"தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்" _ தகவல் ஆணையம் தீர்ப்பு.
அரசியல் கட்சிகள் ஓட்டம் ஏன்? நாமறிவோம் நாடறியச் சொல்வோம்!!
பாமரனும் பாராளுவோரைக்( ஆட்சியாளரைக்) கேள்விகேட்கும் இந்த உன்னத தகவல் உரிமைச் சட்டத்தை இந்தியாவில் எந்த அரசியல் கட்சிகளும் அந்த பாமரனுக்கு மட்டுமல்ல தங்களது கட்சி முன்னணி உறுப்பினர்களுக்கே கூட பரப்புரை செய்யவே இல்லை ! காரணம் அவர்களும் மாட்டிகொல்வார்கள்!! என இந்தியன் குரல் அனைத்து பயிற்சிக் கூட்டங்களிலும் அதன் பயிற்ருனர் ஐயா சிவராஜ் அவர்களின் கூற்று உண்மை என்று நிரூபத்து விட்டீர்களே!
நீங்கள் கட்சி நடத்துவது / உங்களைக் கட்சி நடத்திட அரசியல் சாசனம் அனுமதித்து இருப்பது மக்களுக்காகவா கட்சி உறுப்பினர்களுக்கா? கட்சிகள் முதல்மையானதா ? மக்கள் முதன்மையானவர்களா?
சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி கருப்பு பண முதலைகள் தப்பிவிடுகின்றார்கள் இதற்குத் தீர்வே இல்லையா? மக்கள் பிரதிநிதிகலகிய எங்களுக்கும் இதே கதியா? என்றெல்லாம் வானத்திற்கும் பூமிக்கும் தாண்டிக் குதிக்கும் அரசியல் கட்சிகளே
உங்கள் கட்சியிடம் கருப்பு பணம் இருக்கின்றதா இல்லையா என தகவல
தர மக்கள் பிரதிநிதிகள் மறுப்பது ஏன் ? சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தகவல் சட்டத்தில் இருந்து தப்பித்து ஓடுவது ஏன் ?
உங்களின் மேடை முழக்கங்களை நினைத்து பாருங்கள் ........
இந்தியாவில் விலைபோகும் பொருளாகிவிட்ட(து)வர்கள் "வேட்பாளர்கள், வாக்குச் சீட்டு, வாக்காளர்கள், எம் எல் ஏ -க்கள், எம் பி - க்கள், அமைச்சர்கள், தீர்மானங்கள், கொள்கைகள் " சொன்னது நீங்கள் தானே!
இந்த அவலட்சணத் தேர்தல் தானே / ஆட்சிகள் தானே மக்கள் ஜனநாயகத்தைக் கொன்று பண நாயகத்தைத் தருகின்றன? இதற்க்கான கருப்பு பணக்குவியல் மலைபோல் அரசியல் கட்சிகளிடம் இருக்கக் கூடாது என்று இந்தியக் கடிமக்கள் தகவல் சட்டத்தில் கேட்டால் நாங்கள் இந்த சட்டத்திற்குள் வரமாட்டோம் என்று தாண்டிக் குதித்து ஓடுகின்றீர்களே! நீங்களா மக்களாட்சி முறையைப் பாத்குகாக்கப் போகின்றீர்கள்? நீங்களா மக்கள் காவலர்கள் ?
இந்திய அரசியல் சாசனம் - தகவல் உரிமைச் சட்டம் - இந்திய மக்கள் ஆகிய மூன்றையும் இணைத்துப் பாருங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சுத்தமான தேர்தல் இந்தியாவில் நடைபெற வேண்டுமானால் நீங்கள் மக்களுக்கு பதில் சொல்லும் அளவிற்கு வெளிப்படையாக பரிசுத்தமாக செயல்பட வேண்டும் அல்லவா? ஏன் தயக்கம் நீங்கள் சுத்தமானவர் இல்லையா?
