ஆதரவாளர்கள்

Friday, January 9, 2015

புகைப்படத்திற்கும் செய்திக்கும் சம்பந்தம் என்ன ? கேட்டாரே ஒரு கேள்வி

நால்லா பார்க்கோணும், கூர்ந்து கவனி ஆராய்ச்சி செய் பகுத்தறிந்து செயல்படு .

தனது சொத்துக்களை மக்களுக்காக செலவு செய்தவர் இவர். ஆகவே தான் இவரது கொள்கைகளை மக்கள் பின்பற்றவில்லை போலும்.
ஆனால் இவர் பெயரை சொல்லி வசூலிப்பவன் எல்லாம் கொள்ளைகாரனா இருக்கான்
அதாவது தன்னுடைய சொத்தை செலவு செய்து பொது சேவைக்கு வந்தவர்கள் மக்களுக்காக உழைத்தார்கள்.
நன்கொடை வாங்கி மக்களுக்கு சேவை செய்தோர்கள் தம்மக்களுக்கு வேண்டி உழைத்தார்கள்
இப்படி நிறைய இருக்கு
உங்களுக்கு தெரிந்ததும் எழுதுங்க
NGO தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நன்கொடை பெற்று சேவையாற்றும் சமூக சேவை அமைப்புக்களால்

தீமைகள் ;

1) ஊழல் பெருகுகின்றது
2) கார்பரேட் நன்கோடைபெற்று மக்களுக்கு எதிராக கருத்து திணிப்பு
3) மக்களின் கவனத்தை திசைதிருப்பி போராடுவது
4) மக்களின் பணம் குறுக்குவழியில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் (80-ஜி மூலமாக இவர்களுக்கு நன்கொடை அளிக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடைப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு மக்கள் நலன் பாதிப்பு)
5) எந்த தன்னார்வ அமைப்பாவது தான் எடுத்த பெருவாரியான மக்கள் பிரச்சனைகளுக்கு போராடி வெற்றி பெற்றுள்ளார்களா?

அரசியல்வாதிகள் மார்பில் குத்துவார்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடன் இருந்தே முதுகில் குத்துவார்கள்.

தொண்டு நிறுவனங்கள் சிலவற்றை போராடி வெற்றி பெற்றுத் தந்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்வர். அவர்கள் அந்த ஆணையைப் புடுங்காமல் இருந்திருந்தாலும் அது நிறைவேறி தான்  இருக்கும்

இவர்கள் நன்கொடை வசூலிக்க ஏஜண்டுகள் உதவி செய்கின்றார்கள்

வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களில் CSR ஆக்டிவிட்டி நன்கொடை பெற்றுத்தந்தால் 50% ஏஜண்டுகளுக்கு கமிசன்

அதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு மாதம் ஒரு லட்சம் நன்கொடை வசூலித்து கொடுத்தால் ஐம்பதாயிரம் இவர்களுக்கு கமிசன்

உள்ளூரில் உண்டியல் மூலம் நன்கொடை ரசீதுகள் மூலம் மாவட்ட கிளை அமைப்புகள் வைத்து வசூலித்தால்

20% - 20%- 10% என்று பணம் பங்குபோடப்பட்டு மீதி இவர்களுக்கு கிடைக்கின்றது

அதாவது இவர்கள் எவ்வித முயற்சியும் செய்யாமலேயே நிரந்தர வருமானம் . ஆரம்பகாலத்தில் உழைத்து ஊடகங்களின் வாயிலாக கொஞ்சம் பிரபலமாகிவிட்டால் இந்த ஏஜண்டுகள் தாராளமாக நன்கொடை வசூலித்து இவர்களுக்கும் இவர்களால் அவர்களுக்கும் பிழைப்பு ஜோராக நடைபெறும்.

ஒரு நாள் தாம்பரம் மின்சாரரயிலில் பயணம் செல்லும்பொழுது எனது நெருங்கிய நண்பர்(அவர் ஒரு NGO எஜன்ட் ஆண்டுக்கு 10 முதல் 15 லட்சங்கள் கமிசனாக பெற்றுவருகின்றார்) முதியோர் இல்லம், ஆதரவற்றோர்கள் கருணை இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாற்றுத்திரனாளிகள் நல சங்கங்கள் சமூக சேவை அமைப்புகள் என்று புதிது புதிதாக நாட்டில் உருவாகிக் கொண்டுதானே உள்ளது பிறகு  ஏன்நமது ஊரில் பிச்சைக் காரர்கள் (மாற்றுத்திரனாளிகள், அனாதைகள், குழந்தைகள், கர்பிணிப் பெண்கள் என) இருக்கின்றார்கள் என்று கேட்டார்.

ஒருவேளை இவர்களுக்கு அப்படி ஒரு மையங்கள் இருப்பது தெரியாதொபோல என்றேன்

இவர்கள் இங்கே ஒருநாளைக்கு சராசரியாக ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றார்கள் இவர்கள் எப்படி ஆசிரமத்திற்கு சென்று வெறும் உணவை உண்டு வாழ்வார்?, என்று கேட்டார்.

..............

இவர்கள் தனிநபர் பிச்சை எடுக்கின்றது போல சிலர் அமைப்புகளை வைத்து (ஏழைகள் படிக்க அமைப்பு, பள்ளிக்கூடம் நடத்தும் அமைப்பு , தொழில் சொல்லிக் கொடுக்கும் அமைப்பு, எயிட்ஸ், குடுமப் பாதுகாப்பு, மருத்துவம், சுகாதாரம், சமூக சேவை, ஊழல் ஒழிப்பு அமைப்பு , இப்போ புதுசா சமூக ஆர்வலர்கள் அமைப்பு என்ற பெயரில், நன்கொடை வாங்கிப் (பிச்சையெடுத்து)  பிழைக்கின்றார்கள் தெரியுமா என்றார்?. அரசியல் கட்சிகள் மக்களிடம் நன்கொடை கேட்டு மிரட்டி வாங்கிய காலமுண்டு ஆனால் இன்று அப்படி இல்லை ஆனால் இந்த சமூக நல அமைப்புகள் மக்களிடம் வாங்காமல் நகர்வதில்லை ஒரே நச்சரிப்பா நச்சரிச்சி டொனேசன் வாங்காம இடத்தை விட்டு நகராமல் இருக்க அவ்வளவு பேசுவார்கள் தெரியுமா?

ஓஹோ அதான் தினமும் யாராவது ஒருவராவது நம்மிடம் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நன்கொடை கேட்டுக்கொண்டு இருக்கின்றார்களா? ...

தாம்பரம் வந்துவிட்டது இறங்குகின்றோம் இன்னும் நிறைய உள்ளது அடுத்த பதிவில் எழுதுகின்றேன்

பிச்சைகாரர்களைப் பார்த்தால் மரியாதை தரனும்போல இருக்கு பின்ன எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பியூனுக்கு நாம் எவ்வளவு மரியாதை கொடுக்கின்றோம் ஆனால் இவர்கள் மாதம் முப்பதாயிரம் சம்பாதிக்கின்றார்களே!.

No comments: