ஆதரவாளர்கள்

சனி, 15 ஜூன், 2013

பள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று டாஸ்மாக் கடையில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம்

மதுரையில் பள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று டாஸ்மாக் கடையில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது.


ஒரு நாள் அவர்களுக்கு மது அருந்த பணம் இல்லை. வீட்டிலும் கேட்க முடியாது. அதனால் பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளனர். உடனே அவர்களின் நினைவுக்கு வந்தது பள்ளிக்கூட பெஞ்ச் தான். அன்றைய தினம் பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகு அந்த 5 பேரும் சேர்ந்து ஒரு பெஞ்சை பல துண்டுகளாக்கினர். அந்த துண்டுகளை எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து பணம் பெற்றனர். பணம் கிடைத்தவுடன் நேராக டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்து மகிழ்ந்தனர். இந்த சம்பவம் குறித்து தெரிய வந்த தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் நொந்து கொண்டனர்.

இந்நிலையில் அப்பள்ளியில் புத்துணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. அப்போது பேசிய தலைமை ஆசிரியர் கூறுகையில், அண்மை காலமாக மாணவர்கள் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் ஆசிரியர்களின் நேரம் வீணாகிறது. பள்ளியில் உள்ள பெஞ்சைத் திருடி விற்று மது அருந்திய மாணவர்களின் பெற்றோரை அழைத்து விவரத்தை தெரிவித்தேன்.

அந்த குற்றத்தைச் செய்த மாணவர்களில் பிளஸ் டூ மாணவர் ஒருவரும் அடக்கம். அவரின் பெற்றோர் திருப்பூரில் உள்ளனர். அவர் வாடிப்பட்டியில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டில் தங்கி படிக்கிறார். அவர்கள் விற்ற பெஞ்சின் விலை ரூ.2,500 ஆகும். அந்த பெஞ்சிற்கு பதிலாக புதியது ஒன்று வாங்கிக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்களும் சம்மதித்துள்ளனர்.

 இது ஒரு புறம் இருக்க மறுபுறம் 6வது படிக்கும் மாணவன் ஒருவன் 1வது வகுப்பு மாணவனை தாக்கி அவன் பாக்கெட்டில் இருந்த காசை பறித்துள்ளான். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று பெற்றோர்கள் நினைக்கக் கூடாது. அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றார்.

 நான் படித்ததை நீங்களும் படிக்க பகிர்ந்தேன் 
நன்றி 



 Students Sold School Bench Consume

4 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

புத்தகம் விற்று சினிமா
பெஞ்ச் விற்று குடி
உடன்படா மாணவி மீது ஆசிட் வீச்சு
கல்விக் கூடங்கள் யாரை உற்பத்தி செய்கிறது ?
பயமாகத்தான் உள்ளது
அவலத்தை மிகச் சரியாகப் பதிவு செய்து
விழிப்புணர்வூட்டும் தங்களுக்கு மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இச்செய்தியினை நானும் படித்தேன்அய்யா. நெஞ்சம் கலங்குகிறது.

VOICE OF INDIAN சொன்னது…

தங்கள் வருகைக்கும் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு மணியன் எஸ் அவர்களே

பள்ளிக்கூடங்கள் யாரை உற்பத்தி செய்கின்றன என்று கேட்டு இந்தப் பலியை பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சுமத்திவிட்டு நாம் தப்பிக்க நினைப்பது சரியல்ல

இந்தக் குற்றங்கள் நடக்க காரணம் நாம் தான் நம் சமூகம் தான் பணம் ஒன்றே குறி என்று பணம் சம்பாதிக்க எதையும் செய்ய துணிந்த கோடீஸ்வர முதலாளிகள் தான் நமக்கே தெரியாமல் உணராமல் தினமும் நம்மையும் நம் பிள்ளைகளையும் மனங்களில் விசங்களை காசுகொடுத்து ஊட்டுகின்றோம் வரவேற்ப்பரையில் தினமும் 24 மணி நேரமும் விரசத்தையும் வன்முறைகளையும் தவறு செய்தவர்கள் எப்படி
தப்புவது என்று காட்டும் சொல்லித்தரும் ஊடகத் தீமையே இவற்றுக்கு எல்லாம் காரணம் என்பதை சிந்திக்க மறந்த நாம் அந்த தீமையின்பால் சிக்குண்டு கிடப்பதால் நம்முடைய தவறு நம் கண்ணுக்கு தெரிவதில்லை

ஐயா தங்களுக்கு ஒரு தகவலுக்காக இதைக் குறிப்பிடுகின்றேன்

எண்கள் இல்லத்தில் யாரும் கடந்த 7 ஆண்டுகளாக தொலைக்காட்சி பார்ப்பதில்லை முக்கிய நிகழ்வுகள் குறித்து நண்பர்கள் தெரிவித்தால் வாய்ப்பு இருந்தால் பார்ப்பேன் அல்லையேல் வேறொரு நண்பரைப் பார்க்கச் சொல்லி விபரம் அறிவேன்

தினசரி நாளிதழ்கள் நாங்கள் வாங்குவதே இல்லை அதில் இதுமாதிரி பாலியல் செய்திதானே முக்கிய இடம் பிடித்து நம்மைக் கவர்கின்றது முக்கியச் செய்தி வந்துள்ளது படிக்கவும் என்று யாரவது சொன்னால் அந்த நாள் மட்டும் வாங்கி அந்த செய்தியை மட்டும் படித்துவிட்டு மடித்து வைத்து விடுவேன்

மற்றைய எல்லாம் நண்பர்களின் வாயிலாக தகவல் தான் என்னுலகம் நானும் என் குடும்ம்பமும் சந்தோசமாக இருக்கின்றோம் 7 வது படிக்கும் ஒரு பையன் 1 ஆம் வகுப்பு படிக்கும் பையன் ஆகா இரண்டு பிள்ளைகள் அவர்களுக்கு பொழுது போக்க கதை கட்டுரை புத்தகம் வீட்டில் உள்ளது. கணினியில் நல்ல நல்ல கதைகள் பாடங்கள் காட்டும் சி டி க்கள் விளையாட்டு என்று மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்

நீங்களும் முடிந்தால் தொலைக் காட்சிப் பெட்டியை உங்கள் வீட்டில் பரண் மேல் ஏற்றுங்கள் என்று சொல்லி மகிழ்கின்றேன்

VOICE OF INDIAN சொன்னது…

தங்களது கருத்திற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே

இப்படிக் குற்றங்கள் பெருகக் காரணம் அதற்க்கு தீர்வு இந்தியன் குரலின் அடுத்தபதிவில் எழுதிக் கொண்டு இருக்கின்றோம் படித்து பயன்பெறுங்கள் நன்றி