அரசு + இயல் உரிமையை மக்களுக்கு மறுப்பது ஏன்? ஒரு அரசு என்னென்ன முறைகளில் இயங்க வேண்டும் என்று வழிகாட்டுவது அரசு + இயல் . நமது இந்தியாவில் இயங்குவது மக்களாட்சி அரசு + இயல் . நம் மக்களாட்சி இயக்கத்தில் ஏற்ப்படும் முறைகேடுகளை ஒழிக்க வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் ஆகவே மத்திய அரசு மற்றும் எல்லா மாநில அரசுகளும் மற்றும் அதன் துணை அமைப்புகளும் ஆள்கிற மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்புடைமை உள்ளதக்கப்படுகிறது என்பது தான் தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு அதாவது மாக்களே எஜமானர்கள் !
ஆகவேதான் சாடமியற்றும் அமைப்புகள் நிர்வாகம் நீதி ஆகிய மக்களாட்சியின் மூன்று தூண்களும் மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு உடையதாக ஆக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் மேற்ப்படி இரண்டு வாக்கியங்களையும் வாசித்தால் மறைந்திருக்கும் ஒரு உன்னத உண்மையான இந்திய அரசு + இயலில் அதாவது மக்களாட்சி இயக்கத்தில் மக்களின் பங்களிப்பான சட்டம் தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 என்பது தெளிவாகும். நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகள் போராடிப் போராடிப் 58 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அரசியல் சாசனத்தின் எல்லைகளுட்பட்டு மக்களுக்கு கிடைத்த அரசு + இயல் உரிமையை மக்களுக்கு அளிக்க அரசியல் கட்சிகளே மறுப்பது ஏன் ?
கறுப்புப் பணம் உள்ளதை ஒப்புக் கொள்கிறீர்களா?
இந்த சட்டத்தை மீறும் உங்களுக்கு , எம் எல் ஏ , எம் பி . அமைச்சர் பதவிகளையும், ஆட்சி அதிகாரத்தையும் அடைய அரசியல் சட்டம் வேண்டும் அதே மக்களின் வாக்குச் சீட்டுக்களும் வேண்டும்? ஆனால் நீங்கள் மக்களை மதித்து தகவல் சட்டத்தை மிதித்து தகவல் தர மாட்டீர்கள் . நாங்கள் தகவல் சட்டத்திற்குள் வரமாட்டோம் என்று மிக நாசூக்காக மக்களையும் / இந்திய அரசியியல் சாசனத்தையும் அவமதிக்கிறீர்கள் அரசியல் கட்சிகள் கறுப்புப் பணத்தில் தான் தேர்தல் நடத்துகின்றன என்ற சந்தேகத்தை உறுதிப் படுத்துகிறதே!
சட்ட நுணுக்கங்களைப் பாரீர்
தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் பிரிவு 2 (f ) இன் படி இந்தியாவின் எந்த சட்டத்திற்குள்ளும் நீங்கள் வரமாட்டீர்களா?
பிரிவு 2(f ) இன் கடைசி வாக்கியத்தில் உள்ள பின்வரும் வாசகத்தைப் பாருங்கள்
"மற்றும் அப்போதைக்கு செயலாற்றலில் உள்ள பிற சட்ட எதன்படியும் ஒரு பொது அதிகார அமைப்பினால் பெறக்கூடிய ஏதேனும் தனியார் குழுமம் ( Private Institutions ) தொடர்பான தகவல் எதுவும் எனப் பொருள் படும்
1 இதன்படி இந்திய மண்ணில் ஏதாவது ஒரு சட்டத்தினால் கட்டுப்படுத்தப் படுகிற தனியார் நிறுவனங்களும் கூட தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கக் கடமைப் பட்டுள்ளதே இந்திய அரசியியல் கட்சிகளாகிய நீங்கள் இந்திய மண்ணின் எந்த சட்டத்திற்கும் கட்டிகட்டுப்பட்டவர்களே இல்லையா?
2 நிதி பெறலாம், அந்த நிதிக்கும் வருமான வரி விளக்கு பெறலாம் அவற்றை எல்லாம் வருமான வரித் துறைக்கு கணக்கு காட்ட வேண்டும் என்ற சட்டத்தின் பயன்களை மட்டும் ஏன் அனுபவிக்க வேண்டும்? அந்நிய செலவாணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வர மாட்டீர்களா?
3 இந்திய தேர்தல் ஆணையத்திடம் தானே அரசியல் கட்சிகள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் செலவு கணக்குகளையும் கட்சியின் வரவு செலவு கணக்குகளையும் தேர்தல் அதிகரிக்கும் ஆணையத்திற்கும் சமர்ப்பிக்க வேண்டுமே
4 உங்களை தகவல் சட்டம் கட்டுப்படுத்தாது என்றால் கட்சியின் சின்னம் பதிவு செய்ய தக்கவைத்துக்கொள்ள தேர்தல் ஆணையத்தை ஏன் நீங்கள் நாடவேண்டும்?
5 இன்னும் இப்படி பரப்பல சட்டங்கள் அரசியல் கட்சிகளைக் கட்டுப் படுத்துகின்றதே!
அரசியல் கட்சிகளே தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 2 (அ ) (1)(2) இன் படி நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த நிதியும் பெறவில்லை என்று சொல்லும் துணிச்சல் உள்ளதா?
இந்த சட்டப்பிரிவி எல்லா வார்த்தைகளுக்கும் சிகரம் வைத்தார்ப்போல் "நேரடியாகவோ மறைமுகமாகவோ" அளிக்கப்பட நிதிகளால் என்று உள்ளதே !
பின்வரும் நேரடி மற்றும் மறைமுக அரசு நிதிச் செலவினங்களை அனுபவிக்கவில்லை என்று சொல்வதற்கு நாங்கள் இந்தச் சட்டத்தின் வரம்பினுள் வரமாட்டோம் என்கிற எந்த அரசியல் கட்சியாவது அரசிடமிருந்து பின்வரும் நேரடி மற்றும் மறைமுக நிதி பெறவில்லை என்று சொல்லும் துணிச்சல் உள்ளதா?
1 அரசுக்குச் சொந்தமான நிலம் கட்டிடம் பிற வசதிகள்
2 மக்கள் வரிப்பணத்தில் தொலைக்காட்சிப் பயன்பாடு
3 சட்டமன்ற நாடாளுமன்ற கட்சி அலுவலகங்கள்
4 வாக்களர் பட்டியல்
5 தேர்தல் காலத்தில் அச்சு மற்றும் தொலைகாட்சி இணையம் தொலைபேசி பயன்பாடு
6 தேர்தல் ஆணையத்தின் வெளியீடுகள் அறிவிக்கைகள் ஆணையக் கூட்டங்கள் வட்ட கொட்ட மாவட்ட மாநில தேசிய அளவிலான அனைத்துக் கட்சி கூட்டங்கள்
7 மக்கள் வரிப்பணத்தில் வாக்குச் சாவடியில் வைக்கப்படும் சுவரொட்டிகள்
8 மக்கள் வரிப்பணத்தில் வாக்குச் சாவடி முகவர்களுக்கு அளிக்கப்படும் அடையாள அட்டை மற்றும் இடவசதி
இப்படி பட்டியல் இட்டால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்கள் வரிப்பணத்தில் அரசு பணத்தில் பயனடைவது ஏராளம்
கொள்ளு வசூல் என்றால் வாயைத் திறக்கும் நீங்கள் (அரசியல் கட்சிகள்) கணக்கு கடிவாளம் என்றால் பின்னங்கால் பிடரியில் பட ஓடுவது ஏன் ?
ஒரு உண்மை தெரியுமா?
எந்த ஒரு தகவல் ஒரு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டால் மறுக்கப் படக் கூடாதோ அந்தத் தகவலை தனி ஒரு குடிமகன் கேட்டால் மறுக்கக் கூடாது என்ற தகவல் சட்டத்தின் மேலோங்கிய பிரிவை அறிந்துள்ளீர்களா ? எனில் தேர்தல் ஆணையத்திற்கும் வருமான வரித் துறைக்கும் பதில் சொல்லும் நீங்கள் மாக்களுக்கு பதில் சொல்ல மறுப்பதேன்?
அரசுகளை நிரனயிக்க வேண்டியது மக்களா பணமா ?
ஐ பி எல் பி சி சி ஐ உள்ளிட்ட அனைவரும் இந்த சட்டத்தில் வரவேண்டும் லோக்பால் சட்டத்தில் பிரதமர் வரவேண்டும் என்று தாண்டிக் குதிக்கும் அரசியல் கட்சிகள் எல்லோரும் பதில் சொல்ல வேண்டும் ஆனால் நாங்கள் மட்டும் பதில் சொல்ல மாட்டோம் நாங்கள் எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் பதில் சொல்லும் கடமைப்பட்டவர்கள் என்று சொல்வதெல்லாம் ஊருக்கு உபதேசம் உன்னக்கு மட்டும் இல்லையடி என்பதைத் தான் நிரூபிக்கின்றது
இந்திய மக்களாட்சி முறையின் மூளையாகிய நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் கறுப்புப் பணமும் கணக்கில் வராத பணமும் நிர்ணயிக்கக் கூடாது என்று தகவல் கேட்டால் ஓடி ஒளிவது ஏன் ?இதைக் கண்டு நாடு சிரிக்கும் நம் நாட்டு சட்டங்களும் சிரிக்கும்.
அரசியல் வாதி அரசியல் கட்சி என்றால் காத தூரம் மக்கலம் ஓடுகிறார்கள் இந்த லட்சணத்தில் வரவு செலவு கணக்கை மக்களுக்கு சொல்ல மாட்டோம் என்று மக்கள் வெறுப்பின் உச்சத்திற்கு தள்ளுகின்றீர்களே மக்களை இருளில் வைத்துவிட்டு என்ன ஆட்சி நடத்தப் போகிறீர்கள்
மக்கள் கட்சி நிதி வழங்கவும், ஓட்டுப்போடவும் நீங்கள் நடத்தும் போராட்டம், கூட்டங்களுக்கும் மட்டும் தான் வேண்டும் இந்த ஆவணத்தில் விவரிக்கப் பட்ட அனைத்து வசதிகளையும் தங்கள் வரிப்பணத்தில் இருந்து அளிக்கவும் வேண்டும், அனால் அந்த மக்களுக்கு நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள் என்ற உங்களது நிலைப் பாட்டில் உள்ள ஆபத்தை உணருங்கள்
பணப் பெட்டி அரசியலா ?
நாடாளுமன்றத்தில் சட்டம் செய்வோம் அனால் அந்த சட்டத்தை நாங்கள் கடைபிடிக்க மாட்டோம் என்றால் கீழ் காணும் அர்த்தம் தான் இருக்க முடியும்.
தேர்தல் களத்தில் வாக்காளர்களை, பிற கட்சி வேட்பாளர்களை, வாக்ஜ்குச் சாவடி அதிகாரிகளை, பிற கட்சி முகவர்களை, தேர்தலுக்கு பின் எம் பி , எம் எல் ஏ க்களை நாடாளுமன்ற சட்டமன்ற தீர்மானங்களில் வெற்றிபெற என அனைவரையும் விலைக்கு வாங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்ட பணப்பெட்டி தேர்தல் பணப்பெட்டி நாடாளுமன்றம் சட்டமன்றங்கள் அமைப்பதற்கு உங்களிடம் பணப் பட்டி உள்ளதா இல்லையா? என்று மக்கள் அறிந்துகொள்ள உரிமை இல்லை என்று சொல்வதற்கு அரசியல் கட்சிகளே உங்களுக்கு உரிமை இல்லை என்பது தான் மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பு
வெளிப்படைத் தன்மை அற்ற கட்சிகளுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்ற முடிவிற்கு மக்கள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை காரணம் பணப்பெட்டி அரசியியல் தான் தீவிரவாதம் பயங்கர வாதம் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் தீமைகளுக்கும் ஊற்றுக்கண் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்
வேர்களில் இருந்து விசத்தை அகற்றிடும் போராட்டங்களின் போராட்டம் இப்போது மக்கள் கைகளிலும் ஊடகங்களின் கைகளுக்கும் வந்துள்ளது.
அரசியல் கட்சிகளே உணர்வீர் சட்டங்களை வளைக்காமல் திருந்துவீர்.
-- இந்தியன் குரல் வெளியீடு
4 கருத்துகள்:
Sir I agree with your above article but there is some mistake in your view. First of all you are portraying that all the parties are opposing RTI. Its wrong. There are some few no of parties which have welcomed this move from CIC and our party(not interested to mention here) is one among them . If you repeatedly saying every parties and every parties means it will hurt good parties like us. Already we are getting very less support from the people and if social activists like you also neglecting parties like us which are started with good ideologies, then the political situation of our country will never improve. For your kind info, Our founder is the one among the people who fight for the implementation of RTI. In our policy itself we have been stressed for a strict implementation of RTI. We are the first to submit our expenses statement in our website. My worry is that despite all this many good people like you never acknowledge us or even consider us a political party. So my small request is please whenever you are writing about some article please simply blame everybody and everything especially about politics and please be specific. Few words for the readers: Answer to Bad politics is Good Politics; Not no politics. Thanks for the oppurtunity.
தங்களது முதல் வருகைக்கு கருத்திற்கும் நன்றி MS ஆனந்தம் அவர்களே
உங்கள் கருத்தில் உண்மை இருக்கலாம் அப்படி உங்களது தலைமை வரவேற்று இருந்தால் அதை தாராளமாய் வெளியிடலாம். கட்சியின் பெயர் கூட சொல்ல திராணியற்ற நிலையிலும் உங்கள் கருத்தை வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் கட்சிமீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு வருந்துகின்றேன் நீங்கள் எந்தக் கட்சியைக் குறிப்பிடுகின்றீர்கள் என்றும் ஊகித்துவிட்டேன். இப்போதும் சொல்கின்றேன் எந்தக் கட்சியும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை அப்படி நீங்கள் சார்ந்த உங்கள் கட்சி ஏற்றுக் கொண்டிருப்பின் அதற்கான ஆதாரத்தை இட்டால் அதன்மீது விவாதம் செய்யத் தயார். உண்மையிருந்தால் உங்கள் பதிலை ஏற்று திருத்திக் கொள்கின்றோம் உங்கள் பதில் அளித்தால் மேலும் உரையாடலாம்
Thanks for your reply sir. But it was funny to read that you mentioned I couldn't tell my party name out of fear. I just wanted you to find it by yourself and good, if you have rightly guessed. Here is the link what you have asked for.
http://loksatta.org/cms/index.php?option=com_content&view=article&id=1368&Itemid=60
http://tn.loksatta.org/2013/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/
தங்களது பதிலுரைக்கு நன்றி தோழர் நீங்கள் கொடுத்த இணைப்பில் பார்த்தேன் நீங்கள் சார்ந்த கட்சி வரவேற்பதாக மட்டுமே சொல்லியிருக்கு மற்ற எல்லோரும் மதித்து கடைபிடிக்க கோரிக்கை விடுத்துள்ளதே அல்லாமல் எந்த இடத்திலும் தகவல் உரிமைச் சட்ட வரம்பில் எங்கள் கட்சி இருக்கின்றது என்றோ இந்தத் தீர்ப்பை ஏற்று நாங்கள் கடைபிடிப்போம் என்றோ சொல்லவில்லை
மேலும் அந்த அறிக்கையில் வரவு செலவை நாட்டிலேயே உங்கள் கட்சிதான் வெளியிடுவதாக சொல்லப் பட்டு இருக்கின்றது.
//அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என லோக் சத்தா கட்சி வெகு நாட்களாகவே கோரிக்கை வைத்துவருகிறது. நிதி திரட்டல் மற்றும் செலவீனம் ஆகிவற்றில் வெளிப்படைத்தன்மை, கட்சி உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது, வேட்பாளர் தேர்வில் வழிமுறைகளை ஆகியவற்றை கட்சிகள் கடைபிடிக்கவேண்டும்.//
வரவு செலவு வெளிப்படைத் தன்மை என்பது ஒருபக்க கணக்குத் தாளில் முடிந்துவிடுமா தோழரே
மற்றவர்கள் வரவு செலவில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கோரும் உங்கள் கட்சி அவ்வாறு வெளிப்படையாக இருக்கின்றதா நன்கொடையாளர்களின் விவரத்தை முகவரியுடன் வெளியிட்டு இருக்கலாமே முடியுமா? பணியாளர்கள் விபரம் மாத ஊதியம் உள்ளிட்ட விபரங்களை தெளிவாக வெளியிடலாமே.
நாங்கள் வெளிப்படையானவர்கள் என்று சொன்னால் போதாது மற்றவர்களை வெளிப்படையாக இருங்கள் என்று சொல்லும் உங்கள் கட்சியானது உண்மையில் வெளிப்படையானதுதானா என்ற சந்தேகத்தை அந்த அறிக்கை கூட்டுகின்றதே!
அதை உண்மையக்கும்போருட்டு உங்கள் கட்சி தகவல் சட்ட வரம்பில் இருப்பது நிஜம் என்றால் சட்டப் பிரிவு 4 ஐ அமல்படுத்தவில்லையே
அறிக்கை விடுவதால் உண்மை என்று ஆகிவிடாது சி பி ஐ கட்சி கூட இதுமாதிரி அறிக்கை விட்டது மட்டும் அல்ல ஆணையத்திலேயே நாங்கள் தகவல் அளிக்கின்றோம் சட்டத்திற்குள் இருக்கின்றோம் என்றெல்லாம் தெரிவித்திருக்கின்றது அதற்காக அந்தக் கட்சி தகவல் சட்ட வரம்புக்குள் இருக்கின்றது என்று சொன்னால் அந்தக் கட்சி தொண்டர்களே நம்ப மாட்டார்கள். அங்கே உத்தரவை ஏற்றுக்கொள்கின்றது ஆனால் இங்கே சட்டத்தை அமல்படுத்தவில்லை என்ற இரட்டை நிலையில் இருக்கின்றது.
தோழரே நீங்கள் உங்கள் தலைமையிடம் சொல்லி தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 4 ஐ அமல்படுத்தச் சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம் உங்கள் நிலைப்பாடு என்ன என்று.
மேலும் தோழரே தகவலுக்காக இதை சொல்லுகின்றேன் ஒரு கட்சி தன அன்றாட நடவடிக்கைகள் ஆண்டு வரவு செலவுகள் நன்கொடை விபரங்களை உறுப்பினர்கள் விபரங்களை ஒவ்வொரு உறுப்பினருக்கும் தாமாக முன்வந்து தரவேண்டும் அப்படிதரவதாகவே அவர்கள கட்சி விதிகளில் இருக்கும் இதற்க்கு தகவல் சட்டம் மூலம் அந்த உறுப்பினர் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அனைத் உறுப்பினர் எழுத்துமூலம் கேட்கும் கட்சிக்கு சம்பந்தமான விபரங்களை எந்த மறுப்பும் சொல்லாமல் அளிக்க வேண்டும் இது எல்லாக் கட்சிக்கும் பொதுவானது. நன்றி பதில் அளித்தால் மேலும் பேசலாம்
கருத்துரையிடுக