தகவல் சட்டத்தை பரப்புவதும் பயிற்சி அளிப்பதும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு இலஞ்சமின்றி தீர்வு பெற தகவல் சட்டத்தின் மூலம் பயிற்சி, இலவச உதவி மையங்களை நடத்துவது. - இந்தியன் குரல் அமைப்பின் நோக்கம்
தொழில் நிறுவனங்களுடன் பல்கலை ஒப்பந்தம் அவசியம் : வழிவகுக்கிறது தொழிற்துறை ஒதுக்கீடு
சென்னை : கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுடன் நல்லுறவை மேம்படுத்துவதால், மாணவ, மாணவியருக்கான தரமான கல்வி, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவடையச் செய்ய முடியும். அதற்கு தொழிற்துறை ஒதுக்கீட்டு முறையை சரியாக பின்பற்ற அண்ணா பல்கலைக்கழகம் ஊக்குவிக்கப்பட வேண்டும். தரமான பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளை வழங்குவதில் அண்ணா பல்கலைக்கு சர்வதேச அளவில் சிறந்த பெயர் உண்டு. அதனால்தான், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற வேண்டும் என்ற கனவோடு, லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி பொதுத்தேர்வை அணுகுகின்றனர். ஆனால், அண்ணா பல்கலையின்கீழ் செயல்படும் நான்கு கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 2,305. ஒதுக்கீடு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின்படி, ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வில் இந்த இடங்கள் அனைத்தும் நிரப்பப்படுகின்றன. இவற்றில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், தொழிற்கல்வி பிரிவினர் போன்றோருக்கான இடஒதுக்கீடும் அடங்கும். இந்நிலையில், தொழில் நிறுவனங்களுடனான உறவை மேம்படுத்துவதோடு, சிறப்பம்சங்களையும் பரஸ்பரம் பகிர்ந்து, இருதரப்பும் பயன்பெறும் வகையில், 1999ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியது தான், " ஐணஞீதண்tணூடிச்டூ கிதணிtச்'' எனும் தொழிற்துறை ஒதுக்கீடு. இதன்படி, மதிப்பெண் அடிப்படையில் முன்னிலை வகிக்காத, ஆனால் துறை ரீதியாக சிறந்து விளங்கும் மற்றும் பிற திறன்மிக்க மாணவ, மாணவியரும் தொழிற்துறை ஒதுக்கீட்டின் மூலம், புகழ்பெற்ற அண்ணா பல்கலையில் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். இதனால், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் தேர்வுசெய்யும் கலந்தாய்வில் உள்ள இடங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படுவதில்லை என்பதும் இத்திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம். குறிப்பிட்ட விகிதத்தில் தொழிற்துறை ஒதுக்கீட்டின்கீழ் அண்ணா பல்கலைக் கழகத்தில், "அட்மிஷன்' வழங்க சிண்டிகேட்டின் அனுமதியுடன் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் தொழிற்துறை ஒதுக்கீட்டின் இடங்கள் உயர்த்தப்படுகின்றன. அதன்படி, முன்பு ஒவ்வொரு துறையிலும் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையில், 5 சதவீத இடங்கள் உருவாக்கப்பட்டு, தொழிற்துறையினருக்கு வழங்கப்பட்டன. இதற்கான இடங்கள் தற்போது, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. கணிசமாக நிதிகிண்டி பொறியியல் கல்லூரி டீன் சேகர் கூறுகையில், ""அண்ணா பல்கலைக் கழகத்துடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிய தகுதிகளைக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு, ஒரு இடம் மட்டுமே வழங்கப்படும். "கன்சார்ட்டியம்' கட்டணமாக, 15 லட்ச ரூபாயை அந்நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டும். அந்த தொகையில் 25 சதவீதம், மாணவர் சேர்க்கை பெறும் சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்படுகிறது; 75 சதவீதம் "கார்ப்பஸ்' கணக்கில் டெபாஸ்சிட் செய்யப்படுகிறது. அதன்வட்டியும் சம்பந்தப்பட்ட துறைக்கே வழங்கப்படுகிறது. தொழிற்துறை ஒதுக்கீட்டால், பல்கலைக்கழக வளர்ச்சிக்கு கணிசமான நிதி கிடைப்பதோடு மட்டுமின்றி, தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், வளங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. மாணவ, மாணவியர் "இன்டர்ன்ஷிப்', "இன்டஸ்ட்ரியல் விசிட்' மூலம் நேரடி பயிற்சி பெறவும்முடிகிறது. தேவைப்படும் பட்சத்தில், பேராசிரியர்களும் அந்நிறுவனங்களில் பயிற்சி பெறவும், ஆராய்ச்சியில் ஈடுபடவும் முடியும். அந்நிறுவனங்களும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியரின் திறன்கள், புத்தாக்க சிந்தனைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபோன்று தொழில் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்குமான நல்லுறவு மேம்படுத்தப்பட்டால் தான் தரமான பயிற்சியை மாணவர்கள் பெற முடியும். பாடத்திட்ட மேம்பாட்டிலும், பாடம் நடத்துவதிலும் பேராசிரியர்களுக்கும் உறுதுணையாக இருக்கும்.'' என்றார். கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்குமான தொடர்பு மென்மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில், தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் இன்றைய கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதில் மிக முக்கிய பங்கு வகிப்பதையும் மறுப்பதற்கில்லை. நிறுவனங்களுடன் அதிக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யவே கல்வி ஆலோசகர்களும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். சிறந்த நேரடி தொழிற் பயிற்சியுடன், வேலை வாய்ப்பும் பிரகாசமாகமடைவது அதற்கு முக்கிய காரணம். எனவே, தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மற்றும் ஒதுக்கீட்டு முறை ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டியதும் அவசியம். பின்பற்றப்படும் விதிமுறைகள்: அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்துறை ஒதுக்கீடு முறையில் இடம் பெற விண்ணப்பிக்கும் நிறுவனம், இந்திய கம்பெனிகள் சட்டம் 1956ன் படி பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் நிரம்பி இருக்க வேண்டும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய ஏதேனும் ஒரு பகுதியில் இயங்கும் நிறுவனமாக இருக்கவேண்டும். நிறுவனத்தின் கணக்குகள், வரிகள் அனைத்தும் சரியாக பின்பற்றபட்டிருக்க வேண்டும். துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் போன்ற, பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் தகுதியுள்ள, ஒரு நிறுவனம் உரிய ஆவணங்களுடன் பல்கலைக்கு விண்ணப்பிக்கலாம். அதை பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்த பிறகு, அந்த நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதன் அடிப்படையில் நிறுவனம் ஸ்பான்சர் செய்யும் மாணவருக்கு, "அட்மிஷன்' வழங்குகிறது. அந்த மாணவரும் கலந்தாய்வில் பங்கேற்கும் அளவில் தகுதிபெற்றவராக இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு வரப்பிரசாதம் : ஸ்டேட் போர்டு திட்டத்துடன் ஒப்பிடுகையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமும், அதன் தேர்வு முறையும் கடினமானதாக கருதப்படுகிறது. எனவே, ஸ்டேட் போர்டு திட்டத்தில் படிக்கும் மாணவர்களை விட, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் கடுமையாக உழைத்தாலும், அதற்கான பயன்கிடைப்பதில்லை என்ற குறைபாடு நிலவுகிறது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில், "நார்மலைசேஷன்' முறையின்படி சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை சமநிலைப்படுத்தினாலும், சி.பி.எஸ்.இ., முறையிலான மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம் கிடைப்பது குதிரைகொம்பாகவே உள்ளது. எனவே, தொழிற்துறை ஒதுக்கீட்டில் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் இடம்பெற ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக