தொடர்பான முதலீட்டு பரிந்துரைகளை செய்கிறார்கள்.
தகுதிகள்: பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பைனான்ஸ், அக்கவுண்டிங் அல்லது புள்ளியியல் ஆகிய பாடங்களில் இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு இத்துறையில் முன்னுரிமை உண்டு. அதேசமயம், எம்.பி.ஏ. அல்லது சான்றிதழ் தகுதியும் பணியை தக்கவைக்க உதவும்.
முதலீட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஓய்வூதிய மற்றும் பிணையத் தொகை நிறுவனங்கள், வியாபார மீடியா மற்றும் பிற வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
எதிர்கால வாய்ப்புகள்: நிதி ஆலோசகர்களுக்கான வேலைவாய்ப்பு சமீப காலங்களில் மிகவும் அதிகரித்து வருகிறது. வங்கிகளும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் அதிகளவு நிதி ஆலோசகர்களை பணியமர்த்துகின்றன. ஏனெனில், எந்தமாதிரி பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் வழிகாட்டுகிறார்கள்.
சம்பளம்: இத்துறையில் தகுதியான மற்றும் திறமையான நபர்களுக்கு நல்ல சம்பளம் உண்டு. குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறலாம். அதேசமயம் நல்ல அனுபவம் உள்ள ஒருவர் லட்சங்களிலும் சம்பளம் பெறலாம். 
======================================================================

 அறிவியல் துறையில் அதிநுட்ப முதுநிலைப் படிப்புகள்


 
எம்.எஸ்சி., பொதுசுகாதாரம் மற்றும் பூச்சியியல்: M.sc., Public Health Entomology-) வெப்பமண்டல நாடுகளில் எளிதில் பரவக்கூடிய நோய்களான பிளேக், கொள்ளை நோய், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களைத் தடுப்பது குறித்த ஆய்வில் புதுவை வெக்டார் கன்ட்ரோல் ஆய்வு மையம் (VCRC) முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இத்துறை சார்ந்த படிப்பை, M.sc., Public Health Entomology என்ற பெயரில் வழங்குகிறது. 

இரண்டாண்டு படிப்பான இதற்கு, பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், வாழ்க்கை அறிவியல், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், உண்வேதியியல், கால்நடை மருத்துவம், எம்.பி.பி.எஸ்., - உயிரி தொழில்நுட்பவியலுடன்(பயோ டெக்னாலஜி) கூடிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விக்கட்டணமாக 5948 ரூபாய் செலுத்த வேண்டும். மிகச்சிறந்த மாணவர்கள் அதே நிறுவனத்தில் பணிப் பயிற்சியை ஊக்கத்தொகையுடன் பெறலாம். உலக சுகாதார நிறுவனம் சார்ந்த அமைப்புகள், பொதுசுகாதாரத்துறை, என்.ஜி. ஓ.,க்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம். படிப்பு குறித்த மேலும் விவரங்களை http://vcrc.res.in என்ற முகவரியில் காணலாம். குருகோவிந்த்சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்திலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
எம்.எஸ்சி., உணவுத் தொழில்நுட்பம்: (Food Technology) உலகமயமாக்கல் உணவுத் தயாரிப்பு நிறுவனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உணவு சார்ந்த மக்களின் தேவைகள் ஒரு போதும் குறைவதாயில்லை; வெவ்வெறு வகைகளாக விரிவடையவே செய்கிறது. உணவுசார் துறையில், அலகாபாத் பல்கலைக்கழகத்தின் உணவுத் தொழில்நுட்ப மையம் இரண்டாண்டு முதுகலைப் படிப்பை வழங்குகிறது. உணவுத் தொழிற்சாலை, தயாரிப்புக்கான தேவை, நுகர்வோர் விழிப்புணர்வு, உலகமயமாதல் உள்ளிட்ட பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மேலும், இத்துறை சார்ந்த சட்டங்கள், விதிமுறைகள், முகவர் நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படுகின்றன. உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல், காய்கறி, பழங்கள், தானியங்கள், பண்ணை உற்பத்திப் பொருட்கள், பால், இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவு தயாரிப்புகள் குறித்தும் அறிமுகம் செய்யப்படுகிறது.நான்கு பருவங்களாக இரண்டாண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. பி.எஸ்சி., வேதியியல், உயிரி வேதியியல், மனையியல், மனைப் பொருளியல், வேளாண் மை, வேளாண் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இளநிலைப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://www.alldunivips.in/ என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம். மைசூர் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆய்வு மையம்(இஊகூகீஐ) நாக்பூர் பல்கலைக்கழகம், அனந்தபூர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
எம்.எஸ்சி., உயிரிபுள்ளியியல்: -(-Biostatistics-) வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் உயிரிபுள்ளியியல் துறை இப்படிப்பை இரண்டாண்டு படிப்பாக வழங்குகிறது. இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து 46 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொள்ளை நோயியல், ஆய்வகங்கள், மருத்துவ விசாரணைகள் உள்ளிட்டவற் றுக்கு இத்துறை சார்ந்த படிப்பு உதவுகிறது. இரண்டாம் ஆண்டில், மாணவர்கள் மருத்துவமனைகளில் புள்ளிவிவர ஆலோசகர்களாக பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர். இரண்டாம் ஆண்டில் நிறைவான ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச மருந்துக்கம்பெனிகள் இந்தியாவில் அடியெடுத்து வைத்திருப் பதை அடுத்து, இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், அமிர்தா இன்ஸ்டி டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. புள்ளியியலை முதன்மைப் பாடமாகவோ, துணைப் பாடமாகவோ படித்திருப்பது அவசியம். இத்துறை சார்ந்த மேலும் விவரங்களுக்கு www.cmcbiostatistics.ac.in என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.
எம்.எஸ்சி., மருத்துவ நுண்ணுயிரியல்: (Medical Microbiology) நோய்த்தாக்குதலுக்குக் காரணமான கரிமங்கள் பற்றி இவ்வியல் கற்றுத்தருகிறது. சில கரிமங்கள் எப்படி நோய்த்தொற்றுக்குக் காரணமாகின்றன, எப்படி பரவுகின்றன, மனித உடலில் அவை எப்படி வினைபுரிகின்றன, அவற்றை முற்றிலுமாக அழிப்பது எப்படி என்பவை உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. கண்ணூர் பல்கலைக்கழகத்தில், உயிரி மருத்துவ கருவியாக்கம் மற்றும் ஆய்வில் அணுகுமுறைகள், நோய் எதிர்ப்பியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் மருத்துவ மரபணுவியல், கிளினிக்கல் மைக்ரோ பயாலஜி, பரிசோதனை நுண்ணுயிரியல் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கி பாடத்திட்டம் அமைந்துள்ளது. இதே துறையில் இளநிலைப்பட்டம் பெற்றவர்கள் இரண்டாண்டு படிப் பாகவும்; பி.எஸ்சி பயாலஜிக்கல் சயின்ஸ், நுண்ணுயிரியல், உயிரி தொழில் நுட்பம், உயிரிவேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிரியலை ஒரு பாடமாகப் படித்த வேதியியல் பட்டதாரிகள் மூன்றாண்டு படிப்பாக படிக்கலாம். தளசேரியில் உள்ள ஸ்கூல் ஆப் ஹெல்த் சயின்ஸ் இப்படிப்பை வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு www.kannuruniversity.ac.in என்ற இணைய முகவரியை பார்க்கவும். ஜிப்மர் பல்கலைக்கழகத்திலும் இப்படி ப்பு உள்ளது.
எம்.எஸ்சி., மருத்துவ உயிரிவேதியியல்: (Medical biochemistry)மூன்றாண்டு படிப்பாக ஜிப்மர் இதை வழங்குகிறது. ஆண்டுக்கு 1,200 ரூபாய் கட்டணம். சேர்க்கைக் கட்டணம் 3,000 ரூபாய். வேதியியல், உயிரி வேதியியல் பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டில்லி பல்க லைக்கழகம், கண்ணூர் பல்கலைக் கழங்களும் இப்படிப்பை வழங்குகின்றன. உயிரி வேதியியல் வினைமாற்ற ங்களைப் பற்றிய இப்படிப்பை முடித்தவர்கள், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளில் எளிதில் வேலைவாய்ப்பைப் பெறலாம்.கூடுதல் விவரங்களுக்கு www.jipmer.edu

Masters in Habitat policy &Practice: மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனம் இரண்டாண்டுப் படிப்பாக வழங்குகிறது. சமூக அறிவியல், சட்டம் பயின்றவர்களுக்கு எம்.ஏ., பட்டமாகவும்; உடலியல் அறிவியல், பொறி யியல், கட்டடக் கலையியல் முடித்தவர்களுக்கு எம்.எஸ்சி., பட்ட மாகவும் வழங்கப்படுகிறது. நகரியக் கொள்கை தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து ரூபாயும்; மற்றவர்களுக்கு 70 ஆயிரம் ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.tiss.edu
 ===================================================================


விமானத் துறையில் பொறியியல் வாய்ப்புகள்



விமானத் துறையில் சிவில், வணிகம் மற்றும் ராணுவம் ஆகிய பிரிவுகள் உள்ளன. இந்தியாவில், விமானப் போக்குவரத்து துறையை மேம்படுத்த பலவித நடவடிக்கைகளை மத்திய விமானப் போக்குவரத்து துறை எடுத்து வருகிறது. விமானநிலைய வசதி, வான்வழி போக்குவரத்து சேவைகள், பயணிகள் மற்றும் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களின் இடப்பெயர்வு ஆகியவற்றையும் அமைச்சகம் கவனித்துக் கொள்கிறது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து விதிமுறைகள், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரால் செயல்படுத்தப்படுகின்றன. விமான நிறுவனங்கள், உள்கட்டமைப்பு துறை மற்றும் விமான நிலையங்கள் ஆகியவை, விமானப் போக்குவரத்து துறையின் பிரதானப் பிரிவுகள். இத்துறையில் பொறியாளர்களின் பங்கு குறித்து பார்க்கலாம்.
பொறியியல் துறை: ஒரு இயந்திரம் என்ற முறையில், ஒரு விமானத்தில், பல சிக்கலான தொழில்நுட்ப விஷயங்கள் உள்ளன. ஒரு விமானம் பறக்கும்போது பல பயணிகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையும் சுமந்து செல்கிறது. அதேபோல ஒரு விமானமும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்படுகிறது. எனவே, தொழில்நுட்ப ரீதியான முறையான பராமரிப்பு ஒரு விமானத்திற்கு மிகவும் அவசியம்.
இந்த முக்கியப் பணியை மேற்கொள்வதுதான் பொறியியல் துறை. இந்த பணிக்கு, மெக்கானிக்கல், ஏரோநாடிகல் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவுகளில் படித்த பொறியாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஏரோநாடிகல் பொறியியலில், ஏர்கிராப்ட் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் ஆகிய பிரிவுகள் உள்ளன.
தேவையான பண்புகள்: ஒரு ஏரோநாடிகல் அல்லது மெக்கானிக்கல் பொறியாளருக்கு எப்போதுமே விழிப்புணர்வு இருக்க வேண்டும். தர்க்கரீதியாகவும், பகுப்பாய்வு ரீதியாகவும், புதுமையாகவும் சிந்தி க்க தெரிய வேண்டும்.
தகுதிகள்: ஏரோநாடிகல் பொறியாளராக ஆவதற்கு, அடிப்படையில் பி.இ. அல்லது பி.டெக். படித்திருக்க வேண்டும். நாட்டின் புகழ்பெற்ற பல பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐ.ஐ.டி -கள், இத்துறையில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. மேலும் சில பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களும் இத்துறையில் டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன.
சம்பளம்: ஒரு உதவி பொறியாளர் ஆரம்ப நிலையில் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பெறுகிறார். அவரின் அனுபவம் மற்றும் செயல்பாட்டைப் பொறு த்து அவரின் ஊதியமும் கூடுகிறது.
செயலாக்கத் துறை: விமானிகளுக்கு (பைலட்) தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது முதல் பல்வேறு நிலைகளில் இத்துறைக்கு முக்கிய உண்டு. விமான பொறியாளர் (Flight engineer), விமான தொழில்நுட்ப வல்லுனர் (aircraft technician), விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் தேவைகளை சரிசெய்பவர், பைலட் அதிகாரி ஆகியோர் இத்துறையின் முக்கிய செயலதிகாரிகள். இவர்களில், விமானப் பொறியாளர் என்பவர் ஒரு விமானத்தின் சீரான மற்றும் பாதுகாப்பான இயக்கத்திற்கு பொறுப்பேற்கிறார். இந்த பணியில் சேர வேண்டுமெனில், ஏரோநாடிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிகல் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விமான தொழில்நுட்ப வல்லுனர் என்பவர், விமானத்தின் இன்ஜின் மற்றும் அது தொடர்பான விஷயங்களை பராமரிக்கும் பணியை செய்கிறார். இந்த பணியில் சேர, பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, Aircraft Maintenance Engineering படிப்பில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
===================================================================

 ஜெம்மாலஜி' துறையில் பணிபுரிய விருப்பமா?


ரத்தினக் கற்கள், வைரங்கள், தங்க நகைத்தயாரிப்பு மற்றும் நகை வடிவமைப்பு போன்ற துறைகளை தொழில்நுட்ப ரீதியாக படிப்பது "ஜெம் மாலஜி'.
இன்றைய நிலையில் தொ ழில் நுட்பம் நன்கு வளர்ந் துள்ளதால், கணினி அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
விலையுயர்ந்த கற்களின் அமைப்பு மற்றும் பண மதிப்பு அடிப்படையில், அவற்றை அடையாளப்படுத்தி, தரப் படுத்தி மற்றும் வகைப் படுத்துவது ஒரு ஜெம்மால ஜிஸ்டின் பணியாகும். மேலும் அவை சேதமாகாமல் தடுக்கும் வழிகளையும் அவர்கள் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். விலையுயர்ந்த கற்கள்(ஜெம்ஸ்) மற்றும் தங்க நகை தொழி லானது, இந்தியாவில் அதிக பணம் புரளும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவின் வைரத் தொழில்துறையானது, உலகளவில் புகழ்பெற்ற ஒன்று.
மதிப்புத் தரக்கூடியதாகவும், ஏற்றுமதிப் பொருளாகவும், அழகுப் பொருளாகவும் இருப் பதால் வைரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நமது குணாதிசயத்திலும், அதிர்ஷ்டத்திலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பொரு ளாக விலையுயர்ந்த கற்கள் இன்றைய நிலையில் மதிக்கப் படுகின்றன.
மேலும், தங்கம் மற்றும் வைரங்கள் சேர்க்கப்பட்டு, புதிய புதிய டிசைன்கள் அவ்வப்போது அறிமுகப் படுத்தப்படுவதால், இத்துறை யில் நிபுணர் களுக்கான தேவை என்றும் உண்டு.
தேவைப்படும் பண்புகள்: சிறந்த கிரகிக்கும் திறன், கற்பனை மற்றும் படைப் பாக்கத் திறன், வண்ணப் பொருத்தம் பற்றிய அறிவு, அழகுணர்ச்சி, பாரம்பரிய வடிவமைப்புகளைப் பற்றிய அறிவு, கடின உழைப்புடன் சிறந்த தகவல்தொடர்புத் திறன் போன்றவை அவசியம். இவற் றுடன் மக்களின் ரசனைகள் மற்றும் மாறும் சூழலைக் கருத்தில்கொண்டு செயல்படு பவர்களுக்கு உகந்த துறை இது.
ஒருவர் இத்துறையில் வடிவமைப்பாளர், மேலாளர், உற்பத்தியாளர், ஆராய்ச்சியா ளர், தொழில்நுட்ப மதிப்பீட் டாளர் அல்லது இத்துறை சார்ந்த கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் போன்ற பலவிதப் பணிகளில், தனக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்யலாம். ஒரு மாதம் சான்றிதழ் படிப்பு முதல் டிப்ளமோ, ஓர் ஆண்டு அட்வான்ஸ்ட் படிப்பு என பல்வேறு நிலைகளில் துறை சார்ந்த படிப்புகள் உள்ளன.
கல்வி நிறுவனங்கள்:

Arch Academy of Design, Jaipur
Delhi Gems and Jewellery Institute, New Delhi
Gemcraft Jewellery Institute, New Delhi
Gemmological Institute of India, Mumbai
Indian Institute of Gemmolgy, New Delhi
Indian Institute of Gems and Jewellery, New Delhi
Indian Institute of Jewellery, Mumbai
National Institute of Jewellery Design & Technology, New Delhi
St. Xavier's College, Mumbai
Shingar Institute & Kolkatta.

 ======================================================================

அறிவியல் துறையில் அதிநுட்ப முதுநிலைப் படிப்புகள்

 
துறை சார்ந்த மாற்றத்திற்கும், சந்தை தேவைகளுக்கும் ஏற்ப பல்வேறுபட்ட திறன்கொண்ட மனிதவளத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. அத்தகைய தேவையை நிவர்த்தி செய்யும் முழுப்பொறுப்பு உள்ள கல்வி துறையும் அதற்குரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. அதன்படி, பல்வேறு நுட்பமான பிரிவுகள் புதியதாக உருவாகி வருகின்றன. அத்தகைய முதுநிலைப் படிப்புகளை இன்றைய மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
எம்.எஸ்சி., ஜியோஇன்பர்மேடிக்ஸ்: புவித் தகவலியல் (ஜியோ இன்பர்மேடிக்ஸ்) பாடம் மாணவர்களிடையே அவ்வளவு பிரபலமில்லை. புவித்தரவுத் தொகுப்பு (ஜியோகிரபிக் டேட்டா பேஸ்) ரிமோட் சென்சிங், புவியமைப்பு தகவல் முறை (Geographical Information
System) போன்றவற்றில் இப்படிப்பின் பயன்பாடு அதிகம்.
இப்படிப்பு 15 தேற்றம் முறையிலான பாடங்களையும், ஆறு மாத ஆய்வு மற்றும் ஆய்வுத்திட்டக் கருத்துரு சமர்ப்பித்தல் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. 18 மாத படிப்பான இதற்கு 2.50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எம்.எஸ்சி.,/ எம்.டெக்., இயற்பியல், கணிதம், புள்ளியியல், புவியியல், புவிஇயற்பியல், வானியல், கடலியல், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல், எம்.சி.ஏ., இயற்கை அறிவியல், சிவில் இன்ஜி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜி., உள்ளிட்ட மற்றும் இணையான படிப்புகளை முடித்திருக்க வேண்டும். டேராடூனில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தின் மூலம் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
இந்நிறுவனம் இஸ்ரோவின் ஓர் அங்கம். உஸ்மானியா பல்கலைக்கழகம், குர்கான் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோஇன்பர்மேடிக்ஸ் அண்டு டெக்னாலஜி, புனே சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோஇன்பர்மேடிக்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு www.iirs.gov.in/index.php

எம்.எஸ்சி., இன்ஸ்ட்ரூமென்டேஷன் சயின்ஸ்: அறிவியலின் நவீன பரிமாணத்தில் குறிப்பிடத்தக்க துறை இது. நவீன உபகரணங்கள் தொடர்பான இத்துறைக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இத்துறை சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்குத் தேவையும் அதிகம். தொழிற்சாலையில் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் இத்துறை சார்ந்தவர்களுக்குப் பணிவாய்ப்பு அதிகம். அனல் மின் நிலையங்கள், இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் பணிவாய்ப்புகள் உள்ளன.
எம்.எஸ்சி., இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பை புனே பல்கலைக்கழகம் வழங்குகிறது. இரண்டாண்டு படிப்பான இதற்கு ஆண்டுக்கு 58 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழிலியற்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் அல்லது இன்ஜி., பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை http://unipune.ac.in/dept/science/Instrumentation_science/default.htm என்ற இணைய முகவரியில் காணலாம். குவாலியர் ஜிவாஜி பல்கலைக்கழகம், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி போன்ற கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
எம்.எஸ்சி., கணிதப்பயன்பாட்டியல்: (Applications of Mathematics) கணிதத்தின் சிறப்பான பாகுபாடே கணிதப்பயன்பாட்டியல் ஆகும். நிதர்சன வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு கணிதப்பயன்பாட்டின் மூலம் தீர்வு காண்பதாகும். தகவல் தொடர்பு முறைகள், வானூர்தி, வாகனங்கள், சங்கிலித்தொடர் வினியோக முறை, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் அடிநாதமாக கணிதப்பயன்பாட்டியல் உள்ளது.
சென்னை மேத்தமெடிக்கல் இன்ஸ்டிடியூட் இரண்டாண்டுப் படிப்பை வழங்குகிறது. கல்விக்கட்ட-ணம் 4,800 ரூபாய் மட்டுமே. முதலாண்டில் இரு பருவத்தேர்வுகளும்; இரண்டாமாண்டில் திட்ட ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், தொழில்சார் களப்பணி என்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணிதத்தில் இளம் அறிவியல் பாடம் முடித்திருக்க வேண்டும். இயற்பியல், புள்ளியியல், இன்ஜினியரிங் பாடங்களும் விரும்பத்தக்கன. மேலும் விவரங்களுக்கு www.cmi.ac.in

சர்வதேச வர்த்தகச் செயல்முறை: (Global Business Operations) மனிதவள மேம்பாடு, கணக்கு மற்றும் நிதி, வணிகம், சந்தையியல், தகவல் தொடர்பியல் துறைகளுடன் இப்படிப்பு தொடர்புடையது. உள்நாட்டுப் பொருளாதார நிலையில் சம கால மாறுபாடும், சர்வதேச நிலைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் விரிவாகக் கற்றுத் தருகிறது. சந்தை சார்ந்த வளர்ச்சி முறை குறித்தும் அறிந்து கொள்ளலாம். இரண்டாண்டு படிப்பான இதற்கு, பருவத்துக்கு 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு ஒன்றில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டில்லி பல்கலையின் ஓர் அங்கமான ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் (SRCC) இப்படிப்பு வழங்கப்படுகிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை, சந்தை ஆராய்ச்சி, வங்கி போன்றவற்றில் வேலைவாய்ப்பு உள்ளது. வளாகத்தேர்வில் ஜி.இ., மணி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பிபால் ரிசர்ச், டிரிடென்ட் குழுமம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் பங்கேற்று சிறந்த மாணவர்களை அள்ளிக் கொள்கின்றன. இதர விவரங்களுக்கு www.srcc.edu இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
==========================================================================


 கணிதத் துறை- ஒரு பார்வை


சில மாணவர்களுக்கு கணிதப் பாடத்தின் மீது அதீத ஆர்வம்; வேறு சில மாணவர்களுக்கு கணிதம் என்றாலே ஒரு வித பயம். ஒரே வகுப்பில் இந்த இரண்டு நிலை மாணவர்களையும் மிகச் சாதாரணமாக பார்க்க முடியும். உண்மையில் கணிதம் ஒரு அற்புதமான துறை. அன்றாட வாழ்க்கையில் அனைவராலும் பயன்படுத்தப்படும் கணிதத்தை பார்க்கும் விதத்திலேயே அது கடினமானதாகவும், மிக எளிதானதாகவும் தெரிகிறது. பயத்தை விடுத்து தொடர் பயிற்சி பெறுவதால் மிக எளிதாக கணிதத்தை கற்றுக்கொள்ள முடியும்.
பொறியியல் மற்றும் தொழில் நுட்பம், பவுதீக அறிவியல், புள்ளியியல், கணிப்பொறி, வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு நிதி கணிதம் மற்றும் வாழ்க்கை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் கணிதப் பயன்பாடு அவசியமாக உள்ளது. கணிதமானது, தூய கணிதம் (ணீதணூஞு ட்ச்tடஞுட்ச்tடிஞிண்) மற்றும் துணைநிலை கணிதம் (ச்ணீணீடூடிஞுஞீ ட்ச்tடஞுட்ச்tடிஞிண்) என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. தூய கணிதம் என்பது, கணிதத்தின் கோட்பாடுகள், கருத்துக்கள் ஆகியவற்றை, அதன் நடைமுறை பயன்பாட்டைப் பற்றிய கவலையின்றி பின்பற்றுவதாகும். துணைநிலை கணிதம் என்பது, பிற துறைகளில் உள்ள சிக்கல்களை கணிதத்தை கொண்டு தீர்ப்பதாகும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகம், தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் கணிதத்தை பயன்படுத்துவதாகும்.
பணியின் தன்மை: துணைநிலை கணித நிபுணர், பல துறைகளை சேர்ந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பலவித சிக்கல்களை அடையாளம் காண வேண்டும். அவரின் அணுகுமுறையானது, நெகிழ்வுத்தன்மை உடையதாகவும், தர்க்கரீதியாகவும் இருக்க வேண்டும். அவரிடம் கொடுக்கப்பட்ட பிரச்னையின் பவுதீக பரிமாணங்களையும், நுட்பங்களையும் புரிந்துகொள்வதோடு, அதை தீர்ப்பதிலும் உண்மையான ஆர்வம் இருக்க வேண்டும். கணிதத்தின் ஒரு பிரிவான அல்ஜீப்ராவில், எழுத்துக்களும், குறியீடுகளும் கொள்ளளவைக் குறிக்கும். ஜியோமெட்ரியில், வரிசை சாய்வுகள், மேற்பரப்புகள், திடப்பொருட்கள் ஆகியவற்றின் அளவுகள் மற்றும் தொடர்புகளை ஆராய்கின்றன. ட்ரிக்னோமெட்ரி என்பது, ஒரு முக்கோணத்தின் சாய்வுகள் மற்றும் புறங்களுக்கு இடையேயான தொடர்புகளை ஆராய்கிறது. கணிதம் என்பது ஒரு தனிப்பட்ட பாடமாக இருந்தாலும், அது, இயற்பியல், வேதியியல், உளவியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் பயன்படுகிறது.
ஒருவர் கணித ஆராய்ச்சியாளராக இருக்க விரும்பினால், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில் பல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவர் கணித ஆசிரியராக இருக்க விரும்பினாலும், பல பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் நல்ல சம்பளத்திற்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. பல நிதி சேவை நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி கூடங்கள் போன்றவை இந்திய கணித நிபுணர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்துகின்றன. அவர்களுக்கு, ஐ.டி. துறை பணியாளர்களை விட அதிக சம்பளம் கொடுக்க்ப்படுகிறது. தூய கணிதத்தில் பயிற்சி பெற்றவர்களையும் இந்த நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன. 

======================================================================

சிறப்பு கல்வி நிறுவனம்

வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்- ஐ.ஐ.எஸ்.டி., இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (IIST)ஆசியாவிலேயே முதல் வானியல் கல்வி நிறுவனமாகும். மேலும், உலகிலேயே இத்துறை சம்பந்தமாக, முழு அளவிலான இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட நிலையிலான படிப்புகளை வழங்க தொடங்கிய முதல் ஆராய்ச்சி நிறுவனம் இதுதான். 

பாடத்திட்டங்களை துவக்குவதற்கான அனுமதியை, கடந்த 2007ம் ஆண்டுதான் மத்திய அரசிடமிருந்து இந்நிறுவனம் பெற்றது. பாடத்திட்டங்களைத் தொடங்கி, 1 வருடத்திற்குள்ளாகவே, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. இந்தியாவில் உள்ள தகுதிவாய்ந்த மற்றும் விருப்பமுள்ள இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து, இஸ்ரோவில் பணிபுரியுமளவிற்கு அவர்களை தகுதிபடுத்துவதே இதன் பிரதான நோக்கம். மத்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.
வளாக வசதிகள்:

* டேட்டா சென்டர்
* சிறந்த கம்ப்யூட்டிங் ஆய்வகம்
* ப்ரோகிராமிங் ஆய்வகம்
போன்ற முக்கிய வசதிகள் உள்ளன. இதைத்தவிர, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும், மருத்துவமனை மற்றும் முறையான விடுதி வசதிகளும் உள்ளன.
நூலகம்: இந்நிறுவனத்திலுள்ள நூலகத்தில், புகழ்பெற்ற பாடப்புத்தகங்கள், துணைப்பாடத் தொகுப்புகள் மற்றும் குறிப்பு புத்தகங்கள் போன்றவை உள்ளன. மேலும், 3000க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் ஜர்னல்களும், நூற்றுக்கணக்கான மாநாட்டு தாள்களும்(Conference paper) உள்ளன. மேலும்,VSSC (Vikram Sarabai Space
Centre) நூலகத்தின் ஆதரவைப் பெற்ற நூலகமாக இது விளங்குகிறது.
படிப்புகள்: இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலை போன்ற பல நிலைகளில் இங்கே படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அவியோனிக்ஸ் மற்றும் பிசிக்கல் சயின்ஸ் போன்ற துறைகளில் இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், முதுநிலை அளவிலும் பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆராய்ச்சி: இந்நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர், தங்களது விருப்பமான துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுகிறார்கள். ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு, இஸ்ரோ மையங்கள் மற்றும் நாட்டின் பிற வான்வெளி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றின் புகழ்பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆராய்ச்சி வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தேவை மற்றும் இந்திய வான் ஆராய்ச்சி தேவைகளுக்கு ஈடுசெய்ய, முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் இந்நிறுவனத்தில் வழங்கப்படுகின்றன. ஜியாலஜி (புவியமைப்பியல்), ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த முனைவர் பட்ட ஆராய்ச்சி வாய்ப்பிற்கான தகுதிநிலைகள் மற்றும் சேர்க்கை விபரங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள http://www.iist.ac.in/ என்ற இணையதளம் செல்லவும்.
======================================================================


எம்.பி.ஏ.,



மனித வளம், நிதி, சந்தை, சர்வதேச வணிகம் பிரிவுகளில், எம்.பி.ஏ., படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பை, அண்ணாமலை பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்படும். இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விண்ணப்பங்களை பல்கலை வளாகத்தில் பெறலாம். கட்டணமாக ரூ.1000ம் (எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.500) பெறப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு, குழு கலந்துரையாடலுக்கு அழைக்கப்படுவர். மே மாதம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஜூன் க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு,


என்ற இணையதளத்தில் அறியலாம்.
========================================================================


ஈவென்ட் மேனேஜ்மென்ட்



ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்பது, ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுத்து நடை முறைப் படுத்துவதாகும்.
தகுதிகள்: ஒரு சிறந்த ஈவென்ட் மேலாளர் ஆவதற்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பேரார்வம், சிறப்பான ஒருங்கிணைக்கும் திறன், அதிகநேரம் பணிபுரியக்கூடிய உடல்வலிமை மற்றும் மனவலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதேசமயம், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஈவென்ட் மேலாளர் ஆவதற்கு, எம்.பி.ஏ., பட்டத்துடன், பொதுமக்கள் தொடர்பு திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு ஈவென்ட் நடத்துவதில், மக்களை சந்திப்பது, பொருத்தமான இடத்தை தேர்வுசெய்வது, உணவு ஏற்பாடு செய்வது, பூக்கள் அலங்காரம் செய்வது போன்ற பல பணிகள் இருக்கின்றன. மேலும், ஒளி-ஒலி ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடமானது பார்ப்பதற்கே மகிழ்வை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம், நிகழ்ச்சி நடக்கும்போது ஏற்படும் இயற்கை பேரிடர் மற்றும் பிற எதிர்பாராத சம்பவங்களையும் சமாளிக்கும் விதமாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் அதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பணியின் தன்மை: ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, அதை மனதிற்குள் வடிவமைத்தல், அதற்கான தேவைகளை ஆராய்தல், அந்நிகழ்ச்சியை நடத்துபவர்களின் நோக்கத்தை அறிந்து கொள்ளுதல், வரவு-செலவு கணக்கு தயாரித்தல், திட்டமிடுதல், ஏற்பாடு செய்தல், செயல்படுத்துதல், பிற விளம்பரதாரர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேவைப்படும் அரசு அதிகாரிகளின் அனுமதியைப் பெறுதல், மேடை அமைப்பை திட்டமிட்டு காட்சிப்படுத்தல், நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்கான மீடியா தொடர்புகளை மேற்கொள்ளுதல் போன்ற பல பணிகள் இத்துறை சார்ந்தவை.
பேஷன் ஷோ, இசை நிகழ்ச்சி, வர்த்தக நிறுவன கருத்தரங்கம், கண்காட்சிகள், திருமண நிகழ்ச்சிகள், பார்ட்டிகள், திறன் வெளிகாட்டும் நிகழ்ச்சிகள் போன்றவை அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை.
வேலைவாய்ப்புகள்: ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் வேலை கிடைக்கலாம். அதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து பெரிய நிறுவனங்களுக்கு செல்லலாம். மேலும், எதிலும் ஊழியராக சேராமல், ப்ரீ லேன்சராக பணிபுரியும் வாய்ப்பும் உண்டு. Promotion coordinator ஆகவும் உங்கள் பணியை துவக்கலாம். இதற்கு, நிகழ்சிகளை நடத்துவது பற்றி சிறந்த அறிவையும், திறனையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் உங்களிடம் சிறிது முதலீடும் இருக்க வேண்டும்.
பல பெரிய நிறுவனங்கள், தங்களில் ஒரு பணியாளராக ஈவென்ட் மேலாளர்களை வைத்துள்ளன. அதேசமயம், நீங்கள் ஒருங்கிணைத்து கண்காணிப்பதில் சரியாக செயல்படவில்லை என்றால், நஷ்டம் உங்களுக்குத்தான். எனவே நெட்வொர்கிங் மிக சிறப்பாக இருந்தால்தான் வெற்றிபெற முடியும்.
சம்பளம்: நடக்கும் நிகழ்ச்சியைப் பொறுத்தும், ஒரு நிகழ்ச்சி வணிகரீதியாக வெற்றி பெறுவதைப் பொறுத்துமே வருமானம் அடங்கியுள்ளது. பொதுவாகவே இதில் வருமானம் அதிகம். பொதுமக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத்துறை ஆகியவற்றில் படிப்பை மேற்கொள்வது, ஈவென்ட் மேலாண்மையில் உதவும். மேலும், சந்தைப்படுத்தலை(மார்க்கெட்டிங்) பற்றி எம்.பி.ஏ. படிப்பதானது மிகவும் சிறந்தது.
முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Amity Institute of Event Management, Delhi
College of Event and Management, Pune
Event management developement institute, Bandra, Maharashtra
National Institute of Event Management, Mumbai
National Institute of Fashion and Events, Japalpur
போன்றவை இப்படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.

======================================================================



.பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட  இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது? அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்?

பல புகழ்பெற்ற பயோடெக்னாலஜி கல்லூரிகள் அரசாலேயே நடத்தப்படுகின்றன. அதேசமயம், ஏறக்குறைய அனைத்துக் கல்லூரிகளும் முதுநிலைப் படிப்பிலேயே மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. அவற்றில் சேர, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
நீங்கள் இளநிலை அளவில், Botony அல்லது Zoology போன்ற படிப்புகளைப் படிக்க வேண்டும் மற்றும் வேதியியல் அல்லது கணிதம் போன்ற பாடங்களை துணைநிலைப் பாடங்களாகக் கொண்டிருக்க வேண்டும். அதேசமயம், இளநிலைக் கல்வியை நல்ல கல்லூரியில் படிப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், சிறப்பான அடித்தளமே, உங்களின் எதிர்கால பயோடெக்னாலஜி சாதனைக் கனவை நனவாக்கும்.
இரண்டாம் வருட பட்டப்படிப்பை மேற்கொள்கையில், கம்ப்யூட்டிங் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவும். ஒரு டேட்டாபேஸ் தொழில்நுட்பம் மற்றும் ஒரு ப்ரோகிராமிங் மொழி ஆகியவற்றை சிறப்பாக கற்றுக் கொள்ளவும். ஏனெனில், பயோடெக் துறையில் நாம் பெறும் வெற்றியானது, நமது சிறப்பான கம்ப்யூட்டிங் அறிவைச் சார்ந்தது.
பொதுவாக, விஞ்ஞானிகள், இளநிலை பட்டப் படிப்பில், எந்தவித சிறப்பு படிப்பையும் மேற்கொள்ள பரிந்துரைப்பதில்லை. ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் முதுநிலையில்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், அறிவியலின் பல அடிப்படை விதிகள் மற்றும் அம்சங்களை இளநிலையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 
======================================================================


எனது பெயர் பிரபாகர். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல்

பல கப்பல் நிறுவனங்கள், 1 வருட கடல் பயண தயாராதல் பயிற்சிகளை வழங்குகின்றன. கோவாவிலுள்ள Institute of maritime studies, Barber ship management (www.imsgoa.org), Garden reach shipbuilders
and engineering(GRSE), Kolkatta (www.grec.nic.in) Great eastern shipping co ltd, Mumbai(www.greatship.com) போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. மும்பையிலுள்ள The Shipping Corporation of India, பயிற்சிபெறும் மரைன் இன்ஜினியர்களை பணியில் அமர்த்துகிறது.
ஒரு பொதுவான விதிமுறை என்னவெனில், இத்தகைய பயிற்சிகளில் சேர்பவர்களுக்கு, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேதியின்படி, 24 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. கண்ணாடி (- or + 2.5) அணிந்திருந்தாலும், நிறக்குருடு குறைபாடு அற்றவராக இருத்தல் வேண்டும். இத்தகையப் பயிற்சிகள், உங்களுக்கு, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. இதுதொடர்பான, இன்னும் அதிகமான தகவல்களுக்கு www.dgshipping.com என்ற வலைதளம் செல்க.
==================================================================

பொறியியல் இளநிலைப் படிப்பை முடித்தபிறகு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள அமெரிக்காவின் பல்கலைக்கழகம்.
நிதி, கணிதம், பொருளாதாரம், புள்ளியியல், சந்தைப்படுத்தல் மற்றும் இடர்பாடு மேலாண்மை உள்ளிட்ட பல துறைகளில், ஒருவருக்கு திறன்களை வழங்கும் பொருட்டு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள், கணித பகுப்பாய்வு, புள்ளியியல் மற்றும் சாத்தியக்கூறு தியரி ஆகியவைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள், முதுநிலை பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
UCLA, New york university, Georgia tech, Columbia and UC Berkeley போன்றவை, அமெரிக்காவில், பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பதற்கான பிரதான கல்வி நிறுவனங்கள். மேற்கூறிய ஒவ்வொரு கல்வி நிறுவனமும், மாணவர் சேர்க்கை முறையில் தனித்தனி நடைமுறைகளைக் கொண்டிருந்தாலும், அனைத்துமே, இளநிலைப் படிப்பில் ஒருவர் துறை சார்ந்த அதிக அம்சங்களை படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. 
=======================================================================


டி.பார்ம் மற்றும் பார்மா.டி ஆகிய படிப்புகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் 
டி.பார்ம் என்பது, பள்ளிப் படிப்பை முடித்தவுடன் படிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பு. இதை முடித்தவுடன், ஒரு பார்மாசிஸ்டாக பதிவுசெய்து கொண்டு, நீங்கள் பிராக்டிசில் ஈடுபடலாம். பார்மா.டி என்பது, 6 வருட படிப்பாகும். கிளீனிக்கல் பார்மசியில் பணிசெய்ய ஆசைப்படும் நபர்கள், இப்படிப்பை தேர்வு செய்யலாம்.
இத்துறையில், வெறும் மருந்துகள் கொடுப்பதோடு மட்டுமின்றி, அவற்றின் உள்ளடக்கம், உற்பத்தி மற்றும் மனித உடலில் அந்த மருந்து உண்டாக்கும் விளைவுகள் குறித்தும் விஷயங்கள் அடங்கியுள்ளன. இந்தப் படிப்பு உங்களை கிளீனிக்கல் மருத்துவருக்கு இணையாக்குகிறது. மேலும், மருத்துவமனைகளில், சிகிச்சையளிக்கும் ஒரு குழுவாகப் பணியாற்றுவீர்கள். இந்தியாவில், 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளே இந்த பார்மா.டி. படிப்பை இப்போதைக்கு வழங்குகின்றன.
===================================================================

பி.காம் படிப்பை முடித்த மாணவர்கள் எதிர்காலத்தில், MBA அல்லது CFA (Chartered financial analyst) ஆகிய படிப்புகளை மேற்கொள்ள 
 
CFA என்பது தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டிய ஒரு தொழில்முறை படிப்பு. இந்தப் படிப்பின் மூலமாக, முதலீடு, ஆடிட்டிங் மற்றும் நிதி பகுப்பாய்வு போன்ற துறைகளில் நீங்கள் வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். அதேசமயம், MBA படிப்பதன் மூலமாக, நிதி, மனிதவளம், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல துறைகளில் (உங்களின் specialisation- ஐ பொறுத்தது) நிர்வாக பணி வாய்ப்புகளை பெறுவீர்கள். நீங்கள் தேர்வு செய்யும் படிப்பானது, உங்களின் விருப்பப் பாடம், திறமை மற்றும் தனிப்பட்ட ஆளுமை ஆகியவற்றுக்கு ஒத்துவரக் கூடியதாக இருக்க வேண்டும். அதே சமயம், இந்த 2 படிப்புகளில் எதைப் படித்தாலும், அபரிமிதமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.


