ஆதரவாளர்கள்

Thursday, September 18, 2014

பதிவர் சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!

பதிவர் சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
நண்பர்களே நாம் ஒன்றாக கூடி மகிழ்வோம் அதேவேளையில் நமக்கு கல்வியும் அனுபவமும் கிடைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருந்தால் இன்னும் நலமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து
தனிமனிதன் ஒருவரை அல்லது ஒரு அமைப்பை சார்ந்திருப்பது என்பது இன்று அவசியமாகின்றது காரணம் தன் தேவைகளைபெற வழிகாட்ட உதவி செய்ய என்று பல
இந்த விழாவில் ஓரிரு மணித் துளிகள் இப்படி இருக்கலாமா என்று பாருங்கள்
ஒவ்வொரு தனி மனிதனும் தன சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் மத்திய மாநில அரசின் பயன்களை இருந்த இடத்தில் இருந்தே ஒரு கடிதம் மூலம் பெற தகவல் உரிமை சட்டம் இருக்கு
ஒவ்வொரு அரசுத் துறையும் அதன் செயல்பாடுகளும் பயன்பாடுகளும்
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் நம் தேவைக்கு கோரிக்கை அல்லது புகார் விண்ணப்பம் யாரிடம் அளிக்க வேண்டும் அவ்வின்னப்பத்தின் மீது எத்துனை நாட்களுக்குள் தீர்வு செய்யவேண்டும் உத்தரவு இட வேண்டும் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 
அவ்வாறு அவ்விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அலுவலர்  யார் மேற்படி அலுவலர் நடவடிக்கை எடுக்க தவறும்போது அல்லது வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் பொது அல்லது நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் உள்ளபோது யாரிடம் புகார் அளிக்க வேண்டும் அவ்வாறு புகார் அளித்தால் எத்துனை நாட்களில் விசாரித்து என்ன என்ன தண்டனைகள் கிடைக்கும் என்ற விபரம்
அரசுத் துறைகளுக்கு மனுக்கள் எழுதுவது எப்படி எழுத்து பயிற்சி ?
நாம் மகிழ்வுடன் கொண்டாடி இந்த விபரங்களையும் அறிந்துகொள்ள உதவி செய்தால் இந்நிகழ்ச்சி ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாகவும் வாழ்வின் அங்கமாகவும் இருந்து என்றும் போற்றப்படும் என்று நம்புகின்றேன்
முடியுமா என்று பாருங்கள் முடியும் என்றால் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் இலவசமாக உதவி மையங்கள் வைத்து உதவி செய்துவரும் இந்தியன் குரல் அமைப்பின் தென்மண்டல அமைப்பாளர் பயிற்சியாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் தொடர்புக்கு 9865577021
சமூக நலன் மக்கள் நலனுக்காக சில வேளைகளில் இனிப்புடன் கலந்து சில மருந்துகளும் கொடுப்பது சமூக ஆர்வலர்களின் கடமையாகின்றது.

நன்கொடை பெறுவதில்லை,  அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம்  வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை 

தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம் 

 
நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!
https://www.facebook.com/myvoiceofindian

www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com

VOICE OF INDIAN

No comments: