தவறு செய்யும் அரசியல் வாதிகளை திருந்தச் செய்வோம் திருந்தாதவர்களை வருந்தச் செய்வோம் .
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கின்றது. அரசியல் கட்சிகள் எல்லாம் தங்களது கொள்கைகளை சுருக்கி தங்கள் கட்சியின் கொள்கைக் கூட்டணிக்கு பதிலாக கொள்ளைக் கூட்டணிக்கு தயராகி வருகின்றன. கூட்டணி வைக்க தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு கட்சியும் கட்சியரசியல் கைகளை நீட்டி வருகின்றது.
ஒருபுறம் காங்கிரஸ் சார்ந்த கூட்டணி மறுபுறம் பாரதீய ஜனதா கட்சி சார்ந்த கூட்டணி இது போதாது என்று மாநிலக் கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியும் களத்தில் வருவது போன்ற நிலை உள்ளது. அவர்களது திறைமைக்கு ஏற்றார் போல் கூட்டணி அமைப்பதும் தொகுதிப் பாகீடு செய்வதும் இனி நடைபெறும். அதன்பின் ஒட்டுக் கேட்டு மக்கள் முன் வருவார்கள்.
தேர்தலுக்கு பின்னும் குதிரை பேரம் நடக்கும். இந்நிலையில் இவர்களுக்கு வாக்கு அளிக்கும் மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலுக்கு தயாராக வேண்டுமே. அதற்கான முன்னோட்டமே தங்கலுக்கு என்ன தேவை எப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் தேவை என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்!
என்ன அப்படி யோசிக்கின்றீர்கள் மக்கள் முன்பு மாதிரி இல்லைங்க இலவசம் வேண்டாம் மதுக்கடை வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு உயர்ந்து விட்டார்களே அப்பொழுதே தெரியவில்லையா மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்று.
இந்த அரசியல் வாதிகள் திருந்துவார்கள் திருந்துவார்கள் என்றும் இந்த முறை உண்மையைத் தான் சொல்கின்றார்கள் என்றும் நம்பி ஏமாந்தவர்கள் நம் மக்கள் . எந்த எந்த வழிகளில் எல்லாம் நம் மக்களை ஏமாற்ற முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் ஏமாற்றி விட்டார்கள் இனி ஏமாற்றவும் ஏமாறவும் வழியே இல்லை. என்ன கொடுமை என்றால் தாட்கோ லோன் வாங்கித்தருகின்றேன் கமிசன் தாருங்கள் என்று முதலியாரையும் படையாட்சியயுமே ஏமாற்றி பணம் பார்த்துவிட்டனர் அந்தக் கடன் மாநகராட்சி குப்பை அகற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் கடன் ஆகும். எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்கள்
சரி இப்ப நாம ஒரு முடிவுக்கு வரவேணுமா வேண்டாமா இதுக்கு மேலேயும் பொறுமையா இருந்து இவன் நல்லவேன்னு பேர் எடுக்க வேண்டாம். உடனடியாக ஒவ்வொருவரும் தன் ஒட்டு யாருக்கு எப்படிப்பட்ட கட்சிகு என்று தெளிவான முடிவை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது.
நான் இநதக் கட்சிக் காரன் அந்தக் கட்சிக்காரன் அதனால் எங்கள் தலைமை சொல்படி நடப்பேன் என்று தொண்டர்கள் இனியும் ஏமாந்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் எந்தக் கட்சியும் தன தொண்டனுக்கு ஏதும் செய்யவில்லையே அவன் கிட்டேயும் பணம் வாங்கிக் கொண்டுதானே உதவி செய்தார்கள். ஆகவே இந்த முறை தொண்டர்கள் ஒட்டு அனுதாபிகள் ஒட்டு எல்லாம் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் என்ற நிலை இனி எந்தக் கட்சிக்கும் இல்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தெளிவான முடிவை அறிவிக்கின்றார்கள். தொண்டனைக் காக்கத் தவறிய தலைவர்களை தொண்டர்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். இனியும் சாராயத்தையும் பிரியாணியையும் கொடுத்து எமாற்ற எந்தக் கட்சியாலும் முடியாது.
நான் என்னுடைய வாக்கு யாருக்கு என்று எனது முடிவை தெரிவிக்கின்றேன் மக்களே நீங்கள் உங்களது முடிவுகளை தெரிவியுங்க தேர்தல் நேரத்தில் மக்களும் சுறுசுறுப்பாக இருக்க நாம நம்மால முடிஞ்சதைச் செய்வோம்
ஒரு முக்கியமான விஷயம் தேத்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே மேடையில் ஏற்றுவது அந்த தொகுதி குறித்து வேட்பாளர் என்ன தெரிந்து வைத்துள்ளார் மக்களுக்கு என்ன திட்டம் வைத்துள்ளார் தொகுதி வளர்ச்சி நிதியை எப்படி செலவு செய்ய இருக்கின்றார் எந்த எந்த பணிகளை முன்னிலைப் படுத்துவார் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு அந்த பதிகள் மக்கள் அறிய ஏற்பாடு செய்ய திட்டமிட்டு உள்ளோம். ஊடகங்கள் இதை நேரலையாக ஒளிபரப்பிட வசதி செய்து கொடுக்க உள்ளோம்.
உங்கள் பகுதி எந்தத் தொகுதியில் வருகின்றது அங்குள்ள முக்கிய பிரச்சனைகள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஊழல் குறித்த தகவல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
இப்பொழுது என்னுடைய ஒட்டு யாருக்கு என்று அறிவிப்பு செய்கின்றேன்
1 தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்றுவேன் என்ற உறுதி அளிக்கும் கட்சிக்கு மட்டுமே எங்கள் ஒட்டு
2 தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 இன் படி பொதுமக்களுக்கு கேட்கும் தகவலை வழங்கும் கட்சிக்கு நாங்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் வரம்பில் இருக்கின்றோம் என்று அறிவிப்பு செய்யும் கட்சிக்கு மட்டுமே எங்கள் ஒட்டு
3 குண்டர்கள் ரவுடிகள் கொலைகாரர்கள் இல்லாத கட்சிக்கே ஒட்டு
4.மத்தியில் லோக்பால் மாநிலத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவருகின்றோம் என்று உறுதி அளிக்கும் கட்சிக்கே ஒட்டு
5 மாநிலத்தில் சேவை உரிமைச் சட்டம் கொண்டுவருவோம் என்று உறுதி அளிக்கும் கட்சிக்கு எங்கள் ஒட்டு
6 ஊழல் இல்லாத ஆட்சி லஞ்சம் இல்லாத அரசு அலுவலகம் செயல் படுத்துவோம் என்ற உறுதி அளிக்கும் கட்சிக்கே எங்கள் ஒட்டு
7 அனைத்து மானியங்களும் ரத்து செய்வோம் என்ற கட்சிக்கே எங்கள் ஒட்டு
8 மின்சாரம் உள்பட எதுவும் இலவசம் தரமாட்டோம் என்று சொல்லும் கட்சிக்கே ஒட்டு
9 குற்றத்திற்கு எதிரான சாட்சியம் அழிப்பவர்களை அலைக்கழிக்க மாட்டோம் இருந்த இடத்திற்கே சென்று சாட்சியம் பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உதவும் வண்ணம் சட்டத்திருத்தம் கொண்டுவருவோம் என்று உறுதி அளிக்கும் கட்சிக்கு ஒட்டு
10 காட்சி ஊடகங்கள் செய்திகள் அல்லாத பொழுது போக்கு நிகழ்சிகளில் காட்சிகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கும் வண்ணம் ஆபாச வன்முறை காட்சிகள் ஒளிபரப்ப தடைச் சட்டம் கொண்டு வருகின்றோம் நாடகம் என்ற பெயரில் கள்ளக்காதல் செய்வது எப்படி என்றும் கொலை கொள்ளை செய்வது எப்படி என்று வரவேர்ப்பரியில் வந்து 24 மணி நேரமும் வகுப்பெடுக்கும் தொலைக்காட்சிகள் இனி தேசபக்தி தேச வளர்ச்சி விவசாயம் தொழில் சார்ந்த ஒழுக்கம் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பு செய்யும் அதற்க்கான சட்டம் கொண்டுவருவோம் என்ற கட்சிக்கு ஒட்டு
11 அனைத்து மருத்துவ மனைகளும் அரசுடமை ஆக்குவோம் என்று உறுதியளிக்கும் கட்சிக்கு ஒட்டு
12 அனைத்து தனியார் பள்ளிகளும் அரசே நடத்தும் அந்த தனியார் இடம் மற்றும் கட்டிடங்களுக்கு உரிமையாளர்கள் அரசிடம் வாடகை அல்லது ரொக்கம் பெற்றுக்கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவோம் என்று உறுதி அளிக்கும் கட்சிக்கு
13 அனைத்து தனியார் பல்கலைக் கலகங்கள் மற்றும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் அரசுடமை என்று அறிவிக்கும் கட்சிக்கு
14 எல் கே ஜி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை எந்தவிதமான கட்டணமும் இல்லாத கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அரசே வழங்கும் என்று உறுதி அளிக்கும் கட்சிக்கு ஒட்டு
15 அனைவருக்கும் ஒரே ஊதியம் தெரு கூட்டுபவர் முதல் மருத்துவர் மாவட்ட ஆட்சியர் வரை அனைவருக்கும் ஒரே ஊதியம் மற்றும் படித்த அனைவருக்கும் வேலை உத்திரவாதம் செய்வோம் எனும் கட்சிக்கு
16 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் வேலை செய்தால் தான் சம்பளம் அதுவும் இத்தனை நாள் தனியார் விவசாயப் பண்ணையில் விவசாய வேலை செய்யவேண்டும் என்று உத்தரவு இடுவோம் அதன்மூலம் விவசாயிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை போக்குவதுடன் அவர்களது தொட்ட வேலைக்கு தேவையான் ஆன் மற்றும் பெண்கள் அரசே அனுப்பி வைக்கும் அதற்கான சம்பளம் செலவை அரசே ஏற்கும் இயற்க்கை விவசாயம் வளர அரசின் உதவி விவசாயிக்கு தேவையான வேலைக்கு ஆட்கள் திட்டம் என்ற உத்திர வாதம் சொல்லும் கட்சிக்கு
17 ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லும் கட்சிக்கு ஒட்டு
18 குற்றம் புரிந்தவர்களுக்கு சீட்டு கொடுக்க மறுக்கும் கட்சிக்கு ஒட்டு.
19 குடிக்க காசும் பிரியாணியும் கொடுத்து கட்சி வேலை செய்யச் சொல்ல மாட்டோம் கட்சி வேலை செய்யும் தொண்டர்களுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு கூலி கொடுப்போம் என்று வெளிப்படையாக அறிவிக்கும் கட்சிக்கு ஒட்டு
20 இந்த உத்திரவாதங்களை இத்தனை நாளுக்குள் நிறைவேற்றுவோம் அப்படி குறித்த நாளுக்குள் நிறைவேற்றத் தவறும் கட்சி கால அவகாசம் கேட்க மாட்டோம் அன்றைய தேதியில் பதவி விலகல் செய்வோம் என்ற உத்திரவாதம் அளிக்கும் கட்சிக்கு எங்கள் ஒட்டு
இன்னும் இருக்கு அதை நீங்கள் சொல்லிவிடுவீர்கள் என்று எனக்கு தெரியும் தவறினால் அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன்
உங்களது ஒட்டு யாருக்கு என்று உங்களது பிளாக்கில் எழுதிவிடுங்கள் தேர்தல் நேரத்தில் இதை துண்டுபிரசுரமாக விநியோகம் செய்யும் பொழுது அந்தத் துண்டுபிரசுரத்தில் உங்களது கருத்துக்களும் இடம் பெறலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எங்கள் ஒட்டு எனும் உங்களது வலைபக்கத்தின் இணைப்பை இந்த பின்னூட்டத்தில் பதிவி செய்ய வேண்டும்.
பிளாக் எழுதாதவர்கள் பின்னூட்டத்திலேய உங்கள் வாக்கு யாருக்கு என்று தெரிவிக்கலாம் நடக்கவா போகிறது என்று சும்மா இருந்திட வேண்டாம் நடந்துடுச்சின்னா ? நடக்கும்
ஏனென்றால் மற்றம் என்ற சொல்லைத் தவிர மற்றையன எல்லாம் நிச்சயம் ஒருநாள் மாறும். கான்பிடண்ட் வேணும்
நாம கேட்டு சில மாற்றம் ஏற்பட்டிருக்கு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்
இதோ அதற்கு சாட்சியம்
சத்தமில்லா தேர்தல் கேட்டோம் பேனர் இல்லா தேர்தல் கேட்டோம் ஒளிப் பெருக்கி இல்லா தேர்தல் கேட்டோம் நடக்கும் என்றா கேட்டோம் இது இல்லாத தேர்தல் நடக்கும் எற்று என்னிநோமா ஆனாலும் நடந்துவிட்டதே
இங்கே நீங்கள் அறியவேண்டியது சென்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெற்றிபெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது அந்த வெற்றிக்கு பின்னால் முன்னாள் மாநில மத்திய தேர்தல் ஆணையர்களின் வழிகாட்டுதலும் அவர்களின் அனுபவங்களும் மிகப் பெரிய அளவில் உதவியது அதற்காக ஒரு அமைப்பை திரு நரேஷ் குப்தா அவர்களும் மற்ற முன்னாள் ஆணையர்களும் சேர்ந்து உருவாக்கி இந்த நட்டு மக்கள் நலனுக்காக மிகப்பெரிய அளவில் உதவிசெய்தார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை நாம் பாராட்ட கடமைப் பட்டவர்கள்.
இங்கே நீங்கள் அறியவேண்டியது சென்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெற்றிபெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது அந்த வெற்றிக்கு பின்னால் முன்னாள் மாநில மத்திய தேர்தல் ஆணையர்களின் வழிகாட்டுதலும் அவர்களின் அனுபவங்களும் மிகப் பெரிய அளவில் உதவியது அதற்காக ஒரு அமைப்பை திரு நரேஷ் குப்தா அவர்களும் மற்ற முன்னாள் ஆணையர்களும் சேர்ந்து உருவாக்கி இந்த நட்டு மக்கள் நலனுக்காக மிகப்பெரிய அளவில் உதவிசெய்தார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை நாம் பாராட்ட கடமைப் பட்டவர்கள்.
இனி நாம் கேட்போம் அதுவும் நடக்கும் ஏனென்றால் மன எண்ணங்களின் அதிர்வு ஒரேமாதிரி இருக்கும் அப்படி அப்படி இருப்பதால் தான் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதாக பலர் என்னிடம் சொல்லியதுண்டு அது உண்மையோ இல்லையோ இனி நாம் கேட்கும் தேர்தலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் என்ன சியக்கூடாது என்று முழங்குவோம் கிடைக்கும் வரை ஓங்கி முழக்கமிடுவோம்
பிரியாணி இல்லா தேர்தல் வேண்டும், சாராயம் குடிக்காத தொண்டார் வேண்டும், லஞ்சம் வங்கா அரசு அலுவலர் வேண்டும், ஊழல் செய்யா தலைவர் வேண்டும், உண்மையைப் பேசும் அரசியல்வாதி வேண்டும், வேட்பாளர்கள் செலவே செய்யாத தேர்தல் வேண்டும் நிலை வர வேண்டும். இரண்டு கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும் அதற்க்கான தேர்வை மக்கள் நடத்த வேண்டும். வேட்பாளர்களை அந்த பகுதி மக்களே தேர்வு செய்யவேண்டும் யாரங்கே இது பேராசை என்று கூச்சலுடன் சொல்வது இதுதான் என்னுடைய சின்ன ஆசை பெரிய ஆசையெல்லாம் இருக்கு அதை அடுத்த பதிவில்.
பிரியாணி இல்லா தேர்தல் வேண்டும், சாராயம் குடிக்காத தொண்டார் வேண்டும், லஞ்சம் வங்கா அரசு அலுவலர் வேண்டும், ஊழல் செய்யா தலைவர் வேண்டும், உண்மையைப் பேசும் அரசியல்வாதி வேண்டும், வேட்பாளர்கள் செலவே செய்யாத தேர்தல் வேண்டும் நிலை வர வேண்டும். இரண்டு கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும் அதற்க்கான தேர்வை மக்கள் நடத்த வேண்டும். வேட்பாளர்களை அந்த பகுதி மக்களே தேர்வு செய்யவேண்டும் யாரங்கே இது பேராசை என்று கூச்சலுடன் சொல்வது இதுதான் என்னுடைய சின்ன ஆசை பெரிய ஆசையெல்லாம் இருக்கு அதை அடுத்த பதிவில்.
ஒருவேளை கட்சி நடத்துபவர்களுக்கும் ஒரேமாதிரி இருந்தால் போர் அடிக்குமே அதனால் நடந்துவிட வாய்ப்பும் உள்ளதே எவ்வளவு பெரிய கொலைகாரனும் கொள்ளைக்காரனும் திருடனும் ஒருநாள் திருந்துவது இல்லையா அப்படி அரசியல்வாதிகளும் திருந்திவிடுவார்
அரசியல் வாதிகளே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்.
4 கருத்துகள்:
பிரியாணி, குவார்ட்டர், இலவசம்லாம் இல்லாம ஒரு தேர்தலா?! ம்க்கும் போங்க சகோ காமெடி பண்ணிக்கிட்டு
நீங்களுமா இப்படி சொன்னால் எப்படி உங்கள் ஒட்டு யாருக்குன்னு சொல்லாமலே விட்டீரே சகோதரி
வேட்பாளர்களை அந்த பகுதி மக்களே தேர்வு செய்யவேண்டும்
தங்களின் கருத்து சரியானதுதான் நண்பரே
உங்கள் கருத்திற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே அவர்களே!
வேட்பாளர் தேர்வுக்கு அளவுகோல் வைக்கலாமா வைக்கலாம் என்றால் என்ன முறையில் தேர்வு செய்யலாம் அப்படி தேர்வு செய்யும் பட்சத்தில் மக்கள் வேட்பாளராக அறிவிக்கலாமா உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்
கருத்துரையிடுக