=========================================================================


 சந்திரன். நான் ப்ளூயிட் டைனமிக்ஸ் துறையில் பிஎச்.டி  தமிழ்நாட்டில், இத்துறையில் எம்.பில். மற்றும் பிஎச்.டி படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள். இப்படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை நடைமுறைகள்.


இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகம் இல்லை. சென்னை-ஐஐடி இப்படிப்பை வழங்குகிறது. பிஎச்.டி படிப்பில் சேர, பெயர்பெற்ற பல்கலையில், நல்ல மதிப்பெண்களுடன் எம்.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும், அண்ணா பல்கலையிலும் பிஎச்.டி படிப்பில் சேரலாம். ப்ளூயிட் டைனமிக்ஸ் (Fluid dynamics) துறையில் எம்.பில் படிப்பானது, ஆந்திராவின், அனந்தப்பூரிலுள்ள எஸ்.கே.யு பல்கலையில் மட்டுமே வழங்கப்படுகிறது. பிஎச்.டி மற்றும் எம்.பில் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நடைபெறும்.
====================================================================
நாஸ்காம் தேர்வு .

இத்தேர்வில் பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) படிப்பில் ஒன்றில் இறுதியாண்டு படிப்பவர் கலந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதம் பெற்றிருத்தல் சிறப்பு. இத்தேர்வை ஆன்லைன் தேர்வாகவும், தேர்வு மையத்தில் எழுத்துத் தேர்வாகவும் எழுதலாம். இத்தேர்வில் வெற்றி பெறுபவர் பட்டியல் நாஸ்காமால் பராமரிக்கப்பட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மாணவர்கள் பணிக்காகத் தேர்வு செய்யப்படுவர்.
முதல் தாளில் பின்வரும் பகுதிகள் இடம் பெறும்.
* Grammar and Comprehension
* Analytical Ability and Logical Reasoning
* Eye for Detail
* Programming Ability
* Learning Ability
* Written English Test
தாளில் உங்களது பாடமான ஐ.டி., கான்செப்ட்ஸ், சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல், டெக்ஸ்டைல், பயோ-டெக்னாலஜி, டெலி கம்யூனிகேசன்ஸ் இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தேர்வு தொடர்பான முழு விபரங்களை http://www.nac.nasscom.in/nactech/ என்னும் இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்
 =====================================================================

பி.காம். முடித்து. முதுநிலையில் மேலாண்மை படிக்க  பி.ஜி.டி.எம் மற்றும் எம்.பி.ஏ., இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் நல்லது?


AICTE விதிகளின்படி, எந்தப் பல்கலைக்கழகத் திலும்(சுயாட்சி கல்வி நிறுவனம்) இணைக்கப்படாத, 2 வருட முழுநேர பொது மேலாண்மைப் படிப்புகள், மேலாண்மைப் படிப்பின் முதுநிலை டிப்ளமோ (PGDM) என்றுதான் வகைப்படுத்தப்படும்.
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் 2 வருட முழுநேர மேலாண்மைப் படிப்புதான் MBA எனப்படும். IIM கள் வழங்கும் மேலாண்மைப் படிப்புகள் கூட, PGPM என்றுதான் அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், IIM என்பவை பல்கலைகளோ அல்லது பல்கலைகளுடன் இணைக்கப்பட்டவையோ அல்ல.
அதேசமயம், வெறும் பெயர்களை வைத்து கல்வியின் தரத்தையும், மதிப்பையும் கணக்கிட முடியாது. நீங்கள் மேலாண்மைத் துறையில், எதிர்காலத்தில் பிஎச்.டி ஆய்வை மேற்கொள்ள விரும்பினால், எம்.பி.ஏ., பட்டப் படிப்பைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
அதேசமயம், PGDM படிப்பும், MBA படிப்பிற்கு நிகரானது மற்றும் MBA மூலம் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் இதன்மூலமும் கிடைக்கும் என்றும் இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தால் (Association of Indian Universities)அறிவிக்கப்பட்டுள்ளது.
=====================================================================
பி.எஸ்சி., இயற்பியல் முடித்த பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, வாய்ப்புகள் பி.எஸ்சி., இயற்பியலை முடித்தப்பிறகு, எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை முக்கியமாகக் கொண்ட எம்.எஸ்சி., படிப்பை, ஐ.ஐ.டி., போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும். ஐ.ஐ.டி., -யில் இடம்பெற JAM (எம்.எஸ்சி படிப்பிற்கான கூட்டு சேர்க்கைத் தேர்வு) எழுதி தகுதிபெற வேண்டும்.
இன்னொரு வழி என்னவெனில், பி.இ. படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் முடித்து, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் தேர்வை எழுத வேண்டும். ஏர் டிராபிக் கன்ட்ரோலர் தொழிலைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.atcguild.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
 ========================================================================

எலவேட்டர்-எஸ்கலேட்டர் இன்ஸ்டாலேஷன் அண்ட் மெயின்டனன்ஸ் டெக்னீஷியன் கோர்ஸ் படிக்க.

எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் நவீன எலவேட்டர்களை நிறுவுதல், பழுதுபார்த்தல், பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள, எலவேட்டர் நிறுவுனர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிசிட்டி மற்றும் ஹைட்ராலிக்ஸ் குறித்து சிறப்பான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். பல எலவேட்டர்கள், மைக்ரோப்ராசஸர்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. சிறப்பான முறையில் எலவேட்டர்களை நகர்த்தும் பொருட்டு, டிராபிக் நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய இந்த மைக்ரோப்ராசஸர்கள் ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளன.
பொதுவாகவே, எலவேட்டர் நிறுவுனர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள், நிறுவுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தலில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். நிறுவுனர்களைவிட, பராமரித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை செய்பவர்கள், எலக்ட்ரிசிட்டி மற்றும் எலக்ட்ரானிக் பற்றி சிறப்பாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர்களது பணி அத்தகைய சிக்கல் வாய்ந்தது. மேலும், அட்ஜஸ்டர் எனப்படும் ஒழுங்கு செய்பவர், எலக்ட்ரானிக், எலக்ட்ரிசிட்டி மற்றும் கணினியைப் பற்றிய தெளிவான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், புதிதாக நிறுவப்பட்ட எலவேட்டர்கள் ஒழுங்காக செயல்படுகிறதா? என்பதை உறுதிசெய்தல் அவர்களது பணியாகும்.
எனவே, முதலில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்துவிட்டு, ஏதேனும் எலவேட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் அப்ரன்டிஷிப் பயிற்சியில் சேர்ந்து, பின்னர், தொழில்முறை நிபுணராக சேரவும். ஒருவருக்கு எஸ்கலேட்டர் நிறுவுதலில் சிறப்பு பயிற்சி தருமளவுக்கு நம்மிடம் தொழில்சார்ந்த கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்க
==========================================================================

 
Research Institutes websites

NCABCCI'S Premier Cricket Academy http://ncabcci.com/
National Institute of Agricultural Extension Management http://www.manage.gov.in/default.asp
Netaji Subhas National Institute of Sports http://www.nsnis.org/
Indian Institute of Space and Technology (IIST) http://www.iist.ac.in/
The Institute of Cost Accountants of India http://www.icwai.org/icwainew/index.asp
The Institute of Company Secretaries of India http://www.icsi.edu/Student/tabid/528/Default.aspx
Rubber Training Institute http://rubberboard.org.in/training.asp
National Geophysical Research Institute (NGRI) http://www.ngri.org.in/index.jsp
Institute of Human Resources Development http://www.ihrd.ac.in/
Central Salt and Marine Chemicals Research Institute www.csmcri.org
Central Electrochemical Research Institute http://www.cecri.res.in/
North East Institute of Science and Technology http://www.rrljorhat.res.in/
National Centre for Radio Astrophysics http://www.ncra.tifr.res.in/
Institute of Minerals and Materials Technology (IMMT) http://www.immt.res.in/
Central Glass & Ceramic Research Institute (CSIR) http://www.cgcri.res.in/
Centre for Cellular and Molecular Biology (CCMB) http://www.ccmb.res.in/
National Institute of Oceanography http://nio.org/
Central Mechanical Engineering Research Institute www.cmeri.res.in/
Central Scientific Instruments Organisation http://www.csio.res.in
Central Electronics Engineering Research institute (CSIR) http://www.ceeri.res.in/
Central Power Research Institute http://www.cpri.in/

 ===================================================================


 
All India Council for Technical Education


http://www.aicte-india.org/
Andhra Pradesh State Council of Higher Education http://www.apsche.org/
Bar Council of India (BCI)
http://www.barcouncilofindia.org/
Central Council for Indian Medicine (CCIM) http://www.ccimindia.org/
Central Council of Homeopathy (CCH)
http://cchindia.com/index-2.html
Council of Architecture
http://www.coa.gov.in/
Dentists Council of India (DCI)
http://www.dciindia.org/
Distance Education Council
http://www.dec.ac.in/
Indian Council for Agricultural Research (ICAR) http://www.icar.org/
Indian Nursing Council (INC)
http://www.indiannursingcouncil.org/
Medical Council of India (MCI)
http://www.mciindia.org/
National Council For Hotel Management & Catering Technology
http://www.nchmct.org/
National Council for Rural Institutes
http://www.ncri.in/
National Council for Teacher Education (NCTE) http://www.ncte-india.org/
National Council of Education Research & Training http://www.ncert.nic.in/
Pharmacy Council of India (PCI) http://www.pci.nic.in/
Rehabilitation Council http://rehabcouncil.nic.in/home.htm
Tamil Nadu State Council for Higher Education http://www.tnuniv.ac.in/
University Grants Commission (UGC) http://www.ugc.ac.in/

 =====================================================================


Engineering Entrance Exam websites



Amrita Engineering Entrance (AEE)



All India Engineering Entrance Exam (AIEEE)



Birla Institute Technology and Science


Admission Test (BITSAT)




Bhartiya Vidyapeeth Engineering


Entrance Exam (BVPEEE)




Consortium of Medical Engineering and Dental


Colleges of Karnataka (COMEDK UGET)




Indian Institute of Technology Joint Entrance


Exam (IIT-JEE)




IIST All India Admission Test (ISAT)




Karunya University Engineering Entrance


(KEE)




Kalinga Institute of Industrial Technology


Engineering Entrance (KIITEE)




Maharashtra Common Entrance Test (MHT CET)




SRM Engineering Entrance Exam (SRMEEE)




Uttar Pradesh Technical University State


Entrance Examination (UPTU SEE)




VIT Engineering Entrance Exam (VITEEE)




 =======================================================================

 
Alagappa University
www.alagappauniversity.ac.in
Anna university, Chennai
www.annauniv.edu
Anna University of Technology,Coimbatore
www.annauniv.ac.in
Anna University of Technology, Tiruchirappalli
www.tau.edu.in
Anna University of Technology, Tirunelveli
http://www.auttvl.ac.in/
Annamalai University
www.annamalaiuniversity.ac.in
Bharathiar University
http://www.b-u.ac.in
Bharathidasan University
www.bdu.ac.in
Central University Of Tamil Nadu
http://www.cutn.ac.in/
Indian Institute of Technology, Chennai
www.iitm.ac.in
Indian Maritime University
http://www.imu.tn.nic.in/
Madurai Kamaraj University
www.mkuniversity.org
Manonmaniam Sundarnar University
http://www.msuniv.ac.in/
Mother Terasa Women's University
www.motherteresauniv.org
Periyar University
www.periyaruniversity.ac.in
Tamil Nadu Agricultural University
www.tnau.ac.in
Tamil Nadu Dr. Ambedkar Law Univesity
www.imsc.res.in
Tamil Nadu Dr.MGR Medical University
http://scripts.tnmgrmu.ac.in/joomla
Tamil Nadu Physical Education
and Sports University
www.tnpesu.org
Tamil Nadu Veterinary and Animal
Sciences University
www.tanuvas.tn.nic.in
Tamil University
www.tamiluniversity.ac.in
Tamil Virtual University
www.tamilvu.org
University of Madras
www.unom.ac.in

 =====================================================================


Indian Institute of Technology Kanpur http://www.iitk.ac.in/
Bhubaneswar http://www.iitbbs.ac.in/
Bombay http://www.iitb.ac.in/
Chennai http://www.iitm.ac.in/
Delhi http://www.iitd.ac.in/
Gandhi Nagar http://www.iitgn.ac.in/
Guwahati http://www.iitg.ernet.in
Hyderabad http://www.iith.ac.in/
Indore http://www.iiti.ac.in/
Kharagpur http://www.iitkgp.ac.in/
Mandi http://www.iitmandi.ac.in/
Patna http://www.iitp.ac.in/
Roorkee http://www.iitr.ac.in/
Ropar http://www.iitrpr.ac.in/
Rajasthan http://www.iitk.ac.in/iitj/
Indian Institute of ManagementUdaipur http://www.iimu.ac.in/
Ranchi http://www.iimranchi.ac.in/
Ahmedabad http://www.iimahd.ernet.in/
Trichy http://www.iimtrichy.ac.in/
Bangalore http://www.iimb.ernet.in/
Indore http://www.iimidr.ac.in/iimi/
Kolkatta http://www.iimcal.ac.in/
Kozhikode http://www.iimk.ac.in/
Lucknow http://www.iiml.ac.in/
Rohtak http://www.iimrohtak.ac.in/
Shillong http://www.iimshillong.in/

========================================================================


என்.ஐ.டி.யில் எம்.சி.ஏ., படிக்க




நாட்டில் உள்ளநேஷனல்இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) கல்வி நிறுவனங்களில் எம்.சி.ஏ., படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு (NIMCET 2012) .
இத்தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் திருச்சி, கோழிக்கோடு, அலகாபாத், போபால், வாராங்கல், ராய்ப்பூர், அகர்தலா, துர்காபூர், ஜாம்ஷெட்பூர், குர்ஷேத்ரா, சூரத்கல் ஆகிய என்.ஐ.டி., கல்வி நிறுவனங் களில் எம்.சி.ஏ., படிப்புகளுக்கு விண்ணப் பிக்கலாம். பி.எஸ்சி., படிப்பில் (குறைந்தது ஒரு கணிதப்பாடம்) 60 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்க .
மேலும் விவரங்களுக்கு:
www.nimcet2012.nitw.ac.in
 ========================================================================




இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (ஐ.ஐ.எஸ்.டி.,)யில் பி.டெக். படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படுவதே ஐசாட் (ISAT) தேர்வாகும்.
பி.டெக். படிப்பில் சேரும் மாணவர்களுக்கான அகில இந்திய சேர்க்கைக்கான ஐசாட் தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறும்.
வான்வெளித் துறையில் பட்டப்படிப்புகளை அளிக்கும் ஐ.ஐ.எஸ்.டி., கல்வி நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஏவியோனிக்ஸ் மற்றும் பிசிகல் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெக்., படிப்பில் சேர இந்த ஐசாட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி நிறுவனம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. ஐசாட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்து தரப்படும்.
ஐசாட் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யத் துவங்குவதற்கு முன்பு படிக்க வேண்டியது அவசியமாகும்.
தேர்வெழுதும் பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி., மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் 600 ரூபாயாகும். எஸ்.சி., / எஸ்.டி. / மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.300 கட்டணமாகும். தேசிய வங்கிகளில் தேர்வுக் கட்டணத்தை செலுத்தி சலான் பெற்று அதன் நகலை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், போபால், காலிகட், சண்டிகார், சென்னை, டேராடூன், டில்லி, திஸ்புர், ஹைதராபாத், ஜெய்பூர், @கால்கட்டா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, போர்ட் பிளேர், ராஞ்சி, திருவனந்தபுரம், வாரணாசி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
இதில் தங்களுக்கு வசதியான தேர்வு மையத்தை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இத்@தர்வுக்கான அறிவிப்புகள் ஆண்டு@தாறும் அக்@டாபர் - நவம்பரில் வெளிவரும்.

