ஆதரவாளர்கள்

சனி, 22 ஜூன், 2013

மின் கட்டண உயர்வு அறிவிப்பு

இந்தியன் குரல் கூறியது போன்றே மின் கட்டண உயர்வு அறிவிப்பு வந்துவிட்டது தினமலரில் செய்தி அதை அப்படிடியே கீழே கொடுத்துள்ளோம். என்ன சூட்சுமம் இருக்கின்றதோ அதை வெளியிடாமல் நல்லதுபோன்ற தோற்றமளிக்கும் செய்தியை மட்டும் வெளியிட்டுள்ளது அனால் அடுத்து வரும் ஆபத்த்தான மின்கட்டண உயர்வு பற்றிய ஆணையத்தின் முடிவை எந்த ஊடகமும் வெளியிடவே இல்லை.அவர்களுக்கு தெரியவில்லையா அல்லது கொடுக்கும் செய்தியை மட்டும் போடும் திறமையா? இப்படிப்பட்ட  ஊடகங்களின், அரசின் செயல்களை மக்கள் நம்பிக்கொண்டு தான் இருக்கின்றார்களா? தெரியாமல் அல்லது தெரிந்தே மௌன சாமியார்களாக இருக்கின்றார்களா?


நடக்க இருக்கும் மின் கட்டண உயர்வு மற்றும் அதன் தொடர்ச்சியாக அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்த மின்கட்டண உயர்வு குறித்து நாம் ஏற்க்கனவே முந்தைய பதிவில் வெளியிட்டு தமிழ்நாடு மிசார ஒழுங்குமுறை ஆணையம் நடத்தும் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்துகொள்ளக் கேட்டு இருக்கின்றோம். அந்தப் பதிவை திரும்பத் திரும்ப பல தலைப்புகளிலும் வெளியிட்டோம் அந்தப் பதிவை எத்தனைபேர்கள் படித்தார்கள் என்பதைவிட எத்தனை பேர் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து விவாதம் செய்து உண்மை நிலையை தன மக்களுக்கு தன அருகாமை மக்களுக்கு தெரியப்படுத்தியிருப்பார்கள் என்று தெரியவில்லை.

 எத்தனைபேர் நம் பதிவைப் படித்து அதன் அபாயத்தை உணர்ந்து ஆணையம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்து தம் கருத்துக்களை பதிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. அதற்கு எல்லாம் நேரம் நம் இளைஞர்களுக்கு இருந்திருக்குமா என்றும் தெரியவில்லை.


 நடிகையைப் பற்றி சினிமாவைப் பற்றி படிக்கும் ஆர்வம் ஆபாசங்களைத் தேடி அலையும் காமப் பேய்களாக காமம் காதல் மட்டுமே உலகம் வாழ்க்கை என்று சமூகத்தால் செதுக்கப்பட்ட நம் இளைஞர்கள் கார்த்திகை மாதம் உறவுகொள்ள அலையும் நாய் போன்று மன அழுக்குடன் என்னச் சிதறல்களுடன் தன புத்தியைத் தொலைத்துவிட்டு அலைய விட்டு வேடிக்கை பார்க்கும் அதைக் காசாக்கும் பண முதலைகள் இருக்கும் சமூகத்தின் பிள்ளைகள் என்ன செய்வார்கள் பாவம்.  சில இளைஞர்கள் இது பற்றி சிந்திக்க நேரம் ஏது?

வரும் முன் காக்க நாம் சொல்வோம் அனுபவித்து தான் திருந்துவேன் என்ற ஜென்மங்களுக்கு எங்கே நாம் சொல்வது உரைக்கப்ப் போகின்றது . சமூகத்தில் நடக்கும் அவலங்கள் தட்டிக் கேட்கும் துணிச்சல் உள்ள இளைஞன் டாஸ்மாக் மது மயக்கத்திலும் காமப் படங்களின் கிறக்கத்திலும் காதல் போதையிலும் இருக்கின்றான்.  மீதமுள்ள சில  இளைஞர்களோ பணம் பண்ணும் மிசினாக இருக்கின்றான் அவர்களுக்கு இதைப் பற்றி சிந்திக்கவோ கேட்கவோ நேரமில்லை. இவர்களுக்கு யார் சொல்வது இளைஞர்களே விழிப்படையுங்கள் இல்லையென்றால் உங்கள் உடைமைகள் யாவும் கொள்ளை போகும் யார் நினைத்தாலும் அதைத் தடுக்க முடியாது.

