ஆதரவாளர்கள்

Monday, February 11, 2013

மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட

எது ஒன்றைச் செய்தால் பலன் மக்களுக்கு நேரிடையாக கிடைக்குமோ அந்த ஒன்றை விடுத்து அனைத்தையும் செய்வது
அரசியல் வாதிகளுக்கு மட்டும் அன்றி பல சமூக அமைப்புகளுக்கும் தோன்றுவது ஏன்?
நான் சொல்வது நம் மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட அவர்கள் தம் தேவைகளை உரிமைகளை பெற்றுக்கொள்ள கற்றுக்கொடுத்துவிட்டால் நம் மக்களுக்கு போராட்டம் என்பது அவசியமில்லாது போகுமே! என்ன புரியவில்லையா?
"மீன் பிடித்து தரவேண்டாம்  மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள்" என்கிறேன்
இன்னும் புரியவில்லையா?
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு உள்ள கடைமையும் உரிமையும் என்ன என்பதையும் சட்டபூர்வமாக அதை அடைவதற்கு  வழி செல்லித்தரலாமே! 
எப்படி என்று  கேட்கிறீர்களா?
ஒரு இந்திய  குடிமகன்
 தனக்கு தேவையான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சான்றுகள், பட்டா பெயர் மாற்றம், வீட்டுக்கு மின் இணைப்பு, கட்டிட அனுமதி, பத்திரப் பதிவு உள்ளிட்ட பயன்கள்.
மாணவர்களுக்கு:
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வி உள்ளிட்ட பயன்களை அடைய வழிகாட்டுவது.
மூத்த குடிமக்களுக்கு: 
முதியோர் ஓய்வூதியம், இலவச மருத்துவ உதவி, முதியோர் பாதுகாப்பு, இலவச ரேசன் பொருட்கள் வாங்க கவனிக்க தவறும் பிள்ளைகள் பற்றிய புகார்கள் உள்ளிட்ட பயன்கள் 
பெண்களுக்கு 
ஏழை விதவைப் பெண்களுக்கான அரசின் திட்டங்கள் பெறுதல், 12ஆம் வகுப்பு மற்றும் அதற்க்கு மேல் படித்த பெண்களுக்கான திருமண உதவித்திட்டம் , இரண்டு பெண்பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான திட்டங்கள் உள்ளிட்ட அரசின் பயன்களைப் பெறுதல்.
நம் பகுதி நலன்
நம் ஊருக்கு தேவையான தெருவிளக்கு, சாலைவசதி,மருத்துவ வசதி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் எப்படி பெறுவது, தங்கள் பகுதி குறைகளை  யாரிடம் எப்படி தெரிவிப்பது என்ற விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது.
நம் மக்களுக்காக செயலடும் அரசு அலுவலகங்கள் நடைமுறை மற்றும் நம்  தேவைக்கு யாரை அணுக வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
நம் பகுதி நலன்:
நாம் குடியிருக்கும் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் பற்றிய புகார்கள், தவறான வழியில் பொருள் சேர்த்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள், மக்களை அச்சுறுத்தும் நபர்கள், கூட்டுக் கொள்ளை, கலவரம், கட்டப் பஞ்சாயத்து , குண்டர்கள் தொல்லை, தொடர்ந்து மக்குளுக்கு விரோதமாக செயல்படும் அரசு அலுவலர்கள், புகார்களைப் பெற மறுக்கும் காவல் நிலையங்கள் மீது உரிய மன்றத்தில் புகார் அழிப்பது 
மாற்றம் 
அரசும் அரசு அலுவலர்களும் மக்கள் நலனுக்காக உருவாக்கப் பட்ட அமைப்பு நாம் நம் தேவைகளை உரியமுறையில் பொருத்தமான அலுவலரிடம் முறையிடல் வேண்டும்.
தன சுய லாபத்திற்காக அடுத்தவர் உரிமையைப் பறிக்கும் செயல் அவமானம், குறுக்கு வழியில் செல்லாமல் சட்டத்திற்குட்பட்டு நாம் உறுதியுடன் செயல்பட்டால் எல்லாம் சாத்தியம் தான் .அந்த இலக்கை அடையும் வரை உறுதியுடன் செலாற்ற உங்களுக்கு தோள்கொடுக்க நாங்கள் தயார் எங்களை எங்கள் சேவைகளை பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள் 
 
பிச்சை எடுத்து வாழவேண்டுமா?
இப்படி எதிர்பார்த்து வாழவேண்டுமா?
எதிபார்த்து ஏமாந்து பட்டினிகிடக்க வேண்டுமா?
குப்பைக் கழிவுகளில் ஏதாவது கிடைக்குமா இந்த குப்பையாவது மிஞ்சுமா?
பிணத்தை கூட புதைக்க ஆள் இல்லை அரசின் கஜானாவில் பணம் இல்லை என்று சொல்லும் நிலை ஆக வேண்டுமா?
இன்றைய இந்தியத் தேவை இது தான் என்று இந்தியன் குரல் அமைப்பு எண்ணுகிறது இதைச் சரியாக மக்களுக்கு சொல்லித்தரவில்லை என்றால் நம் மக்கள் போராடவேண்டியதும், இலவசம் கேட்டு கையேந்தும் நிலையும், அதுவும்  மறுக்கப்படும் போது அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்று அற்றுப்போகும் அந்நிய சக்திகளிடம் விலைபோவார்கள் கொள்ளைகள் பெருகும் நம் சொத்துகள் யாவும் கொள்ளைபோகும் நம் பிள்ளைகள் தம் உரிமையைப் பெற ஒரு வேலை உணவிற்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள், போராடியும் தோற்ப்பார்கள்  தோல்வி அவர்களை விரக்கதி நிலைக்கு இட்டுச் செல்லும் அதனால் அவர்கள் உணவுக்காக கொள்ளை அடிக்கவும் துணிந்துவிடுவர். சமூகம் அவனை மாற்றிவிடும் ஆகவே நாம் இன்றே விழித்துக் கொள்வோம் நாம்    செய்யத்தவறினால் நம்மை நம் சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள் 
உடனடியாக செயல்படுவோம்.
இத தாங்க நம்ம இந்தியன் குரல் அமைப்பு செய்துவருகிறது மேலும் விபரம் அறிய www .vitrustu ,blogspot .com  எனும் வலைப் பூவில்  தொடருங்கள்  -- 
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar, 
Sembiyam,
Perambur,
Chennai 600019

No comments: