தகவல் சட்டத்தை பரப்புவதும் பயிற்சி அளிப்பதும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு இலஞ்சமின்றி தீர்வு பெற தகவல் சட்டத்தின் மூலம் பயிற்சி, இலவச உதவி மையங்களை நடத்துவது. - இந்தியன் குரல் அமைப்பின் நோக்கம்
'சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் போன்று, தங்கசாலை பகுதியில் உள்ள ஏகாம்பரேசுவரரும் தனி நபர்; அவருக்கு சொந்தமான சொத்துகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க இயலாது' என, அந்த கோவிலின் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்
கல்விக்கடன் வட்டி தள்ளுபடி என்று சொன்னார்களே இங்கே வங்கிகள் வட்டி கேட்கின்றார்கள் என்ன செய்வது
நன்மக்களே 2009-10 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு
அவர்கள் அந்தப் படிப்பை முடிக்கும் வரை அதாவது பொறியியல் கல்வி என்றால்
நான்கு ஆண்டுகள் கல்விக்கடன் வட்டி முழுவதும் அரசு மானியமாக வழங்குகின்றது.
இந்திய அளவிலான தலித் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில்
தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில்
இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும்
வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர்கள், ஒடுக்கப்பட்ட
வகுப்பினரிடையே இங்கே இருந்தனர்.
பதிவர் சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
நண்பர்களே
நாம் ஒன்றாக கூடி மகிழ்வோம் அதேவேளையில் நமக்கு கல்வியும் அனுபவமும்
கிடைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருந்தால் இன்னும் நலமாக இருக்கும்
என்பது எனது தாழ்மையான கருத்து
தனிமனிதன் ஒருவரை அல்லது ஒரு
அமைப்பை சார்ந்திருப்பது என்பது இன்று அவசியமாகின்றது காரணம் தன்
தேவைகளைபெற வழிகாட்ட உதவி செய்ய என்று பல
இந்த விழாவில் ஓரிரு மணித் துளிகள் இப்படி இருக்கலாமா என்று பாருங்கள்
ஒவ்வொரு
தனி மனிதனும் தன சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத்
தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் மத்திய மாநில அரசின்
பயன்களை இருந்த இடத்தில் இருந்தே ஒரு கடிதம் மூலம் பெற தகவல் உரிமை சட்டம்
இருக்கு
ஒவ்வொரு அரசுத் துறையும் அதன் செயல்பாடுகளும் பயன்பாடுகளும்
ஒவ்வொரு
அரசு அலுவலகத்திலும் நம் தேவைக்கு கோரிக்கை அல்லது புகார் விண்ணப்பம்
யாரிடம் அளிக்க வேண்டும் அவ்வின்னப்பத்தின் மீது எத்துனை நாட்களுக்குள்
தீர்வு செய்யவேண்டும் உத்தரவு இட வேண்டும் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்
அல்லது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு அவ்விண்ணப்பம்
மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அலுவலர் யார் மேற்படி அலுவலர் நடவடிக்கை
எடுக்க தவறும்போது அல்லது வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் பொது அல்லது
நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் உள்ளபோது யாரிடம் புகார் அளிக்க வேண்டும்
அவ்வாறு புகார் அளித்தால் எத்துனை நாட்களில் விசாரித்து என்ன என்ன
தண்டனைகள் கிடைக்கும் என்ற விபரம்
அரசுத் துறைகளுக்கு மனுக்கள் எழுதுவது எப்படி எழுத்து பயிற்சி ?
நாம்
மகிழ்வுடன் கொண்டாடி இந்த விபரங்களையும் அறிந்துகொள்ள உதவி செய்தால்
இந்நிகழ்ச்சி ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாகவும் வாழ்வின் அங்கமாகவும்
இருந்து என்றும் போற்றப்படும் என்று நம்புகின்றேன்
முடியுமா
என்று பாருங்கள் முடியும் என்றால் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் இலவசமாக
உதவி மையங்கள் வைத்து உதவி செய்துவரும் இந்தியன் குரல் அமைப்பின் தென்மண்டல
அமைப்பாளர் பயிற்சியாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் தொடர்புக்கு 9865577021
சமூக நலன் மக்கள் நலனுக்காக சில வேளைகளில் இனிப்புடன் கலந்து சில மருந்துகளும் கொடுப்பது சமூக ஆர்வலர்களின் கடமையாகின்றது.
நன்கொடை
பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி
மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன்
குரல் கொள்கை
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!
Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu
Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 date 4pm message given by; Voice of Indian Mr M. Sivaraj 9443489976 ஊழலுக்கு எதிரான போராளி தமிழகத்தில் கொலை 08-03-2013 வெள்ளிக்கிழமைக் காலை சுமார் 11 மணி அளவில் திரு சாய் லோகநாதன்
அவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அலுவலகத்தில் தகவல் உரிமைச்
சட்டம் 2005 இன் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக
அலுவலகத்திற்கு அழைக்கப் பட்டுள்ளார். அலுவலகம் சென்ற இவரிடம் சமரசம் செய்ய
முயன்றதாக சொல்லப்படுகின்றது. சமரசத்திற்கு உடன் பட மறுத்ததால் சம்பந்தப்
பட்டவர்களால் மிரட்டல் விடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. ஆயினும் சமரசம்
செய்துகொள்ள மறுத்து கேட்ட தகவலை தபாலில் அனுப்பிடக்
கேட்டுக்கொண்டு வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவினாசி தாலுகா
அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை
செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து
பிரேதத்தை கைப்பற்றி கோயம்புத்தூர் அரசு பொது மருத்துவமனையில் பிரேத
பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள் என தெரிய வருகிறது. காவல் துறை விசாரணை
நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு கொளத்தூர் புவனேஸ்வரன்
கொலைசெய்யப்பட்டார். தமிழகத்தில் சாய் லோகநாதனுடன் சேர்த்து இதுவரை 6
படுகொலை ஊழலுக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்காக இந்தியன் குரல் கோவை தண்டபாணி 9442015060 அவர்களை தொடர்புகொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்
Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 4pm
கேரளப் பழங்குடியினப் போராளி ஜானு
அவர்களைப் பற்றி நானும் படித்திருக்கின்றேன் அவர்கள் சொன்னது போல் ngo
க்கள் என்று சொல்லக்கூடிய தொண்டு நிறுவனங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்
இந்திய திருநாட்டின் மக்களை பிச்சைகாரர்கள் போன்று காட்டுவது பரிதாபமாக
படங்கள் போடுவது என்று இவர்கள் செய்யும் கேவலங்களை சொல்லி மாளாது. நன்கொடை
வாங்கி இவர்களை சேவை செய்ய யார் அழைத்தார்கள் சேவை செய்ய வேண்டுமெனில்
இவர்களது சொந்த பணத்தில் செய்ய வேண்டியது தானே. எங்களுக்கு பணம் கொடுத்தால்
வரி விளக்கு பெறலாம் என்று ஏமாற்றும் தில்லாலங்கடி ஆட்டக்காரர்கள்
அரசுக்கு வரி கட்டினால் அரசு மக்களுக்கு திட்டங்கள் போடுமே திட்ட செலவுக்கு
தானே வரி கொடுக்கின்றோம் இந்த வரிப் பணத்தை அரசுக்கு (மக்களுக்கு தான்யா
திட்டம் ) செல்ல விடாமல் இவர்கள் கொள்ளையடிக்க நாம் கொடுக்க வேண்டுமாம் அரசுக்கு கொடுக்கக் கூடாதாம் இவர்களை முழுமையாக ஒழித்தால் அன்றி விலை வாசியைக் கட்டுப்படுத்த முடியாது பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது கருப்பு பணத்தைக் கண்டறிய முடியாது
மக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது தொண்டு நிறுவனங்களுக்கு தடை
ilangaip pirachchanai ma
அருமையான விளக்கம் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் உங்களது முட்டாள் தனமான நம்பிக்கை தவறு
போராட்டம் நடப்பது உண்மையில் மக்கள் நலனுக்காகவா போராட்டம் நடக்கின்றது. நான் நாங்கள் என்ற விளம்பரம் தான் முன்னெடுக்கின்றது இதன்
மூலம் பல பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனம் திசை மாற உதவுகின்றது
அவர்களின் பிழைப்பு கெட்டுவிடாமல் இருக்க உதவுகின்றது இதெல்லாம் தெரிந்தும்
போராட்டம் மக்களுக்காக என்று நம்புவது மூடத்தனம் இல்லையா இந்த
மூடத்தனத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் அதே போன்று தமிழ் மக்களும்
விடுபட வேண்டும்