 தடுக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கும் புகார் அளிக்க லஞ்சம் கொடுக்க பணம் இல்லாமல் தவிக்கும்  நாள் வகு தொலைவில் இல்லை. இன்று இளைஞர்கள் விழிப்பாக இல்லாத காரணம் தான் அரசின் ஆணையத்தின் மின் கட்டணம் பற்றிய அறிவிப்புக்கு காரணம் என்பதை மறவாதீர்கள் அவர்களது கருத்துக் கேடுக் கூட்டங்களுக்கு தமிழகம் முழுதும் உள்ள மக்களில் 137 பேர் மட்டுமே கருத்துக்களை கூறியிருக்கின்றார்கள் என்றால் இதற்க்கு மேல் இந்தக் கேடுகெட்ட மனிதர்கள் நிலை என்ன என்று எப்படி சொல்வது என்று தெரியவில்லை

இதோ தினமலர் செய்தி
குடிசை மற்றும் வேளாண் மின் நுகர்வோருக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2013 - 14ம் ஆண்டுக்கான, மின் கட்டண உயர்வு பரிந்துரையை, 81 நாள் தாமதமாக, கடந்த பிப்., 19ம் தேதி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும், சமர்ப்பித்தன. தாமதமாக பரிந்துரையை சமர்ப்பித்ததற்கான காரணத்தையும், நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இதை தொடர்ந்து, மின் கட்டணம் மாற்றியமைப்பதற்கான மனு மீது, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னையில், மே, 3ம் தேதியும், திருச்சியில், மே, 8ம் தேதியும், மதுரையில், மே, 10ம் தேதியும், கோவையில், மே, 17ம் தேதியும் நடைபெற்றன. "முழு அளவில் மின்சாரம் வழங்காமல், மின் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதா?' என, பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, கோவையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற, தொழில் துறையினர் மற்றும் விவசாயிகள், மின் வாரிய அதிகாரிகளுடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நான்கு இடங்களில் நடந்த கூட்டங்களில், 130 பேரிடம் இருந்து, கருத்துகள் பெறப்பட்டன. இவற்றை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்தது.

இதையடுத்து, தமிழக மின் ஒழுங்குமுறை ஆணையம், நேற்று, மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை வெளியிட்டு உள்ளது. இதன்படி, விவசாயத்திற்கான மின்சார கட்டணம் ஒரு குதிரை திறனுக்கு, ரூ.1,750 லிருந்து, 2,500 ரூபாயாகவும், குடிசைக்கான மின்சார கட்டணம், ரூ.60 லிருந்து, 125 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. "இந்த கட்டண உயர்வு தொகை, தமிழக அரசிடமிருந்து, மானியமாக பெறப்படும்' என, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது, 20.35 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 14 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் கட்டண உயர்வு மூலம், தமிழக மின் வாரியத்திற்கு, 964 கோடி ரூபாய், கூடுதல் வருவாயாக கிடைக்கும். மேலும், விளம்பர தட்டிகள், பலகை ஆகியவற்றை பயன்படுத்துவோர், அலங்கார பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு, கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6 கருத்துகள்:

ராஜி சொன்னது…

ஏற்கனவே பாதி நேரம் இருட்டுலதான் மூழ்கி கிடக்குறோம். இனி விலை உயர்வால் முழுநேரமும் இருட்டிலேயே இருக்க வேண்டியதுதான்.

Unknown சொன்னது…

நல்ல பதிவு.
மக்கள் விழிக்க மறுக்கிறார்கள்

VOICE OF INDIAN சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகைபுரிந்து கருத்திட்டமைக்கு நன்றி குருநாதன் அவர்களே!
உங்களைப் போன்ற துடிப்பான சமூக ஆர்வலர்கள் முன்வந்தால் மாற்றம் விரைவில் உண்டு. மக்களைப் பெருமளவு பாதிக்கும் முடிவுகளைப் பற்றி மக்கள் விழிப்படைந்து கேள்வி கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பல வகையிலும் மக்கள் கவனம் திசைதிருப்பப் படுகின்றது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். தோழரே பழைய செய்தித் தாள்களை ஆக்கிரமித்த நிகழ்வுகள் உருவான அதே காலகட்டத்தில் மத்திய மாநில அரசின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் புரியும். மக்களை பாதிக்கும் விசயங்களில் மக்கள் விழிப்படையாமல் இருக்க அரசியல் கட்சிகள் புதிய பிரச்னையை பற்றி மக்களைப் பேசவைத்து அவர்கள் நினைத்ததை ஓசையில்லாமல் சாதித்து விடுவார்கள். அதையும் மீறி சில வெளியில் வரும்போது அதை மறைக்க இன்னொன்று என்ற நிலைப்பாடை எடுப்பார்கள்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நான் படித்த எங்கள் ஆரம்பப் பள்ளியில் ஆறுமுகம் என்ற ஒரு ஆசிரியர் ஒருநாள் கரும் பலகையில் ஒரு கோட்டை வரைந்து அந்தக் கோட்டை அளிக்காமல் சிறிய கோடாக மாற்ற முடியுமா என்று ஒவ்வொரு பிள்ளையாக கேட்டுக்கொண்டு இருந்தார் ஒரு மாணவன் அந்த சிறிய கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்து இப்பொழுது நீங்கள் வரைந்த கொடு சின்னதாகிவிட்டது சார் என்றான். அந்த மாணவன் என்ன செய்தானோ அதைத் தான் அரசியல் கட்சிகள் செய்கின்றன பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதற்கு பதிலாக மக்கள் மனதில் அதைவிடப் பெரியது என்று பேச போராட திசைமாற்றுவது வாடிக்கை ஆகிவிட்டது. ஈழம் ஆகட்டும் முல்லைப் பெரியார் ஆகட்டும் காவிரிப் பிரச்சனை ஆகட்டும் தினகரன் ஊழியர்கள் எரிப்பு ஆகட்டும் நெய்வேலி பிரச்சனை ஆகட்டும் அன்ன ஹஜாரே போராட்டம் ஆகட்டும் எல்லாப் போராட்டங்களின் பின்னாலும் அரசியல் இருக்கு நண்பரே இளைஞர்கள் அதை முதலில் தெரிந்து தெளிவடைய வேண்டும் என்பதே மிக அவசியம் ஆகும். பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்போது மக்கள் கவனம் முழுதும் அந்தப் போராட்டத்தைப் பற்றி மட்டுமே பேச ஆரம்பித்து தொடர்வர். மக்கள் மனதில் இதற்க்கு முன் இருந்த சிறிய கொடு மறைந்துவிடும் அதுதான் அரசியல் வாதிக்கும் ஆளுபவர்களுக்கும் வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் அந்த சிறிய கொடு போன்ற பிரச்சனைகளை மக்கள் மறக்காமல் இருக்க உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதே அவா

ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் நண்பர்களே நாமறிந்த காமன்வெல்த் ஊழலல் ஆதர்ஸ் அடுக்குமாடி ஊழல் 2ஜி ஊழல் நிலக்கரி சுரங்க ஊழல் எம்பி க்களுக்கு லஞ்சம் கொடுத்தது போன்ற எல்லா ஊழல்களும் மறக்கடிக்கப் படுகின்றது என்பதைக் கவனியுங்கள் இன்னும் ஓராண்டில் மக்கள் முழுமையாக மறந்து விடும் நிலைக்கு இட்டுச்செல்லும் வேலையை பல்வேறு அமைப்புகள் துணையுடன் சரியாக செய்வதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் திறமையானவையே!
--

VOICE OF INDIAN சொன்னது…

கருத்திட்டமைக்கு நன்றி ராஜி அவர்களே!

saidaiazeez.blogspot.in சொன்னது…

// எல்லாப் போராட்டங்களின் பின்னாலும் அரசியல் இருக்கு நண்பரே இளைஞர்கள் அதை முதலில் தெரிந்து தெளிவடைய வேண்டும்//
எல்லாவற்றிற்கும் பின்னால அரசியல் இருப்பதாலேயே பலர் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை. அரசியல்லே இதெல்லாம் சகஜம்பா என்று கூறிவிடுகின்றனர்.
தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தாதான் தெரியும் என்பது போல பிரச்சனை அவரவர்களுக்கு வரும்போதுதான் "அய்யோ குய்யோ" என்று கத்துவது.
பக்கத்துவீட்டு தீ அடுத்து நம்மையும் அழிக்கும் என்பதை அறியாமல் போதையில் வீழ்ந்துகிடக்குது நம் சமூகம், தோழரே.
உங்களின் இந்த அக்கரையான பதிவுக்கு வாழ்த்துக்கள்

VOICE OF INDIAN சொன்னது…

தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு சைதை அஜீஸ்அவர்களே!
உங்களுக்கு மின்கட்டனத்துடன் என்னவென்றே தெரியாத ஒரு கட்டணம் டெபொசிட் என்று சொல்லியிருப்பார்கள் அது ஏன் எதற்கு என்று தெரியுமா தோழரே