மேலும் விவரங்களுக்கு: http://www.iist.ac.in.
========================================================================




உங்களுக்கு ஏற்ற துறையைத் தேர்ந்தெடுக்க...





தங்களுக்கு ஏற்ற துறையை தேர்வு செய்வதை, பெரும்பாலான
மாணவர்கள் கடினமானதாகவே கருதுகின்றனர். இதற்கு மிக
முக்கிய காரணம் தங்களுக்கு என்ன தேவை, தங்களது விருப்பம் என்ன என்பதை அவர்கள் உணராமல் இருப்பதுதான்.
இதுகுறித்து மாணவர்களுக்கான சில முக்கிய ஆலோசனைகள் இங்கே:
* விருப்பமான துறையை தேர்ந்தெடுப்பது, தனிப்பட்ட அவரது சுயமுடிவாக இருக்க வேண்டும். வற்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் மாணவரை குழப்பத்திலும், வெறுப்பிலும் ஆழ்த்திவிடக்கூடாது.
* தனது ஆர்வம், திறன்கள், தகுதிகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சரியான இலக்கை தேர்வு செய்யவேண்டும்.
* விஞ்ஞானியாக, மருத்துவராக, பேராசிரியராக, சினிமா இயக்குனராக, தொழிலதிபராக, பெரிய அரசு அதிகாரியாக, தொல்பொருள் நிபுணராக, தத்துவஞானியாக, இசை கலைஞராக, அரசியல்வாதியாக என்று பல நிலைகளில் மாணவர்களுக்கு கனவுகள் உண்டு. ""கனவுகள் இல்லாதவரிடத்தில் பெரிதாக எதுவும் இருக்காது'' என்று ஒரு சீன பழமொழி உண்டு.
* வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாறுகளை படித்து, அந்த வெற்றிக்கான காரணியை ஆராய்ந்தால் அதற்கான அடிப்படையாக இருந்தது லட்சியம் என்பது தெளிவாக தெரியவரும். லட்சியம் உங்களின் செயல்களை தீர்மானிக்கும்.
* உங்களின் கனவை நனவாக்க வேண்டுமெனில், உங்களுக்கு ஏற்ற எதிர்கால துறையை முடிந்தளவு விரைவாக தேர்வுசெய்ய வேண்டும்.
* விருப்ப வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள அதுசம்பந்தமான செய்தித்தாள்கள், பத்திரிகைகள், இணையதளம் ஆகியவற்றை பயன்படுத்துவதுடன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில் ஆலோசகர்கள், தொழில்துறை பற்றி பரவலான அறிவுடைய நபர்கள் ஆகியோருடன் இதுசம்பந்தமாக கலந்துரையாடலாம். இறுதி முடிவை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
* உங்களை முதலில் நீங்கள் புரிந்துகொள்வதால் மட்டுமே எதிர்கால துறையை நீங்கள் சரியாக முடிவுசெய்ய முடியும். உங்களின் இயல்பான ஆர்வம், திறமை ஆகியவைப் பற்றி தெளிவான புரிதல் இருக்க வேண்டும். உங்களின் திறமை, ஆற்றல், குணாதிசயம், ஆர்வம் ஆகியவற்றை நீங்கள் அறிந்துகொள்ளும் முயற்சியில் நீங்கள் மிதமிஞ்சிய கற்பனையின்றி மிக சரியான புரிதலை கொண்டிருந்தால் மட்டுமே தெளிவான முடிவு கிடைக்கும்.
* உங்களின் எதிர்கால தொழில் துறைக்கு தேவையான புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.
* மாறி வரும் இன்றைய உலகிற்கு ஏற்ப உங்களது லட்சியத்தை உரிய காலகட்டத்தில் மறுஆய்வு செய்து, அதற்கான தகுதிகளை மேம்படுத்திகொள்ள வேண்டும்.
* அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

 உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும் என வாழ்த்துகின்றேன் நன்றி!

உண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டீர்களே ! இனி நீங்கள் விரும்பியது எல்லாம் நடக்கும் வெற்றி மட்டுமே உங்களுக்கு இனி சொந்தமாகும் என்று ஆசீர்வதிக்கின்றேன். பார் போற்றும் மனிதராய் வாழ்க  வாழ்க வாழ்க
--------------------------------------------------------------------------------------------------------


பிரச்சனைகளை மட்டுமே பேசுவது என்று இல்லாமல் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ற கோட்பாட்டுடன் சமூகப்  பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எங்களின் சிறிய முயற்சி. இதை மேலும் விரிவாக இன்னும் உள்ள படிப்புகள் விவரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டுவர வேண்டு என்ற ஆவல் உள்ளது.
=======================================================================


8 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா! எவ்வளவு தகவல்கள்?! நிஜமாவே என்னால் ஒருக்கட்டத்துக்கு மேல படிக்க முடியலை சகோ!

ராஜி சொன்னது…

பிடித்த பாடத்துக்கும்.., பிடிக்காத பாடத்துக்கும் வித்தியாசம் அறிந்தேன், மிக்க நன்றி

VOICE OF INDIAN சொன்னது…

ஹ ஹா உங்களுக்கு பிடிக்காத பாடத்தை படிக்க முடியாதுன்னு சொன்னேனே!
சாதனை என்பது சிலரால் மட்டுமே செய்ய முடிவது எல்லோராலும் செய்ய முடிந்தால் அது எப்படி சாதனை ஆகும் . இருந்தாலும் மீண்டும் முயற்சி செய்யலாம் எத்தனை முறை முயன்றாலும் முடிந்தால் சாதனைதான்

VOICE OF INDIAN சொன்னது…

இன்றைய நாகரீக மனிதனுக்கு நல்லவை தவிர மற்றைய எல்லாம் பிடிக்கும் மனம் அதன் ஆழம் வரை செல்லும் காரணம் இன்றைய காட்சி ஊடகங்கள் தான். எதையும் கவர்ச்சியாக விளம்பரப் படுத்தினால் தான் என்ன அது என்று பார்ப்போமே தவிர விளம்பரம் இல்லாத எந்த ஒரு காட்சியையோ அல்லது பொருளையோ எதையுமே ஏற்றுக் கொள்ளும் நிலையில் நம் மனது இல்லை. அண்ணா ஹஜாரே ஊழலை எதிர்த்துப் போராடியபோது நாம் அந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க விளம்பரம் தேவைப்பட்டது. அதன் பின் அண்ணா ஹஜாரே போராட்டத்திற்கு விளம்பரம் செய்ய மீடியாக்கள் வரவில்லை போராட்டத்தில் நாமும் பங்கெடுக்கவில்லை. ஊழலை எதிர்த்துப் போராடவே விளம்பரம் தேவைப்படுகின்றது. உள்ளல் எதிர்ப்பு என்பது ஒரு நெருப்பு அதை பார்த்தவுடன் பத்தியிருந்தால் தன் எழுச்சியாக தொடர்ந்து போராட்டம் நடந்து வெற்றி கிடைத்திருக்கும். விளம்பரத்தால் வந்த எழுச்சி ஆகையால் தானே அடங்கியது என்று சொல்லலாம். மக்கள் மனது காட்சி ஊடகங்களுக்கு அடிமையாகி கட்டுப்பட்டு கிடக்கின்றது. ஆகவே நல்லதே ஆயினும் அதை ஏற்றுக்கொள்ள நம் மனம் இடம் தருவதில்லை.

Tamil Indian சொன்னது…

Hats off to your work.

Unknown சொன்னது…

அருமை அருமை.
Diploma in civil engineering முடித்தவர்கள் அடுத்து என்ன படிக்கலாம். Pls....,

Hemant Latawa சொன்னது…

Top Colleges in India Details and Notification easily information available with India's Leading Education Portal My Next Exam

loan offer சொன்னது…

Are you in need of a loan?
Do you want to pay off your bills?
Do you want to be financially stable?
All you have to do is to contact us for
more information on how to get
started and get the loan you desire.
This offer is open to all that will be
able to repay back in due time.
Note-that repayment time frame is negotiable
and at interest rate of 2% just email us:
reply to us (Whats App) number: +919394133968
patialalegitimate515@gmail.com
Mr Jeffery