ஆதரவாளர்கள்

Thursday, July 5, 2012

சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை

இந்தியாவில், சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை; அதற்கு எடுத்துக்காட்டு, திருவண்ணாமலையில், சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டது என, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பலர், வேதனை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலையில், சமூக சேவகரான ராஜ்மோகன், கடந்த 2ம் தேதி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
, தமிழகத்தில் சமூக சேவையில் ஈடுபடும் பொதுநல ஆர்வலர் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், பல்வேறு முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தவரான, ஆவடி தரணிதரன் கூறுகையில், ""ராஜ்மோகன் படுகொலை செய்யப்பட்டது, இந்தியாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. இச்சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தை சீர் குலைப்பதற்கு தொடர்ந்து சதி நடந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.
தொடரும் உயிர் பலி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, இன்று வரை, 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடக்கம். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பல்வேறு கேள்விகள் கேட்டதால்,

கடுமையாக தாக்கப்பட்டவரான சந்தானம் கூறியதாவது: இந்தியாவில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே, தகவல் அறியும் ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது, அரசின் கடமை. அரசு கொடுத்த உரிமையை, நாங்கள் பயன்படுத்துகிறோம். அது, தவறு செய்கிறவர்களுக்கு பாதகமாக அமைந்தால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவில், அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் நம்ப முடியாது. துப்பாக்கியின் இரண்டு குழல்கள் அவர்கள். எனவே, பொதுமக்களுக்காக உழைக்கும் சமூக ஆர்வலர்களை, பொதுமக்களே பாதுகாக்க 
வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிவாரண நிதி: பாதுகாப்பு வழங்குவது குறித்து, பல்வேறு ஆர்வலர்கள் கூறியதாவது: சமூக ஆர்வலர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்த அச்சுறுத்தல் வந்தாலும், இதுகுறித்து தீவிர விசாரணை வேண்டும். குறிப்பாக, அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தகவல் கேட்பவரால் யாரெல்லாம் பாதிப்படுகின்றனர் என்பதை அறிய வேண்டும். சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகன் குடும்பத்திற்கு, நிவாரண நிதி வழங்க வேண்டும்; தனிமையில் இருக்கும் அவருடைய மனைவியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
நண்பர்களே இந்த சூழல் தொடர்ந்தால் நம் நாடு

இருபது ஆண்டு கழித்து இப்படி தான் முன்னேறும்

>  நாட்டில் ஒரு சதவீதம் பேர் வயிறார சாப்பிட முடியும்.  அரை சதவீதம் பேர் நல்ல குடிநீர் குடிக்க முடியும். அதற்கும் குறைவான சதவீதத்தினர் கழிப்பறை பயன்படுத்த முடியும். ஆனால் நூறு சதவீதம் பேர்  இரு சக்கர வாகனம் வைத்திருக்க முடியும்.
> நாட்டில் ஒவ்வொரு அடி இடமும் பிளாஸ்டிக் குப்பையால் நிரப்பப்படும். இதன் மூலம் பல நோய்கள் உருவாகும்.  இதை சரி செய்ய மருத்துவமனைகள் நூறு அடிக்கு ஒன்று உருவாகும்.
> யாரும் நிம்மதியாக ஒரு இடத்தில் இருக்க முடியாது.  இதை சரி செய்ய மன நல மருத்துவமனைகள் நிறைய இருக்கும்.
> குடும்பம் என்று ஒன்று ஏழைகளுக்கு இருக்காது. பணக்காரர்களின் குடும்பத்தை ஏழைகள் படங்களில் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்வார்கள்.
> நாட்டில் மலைகள், ஆறு , குளம் எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பாக தண்ணீர் தரையில் எங்கும் ஓடவே ஓடாது. ஆனால் மதுக்கடைகளும், விபச்சார விடுதிகளும் ஊரெங்கும் பெருகி இருக்கும்.
> நாட்டில் பத்து சதவீதம் பேர் சொந்த வீடு வைத்திருப்பார்கள். அதில் 99 .99  பேர் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனுக்கு வட்டி கட்டுவார்கள்.
> எந்த வீட்டிலும் நல்ல சாப்பாடு இருக்காது. ஆனால் வீடு முழுவதும் மின்னணு சாதனங்களின் எச்சங்கள் நிறைந்து இருக்கும்.
இந்த வளர்ச்சி உருவானால்,
> ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆனால் குறைந்தது ஒவ்வொரு நபரும் ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் ஒவ்வொரு நபரும் குறைந்தது அறுபது வருடங்கள் படித்திருக்க வேண்டும்.
என்னய்யா சொல்கிறீர் . தலை சுற்றுகிறது, இதுவெல்லாம் செய்தால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.
ஒரு குடும்பத்தை அழித்து ஒரு கிராமத்தை  காக்கலாம்.
ஒரு கிராமத்தை அழித்து நாட்டை காக்கலாம்.
ஒரு நாட்டையே அழித்து ஊழல் வாதிகள் வாழலாம் 

.

No comments: