நண்பர்களே ஊழல் எந்த வடிவத்தில் எப்படி நடைபெறும் என்று யூகிக்க முடியாத அளவில் தான் நடைபெறுகின்றது.தமிழ் நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாடும் அதில் நடைபெறும் முறைகேடுகளும்
எப்படி நடைபெறுகின்றது என்பதுடன் அதற்கான காரணங்களையும் விரிவாக மக்களும் அரசும் அறிந்து கொள்ளவே இந்த பதிவை எழுதியுள்ளேன். இதில் வரும் குறைபாடுகள் இதற்க்கு முன் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களும் கண்டறியாத அல்லது கண்டுகொள்ளப்படாது தவறு ஆகும். மரியாதைக் குரிய காமராஜர் காலத்திலும் இந்த தவறு நடைபெற்றுள்ளது என்பது மறைக்க முடியாத உண்மையாகும். தகவல் பெரும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற ஆதாரங்களின் அடிப்படியிலேயே இந்த பதிவை எழுதுகின்றேன். தவறு நடந்தது எப்படி என்று கண்டறிவது ஒருபுறம் என்றாலும் அந்த தவறு மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும் அதற்க்கான தீர்வைத் தர வேண்டும் என்பதுமே கட்டுரையின் நோக்கம். குறை சொல்வதும் தவறு தவறு என்று கூச்சல் போடுவதும் என்று இல்லாமல் ஒரு ஆரோக்கியமான் அரசு இனி என்ன செய்ய வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இந்தியன் குரல் அந்த தொலைநோக்கு பார்வையில் தான் செயல்படுகின்றது.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தமிழகத்தில் உள்ளது என்பதை நாம் அறிவோம் அதன் செயல்பாடுகள் அதன் பயன்பாடு பற்றி முதலில் இந்த சங்கத்தினால் மக்களுக்கு என்ன பயன்/
இச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு
1) மருத்துவ காப்பீடு இலவசம்
2) மாதம் 250 யூனிட்டுகள் மின்சாரம் இரண்டு மாதம் 500 யூனிட் மிசாரம் இலவசம்
3) ஓய்வூதியம்
4) கல்வி உதவித்தொகை
5) அரசின் அனைத்து சலுகைகளும் பெறலாம்
போன்ற நன்மைகளை அரசு செய்கின்றது
சங்கம் செயல்பாடு என்ன?
1 உறுப்பினர் சேர்த்தல்
2 உறுப்பினர்களுக்கு பனி வாய்ப்பு அதாவது நெசவுக்கு தேவையான நூலினைக் கொடுத்து நெய்து முடித்த துணிகளை பெற்றுக்கொள்ளுதல் அதற்க்கான கூலியை அரசு நிர்ணயம் செய்த கூலி வழங்குவது
3 உறுப்பினர் நெசவுக்கு நூல் பெரும் போதே முன் பணம் உதவி தேவைப்படின் வழங்குதல்
4 நெசவு செய்யப்பட்ட துணிகளை அரசின் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி பணம் பெறுதல்
சங்கம் அரசு அலுவலர் மற்றும் தேர்வு பெற்ற நிர்வாகிகளைக் கொண்டு இயங்குகின்றது .
மாவட்ட இயக்குனர் மாநில இயக்குனர் அதற்கென்று ஒரு அமைச்சர் இவ்வளவு நிர்வாகம் நடைபெறும் மாநில மத்திய அரசின் தனித் துறைகள் உள்ள அமைப்பாகும்
உறுப்பினர் தகுதி என்ன ?
1 உறுப்பினர் நெசவாளராக இருத்தல் வேண்டும்
2 உறுப்பினர் 100முதல் 500 ரூபாய் வரை அவர்கள் உள்ள ஊரின் கூட்டுறவு சங்கம் கேட்கும் தொகையைக் சந்தாவாக செலுத்துதல் வேண்டும்
3 கட்டாயம் தரிக் கூடம் இருக்க வேண்டும்
4 உறுப்பினர் நெசவு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும் தரிக்கூடம் வைத்து ஆள்வைத்து நெசவு செய்தால் அவர் உறுப்பினர் ஆக முடியாது.
அசோசியேட் உறுப்பினர் 10 ரூபாய் கட்டணம்
நெசவாளர்களுக்கான சலுகைகள் கிடைக்காது ஆனால் உறுப்பினருக்கு அதிகாரம் பெற்றவராக சங்கத்தின் அனுமதியுடனும் உறுப்பினரின் அனுமதியுடனும் செயலாற்றலாம் உறுப்பினருக்கு போன்ற உறுப்பினருக்க சங்க அலுவலகம் வருவதற்கு சிரமம் அல்லது இயலாத நேரங்களில் உதவியாக செயலாற்றலாம்
எங்கெல்லாம் முறைகேடுகள் நடைபெறுகின்றது?
சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் அரசின் இலவச மின்சாரம் கிடைக்கும் அந்த உறுப்பினர் இலவச மின்சாரம் பெற மாவட்ட இயக்குனர் ஒப்புதல் கடிதம் சமர்ப்பித்து இலவச மின்சாரம் பெற மின் வாரியத்தில் விண்ணப்பிக்கலாம்.

உறுப்பினருக்கு பதிலாக உறுப்பினர் அல்லாத உறுப்பினரின் உத்தரவாதம்( சம்பந்தப் பட்ட உறுப்பினருக்கு தெரிந்தும் தெரியாமலும்) பெற்ற நபர்கள் மூலம் பரிவர்த்தனை நடைபெறும் பொது தவறுகள் நடைபெறுகின்றது
ஊழல்கள் முறைகேடுகள்
ஒரு உறுப்பினர் இலவச மின்சாரம் பெற இயக்குனருக்கு லஞ்சம் தர வேண்டும் ஒரு கையெழுத்துக்கு இன்றைய விலை ரூ 1000 மட்டும்
ஒரு கூட்டுறவு சங்கம் நெசவுக்கு தேவையான நூல் நெசவு கூலி உள்ளிட்ட மொத்த செலவினங்கள் ஒரு சேலைக்கு ஆகும் செலவு 330
அதை 20% லாபம் கொடுத்து 396 ரூபாய்க்கு கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது நிகர லாபம் சங்கத்திற்கு ரூபாய் 66 கிடைக்கிறது
ஒரு உறுப்பினர் வாரம் 6 சேலை நெசவு செய்ய இயலும் ஒரு வாரத்தில் ஒரு உறுப்பினர் நெய்து சங்கத்திற்கு வருவாய் 6*66 = 396
ஒரு சங்கத்தில் 100 உறுப்பினர்கள் என்றால் ஆண்டுக்கு அந்த சங்கம் ஒரு ஆண்டுக்கு வெள்ளையாக பெறும் வருவாய் 100*396*52=2059200 கிடைக்கின்றது இது நியாயமாக நேர்மையாக் கணக்கில் காட்டி பெறப்படும் தொகை ஆகவே வெள்ளைப் பணம் என்று குறிப்பிடுகின்றோம்.
ஆனால் எந்த சங்கத்திலும் 100 உறுப்பினர்களை விட அதிகமாக தான் இருக்கும் அதில் நெசவு என்றால் என்ன என்றே தெரியாத உறுப்பினர்களும் அடக்கம்
நெசவுத் தொழில் செய்யாத உறுப்பினர்களும் சேலை நெய்து கொடுப்பதாக கணக்கு காட்டத் தான் கூட்டுறுவு சங்கம் இருக்கின்றதோ எனும் அளவில் முறைகேடுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது
அதாவது உறுப்பினர் நெசவு செய்து தரவேண்டிய சேலைக்கு பதிலாக விசைத்தறியில் சேலை வாங்கப்பட்டு அந்த சேலை உறுப்பினர் நெசவு செய்ததாக கணக்கில் உத்திரவாதம் பெற்ற நபர் மூலம் (இவர்களே அந்த கையெழுத்தை போட்டுக் கொள்வதும் உண்டு) வரவு வைக்கப்படும்
விசைத்தறியில் வாங்கப்படும் சேலை விலை 210 ஆனால் கணக்கில் உற்பத்திச் செலவு ரூ 330 ஆகா காட்டப்படுகின்றது
இதில் ஒரு சேலைக்கு 110 கருப்பு பணமாகி கணக்கில் வராமல் லாபமாகிறது. ஒரு உறுப்பினர் வாரம் 6 சேலை வீதம் ஆண்டிற்கு 312 சேலை நெய்ததாக கணக்கு எழுதப்படுகின்றது 100 உறுப்பினர்கள் உள்ள ஒரு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் சங்கத்தில் அரசை ஏமாற்றி விசைத்தறி துணியை கைத்தறி என்று வரவு வைத்து ஒரு வாரம் ஒரு சங்கம் எடுக்கும் கறுப்புப் பணம் நிகர கொள்ளை 312*110*100= 3432000 ரூபாய் ஆகின்றது
சாதாரணமாக் ஒரு சங்கத்தில் 500 உறுப்பினர்கள் இருப்பார்கள். அப்படி உள்ள சங்கத்தில் ஆண்டு ஒன்றுக்கு 1கோடியே 71 லட்சத்து 60 ஆயிரம் ருபாய் கொள்ளையடிக்கப்படுகின்றது
ஒரு சங்கத்தில் ஒரு ஆண்டுக்கு 17160000 என்றால் தமிழகம் முழுவதும் உள்ள மொத்த சங்கங்கள் 11855 சேர்த்து அடிக்கும் கொள்ளை 203431800000( 20ஆயிரத்து 343 கோடியே 18 லட்சம்) ரூபாய்
கைத்தறி சங்கங்கள் அடிக்கும் விசைத்தறி சேலையை கைத்தறி சேலையாக கணக்கு காட்டி அடிக்கும் கருப்பு பணமாக கொள்ளை மட்டும் ஆண்டுக்கு ரூ 203431800000
330 ரூபாய் புடவைக்கு 20 சதவீத லாபத்தை கணக்கிட்டால் இது சங்கத்தின் வரவு செலவில் பதிவு செய்யப்படுவதால் வெள்ளைப் பணமாக ஒரு புடவைக்கு லாபம் 66 ரூபாய் அந்த வகையில் ஒரு ஆண்டுக்கு சங்கம் வெள்ளையாக பெரும் முறைகேடான பணம் ரூ 66*6*52 வாரம் *500*11855 = ரூ 122059080000
கருப்பு பணமாக லாபம் ரூ 203431800000
மொத்தம் நிகர முறைகேடாக பெறும் லாபம் ஒரு ஆண்டுக்கு ரூ 335490880000
(முப்பத்து மூன்று ஆயிரத்து ஐநூற்று நாற்பத்து ஒன்பது கோடியே எட்டு லட்சத்து எண்பதாயிரம் முறைகேடாக அரசுக்கு இழப்பாகிறது)
இந்த இழப்பு ஒவ்வொரு சங்கமும் தணிக்கை செய்யப்படும்பொழுது தெரியும் ஆனால் தணிக்கை அலுவலர்களுக்கு இந்த விவரம் தெரியவில்லை போலும்
இந்த தொகை எங்கே செல்கின்றது யாருக்கெல்லாம் பங்கு போகிறது?
இந்த ஆண்டு மட்டும் புதிதாக ஒவ்வொரு சங்கத்திலும் 500 உறுப்பினர்கள் சங்கத் தேர்தலை முன்னிட்டு புதிதாக கட்டாயமாக சேர்க்கப்பட்டு உள்ளார்கள் என்று தெரிகின்றது இதில் நெசவு செய்யத் தெரியாதவர்கள் எல்லாம் உறுப்பினர்
அப்படி என்றால் இனி அந்த 500*11855=5927500 பேர் இந்த புதிய உறுப்பினர்களும்
நெசவு செய்ததாக இனி கணக்கில் காட்டப்படும் இவர்கள் நெய்த சேலைக்கு கூலியும் அதோடு சேர்ந்த இந்த கொள்ளையும் 2 மடங்கு பெருகி இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு இழக்கவேண்டிய நிலை வரும்
ஒரு உறுப்பினருக்கு மாதம் 250 யூனிட்டுகள் இலவச மின்சாரம் எனில் ஒரு உறுப்பினர் ஒரு ஆண்டு பயன் பெரும்
மின் கட்டண மானியம் 250*12*5.5= 1441 ரூபாய்
மொத்த உறுப்பினர்கள் பெரும் மானியம் 11855*500*1441=854,15,27,500
ஆக இது வரை ஆண்டுக்கு மின்வாரியத்தில் நெசவாளர்களுக்காக அரசு செலுத்திய மின் கட்டணம் சுமார் 854கோடியே 15 லட்சத்தி 27 ஆயிரம் ரூபாய்
தற்பொழுது புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களையும் இலவச மின்சாரம் பெற விண்ணப்பம் செய்தால் வரும் ஆண்டு முதல் அரசு மின் கட்டணமாக 1708,30,55,000 (1708கோடியே 30 லட்சத்து 55 ஆயிரம் ) ரூபாய்
ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் இருந்தால் மூன்று உறுப்பினர்களும் தனித் தனியே மின் இணைப்பை பெறுகின்றார்கள் அவ்வாறு பெரும் மின் இணைப்புகள் பெரிய அளவில் விசைத்தறிக் கூடம் இயங்க உதவி செய்கின்றது
அரசின் வருவாய் இப்படி முறைகேடாக ஆண்டுக்கு 35ஆயிரம் கோடி வரை இழப்பாகிறது விழித்துக் கொள்ளுமா அரசு அல்லது ஓட்டுக்காக?
பயப்படத் தேவை இல்லை ஏனெனில் இந்த முறைகேடு சங்கத்தின் முக்கிய நபர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் மட்டுமே லாபம் அந்த வகையில் ஒரு சங்கத்தில் அதிகபட்சம் 5 அல்லது 6 நபர்களுக்கு தான் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கின்றது . இந்த நடவடிக்கை உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது. ஆகவே ஓட்டு வங்கி என்ற பயம் இல்லாமல் அரசு துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி துணிச்சலாக நடவடிக்கை எடுத்தால் எடுத்தால் நிர்வாக சீர்திருத்தம் செய்தால் ஊழலி முறைகேடுகலத் தடுக்கும் அரசு வருவாய்க்கு புதிய வழி தேடவேண்டிய அவசியம் இல்லாமல் போகும் இந்த பணம் மக்கள் நலனுக்காக செலவிட்டால் மக்களும் வாழ்த்துவார்கள் செய்யுமா இந்த அரசு ?
1 கருத்து:
இந்த முறைகேடு சங்கத்தின் முக்கிய நபர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் மட்டுமே லாபம் அந்த வகையில் ஒரு சங்கத்தில் அதிகபட்சம் 5 அல்லது 6 நபர்களுக்கு தான் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கின்றது . இந்த நடவடிக்கை உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது. ஆகவே ஊட்டு வங்கி என்ற பயம் இல்லாமல் அரசு த்குநிச்சளுடன் நடவடிக்க எடுத்தால் அரசு வருவாய்க்கு புதிய வழி தேடவேண்டிய அவசியம் இல்லாமல் போகும் இந்த பணம் மக்கள் நலனுக்காக செலவிட்டால் மக்களும் வாழ்த்துவார்கள் செய்யுமா இந்த அரசு ?
வாழைப்பழத்தை உரித்தே தட்டில் வைத்துக்
கொடுத்துள்ளீர்கள்
காது கேட்கிறதா பார்ப்போம்
கருத்துரையிடுக