ஆதரவாளர்கள்

Tuesday, June 19, 2012

கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன்


நண்பர்களே, 
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மற்றும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற பெரிதும் உதவுவது கல்விக்கடன். ஆனால் தற்பொழுது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் நம் விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்திசெய்யாமல், தேவையான இணைப்பு ஆவணங்கள் இல்லாமல் கொடுப்பதும், விண்ணப்பத்தைக் கொடுத்து ஒப்புகை பெற தவறுதல் போன்ற காரணங்களால் வங்கிக்கடன் கிடைப்பதில்லை. ஒரு சில வங்கிகள் அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தும் கடன் தர மறுப்பதும், விண்ணப்பங்கள் தர மறுப்பதும் தொடர்கின்றது.
  இந்தியன் குரல் அமைப்பு யாரிடமும் கெஞ்சிக்கொண்டிராமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் அலைந்து திரியாமல் லஞ்சம் கொடாமல் கல்விக்கடன், குடும்ப அட்டை, இருப்பிடம் உள்ளிட்ட அணைத்து சான்றுகள், அரசு மற்றும் தனியார் பணியாளர் பணிப்பயன், முதியோர் ஓய்வூதியம், அனைவருக்கும் மருத்துவம், சுகாதாரம், காப்பீடு, படித்த பெண்களுக்கு  திருமண உதவி  பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு உள்ளிட்ட நம் குடும்பத் தேவை நம் ஊரின் தேவைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் மூலம் அரசின் அனைத்து நலன்களையும்  அறிந்து பெற்றுக்கொள்ள இந்தியன் உதவி மையங்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள உதவி மையங்களில் பயன்பெற தொடர்புகொள்ளலாம்.
               லஞ்சம் கேட்கிறார்கள் என்று கூவிப் பயனில்லை
நன்மைக்களே !
நாம் கூடிப் பேசுவதாலும் சிலரை பழித்தும் ஏசியும் நன் தயார் ஆனால் ஒருவரும்   வரமருக்கின்றார்கள் என்பதும், யாருக்கும் அக்கறை இல்லை என்று குறை பேசுவதும் பெர்ம்பன்மையானவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் தன்னுடைய இயலாமை வெளியில் தெரியாமல் மூடி மறைக்க கூவுகிறார்கள் என்பதி ஐயமுண்டோ இவர்கள் இவ்வாறு சொல்வது நான் மலையை தூக்க தயாராக இருக்கின்றேன் ஆகவே  நீங்கள் என் கையில் தூக்கி வையுங்கள் என்று கேட்பது போன்றதாகும். ஒவ்வொருவரும் கூவிக்கொண்டு இருப்பதி பயன் இல்லை கூவிப் பயனில்லை என்னால் முடியும் என்று சிந்திப்போம்.
 மாற்றம் நம்மில் துவங்கட்டும்
பிறக்கும் பொது நல்லவர்களாகவே பிறக்கின்றோம் ஆனால் நம்மை மாற்றுவது நம் மனதை குழப்புவது நம்மை தவறான நேர்மையற்ற செயலை செய்ய தூண்டுவது எது? உற்றார் உறவினர் பேசுவார்கள் மற்றவர் என்னை உயர்வாக என்ன வேண்டும் அவர்களை விட நான் வசதியானவனாக வேண்டும் என்று பிறருக்காகவே வாழ்த்து கொண்டிருக்கிறோம் பிறரைப் புகழ்ந்து பேசி நம் தேவையை நிறைவேற்றிக்கொள்ள துடிப்பது பணம் நம் தேவைக்கு இருந்தால் அதுவும் நல் வழியில் சம்பாதித்தால் மட்டுமே நாம் நிம்மதியாக சந்தோசமாக கடைசி வரை யாருக்கும் அடிபணியாமல் நம் சுயமரியாதையை இழக்காமல்
 நான் என்னை தயார் படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் இன்றே உறுதி ஏற்கின்றேன் என்று முடிவெடுத்தால் இந்த உறுதி மொழி எனக்கு உதவும் என்று நம்புங்கள். இந்த நிமிடத்தி இருந்து நான் எனது தேவைக்காக குறுக்கு வழியில் பணம் சேர்க்க மாட்டேன் நியாயமாக நேர்மையாக போயபெசாதவனாக இருப்பேன் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவோ லஞ்சம் பெறவோ மாட்டேன் புகழ்ச்சியை என்  மனதால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் நான் யாரையும் புகழ்த்து பேசி லாபம் அடைய மாட்டேன் எனக்கு கொடுக்கப்படும் மாலை மரியாதையை மனதால்  ஏற்க்க மாட்டேன் நான் யாருக்கும் மாலை மரியாதை செய்ய மாட்டேன் இந்த சிந்தனை அனைவரும் பின்பற்ற பாடுபடுவேன்.
நம்மில் சிலர் வசதிபடைத்தவர்களாக பணம் படைத்தவர்களாக இருக்கலாம் நல்ல பதவியில் நிறைந்த சம்பளம் மற்றும் .... பெறலாம் ஆனாலும் உங்கள் பிள்ளைகள் உரிமையை பெற போராடும் நிலை வரும் 
இன்றைய நிலை நம் நாட்டில் தொடர்ந்தால் இருபது ஆண்டு கழித்து நம் பிள்ளை பிழைப்புக்காக கத்தி எடுக்க வேண்டும் அல்லது பிச்சை எடுக்க வேண்டும் பிச்சை கூட கிடைக்காது ஆகவே இன்று வசதியாக இருக்கின்றோம் என்ற இறுமாப்போ லஞ்சம் கொடுத்து எண் தேவையை பெற்றுக்கொள்வேன் அதற்க்கான வசதி எனக்கு இருக்கின்றது என்ற மமதையோ இருந்தால் நம் கண் முன்னே எத்தனை கோடி பணம் மற்றும் வசதிகள் நமக்கு இருந்தாலும் நம் சொத்துக்கள் யாவும் அரசியல் கொள்ளையாலும் வறியவர்களின் கொள்ளையாலும் குண்டர்களின் மிரட்டலாலும் நம் பிள்ளைகள் இழந்து விடுவார்கள் ஆகவே வசதி இருக்கின்ற நாம் இன்றே விழித்துக் கொள்ளவேண்டும் நம் பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் லஞ்சம் இன்றி அவர்கள் தம் தேவையை, உரிமையை பெற்றுக்கொள்ள கற்றுத்தருவோம். உகண்டா போன்று தென் ஆப்ரிக்கா போன்று கொலை மற்றும் கொள்ளையால் நம் சந்ததிகள் இருக்கும் சொத்துக்களை இழக்காமல் இருக்க லஞ்சத்தை ஒலிக்கவும் உங்கள் தேவைக்கு உதவி பெற்றுக்கொள்ளவும் வாரீர் வாரீர்  

---------------- இந்தியன் குரல் 

அரசின் திட்டங்கள், நம் உரிமை, பெறும் வழிமுறை ஒவ்வொரு குடிமகனுக்கும்; 
சென்னையில் இந்தியன் குரல் உதவி மையங்கள்   
 பிரதி வாரம் திங்கள் கிழமை காலை 10 மணிமுதல் 11 மணி வரை எம் ஆர் எப் எம்ப்ளாயிஸ் யூனியன் பில்டிங்க்ஸ் திருவொற்றியூர் சென்னை 9444305581 , 9962676196 , 9941884295 , 
 பிரதி வாரம் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிமுதல் 11 மணி வரை எண் 267 திரு வி க குடியிருப்பு திரு வி க நகர் செம்பியம் பெரம்பூர் சென்னை 11 .9445115682
பிரதி மாதம் 1 மற்றும் 15 தேதிகளில் காலை 10 மணிமுதல் 11 மணி வரை கும்பத் காம்ப்ளக்ஸ் 29  ரத்தன் பஜார் சென்னை பூக்கடை காவல் நிலையம் எதிரில் 9940493159 
    மாநிலம் முழுவதும் இந்தியன் குரல் உதவி மையம் பற்றிய விபரம் அறிய தொடர்புக்கு 94434 89976 ,9444305581   
இந்தியன் குரல் அமைப்பு யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை இந்த நோட்டீசை படித்து கீழே போடாமல் தேவையானவர்களுக்கு படித்து கொடுக்கக் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி
--------------- இந்தியன் குரல் 

No comments: