ஆதரவாளர்கள்

புதன், 24 செப்டம்பர், 2014

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி என்று சொன்னார்களே இங்கே வங்கிகள் வட்டி கேட்கின்றார்கள் என்ன செய்வது


கல்விக்கடன் வட்டி தள்ளுபடி என்று சொன்னார்களே இங்கே வங்கிகள் வட்டி கேட்கின்றார்கள் என்ன செய்வது


நன்மக்களே 2009-10 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் அந்தப் படிப்பை முடிக்கும் வரை அதாவது பொறியியல் கல்வி என்றால் நான்கு ஆண்டுகள் கல்விக்கடன் வட்டி முழுவதும் அரசு மானியமாக வழங்குகின்றது.



இதற்க்கு முதலில் வின்னப்பிக்கும்போதே அந்த வங்கியில் வருவாய் சான்றும் ஒப்புகையும் மாணவர்களிடத்தில் இருந்து பெற்று இருக்க வேண்டும்

இரண்டாவதாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் அந்த வங்கி சென்ற ஆண்டு கல்விகடன் எவ்வளவு கொடுத்துள்ளது வட்டி எவ்வளவு என்று குறிப்பிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி விண்ணப்பம் செய்ய வேண்டும்


ஆனால் பெரும்பான்மை வங்கிகள் இதை சரிவர செய்ய மறந்துவிட்டு மாணவர்களைக் கேட்பார்கள்

கவலை வேண்டாம்

மாணவர்களே நீங்கள் கல்விக்கடன் பெரும்பொழுது உங்களுக்கு எத்துனை சதவீதம் வட்டி என்று தெரிவித்து விண்ணப்பத்திலும் கடன் உத்தரவிலும் குறிப்பிடப் பட்டு இருக்கும்

மாணவர்கள் தன படிப்பை முடிக்கும் நாளில் இருந்து வட்டியை மாணவர்களே கட்ட வேண்டும்

படிப்பை முடித்துடன் ஓராண்டுக்குள் அந்த வங்கிக்கு சென்று உங்களது மொத்தக் கடனையும் தவணைமுறையில் அல்லது மொத்தமாக உங்கள் விருப்பப்படி கட்ட மேலாளரை அணுக வேண்டும் அல்லது தபால் மூலம் விண்ணப்பம் செய்யவேண்டும்


அவ்வாறு செய்யும் பொழுது படிக்கும் காலத்திற்கான வட்டியை கழித்து மீதி நாட்களுக்கு மட்டும் கணக்கிட்டு உங்களிடம் பணம் கேட்டால் கொடுக்கலாம் இல்லையேல் விபரம் கேளுங்கள்

விபரம் திருப்தியாக இல்லையெனில் இந்தியன் குரல் உதவி மையங்களை அணுகலாம்

வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும் அதே நேரம் அரசு கொடுக்கும் மானியம் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்
மேலும் விபரம் அறிய www.voiceofindian.org சொடுக்கி இணைந்திருங்கள்

கருத்துகள் இல்லை: