ஆதரவாளர்கள்

ஞாயிறு, 9 ஜூன், 2013

அன்பைத்தெரியாத அன்புகாட்டும் பருவம்

நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் தினமும் நடக்கின்றது ஆனாலும் ஒரு சில சம்பவங்கள் எப்போதாவது நினைவுக்கு வரும் போது மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது என்பதற்காகவே நினைக்கத் தோன்றுகின்றது.
ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் பதிம வயது என்பது எது எந்த வயதில் காதல் என்பதெல்லாம் தெரியாத புரியாத வயதிலும் சிலரிடம் அன்பு காட்டுகின்றோம்.

பணம் அதன் மதிப்பு என்பது என்ன என்று தெரியாத அன்பு பண்பு பாசம் மட்டுமே அறிந்த இளம் பருவம் அன்றைய நட்புகள் விளையாட்டுக்கள் மகிழ்ச்சி எல்லாம் நினைத்த பொழுதெல்லாம் இன்பம் தரக்கூடியதல்லவா அப்படிப்பட்ட வாழ்கை ஒரு முடிவுக்கு வரும் போது துக்கம் நம் தொண்டையை அடைத்தாலும் தங்கிக்கொண்டு அடுத்த பகுதியில் பழகிக் கொண்டு வாழ கட்டாயமாக்கப் படுகின்றோம். 

தொலைந்த இளமைப் பருவம் கடந்துவிட்டது திரும்ப வருமா என்றால் வராது அதன் காரணங்களை அறிந்து நம் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கித் தருவது நம் கடமையாகின்றது. 

நானும் என் இளமைப் பருவத்தை இப்பொழுது நினைத்து பார்த்தால் சந்தோசம் சோகம் கலந்தே இருக்கின்றது அனைவருக்குமே இது பொது நியதியாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். 

அப்பொழுது நான் மூன்றாம் வகுப்பில் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கின்றேன் நான் என்னுடைய அக்கா (பெரியப்பா மகள் ) எனக்கு முந்தைய 4 ஆம் வகுப்பில் படிக்கின்றார். அதே வகுப்பில் அழகான பெண் லட்சுமியும் படிக்கின்றாள். 

மாலை தினசை 4மணிக்கு பள்ளி முடியும் என்றால் மாலை 3.30 அளவில் தினமும் விளையாட்டுக்கு பெல் அடிப்பார்கள். பள்ளியின் முன் சிறிய அளவில் தான் விளையாட இடம் இருக்கும் மற்ற பகுதியில் முள்செடி முளைத்து இருக்கும். அந்த இடத்தில் தன எல்லோரும் விளையாட வேண்டும் 

அருகில் கொஞ்சம் தள்ளிச் சென்றால் சிறிய நீர் ஓடை மணல் நிறைந்து இருக்கும் அங்கே கபடி விளையாடுபவர்களும் இரண்டு அணியாக பிரிந்து இழுவை விளையாட்டு அதாவது ஒரு அணியில் இருப்பவரை மற்றொரு அணி மாணவன் இழுத்து மத்தியக் கோட்டைத் தாண்டி அவன் பக்கம் இழுத்து விட வேண்டும் அப்படி அணி முழுவதும் இழுத்து ஜெயிக்க வேண்டும்.

அதைத் தாண்டி இருக்கும் பகுதியில் எப்போதாவது மாடிகளும் மேயும் சில சமயம் சலவைக் காரர் சலவைத் துணி எண்டுத்து வந்த நாளில் மட்டும் நான்கு அல்லது ஐந்து கழுதைகள் கூட்டமாக முன்னங் கால்கள் இரண்டும் சிறு கயிறால் இணைக்கப்பட்ட நிலையில் மேய்ந்து கொண்டு இருக்கும். அந்த புள் தரையில் எப்பொழுதாவது கோகோ விளையாடுவோம். 

பெரும்பாலும் பள்ளி அறைக்கு முன்பாக உள்ள பகுதியில் சதுரமாக கொடு போட்டு நொண்டி விளையாடுவது பிடிக்கும் அதற்கும் இரண்டு குழு இருக்கும் நொண்டி அடித்துக் கொண்டே சென்று ஒவ்வொருவரையும் அவுட் ஆக்க வேண்டும். 

அப்படிப்பட்ட பள்ளியும் எங்கள் ஊரில் இல்லை பக்கத்து ஊரில் தான் இருந்தது. நானும் முன்னர் சொன்னேனே அக்காவும் மற்ற பிள்ளைகளும் அப்பொழுத் உடன் வந்த மற்ற பிள்ளைகளை பார்த்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டது யாரும் தொடர்பில் இல்லை. 

தினமும் நானு என் அக்காவும் ஒன்றாகத் தான் பள்ளிக்கு செல்வோம் வருவோம். எனக்கு தெரியாது அப்பொழுது பெரியப்பா மகள் என்று எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வோம் வருவோம் பள்ளியில் விளையாடும் போது ஒன்றாகத் தான் விளையாடுவோம். பள்ளிக் கூடத்தில் நொண்டி விளையாட வேண்டுமேளில் முதலில் இடம் பிடித்தால் தான் பெரிய பகுதியைக் கைப்பற்ற முடியும் அப்படி மணி அடித்ததும் ஓடிப்போய் கொடு போட்டுக் கொண்டு இருக்கின்றேன் எனக்கு எதிராக பெண்கள் அணி கொடு போட்டுக் கொண்டு இடம் பிடிக்க வர கொடு போட்ட பெண்ணை இடித்து தள்ளிவிட்டு அன்று முழு பகுதியையும் நானே ஆக்கிரமித்தேன். அக்காவும் மற்ற பெண்களும் வந்து கேட்டதும் ஆசிரியர் சொல்லியும்  கேட்காத நான் கொஞ்சம் விட்டுக் கொடுத்தேன். 

தினமும் பள்ளிக்கு செல்லும்போதும் வரும்போதும் ஒருவருக்கு ஒருவர் துணையாக நடந்தே தான் வருவோம் பள்ளி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் அப்படியே காலம் கடந்தது. 

நன் ஐந்தாம் வகுப்பு வந்தபோது 6ஆம் வகுப்பிற்காக 6 கிலோமீட்டர் தள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். நானும் என் அண்ணனும் மட்டும் தினமும் ஒன்றாக ஆரம்பப் பள்ளிக்கு சென்று வருவோம். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தான் மதிய உணவு செய்ய வேண்டும் நாங்கள் சமையலும் செய்தோம். அப்படி சமையல் செய்து கொண்டு இருந்த பொழுது ஒருநாள் அந்த வழியாக மாட்டுவண்டி ஓட்டிச் சென்ற எங்களது பன்னையத்து வேலைக்காரர். அப்பாவு அக்க பள்ளிக்கூடம் சென்றபோது பயந்து மயங்கி விட்டாராம் வீட்டுல இருக்கு என்று விபரம் சொன்னார்.

மதிய உணவுக்கு மணி அடித்ததும் நான் சாப்பிட வில்லை உடனடியாக வீட்டுக்கு சென்று அக்காவை பார்த்துவிட்டு திரும்ப வருவது என்று முடிவு செய்து யாருக்கும் சொல்லாமல் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன் ஏனெனில் உணவு இடை வேலைக்கு முன் திரும்ப வந்துவிட வேண்டுமே பள்ளிக்கு ஆகவே ஓடினேன் ஓடினேன்  ஓடினேன்.   என்ன ஆட்சோ ஏது ஆட்சோ என்ற சிந்தனையில் இரண்டு கிலோமீட்டர் தூரமும் நிற்காமல் ஓடினேன். ஓடிய வேகத்தில் வீட்டினுள் செல்கின்றேன் எல்லோரும் என்னடா என்னடா என்று கேட்கக் கேட்க பதில் சொல்லாமல் வீடு முழுதும் தேடினேன் அக்காவைக் காணவில்லை. வெளிப் பிரகாரத்தில் இருந்த அம்மாவிடம் அக்க எங்கேம என்றேன் பாட்டி வீட்டுல இருக்கா  அதுக்கா இப்படி ஓடிவந்தே என்றார் . நான் பதில் ஏதும் சொல்லாமல் பாட்டி வீட்டை நோக்கி ஓடினேன் வீட்டின் முன் பிரகாரத்தில் அக்கா படுத்திருக்க அடுப்படியில் இருந்த பாட்டியிடம் ஓடிச் சென்று அளவும் பாட்டி அளவும் ஒன்னும் இல்லைட நல்லாத் தான் இருக்கா கவலைப் படாதே என்று ஆறுதல் சொன்ன என்பாட்டியை அப்படியே கட்டிப் பிடித்து தேம்பித் தேம்பி அழுதேன் ( இப்பொழுதும் கண்ணீரோடுதான் எழுதுகின்றேன் ) சிரித்துக்கொண்டே வந்த அக்கா என்னடா என்னடா என்று கேடு நான் நல்லத் தான் இருக்கேன் என்று என்னைத் தேற்றவும் சரி நான் வருகின்றேன் என்று அங்கிருந்து பள்ளிக்கு மீண்டும் ஓடினேன் உணவு இடைவேளை மணி அடிக்கும் முன் பள்ளிக்குள் சென்று விட வேண்டுமே.ஓடி சரியாக பள்ளிக்கு வந்துவிட்டேன். அந்த நிகழ்வுக்கு பிறகு ஒருநாள் வீட்டில் அமா மற்றும் பெரியம்மா ஆகியோர் இதுகுறித்து பேசிக் கேட்ட தொட்ட வேலைக்கு வந்திருந்த எல்லோரும் இந்தப் பிள்ளை அக்கா மேல் எவ்வளவு பாசமாக இருக்கின்றான் என்று பேசிக்கொண்ட பொது தான் ஓ இது தான் பாசம் என்பதா என்று நான் அறிந்தேன்.

 எந்தக் கவலையும் இல்லாத பருவம் அந்த இளம் பருவம் நினைத்தால் உடனே செயலாற்ற முடிந்த பருவம் பணம் என்றால் என்ன என்று தெரியாத பருவம் பள்ளிக்கு சென்ற பொது ஒரு நாள் கூட காசு எடுத்துச் சென்றது இல்லை. கடைகளில் ஏதும் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று எண்ணியதும் இல்லை.

 மாலை விளையாட்டு நேரத்தில் எங்களது ஆசிரியர்கள் திரு ஆறுமுகம் ஐயா அவர்களும் திரு இருதய ராஜ் ஐயா அவர்களும் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு  நாங்கள் விளையாடுவதை கண்காணித்தபடி பேசிக்கொண்டு இருப்பார். ஒருநாள் ஆறுமுகம் ஐயா குச்சியால் பல்குத்துவதைக் கண்டு நானும் அப்படி ஒரு குச்சியை எடுத்து பல்குத்துவதைக் பார்த்து என்னை அருகில் அழைத்து பல்குத்தினால் பல் சந்துபல்லாகிவிடும் செய்யாதே என்று சொன்னார். அதன்பிறகு அவர் பல் குத்துவதை நான் பார்த்ததே இல்லை. அப்படிப் பட்ட இளைய நாள் நினைவுகளை நினைக்கும் போதெல்லாம் இனிக்குதே.

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பழைய நினைவுகள் என்றும் இனியவை... எனக்கும் ஞாபகம் வரவழைத்து விட்டீர்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கடந்த கால நினைவலைகளில் மூழ்கித் திளைப்பது என்றுமே சுகம்தான்.வாழ்த்துக்கள்

VOICE OF INDIAN சொன்னது…

தங்கள் தொடர்ந்த கருத்திற்கு நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே

VOICE OF INDIAN சொன்னது…

தங்கள் தொடர்ந்த கருத்திற்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாசம் பகிரும் மலரும் நினைவுகள்..!

VOICE OF INDIAN சொன்னது…

பாசம் பகிரும் மலரும் நினைவுகள்..! உண்மை.. உண்மை .....

தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!